.

வருகை புரியும் அனைவர்மீதும் இறைவனின் அருளும் சாந்தியும் அளவில்லாமல் கிடைக்கட்டும் Photobucket

"உறவினர்களை நேசியுங்கள்”

| |

بسم الله الرحمن الرحيم

இது என்னுடைய ஆக்கமல்ல!

இந்த அருமையான ”உறவினர்களை பேணுதல், நேசித்தல்” என்னும் உரை எனக்கு மெயில் வந்தது நான் படித்தால் மட்டும்போதாது மற்றவர்களும் அறிந்துகொள்ளவேண்டும் என்ற எண்ணத்தில் இதில் பதிகிறேன்.


"உறவினர்களை நேசித்தல்"
உறவைப் பேணுகிற விசயத்தில் சேர்ந்து வாழ வேண்டும் என்று கடமையாக்கியும் ஸலாமத்துடன் சுவனம் செல்லும் வழியை ஏற்படுத்திய அந்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரித்தாகுக !

இதைக் கருத்தில் கொண்டு அருள்மரையில் அல்லாஹ் சொல்கிறான் "மேலும் அவர்கள் எத்தகையோர் என்றால், எதை சேர்த்துக் கொள்ளப்பட வேண்டுமென அல்லாஹ் கட்டளையிட்டானோ, அந்த இரத்த சொந்தத்தையையும் சேர்த்துக் கொள்வார்கள் (அதைத் துண்டித்து விடும் விஷயத்தில் தங்கள் இரட்சகனுக்கு பயந்தும் நடப்பார்கள். கேள்வி கணக்குகளின் கடுமைகளையும் பயந்து கொள்வார்கள்" ( 13:21 )

"மேலும் இரத்தக் கலப்பு சொந்தங்களையும் துண்டித்து விடுவதையும் நீங்கள் பயந்து கொள்ளுங்கள்" ( 4:1 ) முஸ்லீம்களே! நிச்சயமாக உறவினர்களைப் பேணுவதில் மகத்துவமும் மாபெரும் கண்ணியமும் இருக்கும் நிலையில் உறவினர்களை நேசிக்கும் விதிகளில் அதிகமான கடமைகள் உள்ளன. ஏனென்றால், நிச்சயமாக ரஹ்மான் & ரஹீம் என்ற வார்த்தையிலிருந்து அல்லாஹ்வின் பெயராக உருவாக்கப்பட்டுள்ளது.

இன்னும் அவர்களுடன் மென்மையாகவும் பாசத்துடனும் இரக்கத்துடனும் நல்ல உபகாரத்துடனும் சேர்ந்து வாழ வேண்டும் என்றும் அல்லாஹ் உங்களுக்கு வாக்களிப்பதுடன் கட்டாய கடமையாக்கியதுடன் அதிகமான பரக்கத்துகளும் வெற்றியும் ஈடேற்றமும் முழு நன்மையை பெற்றுக் கொள்ளும் ஒரு வாய்ப்பு இந்த உறவினர்களுடன் சேர்ந்து வாழும் அடியானுக்கு இறைவன் ஏற்படுத்துகிறான். எனவே, இவ்வாறு கடமையாக்கிய இறைவன் உறவினர்களை நேசிப்பது என்பது சொந்தக்காரர்கள், அதாவது சகோதர சகோதரிகள் மூலமாக, தாய் தந்தை வழி சொந்தங்கள், திருமண சொந்தம், மாமா மற்றும் மாமிமார்கள் சிறிய தகப்பனார் மற்றும் சாச்சிகள் கோத்திரத்தார்கள் மற்றும் குடும்பத்தார்கள் இவர்களை நேரில் சந்தித்து முக மலர்ச்சியோடு ஸலாம் உரைப்பதிலும் பொருள் உதவி செய்வதிலும் உபதேசிப்பதிலும் ஆலோசனை கூறும் விசயத்திலும் நல்ல வார்த்தைகளைப் பேசுவதிலும் இன்ப துன்பங்களில் பங்கெடுப்பதிலும் மனக்கசடுகளைக் கலைவதிலும் இது போன்றவற்றில் ஈடுபடுவதில் இஸ்லாம் வலியுறுத்துகிறது.

