.

வருகை புரியும் அனைவர்மீதும் இறைவனின் அருளும் சாந்தியும் அளவில்லாமல் கிடைக்கட்டும் Photobucket

அன்புள்ள ஆன்மாவே!-5

| |

بسم الله الرحمن الرحيم
அளவற்ற அருளாளனும் நிகறற்ற அன்புடையோனுமாகிய
இறைவனின் திருப்பெயரால் ஆரம்பிக்கிறேன்.


அன்புள்ள ஆன்மாவே!
இன்று பொய் பேசுவதால் ஏற்படும் நன்மை தீமைகளைப்பற்றி அறிந்தவைகளையும் தெரிந்தவைகளையும் பகிர்ந்துகொள்ளவந்துள்ளேன்.

பொய் தவறுகளின் தலை

1. காலத்தின்மீது சத்தியமாக!
2..மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான்.
3.நம்பிக்கைகொண்டு நல்லறங்கள் செய்வோரையும்,
உண்மையைப் போதித்து பொறுமையையும்
போதித்துக்கொள்வோரை தவிர.
[அல்குர்ஆன்]பாகம் 30.- 103.அல் அஸ்ர்]

13. மனிதர்களே!
உங்களை ஓர்ஆண் ஒருபெண்ணிலிருந்தே
படைத்தோம்.
நீங்கள் ஒருவரையொருவர் அறிந்துகொள்வதற்காக
உங்களை கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்
உங்களில்[இறைவனை] அதிகம்அஞ்சுவோரே
இறைவனிடன் சிறந்தவர்.
இறைவன் அறிந்தவன்;நன்கறிபவன்.
[அல்குர்ஆன் பாகம் 26. -49.அல் ஹுஜ்ராத்]


221. ஷைத்தான்கள் யார்மீது இறங்குவார்கள்
என்பதை அறிவிக்கட்டுமா?

222.இட்டுக்கட்டும் ஒவ்வொரு பாவியின்மீதும்
இறங்குகின்றனர்.

223.அவர்கள் ஒட்டுக் கேட்கின்றனர்.
அவர்களில் அதிகமானோர் பொய்யர்கள்.
[அல்குர்ஆன் பாகம்: 19.- 26.அஷ் ஷூ அரா]

9. அல்லாஹ்வையும். நம்பிக்கைக்கொண்டோரையும்
அவர்கள் ஏமாற்றநினைக்கின்றனர்.[உண்மையில்]
தம்மைத்தாமே ஏமாற்றிக்கொள்கின்றனர்.
அவர்கள் உணர்வதில்லை.

10.அவர்களின் உள்ளங்களில் நோய் இருக்கிறது
அல்லாஹ்வும் அவர்களுக்கு நோயை அதிகமாக்கிவிட்டான்.
பொய் சொல்வோராக இருந்தால் அவர்களுக்குத்
துன்புறுத்தும் வேதனை உண்டு..

[அல்குர் ஆன் பாகம்:1- 2.அல்பகரா]

பொய் பேசுவது இன்று சர்வசாதாரணமாகிவிட்டது, எதற்கெடுத்தாலும் பொய்
நின்றால், நடந்தால், பேசினால், சகலத்திலும் பொய் கலந்துவிட்டது.
நல்லவைக்கும் பொய் கெட்டவைக்கும் பொய். பொய்யே வாழ்க்கையாகிவிட்டது, வழக்கமாகிவிட்டது.

இன்றைய காலத்தில் பொய் பேஷனாகிவிட்டது, கலாச்சாரத்தை நாகரீகம் முந்திக்கொண்டுபோவதால் உண்மையை உதறித்தள்ளிவிட்டு பொய் அதன்மேலேறி ஊர்வலம் போகிறது.

மனிதனுக்கு மனிதன் பயங்கொண்டு தொட்டதற்கெல்லாம் பொய் சொல்லும் வழக்கத்தை ஏற்படுத்திக்கொள்கிறான். ஆனால் தன்பொய்யால் தானே ஒருநாள் அழியக்கூடும் என்பதை மறந்துவிடுகிறான். பொய்யனுக்கு தண்டனையே அவன்பொய்சொல்லியே திரிந்ததால் அவன் உண்மையை பேசும்போதுகூட யாரும் அதை நம்பாததுதான். அதைவிடவா ஒருவனுக்கு இழிவு வேண்டும்.

