.

வருகை புரியும் அனைவர்மீதும் இறைவனின் அருளும் சாந்தியும் அளவில்லாமல் கிடைக்கட்டும் Photobucket

அன்புள்ள ஆன்மாவே! -7[”சீ” என்ற சொல்]

| |

بسم الله الرحمن الرحيم


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
இறைவனின் திருப்பெயரால் ஆரம்பிக்கிறேன்.

ஆன்மாவே!
இன்று தாய் தந்தையை பேணிக்காப்பது பற்றி!
எனக்கு தெரிந்ததை பகிர்ந்துக்கொள்ளவந்துள்ளேன்.

23: என்னைத்தவிர யாரையும் வணங்காதீர்கள்!
பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள்” என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான். உம்முடன் இருக்கும் அவ்விருவருமோ, இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்துவிட்டால் அவ்விருவரை நோக்கி ‘சீ’ எனக் கூறிவிடாதே! அவ்விருவரையும் விரட்டாதே!
மரியாதையான சொல்லையே அவ்விருவரிடமும் கூறு.

24: அன்புடன் பணிவு எனும் சிறகை அவ்விருவருக்காவும் தாழ்த்துவீராக!
“சிறுவனாக இருக்கும்போது என்னை இருவரும் பராமரித்ததுப்போல் இறைவா!
இவ்விருவருக்கும் அருள்புரிவாயாக! என்று கேட்பீராக!

25: உங்கள் உள்ளங்களில் உள்ளதை உங்கள் இறைவன் நன்கறிபவன். நீங்கள்
நல்லோராக இருந்தால் அவன் திருந்துவோரை மன்னிப்பவனாக இருக்கிறான்.
[அல்குர்ஆன் பாகம்:15- 17.பனூ இஸ்ராயீல்]

ஒருமனிதர் தாய் தந்தையரை அழுது கொண்டிருக்குமாறு விட்டுவிட்டு ஹிஜ்ரத் செய்வதாக வாக்குப்பிரமாணம் அளித்திட அண்ணல் நபி[ஸல்] அவர்களிடம் வந்திருந்தார். அப்போது நபி[ஸல்] அவர்கள் கூறினார்கள்:
தாய் தந்தையரிடம் திரும்பிச்சென்று எவ்வாறு அழச்செய்துவிட்டு வந்தாயோ
அவ்வாறு சிரிக்கச்செய்துவிட்டு வா!” என்றார்கள்.

[அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் [ரலி] ஆதாரம்: அல் அதபுல் முஃப்ரத்]

ஆன்மாவே!
இறைவன் இப்புவியை படைத்து அதில் மனிதர்களையும் அவர்களுக்கு தேவையான அனைத்தையும் படைத்துள்ளான். அதில் தாய் தந்தையென்ற உயரிய ஸ்தானத்தையும் கொடுத்து நம்முடைய இப்பிறப்பு இந்த இருவர்கள் மூலம்தான் இவர்களின் மூலமே இவ்வுலக வாழ்க்கையைக்காணவேண்டும் என்ற நிலையையும் வகுத்துள்ளான்.

நம்மை ஈன்றெடுக்க அவர்கள் படும் கஷ்டநஸ்டங்கள். துன்பதுயரங்கள். அதையெல்லாம் சொல்லில் விவரிக்கமுடியாது அத்தனை இன்ப துன்பங்களுக்கிடையிலும், நம்மை ஒரு பூப்போன்று பெற்றடுத்து. ஈ எறும்பு. அண்டாமல். விடிய விடிய கண்விழித்து காத்திருந்து. உழைத்து உழைத்து ஓடாகி, நம்மை ஒரு நல்ல நிலைக்கு கொண்டுவரும்வரையில் அவர்களின்
கஷ்டங்களை சிறுதும் பொருட்படுத்தாமல், நமக்காவே வாழ்ந்து வரும்
தியாகத்திரு உள்ளங்கள்.

நாம் வளர்ந்து ஆளானதும் அவர்களை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை
அவர்கள் சொல்லும் எந்த ஒரு சொல்லையும் கேட்பதற்க்கு தயாராகயில்லை,
அவர்கள் முதுமையடைந்துவிட்டால் அவர்களை ஒதுக்கி ஓரங்கட்டிவிடுகிறோம். பெயருக்காக ஊர் உலகம் பேசும் என்ற ஒன்றுக்காக அவர்களை கூடவே வைத்துள்ளோம். வயது தளர்ந்தபோது அவர்களும் ஒரு குழந்தையே! என்பதைமறந்து அவர்கள் எது சொன்னாலும் குற்றமென கருதுகிறோம்.

