.

வருகை புரியும் அனைவர்மீதும் இறைவனின் அருளும் சாந்தியும் அளவில்லாமல் கிடைக்கட்டும் Photobucket

அன்புள்ள ஆன்மாவே-6

| | 14 comments

بسم الله الرحمن الرحيم

அளவற்ற அருளாளனும் நிகறற்ற அன்புடையோனுமாகிய
இறைவனின் திருப்பெயரால் ஆரம்பிக்கிறேன்.

ஆன்மாவே!
இன்று பொறாமையென்னும் தீய எண்ணத்தைபபற்றி எனக்கு தெரிந்ததை பகிர்ந்துக்கொள்ளவந்துள்ளேன்.

90. அல்லாஹ் அருளியதை மறுப்பதற்குப் பகரமாக தங்களையே அவர்கள் விற்பனை செய்வது மிகவும் கெட்டது. அடியார்களில், தான் நாடியோருக்கு தனது அருளை, அல்லாஹ் அருளியதில் கொண்ட பொறாமையே இதற்கு காரணம்.
எனவே கோபத்திற்குமேல் கோபத்திற்கு ஆளானார்கள் [ஏக இறைவனை] மறுப்போருக்கு இழிவுதரும் வேதனை இருக்கிறது.
[அல்குர்ஆன்:பாகம்:1 -2.அல்பகரா]

1,2,3,4. [முஹம்மதே] மனிதர்களின் அரசனும்,
மனிதர்களின் கடவுளுமான,
மனிதர்களின் இறைவனிடம் மறைத்துக்கொண்டு,
தீயஎண்ணங்களைப்போடுபவனின் தீங்கைவிட்டும் பாதுகாப்பைத்தேடுகிறேன் என்று கூறுவீராக!

5. அவன் மனிதர்களின் உள்ளங்களில் தீய எண்ணங்களை போடுகிறான்.

6. ஜின்களிலும். மனிதர்களிலும் இத்தகையோர் உள்ளனர்.

[அல்குர்ஆன். பாகம்: 30- 113:அந்நாஸ்]

அண்ணல் நபி[ஸல்லல்லாஹ்] அவர்கள் கூறினார்கள்:
“உங்களுக்கு முன் வாழ்ந்து சென்றோர்களின் நோய் [உங்களுக்கே தெரியாமல்] உங்களிடம் ஊடுருவி இருக்கிறது.
அதாவது பொறாமையென்னும் நோய்தான்! இது மழிக்ககூடியதாக இருக்கிறது. தலைமுடியை மழிக்கக்கூடியது என்று நான் சொல்லவில்லை;
தீனை- இறைநெறியை மழித்துவிடும் இது!”

[அறிவிப்பாளர்: ஜுபைர் ரலியல்லாஹ்  ஆதாரம்: முஸ்னத் அஹமத்]

ஒரு மனிதன் இன்னொருமனிதனைக்கண்டு பொறாமைப்படுவது இன்றைய காலக்கட்டத்தில் மிக இயல்பாகிவிட்டது.

அவனுக்கு கிடைத்ததுபோல் தனக்கு கிடைக்கவிலையே!
அவனுக்கு அமைந்ததுபோல் தனக்கு அமையவில்லையே! என பொறாமையில் பொசுங்கிபோகிறான்.
அதனால் அவனுக்கு தன்மேலேயே வெறுப்பு ஏற்படுகிறது, தன்னால் எதுவும் முடியாது என்றமனநிலையை
உருவாக்கிக்கொள்கிறான்.
மற்றவரை பார்த்து பொறாமைப்பட்டு அதை பொருத்துக்கொள்ளமுடியாமல் எவ்வித பாவத்தையும் செய்ய துணிந்துவிடுகிறான்.