மனிதனின் மற்றப் பாவங்களுக்கும் தவறுகளுக்கும் அடித்தளமே! இந்த பொய்தான். ஒரு பொய்யை மறைக்க இன்னொரு பொய், இப்படியே அடுத்தடுத்து பொய்களையே வழக்கமாக்கி வாழ்ந்துவருகிறான். பொய் பேசும்போது அது சாதாரணமாகத்தான் தோன்றும், அது மற்றவரின் வாழ்கையையே பலசமங்களில் நாசமாக்கிவிடும் என்பதை உணர்ந்தும்
உணரமறுப்பதுதான் மனிதமனம்.

ஆன்மாவே!
நெருப்பு விறகை தின்பதுபோல்
பொய் [ஈமானை] நல்லொழுக்கத்தையே
தின்றுவிடும்.


உண்மைக்கு பயந்தவன் மட்டுமே பொய்களை துணைக்குத்தேடுவான்.
நீ சொல்லும் பொய்கள் உன்னைச்சுற்றியே வட்டமிட்டுக்கொண்டிருக்கும் கழுகுபோல். அது உன்னையே உன் சந்ததிகளின் வழியில் தாக்கும்போது அதன் வீரியத்தை உணர்ந்தும் பயனில்லை.

உதிர்க்கப்படும் வார்தைகளில் சுத்தம் இருக்கவேண்டும் உண்மையிருக்கவேண்டும். உண்மை தவறிப்போனால் ஒருபோதும்
அது நல்லவையாக இருக்காது. பொய்பேசும்போது உன்னையே நீ உற்றுப்பார்
உனக்கே வெட்கம்தோன்றும் உறுத்தல்தோன்றும், இருந்தும் மறைத்தவனாய்
வெளிவேசம் போடுவாய். பொய் பேசிய இரவு உறக்கம் தொலையும். உண்மையான, மனசாட்சியுள்ள மனமாக இருந்தால், தன் உள்ளம் தன்னையே வெருக்கும்.

ஆன்மாவே!
பொய்சொல்லிக்கிடைக்கும் வெற்றி வெற்றியாகாது, வெற்றியாக தோற்றமளிக்கும் அனைத்தும் வெற்றியல்ல. உண்மை மனதுக்கு தெரியும்.

ஒருபொய்தானே என்றெண்ணி இறைவனின் கோபத்திற்கு ஆளாகாதே!
பொய் பேசித்திரியும் ஒவ்வொருவரும் ஈருலகத்திலும் வெற்றியில்லை.
பொய் சொல்வதை, பேசுவதை தவிர்ந்துப்பார், உன்பலதவறுகள்
குறைவதை நீயே உணர்வாய்.
உன் இறைவனின்கடுமையானதண்டணையிலிருந்து உன்னைக்காத்துக்கொள்வாய்..

ஆன்மாவே!
இன்று இறைவனின் பொய்யுரைப்பதைப்பற்றி
அறியத்தந்த இறைவன்

இன்ஷாஅல்லாஹ்
இறைவன் நாடினால்
அடுத்த நல்லதொரு விசயத்தை பகிர்ந்துகொள்ளஉதவுவான்
என்ற நம்பிக்கையோடும் அதுவரை நம் அனைவரையும் பொய்யிலிருந்து நம்மை காத்து ஈருலக்கிலும் நற்பாக்கியங்கள் பெற்றிட இறைவன் வேண்டியவாறு
விடை பெறுகிறேன்...

இறைவா!
உன்னையே வணங்குகிறேன்
உன்னிடமே உதவியும் தேடுகிறேன்.

அன்புடன் மலிக்கா

11 comments:

ஜெய்லானி said...

///பொய்சொல்லிக்கிடைக்கும் வெற்றி, வெற்றியாக தோற்றமளிக்கும் அனைத்தும் வெற்றியல்ல. உண்மை மனதுக்கு தெரியும்.///

உன்மைதான்....

