மறந்தமைக்கு மன்னிப்பாயா
-
உன்னைவிட்டுப் பிரிந்துவிட்டேன் மன்னித்துக்கொள்ளடி
நீதான் எனது முதல்தோழி
நீதான் என் முதல் கனவு
என்னை நான் உன்னிடமிருந்துதான் தெரிந்துகொண்டேன்
உன்னால்தான் என...
மனிதகடவுள்களின் மர்மலீலைகள் [அம்பலம்]
Posted by அன்புடன் மலிக்கா | 8:09 PM |Labels: இறைவன் ஒருவனே
بسم الله الرحمن الرحي
[இதுயார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல, எதார்த்தங்களையும் உண்மைகளையும் எனக்குத்தெரிந்தவகையில் எடுத்துச்சொல்கிறேன்..]
தற்போதுள்ள நிலவரப்படி எங்குநோக்கினும் மனிதக்கடவுள்களின்
மர்மலீலைகள். காவிச்சாமிகளின் களியாட்டங்கள். சாமியார்களின் சல்லாப லீலைகள். என்று தீயைவிட வேகமாக பரவிவருகிறது இணையங்களிலும். பத்திரிக்கைகளிலும். சேனல்களிலும். இதே புராணங்கள்தான். இதே செய்திகள்தான்.
இது ஏன்? எதனால்? இன்னிலைக்கு யார் காரணம்?
அவர்களா? அல்லது அறிந்தும் அறியாமல் இதுபோன்றவர்களுக்கு ஆதரவுதரும் மக்களா?
மூட நம்பிக்கை மீது மோகம் கொள்வதா?.
ஒருவர் ஒருவார்த்தை சொல்லிவிட்டால் அது
திருவார்தையாகிவிடுமா?
அவர் யார்? கடவுளா?
மனிதன் கடவுளாகமுடியுமா?
முடியுமென்றால் எப்படி?
கடவுளென்பவன் தவறிழைக்காதவன்
மனிதனென்பவன் தவறிழைக்ககூடியவன்
ஒருவர் ஒருவிதத்தில் நல்லவரென்றால், மற்றொருவிதத்தில் கெட்டவராக இருப்பார். இதுதான் மனித நிலைபாடு, மனிதன் அப்படித்தான் படைக்கப்பட்டுள்ளான்.
ஒருவனுக்கு அறிவுகூடுதலாகயிருக்கும். ஒருவனுக்கு திறமைகள் கூடுதலாகயிருக்கும். இப்படி ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொருவகையில் மேன்மையாகவிளங்குகிறான்.
அதற்காக அவன் கடவுளாகமுடியுமா?
அப்படிப்பார்த்தால் அனைவருமே கடவுள்களா?
ஏனென்றால்”
தவறிழைக்காத மனிதனே பூமியில் இல்லவேயில்லை
அப்படியிருப்பதாக சொன்னால் அவரின் மனசாட்சிக்குதெரியும் தான் சிறுதவறுகூட இழைக்காதவரா? என்று.
மனிதனாகப்பட்டவன் தவறிழைத்து,தன்னைத்திருத்தி,
தனிமனித ஒழுக்கத்துடன் வாழநினைக்கவும், அவனுக்கு வழங்கப்படிருக்கும் வாழ்க்கையிது, பரிசோதனையான இவ்வுல வாழ்க்கை, இதில்தான் அடங்கியிருக்கு அவனின் வெற்றியும் தோல்வியும்.
மனிதனை மனிதன் கடவுளாக எப்படி ஏற்கிறான் என்றுதான் தெரியவில்லை?
தன்னைபோன்றே.உண்ணும், உடுத்தும், உறங்கும்,
மலம்ஜலம் கழிக்கும். உணர்ச்சிகளிருக்கும். ஆசாபாசங்களிருக்கும்.மரணிக்கும்.
இப்படி அனைத்திலும் தன்னைப்போன்றே செயல்படும் ஒருவன் எப்படி கடவுளாக முடியும்.
துறந்து வாழ்ந்தால் கடவுளா?
துறவரம் என்றால் என்ன?
பின்பெதற்கு ஆண்பெண் என்ற இரண்டு ஜோடிகளைப்படைத்து
ஒருவருக்கொருவர் துணையை உண்டாக்கப்பட்டது, அவரவர் நிலத்தில் அவரவர் உழுதுபயிரிடுங்கள் என்றுதானே!