அதீத ஆசைக்கொண்டமனிதன் பிறக்குச்செல்வம் குவியக்கண்டாலும். பிறர் சாதனை புரிந்து நின்றாலும்
இவனைவிட அவன் முன்னுக்கு வந்தாலும்.இவனுக்கு கிடைக்காத ஒன்று அவனுக்கு கிடைத்து விட்டாலும்,
பிறர் மற்றவனை பாராட்டக்கண்டாலும், ஏனோ மனம் இவனுக்கு ஒத்துக்கொள்வதுமில்லை, ஏற்றுக்கொள்வதுமில்லை.
தன்னைவிட யாரும் ஒருபடி முன்னேறினாலும்.தன்னைவிட யாரும் மதிக்கப்பட்டாலும்,
மனதிற்குள் பொறாமைப்பட்டுக்கொண்டே வெளியில் நல்லவன்போல் நடித்துக்கொள்கிறான்.நரித்தனம் செய்கிறான்.
அது தவறென்று அவனுக்கே நன்கு தெரிந்திருந்தும் அவனால் அதை தடுக்கமுடிவதில்லை.

பொறாமையினால் பலகுடும்பங்கள் நடுதெருவுக்கு வந்திருப்பதை கண்ணால்பார்த்தும் திருந்தாத மனிதர்கள் திரிகிறார்கள்.
எது நமக்கென்று விதிக்கப்பட்டதோ அதுதான் நமக்கு கிடைக்கும்,
அது நல்லதானாலும் கெட்டதாலும்.
ஆனால்! அதையும்மீறி வீணான பொறாமையினால் நம்மை நாமே அழித்துக்கொள்வதில் லாபமில்லை.

ஆன்மாவே!

பொறாமைகொள்வது மனிதனுக்கும் நல்லதல்ல மனதுக்கும் நல்லதல்ல.
பொறாமைகொள்வது: பெற்றவர்களை பிள்ளைகளிடமிருந்தும், பிள்ளைகளை பெற்றவர்களிடமிருந்தும்.
சினேகிதர்களை சினேகத்திலிருந்தும். உறவுனர்களை உறவினர்களிடமிருந்து.
மொத்தத்தில் மனிதத் தன்மையிலிருந்தும்,அன்பிலிருந்தும்.மனசாட்சியை மறந்துபோவதிலிருந்தும், தீயபழக்கவழக்கதிற்க்கு நம்மை அடிமையாக்குவதிலும் முதன்மையாக்கி,நம்மை நன்மையைவிட்டு வெகுதூரத்திக்கு கொண்டுசெல்வதோடு.
இறைவனின் கோபத்திற்கும் நம்மை ஆளாக்கிவிடும்.

எல்லாம் வல்ல இறைவனின் கடுங்கோபத்திலிருந்தும், மனிதம் மாறி மிருககுணம் தோன்றுவதிலிருந்தும் நம்மை நாம் காத்துகொள்ள, பொறாமையென்னும் தீயபழக்கத்திலிருந்து நம்மை காத்துக்கொள்வோமாக!
இந்த தீமையிலிருந்து  பாதுகாக்கச்சொல்லி இறையோனிடம் இருகரம்யேந்தி கேட்ப்போமாக!

ஆன்மாவே!

இன்று பொறாமைக்குணப்பதைப்பற்றி
அறியத்தந்த இறைவன்

இன்ஷாஅல்லாஹ்
இறைவன் நாடினால்
அடுத்த நல்லதொரு விசயத்தை பகிர்ந்துகொள்ள உதவுவான்
என்ற நம்பிக்கையோடும் அதுவரை நம் அனைவரையும் பொறாமையென்னும் தீமையிலிருந்து நம்மை காத்து ஈருலக்கிலும் நற்பாக்கியங்கள் பெற்றிட இறைவனை வேண்டியவாறு
விடை பெறுகிறேன் வஸ்ஸலாம்...

அன்புடன் மலிக்கா

இறைவா!
உன்னையே வணங்குகிறேன்.
உன்னிடமே உதவியும் தேடுகிறேன்.

அன்புள்ள ஆன்மாவே!-5

| | 11 comments

بسم الله الرحمن الرحيم
அளவற்ற அருளாளனும் நிகறற்ற அன்புடையோனுமாகிய
இறைவனின் திருப்பெயரால் ஆரம்பிக்கிறேன்.