ஜெய்லானி said...

///அவர்கள் ஒட்டுக் கூட்கின்றனர்.///
pls change spl mistake.because this is QUR'AN.

sorry sister.

பாத்திமா ஜொஹ்ரா said...

எல்லாப் புகழும் ஏக இறைவனுக்கே.அருமை,தொடருங்கள்.

Anonymous said...

ஹ்ம்ம்ம்..

அல்லாஹ் நம்மை ஷைத்தானுடைய தீண்டுதலில் இருந்து காப்பாற்றுவானாக.

ஜஸகலலாஹ் சகோதரி..

ஸாதிகா said...

ஜஸகல்லாஹு ஹைர்!அருமையாக இருக்கிறது மலிக்கா.தொடரட்டும் உங்கள் செம்பணி.குர் ஆனை நான் இன்று பத்து ஐன் ஓதினேன்,நாலு ஜுஸ்வு முடித்தேன் என்பதை விட ஒரு பக்கம் ஓதி இருந்தாலும் அதனை தர்ஜுமாவுடன் ஓத வேண்டும் என்பதுதான் என் விருப்பம்

ஹுஸைனம்மா said...

//பொய் பேசுவது இன்று சர்வசாதாரணமாகிவிட்டது//

வேதனை. அல்லாஹுத்தஆலா நம்மைக் காக்க வேண்டும்.

நல்ல விஷய்ம் நினைவுபடுத்தியமைக்கு நன்றி மலிக்கா.

SUFFIX said...

நல்லதொரு இடுகை, சில சமயம் நம்மை அறியாமலே பொய் கலந்து விடுகிறது, கவனமாக இருந்து கொள்ளவேண்டும். பகிர்விற்கு நன்றி.

இப்னு அப்துல் ரஜாக் said...

உங்கள் எல்லா கட்டுரைகளும் அருமை சகோதரி.உங்கள் பிளாக்கை சிறந்த பிளக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது.எனவே உங்களைப் பற்றிய சிறு குறிப்புடன்,எமக்கு பின்னூட்டம் இட்டால் நன்றாக இருக்கும.பேனா முனை தளத்தில் வெளிவரும்,இன்ஷா அல்லாஹ்.

http://penaamunai.blogspot.com/

இப்னு அப்துல் ரஜாக் said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி,உங்கள் பின்னூட்டம் கண்டேன்-எப்படி உங்களைப்பற்றிய குறிப்பு அனுப்புவது என்று.நீங்கள் தர விரும்பும் குறிப்பை பின்னூட்டமாகவே இடலாம்,எதிர்பார்க்கிறேன்.நன்றி.ஜசாகல்லாஹு க்ஹைர்.

malar said...

இன்று தான் பார்தேன் உங்களுடய இனியபாதை....

எல்லாமே நல்ல பதிவுகள்....

அன்புடன் மலிக்கா said...

வந்து சென்ற அனைத்து நெஞ்சங்களுக்கும் இறைவனின் அருள் உண்டாகட்டும்.
தொடர்ந்து வாருங்கள்.

Post a Comment

கருத்துக்களை பகிர்ந்துகொள்ளும்போது நிறைகுறைகளை சரிபார்க்கலாம். பகிந்துகொள்ளுங்களேன் கருத்துக்களை
நானும் என்னை சரிசெய்து கொள்கிறேன் .
பிடிதிருந்தால் ஓட்டும் போடுங்கள்

வேண்டுகோள்..

இங்கே பதியப்படும் அனைத்தும், நான் என்னை தெளிவுப்படுத்திக்கொள்ளவும். ஈருலக வாழ்க்கையையும் அறிந்துக்கொள்ளவும். தொடங்கியுள்ள பயணம். அதில் தாங்களும் தெரிந்துகொள்வதில் பெருமிதம். ஆனால் இதை தவறானமுறையில் விளங்கிக்கொண்டு வீணான விவாதங்களோ தர்க்கங்களான கருத்துக்களாகவோ அமைத்துவிட வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்..