.

வருகை புரியும் அனைவர்மீதும் இறைவனின் அருளும் சாந்தியும் அளவில்லாமல் கிடைக்கட்டும் Photobucket

அன்புள்ள ஆன்மாவே-6

| |

بسم الله الرحمن الرحيم

அளவற்ற அருளாளனும் நிகறற்ற அன்புடையோனுமாகிய
இறைவனின் திருப்பெயரால் ஆரம்பிக்கிறேன்.

ஆன்மாவே!
இன்று பொறாமையென்னும் தீய எண்ணத்தைபபற்றி எனக்கு தெரிந்ததை பகிர்ந்துக்கொள்ளவந்துள்ளேன்.

90. அல்லாஹ் அருளியதை மறுப்பதற்குப் பகரமாக தங்களையே அவர்கள் விற்பனை செய்வது மிகவும் கெட்டது. அடியார்களில், தான் நாடியோருக்கு தனது அருளை, அல்லாஹ் அருளியதில் கொண்ட பொறாமையே இதற்கு காரணம்.
எனவே கோபத்திற்குமேல் கோபத்திற்கு ஆளானார்கள் [ஏக இறைவனை] மறுப்போருக்கு இழிவுதரும் வேதனை இருக்கிறது.
[அல்குர்ஆன்:பாகம்:1 -2.அல்பகரா]

1,2,3,4. [முஹம்மதே] மனிதர்களின் அரசனும்,
மனிதர்களின் கடவுளுமான,
மனிதர்களின் இறைவனிடம் மறைத்துக்கொண்டு,
தீயஎண்ணங்களைப்போடுபவனின் தீங்கைவிட்டும் பாதுகாப்பைத்தேடுகிறேன் என்று கூறுவீராக!

5. அவன் மனிதர்களின் உள்ளங்களில் தீய எண்ணங்களை போடுகிறான்.

6. ஜின்களிலும். மனிதர்களிலும் இத்தகையோர் உள்ளனர்.

[அல்குர்ஆன். பாகம்: 30- 113:அந்நாஸ்]

அண்ணல் நபி[ஸல்லல்லாஹ்] அவர்கள் கூறினார்கள்:
“உங்களுக்கு முன் வாழ்ந்து சென்றோர்களின் நோய் [உங்களுக்கே தெரியாமல்] உங்களிடம் ஊடுருவி இருக்கிறது.
அதாவது பொறாமையென்னும் நோய்தான்! இது மழிக்ககூடியதாக இருக்கிறது. தலைமுடியை மழிக்கக்கூடியது என்று நான் சொல்லவில்லை;
தீனை- இறைநெறியை மழித்துவிடும் இது!”

[அறிவிப்பாளர்: ஜுபைர் ரலியல்லாஹ்  ஆதாரம்: முஸ்னத் அஹமத்]

ஒரு மனிதன் இன்னொருமனிதனைக்கண்டு பொறாமைப்படுவது இன்றைய காலக்கட்டத்தில் மிக இயல்பாகிவிட்டது.

அவனுக்கு கிடைத்ததுபோல் தனக்கு கிடைக்கவிலையே!
அவனுக்கு அமைந்ததுபோல் தனக்கு அமையவில்லையே! என பொறாமையில் பொசுங்கிபோகிறான்.
அதனால் அவனுக்கு தன்மேலேயே வெறுப்பு ஏற்படுகிறது, தன்னால் எதுவும் முடியாது என்றமனநிலையை
உருவாக்கிக்கொள்கிறான்.
மற்றவரை பார்த்து பொறாமைப்பட்டு அதை பொருத்துக்கொள்ளமுடியாமல் எவ்வித பாவத்தையும் செய்ய துணிந்துவிடுகிறான்.

அதீத ஆசைக்கொண்டமனிதன் பிறக்குச்செல்வம் குவியக்கண்டாலும். பிறர் சாதனை புரிந்து நின்றாலும்
இவனைவிட அவன் முன்னுக்கு வந்தாலும்.இவனுக்கு கிடைக்காத ஒன்று அவனுக்கு கிடைத்து விட்டாலும்,
பிறர் மற்றவனை பாராட்டக்கண்டாலும், ஏனோ மனம் இவனுக்கு ஒத்துக்கொள்வதுமில்லை, ஏற்றுக்கொள்வதுமில்லை.
தன்னைவிட யாரும் ஒருபடி முன்னேறினாலும்.தன்னைவிட யாரும் மதிக்கப்பட்டாலும்,
மனதிற்குள் பொறாமைப்பட்டுக்கொண்டே வெளியில் நல்லவன்போல் நடித்துக்கொள்கிறான்.நரித்தனம் செய்கிறான்.
அது தவறென்று அவனுக்கே நன்கு தெரிந்திருந்தும் அவனால் அதை தடுக்கமுடிவதில்லை.