உங்களை துண்டித்து நடந்தாலும் நீங்கள் அவர்களுடன் இணக்கமாக நடப்பதில்தான் வெற்றியும் உள்ளது. இதை வலியுறுத்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய கூற்று சான்றாக அமைகிறது. இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் "பதிலுக்குப் பதில் உறவாடுகிறவர் (உண்மையில்) உறவைப் பேணுகிறவர் அல்லர். மாறாக உறவு முறிந்தாலும்இ அந்த உறவுடன் இணைகிறவரே உறவைப் பேணுபவராவர். (நூல்: புகாரி 5988)

அல்லாஹ்வின் ரஹ்மத்தும் பரக்கத்தும் இறங்குவதற்கு காரணமாகவே உறவைப் பேணுவதின் நோக்கமாகும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை உறவுகளைப் பேணக் கூடியவர்களாக உருவாக்க வேண்டும். நாம் உறவினர்களை சந்திப்பதற்கும் விசாரிப்பதற்கும் ஓர் அரணாகத் திகழ வேண்டும். தங்களுடைய கோத்திரங்களைப் பற்றியும் குடும்பத்தார்களின் விபரங்களையும் நமது தலைமுறையினர்களையும் அவர்களுக்கு (பிள்ளைகளுக்கு) தெரியப்படுத்த வேண்டும். இதற்கு முன் மாதிரியாகவே பெற்றோர்கள் திகழ வேண்டும். இதை உணர்த்தும் நபி (ஸல்) அவர்களின் கூற்று 'எந்த ஒன்றை உங்கள் உறவினர்களாக கருதுகிறீர்களோ அந்த குடும்பத்தார்களைப் பற்றியும் உறவினர்களையும் நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்' இந்த நபி மொழிக்கு இமாம் திர்மிதி (ரஹ்) அவர்கள் விளக்கம் சொல்லுகிறார்கள். தம் வாழ்வாதாரம் (ரிஜ்க்) விசாலமாக்கப்படுவதும் வாழ்நாள் நீட்டிக்கப்படுவதும் யாருக்கு அளிக்குமோ அவர் தம் உறவைப் பேணி வாழட்டும் (நூல்: புஹாரி 5985).

தம்பதியர்கள் தங்கள் சொந்தங்களில் பேணுதலாகவும் அவரவர் பெற்றோர்களை கண்ணியப்படுத்தக் கூடியவர்களுக்கு தங்களது ஆயுள்களிலும் பொருட்களிலும் எல்லா வகையான நன்மைகளையும் பரக்கத்துகளையும் பெற்றுக் கொள்வதற்கு காரணமாக இந்த உறவு நேசிப்பதில்தான் திகழ்கிறது. அதுபோல நண்பர்கள் தங்களுக்குள் நட்பை வளர்ப்பதும் ஒருவருக்கொருவர் உபதேசிப்பதிலும் பொறுமையை கடைப்பிடிப்பதிலும் உறவுகளைப் பேணும் விசயத்தில் முழு ஆர்வம் கொள்வது அவசியமாகும். இந்த உறவை நிலைப் படுத்தும் நபி மொழிகளில் சிலவற்றை இங்கு குறிப்பிடுகிறோம். ஸலாமை பரப்புங்கள் உணவுகளை உண்ணக் கொடுங்கள் உறவைப் பேணுங்கள் மக்கள் தூங்கும் (இரவில்) நிலையில் தொழுது கொள்ளுங்கள் இவ்வாறு நடந்து கொண்டால் நிம்மதியாக சுவர்க்கம் செல்வதற்கு வாய்ப்பாக அமையும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (நூல்: முஸ்னத் அஹ்மத் 22668).

அபு அய்யூபுல் அன்சாரி அவர்கள் கூறியதாவது 'ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் "இறைத்தூதர் அவர்களே! என்னை சுவர்க்கத்தில் சேர்க்கும் ஒரு நற் செயலை எனக்கு கூறுங்கள்" என்று அவசரமாக கேட்டார். அப்போது மக்கள் "இவருக்கு என்ன நேர்ந்தது? இவருக்கு என்ன நேர்ந்தது?" என்று கேட்டார்கள். அதற்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் "அவருக்கு ஏதேனும் (அவசரத்) தேவை இருக்கலாம்" என்று மக்களை நோக்கி சொல்லிவிட்டு அந்த மனிதரை நோக்கி "நீர் அல்லாஹ்வை வணங்க வேண்டும். அவனுக்கு எதையும் இணையாக்கக் கூடாது. (கடமையான) தொழுகையையும் (கடமையான) ஸகாத்தையும் நிறைவேற்ற வேண்டும். உறவைப் பேணி வாழ வேண்டும்" என்று கூறிவிட்டு "உம்முடைய வாகனத்தை (உம்முடைய வீடு நோக்கி) செலுத்துவீராக!" என்று கூறினார்கள். அம் மனிதர் (அப்போது) தன் வாகனத்தில் அமர்ந்தார் (நூல்: புஹாரி 5983).