துறவரம் என்றபெயரில் காணும் நிலங்களிலெல்லாம் உழுது பயிரிடுவதற்கா??
துறவரமென்றால் தூய்மையின் உறைவிடம்தானே!
ஆனால்?
இங்கே காலங்காலமாக நடந்துவருவதென்ன?
துறந்துவிட்டோமென்ற போர்வையில் குத்தாட்டங்களோடும், குட்டிபுட்டிகளோடும். அபலைப்பெண்களின் அங்கங்கள் இதுபோன்றவர்களின் அர்ச்சனைக்கு ஆளாக்கப்படுகிறன.
அழகிகள்கூட அடிபணிந்து அலைமோதுகின்றன.
மனிதர்களின் மனங்கள்
அடிமாட்டைவிட மோசமாகவல்லவா மழுங்கிக்கிடக்கின்றன.
எத்தனை ,எத்தனை. இதுபோன்ற சம்பவங்கள் நடைப்பெற்றாலும். இதை அன்றே மறந்து,வேறு ஏமாற்றத்திற்கு தயாராகும் மக்களை நினைத்துதான் பரிதாமாக இருக்கிறது.
மனிதனைக் கடவுளென்று நினைத்து அவருக்கு தீபஆராதனையெடுத்த கைகளின்று, அவர்களின் உருவபொம்மைகளுக்கே தீயிட்டுக்கொளுத்தும் வேடிக்கைகள். மகானாக பார்த்த கண்களெல்லாம் மண்புழுவைவிட கேவளமாக பார்க்கும் வினோதங்கள். அவரின் பாதங்களுக்கு பாலபிஷேகம் செய்தவர்களெல்லாம் இன்று தங்கள் பாதங்களால் அவரின் உருவத்தைபோட்டு மிதிக்கும் அவலங்கள்.
மலர் மாலைகளை சூட்டி மண்டியிட்டவர்களெல்லாம்.
செருப்புமாலையணிவிக்கும் சிறுபிள்ளைதனம் என. தாங்களே ஏமாந்துவிட்டதை தாங்கயிலாமல்,தங்கள் உயிரைவிட பெரிதென போற்றிபுகழ்ந்தவர்களையே இன்று தூற்றுகிறார்கள். தூக்கியெறிகிறார்கள்.
இன்னிலைக்கு எது காரணம்? அறியாமையா? அல்லது அறிந்தும் அறியமறுப்பதா? நம்பிக்கையா? அல்லது நம்பிக்கையென்று தங்களை தாங்களே ஏமாற்றிக்கொள்வதா? அறியாமை காலத்தில் நடந்தால், அது அறிதலில்லாததது எனலாம்.
ஆனாலின்று, அத்தனையும் அப்பப்ப அறிந்துவிடும் காலம். 5 மணிக்கு அறியாததை 5.5 மணிக்கு அறிந்துவிடுமளவிற்கு, அறிவியலும் விஞ்ஞாமும் அளவில்லாமல் அறியாதவர்கள்கூட அறியும்படி அத்தனையும் ஆங்காங்கே உலகம் முழுவதும் கொட்டிக்கிடக்கிறன.
ஒருவேளை அறிவு அதிகரித்துவிட்டதாலும் வந்தவினையாக இருக்குமோ?
கடவுளுக்கும். மனிதனுக்கும். வித்தியாசமில்லையென்றால்,
உலகம் வந்ததெப்படி? நாம் பிறந்தது எப்படி? மனிதன் கடளாகமுடியுமென்றால் ஆதாம்தான் நம்மைப்படைத்தாரா? ஏனென்றால் அவர்தானே முதல்மனிதர்.
அவர். தானே தன் விலாயெலும்பிலிருந்து தன் துணையை படைத்துக்கொண்டாரா?
இல்லை நம்மைப்பெற்றெடுத்த தாய் தந்தை கடவுளா? அவர்கள் எவ்விதத்திலும் தவறிழைக்காமல் இருக்கிறார்களா?
இறைவனுக்கு அடுத்தபடியாக வணங்கக்கூடிய தகுதிகள் தாய் தந்தை இருவருக்கும்தான். ”ஆனால்” வணக்கம் என்பது ஒருவருக்குதான். அனைத்திலும் அனைத்திலும் சிறந்தவன் எவனோ அவனே வணக்குத்திற்கு தகுதியானவன்.