பொறாமையினால் பலகுடும்பங்கள் நடுதெருவுக்கு வந்திருப்பதை கண்ணால்பார்த்தும் திருந்தாத மனிதர்கள் திரிகிறார்கள்.
எது நமக்கென்று விதிக்கப்பட்டதோ அதுதான் நமக்கு கிடைக்கும்,
அது நல்லதானாலும் கெட்டதாலும்.
ஆனால்! அதையும்மீறி வீணான பொறாமையினால் நம்மை நாமே அழித்துக்கொள்வதில் லாபமில்லை.

ஆன்மாவே!

பொறாமைகொள்வது மனிதனுக்கும் நல்லதல்ல மனதுக்கும் நல்லதல்ல.
பொறாமைகொள்வது: பெற்றவர்களை பிள்ளைகளிடமிருந்தும், பிள்ளைகளை பெற்றவர்களிடமிருந்தும்.
சினேகிதர்களை சினேகத்திலிருந்தும். உறவுனர்களை உறவினர்களிடமிருந்து.
மொத்தத்தில் மனிதத் தன்மையிலிருந்தும்,அன்பிலிருந்தும்.மனசாட்சியை மறந்துபோவதிலிருந்தும், தீயபழக்கவழக்கதிற்க்கு நம்மை அடிமையாக்குவதிலும் முதன்மையாக்கி,நம்மை நன்மையைவிட்டு வெகுதூரத்திக்கு கொண்டுசெல்வதோடு.
இறைவனின் கோபத்திற்கும் நம்மை ஆளாக்கிவிடும்.

எல்லாம் வல்ல இறைவனின் கடுங்கோபத்திலிருந்தும், மனிதம் மாறி மிருககுணம் தோன்றுவதிலிருந்தும் நம்மை நாம் காத்துகொள்ள, பொறாமையென்னும் தீயபழக்கத்திலிருந்து நம்மை காத்துக்கொள்வோமாக!
இந்த தீமையிலிருந்து  பாதுகாக்கச்சொல்லி இறையோனிடம் இருகரம்யேந்தி கேட்ப்போமாக!

ஆன்மாவே!

இன்று பொறாமைக்குணப்பதைப்பற்றி
அறியத்தந்த இறைவன்

இன்ஷாஅல்லாஹ்
இறைவன் நாடினால்
அடுத்த நல்லதொரு விசயத்தை பகிர்ந்துகொள்ள உதவுவான்
என்ற நம்பிக்கையோடும் அதுவரை நம் அனைவரையும் பொறாமையென்னும் தீமையிலிருந்து நம்மை காத்து ஈருலக்கிலும் நற்பாக்கியங்கள் பெற்றிட இறைவனை வேண்டியவாறு
விடை பெறுகிறேன் வஸ்ஸலாம்...

அன்புடன் மலிக்கா

இறைவா!
உன்னையே வணங்குகிறேன்.
உன்னிடமே உதவியும் தேடுகிறேன்.

14 comments:

நாடோடி said...

நல்ல இடுகை..தொடருங்கள்..

Anonymous said...

நம் அனைவரையும் பொறாமையென்னும் தீமையிலிருந்து நம்மை காத்து ஈருலக்கிலும் நற்பாக்கியங்கள் பெற்றிட இறைவனை வேண்டியவாறு

Aameen

பாத்திமா ஜொஹ்ரா said...

அல்லாஹ் இந்த தீமையிலிருந்து நம்மை காப்பானாக

இப்னு அப்துல் ரஜாக் said...

இனிய பாதையில் ஒரு அரசி..........
உங்கள் தளம் தேர்வு பெற்று-பதிப்பாகிவிட்டது,சகோதரி

http://penaamunai.blogspot.com/

அன்புச்சாமி said...

http://penaamunai.blogspot.com/2010/02/blog-post_21.html.

தாங்களிப்பற்றி பேனமுனையில் அறிமுகம் அழகு.

வாழ்த்துக்கள் சகோதரி இன்னும் வளரவும் பாராட்டுக்கள்.

