மறந்தமைக்கு மன்னிப்பாயா
-
உன்னைவிட்டுப் பிரிந்துவிட்டேன் மன்னித்துக்கொள்ளடி
நீதான் எனது முதல்தோழி
நீதான் என் முதல் கனவு
என்னை நான் உன்னிடமிருந்துதான் தெரிந்துகொண்டேன்
உன்னால்தான் என...
அன்புள்ள ஆன்மாவே -3
Posted by அன்புடன் மலிக்கா | 4:44 AM |Labels: இறைப்புகழ்
அன்புள்ள ஆன்மாவே -3
இறைவனின் திருப்பெயரால் ஆரம்பிக்கிறேன்.
இன்று உன்னிடன் இறைவனை புகழ்வதைபற்றி அறிந்ததை பகிர்ந்துகொள்ளவந்துள்ளேன்
1,2.அளவற்ற அருளான் குர்ஆனை கற்றுக்கொடுத்தான்.
3. மனிதனைப் படைத்தான்.
4.விளங்கும் திறனை அவனுக்கு கற்றுக்கொடுத்தான்.
5. சூரியனும் சந்திரனும் கணக்கின்படி இயக்கினான்.
6 மரங்களும் செடிகொடிகளும் [அவனுக்கு] பணிந்தன.
7, 8. அவன் வானத்தை உயர்த்தினான்; நிறுப்பதில்
வரன்பு மீறாதீர்கள்! என்று திராசையும் நிறுவினான்.
9 நியாயமாக எடையை நிலைநாட்டுங்கள்!
எடையில் குறைத்துவிடாதீர்கள்.
10. பூமியை மனிதர்களுக்காக அமைத்தான்.
11, 12. அதில் கனிகளும், பாளைகளுடைய பேரிச்சமரங்களும்,
தோல்மூடிய தானியமும்,மணம்வீசும் மலர்களும் உள்ளன.
13.அவன் இரண்டு கிழக்கு திசைகளுக்கும் இறைவன்
இரண்டு மேற்குத் திசைகளுக்கும் இறைவன்.
14. இரண்டு கடல்கள் சந்திக்கும்மாறு அவன் ஏற்ப்படுத்தியுள்ளான்.
15. இரண்டுக்குமிடையே ஒரு திரையுள்ளது
ஒன்றையொன்று கடக்காது.
[அல்குர் ஆன் -பாகம் 27 அர் ரஹ்மான்]
இன்னும் இன்னும் ஏராளமான சான்றுகள் இறைவனை போற்றிப்புகழ உள்ளது.
அவனை அனுதினமும் புகழ்வதில் ஆன்மாவே
நீ சற்று
பின்வாங்குவதுதான் வேதனையளிக்கிறது.
ஈடு இணையற்ற இறைவனை புகழ்வதை தவிர்த்து
சாதாரண மனிதர்களை புகழ்வதை அதிமாக்கிக்கொண்டாய்!
மனிதப்புகழ்ச்சி மதிப்பிழந்தது
அது இன்று ஒருவரை உயரத்தூக்கும் நாளை அதேபுகழ் அவரையே மண்ணில் சாய்க்கும்.
ஒரு மனிதரை எல்லைமீறி புகழாதே!
எல்லைகடந்த புகழ் இறைவனுக்கு மாத்திரமே சொந்தமானது.
ஆன்மாவே
நீ ஒருவரை புகழும்போது அதனால் அவர் பயனடையும்படியாக இருக்கவேண்டுமே தவிர
உன் புகழ்ச்சியால் அவரின் நற்குணங்களில் மாற்றம் ஏற்பட்டு மங்கிவிடுவதைபோல் செய்துவிடாதே!
.
மனிதபுகழ் என்பது போதைக்கு சமமானது.
புகழ்ச்சியின் அளவு அதிகரிக்க அதிகரிக்க மனிதர்கள் மனம்
ஏதோ எல்லைகடந்துவிட்டதாக உணர்ந்து
தன்னை மறந்தவனாகிறான். தன்னைமறந்து
தன்னிலை இழக்கிறான்.
அதற்கு உன் அதிகப்புகழ்ச்சியான வார்த்தைகள்
ஒருகாரணமாக இருக்கும்படி செய்துவிடாதே!
ஒருவரை நீ புகழ விரும்பினால் அது இறைவனோடு சேர்த்தோ அவனைவிட அதிகமாகவோ புகழ்ந்துவிடாதே!