உறவை முறிக்கும் பாவத்திற்க்காக தண்டனை என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். "உறவை முறித்து வாழ்பவன் சுவர்க்கத்தில் நுழைய மாட்டான்" என ஜுபைர் இப்நுமுத்யிம் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள் (நூல்: புஹாரி 5984).

அல்லாஹ் படைப்பினங்களைப் படைத்து முடித்த போது உறவானது (எழுந்து இறைவனின் அரியாசனத்தின் கால்களைப் பற்றிக்கொண்டு) உறவுகளை துண்டிப்பதிலிருந்து உன்னிடம் பாதுகாப்பு கோரியே இப்படி நிற்கிறேன். என்று கூறிய(மன்றாடிய)து. அல்லாஹ் "ஆம்! உன்னை (உறவை)ப் பேணி நடந்து கொள்பவனுடன் நானும் நல்லமுறையில் நடந்து கொள்வேன் என்பதும் உன்னை துண்டித்து விடுபவனை நானும் துண்டித்து விடுவேன் என்பதும் உனக்கு திருப்தியளிக்கவில்லையா? என்று கேட்டான். அதற்கு உறவு "ஆம் (திருப்தியே) என் இறைவா" என்று கூறியது. அல்லாஹ் "இது உனக்காக நடக்கும்" என்று சொன்னான். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் "நீங்கள் விரும்பினால் (நயவஞ்சகர்களே) நீங்கள் (போருக்கு வராமல்) பின் வாங்கிக் கொண்டு பூமியில் குழப்பம் விளைவிக்கவும் உங்கள் உறவுகளைத் துண்டித்து விடவும் முனைகிறீர்களா? எனும் திருக் குர்ஆன் (47:22)-வது வசனத்தை ஓதிக் கொள்ளுங்கள்" என்று கூறினார்கள் என அபுஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள். (நூல்: புஹாரி 5987)

உறவு ரஹீம் என்பது அளவில்லா அருளாளன் (ரஹ்மான்) இடமிருந்து வந்த (அருட்கொடை) கிளையாகும். எனவே இறைவன் (உறவை நோக்கி) உன்னோடு ஒட்டி வாழ்பவனுடன் நானும் உறவு பாராட்டுகிறேன். உன்னை முறித்துக் கொள்பவனை நானும் முறித்துக் கொள்வேன்" என்று கூறினான் என அபு ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள் (நூல்: புஹாரி 5988).
நபி (ஸல்) அவர்களுக்கு வஹியின் தாக்கத்தின் காரணமாக அன்னை கதீஜா நாயகி (ரலி) அவர்கள் ஆறுதல் சொல்லும்போது "அல்லாஹ்வின் ஆணையாக அல்லாஹ் உங்களை கை விடவே மாட்டான். ஏனென்றால் நீங்கள் உறவினர்களை நேசிக்கிறீர்கள் சிரமத்தை சுமந்து கொள்கிறீர்கள் விருந்தாளிகளை உபசரிக்கிறீர்கள் எளியவர்களுக்கு உதவுகிறீர்கள்' என்று அன்னை கதீஜா நாயகி (ரலி) வாழ்த்தினார்கள் (நூல்: புஹாரி 3)

அடியார்களே! மேலே சொல்லப்பட்ட கருத்துக்கள் அனைத்திலும் ஒவ்வொரு மனிதனும் சொந்த பந்தங்களை (உறவை) பேணும் விசயத்தில் கவனமாகத் திகழ வேண்டும் என்றும்இ நோயாளிகளை சந்திப்பதிலும் ஒருவருக்கொருவர் உதவியாக வாழ வேண்டும் என்பதையும் இதை உணர்த்தும் வசனமாக அல்லாஹ் அருள்மறையில் சொல்கிறான் "இன்னும் நன்மையிலும் பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள்" (5:2)