தாயையாவது சிலர் மதிக்கிறார்கள் ஆனால் தந்தையை, வெகு மோசமாக விமர்சிக்கிறார்கள். அது ஏனென்று புரியவில்லை, சிறுவயதுமுதல் அவர்களுக்காக உயிரை உருக்கி உழைத்து கஷ்டப்படும் அவர்களை.
தரைக்குறைவாக பேசுகிறார்கள், ஆண்மக்களாலேயே பேசப்படுகிறார்கள்.
சினிமாக்களில், சீரியல்களில், அப்பனாஅவன், அவன்கிடக்கிறான் கஞ்சப்பய, [அதைக்கண்டு இவர்களும்]அது இதுவென வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாத அளவிற்கு தந்தைகள் தாக்கப்படுகிறார்கள். நீ தந்தையாகும்போது தெரியும்.தந்தையின் பொருப்பும்
அதன் தகுதியும்.

ஒருசில தந்தைகள் செய்யும்தவறு ஒட்டுமொத்த தந்தைகளுக்கும் இழுக்கை தேடித்தருகிறது, தாய் தவறுவதில்லையென்ற நம்பிக்கை அதே நம்பிக்கையை தந்தையின்மேலும் வைக்கவேண்டும். ஏனென்றால் இருவரில்லாமல் நாமில்லை. இருவருமே நமக்காகவே வாழும் ஜீவன்கள். சிலர் தந்தையென்ற பொருப்புக்களை மறந்து குடும்பம் என்ற பொருப்பை துறந்து தன் சுயநலன்களுக்காகவும் தன் சுகங்களுக்காவும் செயல்படுவது தவறே! அதற்கு அவர்களுக்கு இறைவனிடத்தில் கேள்வியுமுண்டு தவறுக்கான தண்டனையுமுண்டு.

ஆன்மாவே!
பிறந்ததிலிருந்து உனக்காகவே வாழும் அவர்களை இடையில்வரும் சொந்ததங்களுக்காக உதறித்தள்ளிவிடாதே! இடையில் வரும் [கணவன் மனைவி காதல் நட்பு] அனைத்தும் ஒரு கண் என்றால்,
உன் மற்றொருகண் பெற்றவர்களே! அவர்களை உதாசினப்படுத்திவிட்டு, வயதாகிவிட்டது இவர்களால் வாக்கு வாதங்கள், பிரச்சனைகள் அதான் அவர்களை விட்டு தனியே வந்தாச்சி என்ற போலிக்காரணங்களெல்லாம் கூறிக்கொண்டு அலையாதே! வயதான காலத்தில் அவர்களை தனிமைப்படுத்துவது கொடுமையிலும் கொடுமை

அவர்கள் உனக்கு கெடுதல் செய்தபோதும் நீ அவர்களுக்கு நன்மை செய்!
ஏனென்றால் அவர்கள் உன்னைப்பெற்றெடுத்தவர்கள். இத்தனை வருடங்கள் உனக்காகவே வாழ்ந்தவர்களால் இடையில் பாசம் பங்குபோடுவதை தாங்கயிழாமல், வரும் இயலாமையே! வாக்குவாதங்கள் அதைபுரிந்து நடந்துக்கொள்.. நீ இவ்வுலகத்தைப் பார்க்க உயிரும் உடலும் தந்தவர்கள்.
காலம் மிகமிகக் குறுகியது. இன்றைய பொழுது நாளை உனக்காகவும் திரும்பும் அப்போது நீ எதைச்செய்தாயோ அதையே நீயும் காண்பாய்.
இன்று அவர்கள் உன்னால்!
நாளை நீ உன் மக்களால்!

இன்று தூவப்படும் விதை, நாளை வேராக. அல்லது இன்றே மரமாக!

இறைவனுக்கு
அடுத்தபடியாக வணக்கத்திற்குறியவர்கள் பெற்றோர்களே!
வணக்கம் என்பது இறைவனுக்கு மட்டுமென்பதால், அந்த ஸ்தானத்தில் பெற்றோர்களை நாம் மதிக்கவேண்டும்.

அவர்களுடன் இணக்கமாக நடந்துகொள்ளவேண்டும். முதுமையடைந்துவிட்டால் அவர்களை முதியோர் இல்லங்களில் சேர்த்துவிடாமல்.தனிமைப்படுத்திவிடாமல், கண்ணும் கருத்துமாக, மனம் நோகாதபடி நாமே பார்த்துக்கொள்ளல் வேண்டும்.
நாம் முன்போ அவர்கள் முன்போ.
நம்மால் நம் உயிர் இருக்கும்வரை அவர்களுக்கு எவ்விதத்திலும் தொந்தரவும், மனகஷ்டமும் தராமல், பேணிக்காத்திடுவோம்
இறைவன் நம் எல்லோருக்கும் அந்த பாக்கியத்தை தந்தருள்வானாக!