மனிதன் மிக சாதாரணமானவன் அவனை
ஓர் எல்லைக்குள் புகழ்ந்து பழகு,
உன் புகழ்ச்சியால் அவனை மேன்மையாக்கும்படியாக இருக்கவேண்டுமேதவிர,
அவனை மேலேற்றிவிட்டு தான்கீழே இறங்கிவிடாமலிருக்க எவ்வித பாவத்திற்கும் அவன் துணிந்திறங்குவதற்கு துணை செய்வதல்ல
அவனை புகழின்போதைக்கு அடிமையாக்கிவிடுவதுமல்ல!
உன் அகப்புகழை நம்பி, அனைத்தும் உண்மையென நினைத்து உச்சானிக்கொம்பில் ஏறியமர ஆசைப்படுகிறான் அது தவறல்ல,
தான் நிலைத்து நிற்க மற்றவர்களை கீழேதள்ளிவிட்டுவிடுகிறான் அதனுடைய பாவத்திற்க்கும் நீ ஒருவிதத்தில் துணைபுரிந்தவனாகிறாய்.
வெறும் வாய்வசீகரிக்கும் வார்த்தைக்களைக்கொண்டு
ஒருவரை புகழ்வது சரியா?
மனம் வசீகரிக்கும் வார்த்தைகளைக்கொண்டு
புகழ்வது சரியா?
ஆன்மாவே
நீ பிறரை புகழ்ப்படுத்த விரும்பினால் இறைவனின் நாட்டத்தோடு இணைத்து, அவன் நாடினால் இது உன்னை மேலும் வலுப்படுத்தும் என்ற நம்பிக்கை விதையை அவன்மனதில் ஏற்படுத்து, அதுவே உனக்கும் அவனுக்கும் மிக மிக சிறந்தது
மேன்மைப்பட்ட புகழ்ச்சி அனைத்தும் இறைவன்
ஒருவனுக்கே சொந்தம்.
அகம்மகிழ, புறம் மிளிர
இறைவனின் புகழ்பாடு அனுதினமும்
அவனின் துணைநாடு.
ஆன்மாவே
இன்று இறைவனின் இறைப்புகழைபற்றி
அறியத்தந்த இறைவன்
இன்ஷாஅல்லாஹ்
இறைவன் நாடினால்
அடுத்த நல்லதொரு விசயத்தை பகிர்ந்துகொள்ளஉதவுவான்
என்ற நம்பிக்கையோடும் அதுவரை நம் இறைவன்மீதும்
உன்மீதும்
அனைத்து மனித்குலத்தின்மீதும் அன்புகொண்டவாறு
விடை பெறுகிறேன்.
இறைவா!
உன்னையே வணங்குகிறேன்
உன்னிடமே உதவியும் தேடுகிறேன்
அன்புடன் மலிக்கா
Subscribe to:
Post Comments (Atom)
வேண்டுகோள்..
இங்கே பதியப்படும் அனைத்தும், நான் என்னை தெளிவுப்படுத்திக்கொள்ளவும். ஈருலக வாழ்க்கையையும் அறிந்துக்கொள்ளவும். தொடங்கியுள்ள பயணம். அதில் தாங்களும் தெரிந்துகொள்வதில் பெருமிதம்.
ஆனால் இதை தவறானமுறையில் விளங்கிக்கொண்டு வீணான விவாதங்களோ தர்க்கங்களான கருத்துக்களாகவோ அமைத்துவிட வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்..
23 comments:
அர்ரஹ்மானின் தமிழாக்கத்தோடு அழகான இடுகை. வல்ல இறைவனின் அருட்கொடையால் நம் ஈமானும் வலுப்பெறட்டும். ஹிதாயத் (நேர்வழி) கிடைக்கட்டும்.
அல்லாஹு அக்பர்.
பகிர்வுக்கு நன்றி மலிக்கா. (எழுத்துப் பிழைகளில் கவனம் செலுத்தவும்.)
\\அவனை மேலேற்றிவிட்டு தான்கீழே இறங்கிவிடாமலிருக்க எவ்வித பாவத்திற்கும் அவன் துணிந்திறங்குவதற்கு துணை செய்வதல்ல
அவனை புகழின்போதைக்கு அடிமையாக்கிவிடுவதுமல்ல!//
salaam malikka
அனைவரும் படிக்க வேண்டிய வைரவரிகள்.
\\மனிதபுகழ் என்பது போதைக்கு சமமானது.
புகழ்ச்சியின் அளவு அதிகரிக்க அதிகரிக்க மனிதர்கள் மனம்
ஏதோ எல்லைகடந்துவிட்டதாக உணர்ந்து
தன்னை மறந்தவனாகிறான். தன்னைமறந்து
தன்னிலை இழக்கிறான்.//
அதனால்தானே இஸ்லாத்தைவிட்டு குஃப்ருக்கு போகின்றனர்
சரியாக சொன்னேப்பா நவூதுபில்லாஹ்
இறைவன் நம் அனைவரையும் காப்பற்றட்டும்.