அன்புள்ள ஆன்மாவே!
இன்று பொய் பேசுவதால் ஏற்படும் நன்மை தீமைகளைப்பற்றி அறிந்தவைகளையும் தெரிந்தவைகளையும் பகிர்ந்துகொள்ளவந்துள்ளேன்.

பொய் தவறுகளின் தலை

1. காலத்தின்மீது சத்தியமாக!
2..மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான்.
3.நம்பிக்கைகொண்டு நல்லறங்கள் செய்வோரையும்,
உண்மையைப் போதித்து பொறுமையையும்
போதித்துக்கொள்வோரை தவிர.
[அல்குர்ஆன்]பாகம் 30.- 103.அல் அஸ்ர்]

13. மனிதர்களே!
உங்களை ஓர்ஆண் ஒருபெண்ணிலிருந்தே
படைத்தோம்.
நீங்கள் ஒருவரையொருவர் அறிந்துகொள்வதற்காக
உங்களை கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்
உங்களில்[இறைவனை] அதிகம்அஞ்சுவோரே
இறைவனிடன் சிறந்தவர்.
இறைவன் அறிந்தவன்;நன்கறிபவன்.
[அல்குர்ஆன் பாகம் 26. -49.அல் ஹுஜ்ராத்]


221. ஷைத்தான்கள் யார்மீது இறங்குவார்கள்
என்பதை அறிவிக்கட்டுமா?

222.இட்டுக்கட்டும் ஒவ்வொரு பாவியின்மீதும்
இறங்குகின்றனர்.

223.அவர்கள் ஒட்டுக் கேட்கின்றனர்.
அவர்களில் அதிகமானோர் பொய்யர்கள்.
[அல்குர்ஆன் பாகம்: 19.- 26.அஷ் ஷூ அரா]

9. அல்லாஹ்வையும். நம்பிக்கைக்கொண்டோரையும்
அவர்கள் ஏமாற்றநினைக்கின்றனர்.[உண்மையில்]
தம்மைத்தாமே ஏமாற்றிக்கொள்கின்றனர்.
அவர்கள் உணர்வதில்லை.

10.அவர்களின் உள்ளங்களில் நோய் இருக்கிறது
அல்லாஹ்வும் அவர்களுக்கு நோயை அதிகமாக்கிவிட்டான்.
பொய் சொல்வோராக இருந்தால் அவர்களுக்குத்
துன்புறுத்தும் வேதனை உண்டு..

[அல்குர் ஆன் பாகம்:1- 2.அல்பகரா]

பொய் பேசுவது இன்று சர்வசாதாரணமாகிவிட்டது, எதற்கெடுத்தாலும் பொய்
நின்றால், நடந்தால், பேசினால், சகலத்திலும் பொய் கலந்துவிட்டது.
நல்லவைக்கும் பொய் கெட்டவைக்கும் பொய். பொய்யே வாழ்க்கையாகிவிட்டது, வழக்கமாகிவிட்டது.

இன்றைய காலத்தில் பொய் பேஷனாகிவிட்டது, கலாச்சாரத்தை நாகரீகம் முந்திக்கொண்டுபோவதால் உண்மையை உதறித்தள்ளிவிட்டு பொய் அதன்மேலேறி ஊர்வலம் போகிறது.

மனிதனுக்கு மனிதன் பயங்கொண்டு தொட்டதற்கெல்லாம் பொய் சொல்லும் வழக்கத்தை ஏற்படுத்திக்கொள்கிறான். ஆனால் தன்பொய்யால் தானே ஒருநாள் அழியக்கூடும் என்பதை மறந்துவிடுகிறான். பொய்யனுக்கு தண்டனையே அவன்பொய்சொல்லியே திரிந்ததால் அவன் உண்மையை பேசும்போதுகூட யாரும் அதை நம்பாததுதான். அதைவிடவா ஒருவனுக்கு இழிவு வேண்டும்.