எல்லாம் வல்ல அல்லாஹ் நம் எல்லோரையும் நம் சொந்த பந்தங்களை நேசிக்கக் கூடியவர்களாக அல்லாஹூம் அவனுடைய திருத்தூதர் (ஸல்) அவர்களுக்கும் கட்டுப்பட்டவர்களாக ஆக்கித் தந்தருள்வானாக! ஆமீன்!!
-------------------------------------------------------------------------------------------------------------
தகவல்: அவ்காஃப் - U.A.E.
18.06.2010 வெள்ளிக்கிழ‌மை அன்று துபாய் ப‌ள்ளிக‌ளில் ஜும் ஆ தொழுகையின் போது நிக‌ழ்த்த‌ப்ப‌ட்ட‌ குத்பா உரையின் த‌மிழாக்க‌ம்

த‌மிழாக்க‌ம் :
மௌல‌வி காய‌ல் முஹ‌ம்ம‌து சுலைமான் ஆலிம் லெப்பை ம‌ஹ்ள‌ரி
இமாம், ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழும‌ம் துபாய்
050 20 19 105

( மொழியாக்கம்: காய‌ல் சுலைமான் ஆலிம்
இமாம் ETA Ascon & Star Group - Dubai )

அன்புடன் மலிக்கா
இறைவா!
உன்னையே வணங்குகிறேன்
உன்னிடமே உதவியும் தேடுகிறேன்

10 comments:

ஜெய்லானி said...

ஜஸாக்குமுலாஹ் க்கைர் அரபியில் கேட்டே பழகியது இங்கே தமிழில் பகிர்ந்ததுக்கு நன்றி .

Riyas said...

இறைவன் அருள் புரியட்டும்...

நல்ல பதிவு

இப்னு அப்துல் ரஜாக் said...

ரொம்ப நல்லா இருக்கு அக்கா,மாஷா அல்லாஹ்

அன்புடன் மலிக்கா said...

ஜெய்லானி said...
ஜஸாக்குமுலாஹ் க்கைர் அரபியில் கேட்டே பழகியது இங்கே தமிழில் பகிர்ந்ததுக்கு நன்றி..

மிக்க நன்றி அண்ணாதே..

அன்புடன் மலிக்கா said...

Riyas said...
இறைவன் அருள் புரியட்டும்...

நல்ல பதிவு.

மிக்க நன்றி ரியாஸ்..

சசிகுமார் said...

எல்லா மதங்களும் நல்ல விஷயங்களையே மக்களுக்கு போதிக்கிறது. கெட்ட விஷயத்தை எந்த மதமும் சொல்ல வில்லை அக்கா

அப்துல் பாஸித் said...

இறைவன் மிகத் தூய்மையானவன்..

நல்லதொரு பதிவு. இன்று அதிகமானோர் உறவினர்களுடன் சின்ன சின்ன விசயங்களுக்காக சண்டையிட்டு பிரிந்து வாழ்கின்றனர். நமக்கு பின் வரும் தலைமுறையினர் 'கூட்டுக்குடும்பம்' என்றால் என்ன? என்று கேட்டால் கூட ஆச்சர்யமில்லை.

ஹுஸைனம்மா said...

துயர் வரும்போதுதான் உறவுகளின்/உறவு போன்ற நட்புகளின் அருமை புரியும்.

மிக அவசியமான இடுகை மலிக்கா, நன்றி.

AkashSankar said...

பதிவிற்கு நன்றி...

Unknown said...

உறவுகளை நேசிப்பது குறைந்து வரும் இந்த காலத்தில்
அந்த உறவுகளை எப்படி பேணி காக்க வேண்டும் என்பதை
இந்த பதிவின் மூலம் அழுத்தமாக சொல்லி இருக்கிறீர்கள்.
இறைவன் எல்லாவற்றையும் நன்மையாகி தருவானாக.
ஆமீன்.

Post a Comment

கருத்துக்களை பகிர்ந்துகொள்ளும்போது நிறைகுறைகளை சரிபார்க்கலாம். பகிந்துகொள்ளுங்களேன் கருத்துக்களை
நானும் என்னை சரிசெய்து கொள்கிறேன் .
பிடிதிருந்தால் ஓட்டும் போடுங்கள்

வேண்டுகோள்..

இங்கே பதியப்படும் அனைத்தும், நான் என்னை தெளிவுப்படுத்திக்கொள்ளவும். ஈருலக வாழ்க்கையையும் அறிந்துக்கொள்ளவும். தொடங்கியுள்ள பயணம். அதில் தாங்களும் தெரிந்துகொள்வதில் பெருமிதம். ஆனால் இதை தவறானமுறையில் விளங்கிக்கொண்டு வீணான விவாதங்களோ தர்க்கங்களான கருத்துக்களாகவோ அமைத்துவிட வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்..