//மனிதபுகழ் என்பது போதைக்கு சமமானது.
புகழ்ச்சியின் அளவு அதிகரிக்க அதிகரிக்க மனிதர்கள் மனம்
ஏதோ எல்லைகடந்துவிட்டதாக உணர்ந்து
தன்னை மறந்தவனாகிறான். தன்னைமறந்து
தன்னிலை இழக்கிறான்.//
எப்பவும் நினைவில் இருக்க வேண்டியது.
/S.A. நவாஸுதீன் said...
அர்ரஹ்மானின் தமிழாக்கத்தோடு அழகான இடுகை. வல்ல இறைவனின் அருட்கொடையால் நம் ஈமானும் வலுப்பெறட்டும். ஹிதாயத் (நேர்வழி) கிடைக்கட்டும்./
ஆமீன்
அல்லாஹு அக்பர்./
மிக்க நன்றி நவாஸண்ணா
பகிர்வுக்கு நன்றி மலிக்கா. (எழுத்துப் பிழைகளில் கவனம் செலுத்தவும்.)/
திருத்திட்டேன் அண்ணா. எத்தனை கவனமாக டைப்படித்தாலும் சில மிஸ்டேக் வந்துவிடுகிறது..
thaaj said...
\\அவனை மேலேற்றிவிட்டு தான்கீழே இறங்கிவிடாமலிருக்க எவ்வித பாவத்திற்கும் அவன் துணிந்திறங்குவதற்கு துணை செய்வதல்ல
அவனை புகழின்போதைக்கு அடிமையாக்கிவிடுவதுமல்ல!//
salaam malikka/ அலைக்குமுஸ்ஸலாம்
/அனைவரும் படிக்க வேண்டிய வைரவரிகள்./
மிக்க நன்றி தாஜ்கன்னு.
thaaj said...
\\மனிதபுகழ் என்பது போதைக்கு சமமானது.
புகழ்ச்சியின் அளவு அதிகரிக்க அதிகரிக்க மனிதர்கள் மனம்
ஏதோ எல்லைகடந்துவிட்டதாக உணர்ந்து
தன்னை மறந்தவனாகிறான். தன்னைமறந்து
தன்னிலை இழக்கிறான்.//
அதனால்தானே இஸ்லாத்தைவிட்டு குஃப்ருக்கு போகின்றனர்
சரியாக சொன்னேப்பா நவூதுபில்லாஹ்
இறைவன் நம் அனைவரையும் காப்பற்றட்டும்.///
காப்பாற்றுவானாக ஆமீன்
ஹுஸைனம்மா said...
//மனிதபுகழ் என்பது போதைக்கு சமமானது.
புகழ்ச்சியின் அளவு அதிகரிக்க அதிகரிக்க மனிதர்கள் மனம்
ஏதோ எல்லைகடந்துவிட்டதாக உணர்ந்து
தன்னை மறந்தவனாகிறான். தன்னைமறந்து
தன்னிலை இழக்கிறான்.//
எப்பவும் நினைவில் இருக்க வேண்டியது./
நன்றி ஹுசைன்னம்மா
இறைவா!
உன்னையே வணங்குகிறேன்
உன்னிடமே உதவியும் தேடுகிறேன்
Jazakallahu Khair sagothari
அன்புள்ள ஆன்மா அருமை...!
அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் திருமறை வசனங்களால் ஒவ்வொரு முஸ்லீமும் தங்கள் ஆன்மாவை சுத்தப்படுத்த கடமைப்பட்டிருக்கிறோம்.
உங்களின் இறைப்பணியை இறைவன் பொறுந்திக் கொள்வானாக...ஆமீன்.
நல்ல விளக்கம்.
குர் ஆன் தர்ஜுமா வாசித்து பல மாதங்கள் ஆகிறது.அந்த குறையை தீர்த்து வைத்தமைக்கு நன்றி.மாஷா அல்லாஹ்.
மன நிறைவு தரும் இடுகை. பயனுள்ள அறிவுரைகள் சகோதரி.
மனிதன் மனிதனைப் புகழும்போது ,ஒரே மரத்து இலை ,இன்னொரு இலையைப் புகழ்வது போல்தான்.
இரண்டுமே, இன்று துளிர்த்து நாளை வாட இருக்கும் படைப்புகள்.
இறைவன் மரம் போன்றவன் ,அவன் நிரந்தரமாக நிற்கிறான் .
கோடானு கோடி மக்கள் போல் ,இலைகள் வருகின்றன வாடுகின்றன.