அறிவில்லாதவருக்கூட இதைபற்றிய அறிதல் இருக்கும். அறிந்தவரும்கூட அதை அறியாதவர்போல் நடப்பதுதான் வியப்பிலும் வியப்பு.
முதல் மனிதரான ஆதமை மண்ணால் படைத்த கடவுள்
அவர்மூலம் உருவான அத்தனை மனிதனப்பிறப்புகளையும் மீண்டும் மண்ணுக்கே கொண்டுசெல்வதுகூடவா விளங்கவில்லை?
சரி கடவுளென்பவன்,அல்லது கடவுளென்பது, எப்படிருக்கவேண்டும்.
மனிதனை மீறிய, இயற்கையைமீறிய, உலகிலுள்ள அனைத்து சக்திகளையும்மீறிய. ஒன்று அவனிடமிருந்தால்தான் அவன் கடவுள் .
இல்லை அதுகடவுள்.
கடவுளென்பவன் தன்னிகரற்றவன். அவன் தனித்தவன், மிக மிக தூய்மையானவன், அவனுக்கு யாதொரு இணையுமில்லை
மனைவி மக்கள். இல்லறவாழ்க்கை.உணவு. உறக்கம். இச்சை. மரணம்
என எந்ததேவையும் இல்லாதவன். உலகை இமைக்காமல் காத்துவருபவன்,நன்மை தீமையை முன்பே அறிந்தவன் மொத்ததில் அவனுக்கு இணை அவனே! அவன்தான் கடவுள்.
கடவுள் நம்பிக்கை நிச்சியம் இருக்கவேண்டும். அதற்காக
கண்டவரையும், , கடவுளென நினைத்து தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்வதா?.உண்மையையும் போலியையும் பிரிதறியப்பாருங்கள்.
ஏமாற்றுபவனைவிட ஏமாறுபவன்தான் அடிமுட்டாள்.
சட்டத்தில்கூட கொலை செய்தவரைவிட அதற்கு துணையாக தூண்டுகோலாக இருந்தவருக்கே தண்டனை அதிகமாம்.
இன்று பரபரப்பாகும் செய்தி. நாளை மறைக்கப்படும்,
மறுநாள் மறைந்துவிடும், அதன் மறுநாள் மன்னிக்கப்படும்.
இதுவே தொடர்கதையாகி
காலமுழுக்க ஏமாந்தயினம் மனிதயினமென்ற கறைய அடியோடு நீக்குங்கள்.
வார்த்தைகளில் வசியப்படுத்துபவரெல்லாம் கடவுளல்ல!
போற்றிப்புகழும் நீங்களே! போலியென்றதும் போட்டு உடைக்கிறீர்கள்.
மனிதனை மனிதனாய் ஏமாற்றுவது தவறென்றாலும் அது இயல்பு.
”ஆனால்” மனிதன் தன்னை இறைவனென்று மனிதனையும் ஏமாற்றி, அந்த இறைவனையும் ஏமாற்றுவதுதான் மகா மகா குற்றம்.
இதை மன்னிக்கவேமுடியாது.
இதுபோன்ற போலிக்கடவுள்களை, அல்லது கடவுள்களின் ஏஜெண்ட் என நம்பி இனியாவது ஏமாறாமல் தன்னையே ஏமாற்றிக்கொள்ளாமல் இருக்குமா மனிதயினம். இதுபோன்ற ஏமாளி மனிதர்களை நினைத்து மிகுந்த மனவேதனையோடு முடிக்கிறேன்.
உலகத்தில் நல்லது நடக்குமென்ற எதிர்பார்ப்புடன் நானும் மனிதமுள்ள மனுசியாய்.....................
இறைவா!
உன்னையே வணங்குகிறேன்
உன்னிடமே உதவியும் தேடுகிறேன்.
அன்புடன் மலிக்கா
Subscribe to:
Post Comments (Atom)
வேண்டுகோள்..
இங்கே பதியப்படும் அனைத்தும், நான் என்னை தெளிவுப்படுத்திக்கொள்ளவும். ஈருலக வாழ்க்கையையும் அறிந்துக்கொள்ளவும். தொடங்கியுள்ள பயணம். அதில் தாங்களும் தெரிந்துகொள்வதில் பெருமிதம்.
ஆனால் இதை தவறானமுறையில் விளங்கிக்கொண்டு வீணான விவாதங்களோ தர்க்கங்களான கருத்துக்களாகவோ அமைத்துவிட வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்..