ஆன்மாவே!

இன்று தாய் தந்தையை பேணிக்காப்பதுப்பற்றி
அறியத்தந்த இறைவன்

இன்ஷாஅல்லாஹ்
இறைவன் நாடினால்
அடுத்த நல்லதொரு விசயத்தை பகிர்ந்துகொள்ள உதவுவான்
என்ற நம்பிக்கையோடும் அதுவரை நம் அனைவரையும் பொறாமையென்னும் தீமையிலிருந்து நம்மை காத்து ஈருலக்கிலும் நற்பாக்கியங்கள் பெற்றிட இறைவனை வேண்டியவாறு
விடை பெறுகிறேன் வஸ்ஸலாம்...

அன்புடன் மலிக்கா
இறைவா!
உன்னையே வணங்குகிறேன்
உன்னிடமே உதவியும் தேடுகிறேன்.

9 comments:

Anonymous said...

சின்ன வயசில இருந்து இப்ப வரைக்கும் கண்ணும் கருத்துமா பார்த்துக்கிட்ட பெத்தவங்களையும் கம்மாவையும் (பாட்டி) விட்டுட்டு இவ்வளவு தூரம் இருக்குறத நினைச்சா ஒரு மாதிரி இருக்கு.. இப்பமும் எங்க கம்மாவும் ம்மாவும் 'உனக்கு பிடிச்சத செஞ்சு குடுக்க முடியலயே'ன்னு தான் வருத்தப்படுறாங்க..

என்னலாமோ தோணுது.. இப்ப என்னால அவங்களுக்கு துவா தான் செய்ய முடியும்.. :(

நாடோடி said...

//நீ தந்தையாகும்போது தெரியும்.தந்தையின் பொருப்பும்
அதன் தகுதியும்.//

உண்மை தான்...தாயும், தந்தையும் நமது இரு கண்கள்...அவர்களை நாம் நம் இமை போல் பாதுகாக்க வேண்டும்.

பித்தனின் வாக்கு said...

பெற்றாரையும்,உற்றாரையும் மதித்து வாழ்வதுதான் வாழ்க்கை. நல்ல கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

ப said...

அருமை அலகன கருத்து

Starjan (ஸ்டார்ஜன்) said...

பெற்றோர்களை உதாசீனப்படுத்தக்கூடாது என்பதை அருமையான குர்ஆன் வசன‌ங்கள் மூலம் விளக்கங்கள் அருமை..

பெற்றோர்களுக்கு மறுமையில் நல்லவாழ்க்கையை இறைவன் கொடுப்பானாக. ஆமீன்.

vidivelli said...

very very nice.........
good mean...........

S Maharajan said...

இறைவனுக்கு
அடுத்தபடியாக வணக்கத்திற்குறியவர்கள் பெற்றோர்களே!
வணக்கம் என்பது இறைவனுக்கு மட்டுமென்பதால், அந்த ஸ்தானத்தில் பெற்றோர்களை நாம் மதிக்கவேண்டும்.

உண்மை! உண்மை!
குரான் விளக்கம் அருமை!

இப்னு அப்துல் ரஜாக் said...

நல்ல விளக்கம்.
படைத்த இறைவன் ஒருவனையே வணங்க வேண்டும்.
தாய்-தந்தையை நேசிக்க வேண்டும்
,மதிக்க வேண்டும்,
அவர்களுக்கு தொண்டு - கடமை செய்ய வேண்டும்.
ஆனால் அவர்களை வணங்க கூடாது.
இது குரானின்
கட்டளை.
அருமை சகோதரி

மைதீன் said...

நெகிழ வைத்த பதிவு .நன்றி!

Post a Comment

கருத்துக்களை பகிர்ந்துகொள்ளும்போது நிறைகுறைகளை சரிபார்க்கலாம். பகிந்துகொள்ளுங்களேன் கருத்துக்களை
நானும் என்னை சரிசெய்து கொள்கிறேன் .
பிடிதிருந்தால் ஓட்டும் போடுங்கள்

வேண்டுகோள்..

இங்கே பதியப்படும் அனைத்தும், நான் என்னை தெளிவுப்படுத்திக்கொள்ளவும். ஈருலக வாழ்க்கையையும் அறிந்துக்கொள்ளவும். தொடங்கியுள்ள பயணம். அதில் தாங்களும் தெரிந்துகொள்வதில் பெருமிதம். ஆனால் இதை தவறானமுறையில் விளங்கிக்கொண்டு வீணான விவாதங்களோ தர்க்கங்களான கருத்துக்களாகவோ அமைத்துவிட வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்..