யார் யாரைப் பாராட்டுவது.
இந்த ரீதியில் யோசித்தால் என்றும் எப்பொழுதும் ,இறைவனே பாராட்டுக்கு உரியவன்.
தங்கள் பதிவின் மூலம் இறைவன் என்னை, யோசிக்க வைத்திருக்கிறான்
மனிதன் என்றுமே தன்னிலை மறக்க கூடாது. இறைவன் நம் மனதில் சாந்தியையும் சமாதானத்தையும் நிலவச் செய்வானாக.
அனைவரின் மனதிலும் இறையச்சத்தை ஏற்படுத்துவானாக.
தங்களின் பகிர்வுக்கு நன்றி சகோதரி.
எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே ..
அவனின்றி எதுவும் இல்லை .
ஆன்மாவின் ஒவ்வொரு அசைவும் அவனிடமே
நல்ல ஆழமான கருத்துக்கள் மலிக்கா .
எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டியவை .
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)மலிக்கா,உங்களின் உயரிய இப்பணி மிகவும் பெருமிதப்படவைக்கின்றது.இதற்குறிய சகல நன்மைகலியும் வல்ல அல்லாஹ்சுப்ஹானஹுதஆலா உங்களுக்கும்,உங்கள் குடும்பத்தாருக்கும் வழங்குவானாக.//ஒருவரை நீ புகழ விரும்பினால் அது இறைவனோடு சேர்த்தோ அவனைவிட அதிகமாகவோ புகழ்ந்துவிடாதே!//அருமையான வரிகள்
மிக நல்ல பதிவு என்பதற்கான எடுத்துக்காட்டு சகோதரி கோமா வின் பின்னூட்டம்
இன்ஷா அல்லாஹ் - அவன் எல்லோருக்கும் நல்லருள் புரிவானாக - ஆமீன்
ஜஸாக்கல்லாஹ் தங்கச்சி.
நல்ல ஆழமான பகிர்வு
நல்ல அற்புதமான கருத்துக்களை பதிவாக இடுகின்றீர்கள். மிக பொறுமையாக ஆழ்ந்த மன நிலையில் படிக்க வேண்டும். வருட இறுதிக் கணக்கு சமயம் ஆதலால் பொறுமையாக படிக்க இயலவில்லை. பின்னர் படிக்கின்றேன். நன்றி மலிக்கா.
அல்ஹம்துலில்லாஹ்.உயரிய பணிக்கு வாழ்த்துக்கள்.அடிக்கடி இந்த பிளாக்கை ஓபன் செய்து படித்து மகிழ்கிறேன்
புகழ் போதைக்கு மயங்காத மனிதனே இல்லை இறையச்சம் உடைய மூமீன்களைத் தவிர, இப்போதெல்லாம் மனிதர்கள் ஒருவரை ஒருவர் ஏதோ ஒரு பலன் கருதிப் புகழ்கினர் உணமையான நெஞ்சார்ந்த புகழ்ச்சிக் குறைவு, தகுதியே இல்லாதவர் புகழப் படுகிறார் முகத்துக்கு நேராகவே. இதன் தீமைகளை விட்டும் அல்லஹ் நம்மை பாதுகாப்பனாக ஆமின். இறைவசனங்களை புகழ்சியின் தீமைக் கெதிராக கேடையமாக பிடித்துக் கொள்வோம். நல்ல அருமையான பதிவு சகோதரி
அருமையான பணியை தொடர்ந்து இருக்கிறீர்கள், மலிக்கா வாழ்த்துக்கள்,இறைவன் உங்களுக்கு நல் கிருபை புரிவானாக.
அர்ரஹ்மான் சூராவின் அருமையான விளக்கத்தை எடுத்து கொடுத்து இருக்கிறீர்கள்.
இது எனக்கு நோய் தீர்க்கும் மருந்து கூட, 4 வருடம் முன் கை மறத்து போய் ஒரு டீ கப் கூட விரலால் சேர்த்து தூக்க முடியாமல் இருந்த்து, தொடர்ந்து இந்த சூராவை தான் ஓதி கையில் ஊதி கொள்வேன்.
ஆண்டவன் கிருபையால் ஒரு ஆப்ரேஷனில் இருந்து பிழைத்தேன்.
Post a Comment
கருத்துக்களை பகிர்ந்துகொள்ளும்போது நிறைகுறைகளை சரிபார்க்கலாம். பகிந்துகொள்ளுங்களேன் கருத்துக்களை
நானும் என்னை சரிசெய்து கொள்கிறேன் .
பிடிதிருந்தால் ஓட்டும் போடுங்கள்