35 comments:
//ஏமாற்றுபவனைவிட ஏமாறுபவன்தான் அடிமுட்டாள்.//
ஏமாறுபவன் இருப்பதால் தானே ஏமாற்றுகிறான். அதிலும் படித்தவர்கள் ஏமாறுவது ஏமாற்றுபவனைவிட ஏமாறுபவன்தான் அடிடிடிடி முட்டாள்ள்ள்ள்.
//இதுபோன்ற சம்பவங்கள் நடைப்பெற்றாலும். இதை அன்றே மறந்து,வேறு ஏமாற்றத்திற்கு தயாராகும் மக்களை நினைத்துதான் பரிதாமாக இருக்கிறது.//
இதுவும் கடந்து போகும்; இனியொரு சாமியாரும் தோன்றுவார்!!
அல்ஹம்துலில்லாஹ் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது, சில விஷயங்களை நினைத்துப் பார்க்கும்போது!!
அபலை பெண்கள் சாமியார்களை கடவுள் என்று நம்மி அவர்கள் இவர்கள் குறைய தீர்த்து விடுவார்கள் என்று போகுகிறார்கள்.
ஆனால் சாகியார்கள் பெண்களை பகடைகாயா உருட்ட ஆரம்பித்து விடுகிறார்கள்.
ஜெய்லானி சொல்வது போல் இவ்வுலகில் ஏமாறும் ஏமாளிகள் இருக்கும் வரை ஏமாற்றி கொண்டு தான் இருப்பார்கள்.
சரியான பதிவு மலிக்கா.
//இன்று பரபரப்பாகும் செய்தி. நாளை மறைக்கப்படும்,
மறுநாள் மறைந்துவிடும், அதன் மறுநாள் மன்னிக்கப்படும்.//
இது தான் நடக்கும்..
/மனிதனைக் கடவுளென்று நினைத்து அவருக்கு தீபஆராதனையெடுத்த கைகளின்று, அவர்களின் உருவபொம்மைகளுக்கே தீயிட்டுக்கொளுத்தும் வேடிக்கைகள். மகானாக பார்த்த கண்களெல்லாம் மண்புழுவைவிட கேவளமாக பார்க்கும் வினோதங்கள். அவரின் பாதங்களுக்கு பாலபிஷேகம் செய்தவர்களெல்லாம் இன்று தங்கள் பாதங்களால் அவரின் உருவத்தைபோட்டு மிதிக்கும் அவலங்கள்.
மலர்மாலைகளை சூட்டி மண்டியிட்டவர்களெல்லாம்.
செருப்புமாலையணிவிக்கும் சிறுபிள்ளைதனம் என. தங்கள் எதை உயிரைவிட பெரிதென போற்றிபுகழ்தார்களோ அதையே இன்று தூற்றுகிறார்கள். தூக்கியெறிகிறார்கள்//
எல்லாத்தையும் இவர்களே செய்துவிட்டு குறையை அவர்களிடம் சொன்னால்..
முட்டாளாக இவர்களே விரும்பும்போது அவர்கள் வாரிக்கொள்கிறார்கள், மொத்தத்தில் அவர்களுக்கு உல்லாசம் சல்லாபம்.
திருந்துமா உலகம் உங்களைப்போல் நானும் எதிர்பார்த்து...
நல்ல பதிவு, ஏமாறுவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுவர்களும் இருக்கின்றார்கள். அது எமாந்தவனின் அப்பாவித்தனம், ஏமாற்றுவனின் புத்திசாலித்தனம்(கயவாளித்தனம்) என்றும் கொள்ளலாம். இது எல்லாம் தெரிந்தும் நாளை இன்னெருவனிடம் ஏமாறுவதுக்கும் நம் மக்கள் ரெடியாக இருப்பார்கள். நன்றி.
நாடோடி சொன்னதுபோல வேற ஒன்று வர இது மறக்க படும் அல்லது இன்னுமொரு நல்ல(!!!!!!!!!!!)சாமி வர இவர் மறக்க படுவார்
நாடோடி சொன்னதுபோல வேற ஒன்று வர இது மறக்க படும் அல்லது இன்னுமொரு நல்ல(!!!!!!!!!!!)சாமி வர இவர் மறக்க படுவார்
நாடோடி சொன்னதுபோல வேற ஒன்று வர இது மறக்க படும் அல்லது இன்னுமொரு நல்ல(!!!!!!!!!!!)சாமி வர இவர் மறக்க படுவார்
<<<
ஒருவர் ஒருவிதத்தில் நல்லவரென்றால், மற்றொருவிதத்தில் கெட்டவராக இருப்பார். இதுதான் மனித நிலைபாடு, மனிதன் அப்படித்தான் படைக்கப்பட்டுள்ளான்.