மனிதனின் மற்றப் பாவங்களுக்கும் தவறுகளுக்கும் அடித்தளமே! இந்த பொய்தான். ஒரு பொய்யை மறைக்க இன்னொரு பொய், இப்படியே அடுத்தடுத்து பொய்களையே வழக்கமாக்கி வாழ்ந்துவருகிறான். பொய் பேசும்போது அது சாதாரணமாகத்தான் தோன்றும், அது மற்றவரின் வாழ்கையையே பலசமங்களில் நாசமாக்கிவிடும் என்பதை உணர்ந்தும்
உணரமறுப்பதுதான் மனிதமனம்.

ஆன்மாவே!
நெருப்பு விறகை தின்பதுபோல்
பொய் [ஈமானை] நல்லொழுக்கத்தையே
தின்றுவிடும்.


உண்மைக்கு பயந்தவன் மட்டுமே பொய்களை துணைக்குத்தேடுவான்.
நீ சொல்லும் பொய்கள் உன்னைச்சுற்றியே வட்டமிட்டுக்கொண்டிருக்கும் கழுகுபோல். அது உன்னையே உன் சந்ததிகளின் வழியில் தாக்கும்போது அதன் வீரியத்தை உணர்ந்தும் பயனில்லை.

உதிர்க்கப்படும் வார்தைகளில் சுத்தம் இருக்கவேண்டும் உண்மையிருக்கவேண்டும். உண்மை தவறிப்போனால் ஒருபோதும்
அது நல்லவையாக இருக்காது. பொய்பேசும்போது உன்னையே நீ உற்றுப்பார்
உனக்கே வெட்கம்தோன்றும் உறுத்தல்தோன்றும், இருந்தும் மறைத்தவனாய்
வெளிவேசம் போடுவாய். பொய் பேசிய இரவு உறக்கம் தொலையும். உண்மையான, மனசாட்சியுள்ள மனமாக இருந்தால், தன் உள்ளம் தன்னையே வெருக்கும்.

ஆன்மாவே!
பொய்சொல்லிக்கிடைக்கும் வெற்றி வெற்றியாகாது, வெற்றியாக தோற்றமளிக்கும் அனைத்தும் வெற்றியல்ல. உண்மை மனதுக்கு தெரியும்.

ஒருபொய்தானே என்றெண்ணி இறைவனின் கோபத்திற்கு ஆளாகாதே!
பொய் பேசித்திரியும் ஒவ்வொருவரும் ஈருலகத்திலும் வெற்றியில்லை.
பொய் சொல்வதை, பேசுவதை தவிர்ந்துப்பார், உன்பலதவறுகள்
குறைவதை நீயே உணர்வாய்.
உன் இறைவனின்கடுமையானதண்டணையிலிருந்து உன்னைக்காத்துக்கொள்வாய்..

ஆன்மாவே!
இன்று இறைவனின் பொய்யுரைப்பதைப்பற்றி
அறியத்தந்த இறைவன்

இன்ஷாஅல்லாஹ்
இறைவன் நாடினால்
அடுத்த நல்லதொரு விசயத்தை பகிர்ந்துகொள்ளஉதவுவான்
என்ற நம்பிக்கையோடும் அதுவரை நம் அனைவரையும் பொய்யிலிருந்து நம்மை காத்து ஈருலக்கிலும் நற்பாக்கியங்கள் பெற்றிட இறைவன் வேண்டியவாறு
விடை பெறுகிறேன்...

இறைவா!
உன்னையே வணங்குகிறேன்
உன்னிடமே உதவியும் தேடுகிறேன்.

அன்புடன் மலிக்கா

வேண்டுகோள்..

இங்கே பதியப்படும் அனைத்தும், நான் என்னை தெளிவுப்படுத்திக்கொள்ளவும். ஈருலக வாழ்க்கையையும் அறிந்துக்கொள்ளவும். தொடங்கியுள்ள பயணம். அதில் தாங்களும் தெரிந்துகொள்வதில் பெருமிதம். ஆனால் இதை தவறானமுறையில் விளங்கிக்கொண்டு வீணான விவாதங்களோ தர்க்கங்களான கருத்துக்களாகவோ அமைத்துவிட வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்..