நட்புடன் அன்புச்சாமி

பனித்துளி சங்கர் said...

அருமை நண்பரே . பகிர்வுக்கு நன்றி

பித்தனின் வாக்கு said...

நல்ல கருத்துக்கள். இறைத்தூதரின் போதனைகளும் விளக்கங்களும் அற்புதம். மதம் என்ற பெயரால் சடங்குகளை கடைப்பிடிக்கும் மனிதன், இது போன்ற நல்ல சிந்தனைகளை மட்டும் விட்டு விடுகின்றான். நல்ல ஏண்ணங்கள் பிறக்க இது போன்ற கட்டுரைகளைப் படித்தால் போதுமானது. நன்றி.

அன்புடன் மலிக்கா said...

நாடோடி said...
நல்ல இடுகை..தொடருங்கள்..

.

வருகைக்கும் கருத்துக்கம் மிக்க நன்றி நாடோடி..


/நாஸியா said...
நம் அனைவரையும் பொறாமையென்னும் தீமையிலிருந்து நம்மை காத்து ஈருலக்கிலும் நற்பாக்கியங்கள் பெற்றிட இறைவனை வேண்டியவாறு

Aameen//

ஆமீன் யாரப்பல் ஆலமீன்..

அன்புடன் மலிக்கா said...

நாடோடி said...
நல்ல இடுகை..தொடருங்கள்..

.

வருகைக்கும் கருத்துக்கம் மிக்க நன்றி நாடோடி..


/நாஸியா said...
நம் அனைவரையும் பொறாமையென்னும் தீமையிலிருந்து நம்மை காத்து ஈருலக்கிலும் நற்பாக்கியங்கள் பெற்றிட இறைவனை வேண்டியவாறு

Aameen//

ஆமீன் யாரப்பல் ஆலமீன்..

அன்புடன் மலிக்கா said...

பாத்திமா ஜொஹ்ரா said...
அல்லாஹ் இந்த தீமையிலிருந்து நம்மை காப்பானாக..

ஆமீன்

அன்புடன் மலிக்கா said...

பாத்திமா ஜொஹ்ரா said...
அல்லாஹ் இந்த தீமையிலிருந்து நம்மை காப்பானாக..

ஆமீன்

அன்புடன் மலிக்கா said...

'ஒருவனின்' அடிமை said...
இனிய பாதையில் ஒரு அரசி..........
உங்கள் தளம் தேர்வு பெற்று-பதிப்பாகிவிட்டது,சகோதரி

http://penaamunai.blogspot.com//

மிகுந்த சந்தோஷமும் மகிழ்ச்சியும் மிக்க நன்றி. ஒருவனின் அடிமை..
பேனாமுனையில் என்னைபற்றிய அறிமுத்திற்க்கு மீண்டும் நன்றிகள் பல..

ஹுஸைனம்மா said...

//எது நமக்கென்று விதிக்கப்பட்டதோ அதுதான் நமக்கு கிடைக்கும், //

எப்பவும் நன்மையே தந்தருள்வானாக இறைவன்.

பாலா said...

இன்னும் நிறைய இதுபோன்று நல்ல உபதேசங்கள் செய்யுங்கள் வாழ்கையில் நிறைய கற்கவேண்டியுள்ளது. எல்லாருக்கும் புரியும்படி தாங்கள் மேற்கொள்ளும் இப்பணி மிக சிறப்புவாய்ந்தது.

கடவுள் துணையிருப்பார்..

Post a Comment

கருத்துக்களை பகிர்ந்துகொள்ளும்போது நிறைகுறைகளை சரிபார்க்கலாம். பகிந்துகொள்ளுங்களேன் கருத்துக்களை
நானும் என்னை சரிசெய்து கொள்கிறேன் .
பிடிதிருந்தால் ஓட்டும் போடுங்கள்

வேண்டுகோள்..

இங்கே பதியப்படும் அனைத்தும், நான் என்னை தெளிவுப்படுத்திக்கொள்ளவும். ஈருலக வாழ்க்கையையும் அறிந்துக்கொள்ளவும். தொடங்கியுள்ள பயணம். அதில் தாங்களும் தெரிந்துகொள்வதில் பெருமிதம். ஆனால் இதை தவறானமுறையில் விளங்கிக்கொண்டு வீணான விவாதங்களோ தர்க்கங்களான கருத்துக்களாகவோ அமைத்துவிட வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்..