>>>
ஹிம்ம்ம்ம்ம்....
"இதுபோன்ற போலிக்கடவுள்களை நம்பி இனியாவது ஏமாறாமல் தன்னையே ஏமாற்றிக்கொள்ளாமல் இருக்குமா மனிதயினம்."
நம்ம மக்கள் திருந்துவார்கள? தெரியலையே!
நல்ல பதிவு.
அருமையான விளக்கங்கள் மலிக்கா..
மக்களோட அறியாமைதான் சாமியார்களின் மூலதனமே., மக்களின் அறியாமை விலகினால்தான் இந்த நிலை மாறும்.
ஏமாளிகள் இருக்கும் வரை, இப்படிதான் ஏமாற்றி கொண்டே இருப்பார்கள்.
மனிதனை அவனுக்கு உரிய தகுதியைவிட..அதிகமாக மதிக்கும் போக்கு மாறும்வரை...இது தொடர்ந்துகொண்டே இருக்கும்///
சாமியார்களை இப்போதெல்லாம் கடவுளாக யாரும் பார்ப்பதில்லை. கடவுளின் ஏஜெண்டாக மட்டுமே பார்க்கிறார்கள். போகின்றவர்களும் தங்கள் குறையை அவர் தீர்க்க வழி சொல்லுவார் என்றே சொல்கின்றனர்.
மக்களின் பலவீனம் அவர்களின் பலம்.
நல்ல பகிர்வு.
நல்ல பகிர்வு சகோதரி,
இதற்கு மேலும் மக்கள் விழிப்படைய வில்லையென்றால் என்ன செய்வது.
அவன் சாமி என்றவுடன் நம்பி விட்டு, தப்பு செய்தவுடன் கோபப்பட்டால், நினைக்கவே கூத்தாகத்தான் இருக்கிறது.
அருமையான பதிவு அக்கா, நம் நாட்டில் எங்கும் போலி எதிலும் போலி இதை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நல்ல பதிவு
பிரேமானந்தா அப்பப்போ ஜெயிலில் இருந்து வந்து பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறானம்.
இதுவும் கடந்து போகும்.
நல்ல இடுக்கை.
மனிதனை மனிதனாக மட்டுமே பார்த்தால் இந்த பிரச்சனை வராது
நல்ல பதிவு .தன்னம்பிக்கை இல்லாதவர்கள் அடுத்தவனை நம்புவதைப்போல்.கடவுள் மீது முழு நம்பிக்கை இல்லாதவனே சாமியாரிடம் போகிறான்.
நல்ல பதிவு மலிக்கா.ஹுசைனம்மா சொலவதைப்போல் சில விடயங்களைப்பார்க்கும் பொழுது அல்ஹம்துலில்லாஹ் என்று பெருமிதபட்டுக்கொள்ளத்தோன்றுகிறது.
இது போல் எங்கெங்கிலும் காணக்கிடைக்கிறது. குறிப்பாக முஸலீம் எனச் சொல்லிக் கொள்வோரிடமும் முரீது, தரீக்கா கண்றாவிகள்...
ஒரு மனிதன் எவ்வளவுதான் உயர்ந்தவனாயிருந்தாலும் அவனும் தவறிழைக்கக் கூடியவன்தான் என்ற உண்மை புரியாதவரை இவை தொடர்நது நிகழும் சகோதரி.
நானும் அல்ஹம்துலில்லாஹ் சொல்லிக்குறேன்.. :))
**
//இங்கே காலங்காலமாக நடந்துவருவதென்ன?
துறந்துவிட்டோமென்ற போர்வையில் குத்தாட்டங்களோடும், குட்டிபுட்டிகளோடும். அபலைப்பெண்களின் அங்கங்கள் இதுபோன்றவர்களின் அர்ச்சனைக்கு ஆளாக்கப்படுகிறன.
அழகிகள்கூட அடிபணிந்து அலைமோதுகின்றன.
மனிதர்களின் மனங்கள்
அடிமாட்டைவிட மோசமாகவல்லவா மழுங்கிக்கிடக்கின்றன.//
அருமையான பதிவு... சுடச் சுட.... மக்களுக்கும்.. மழுங்கிப் போனவர்களுக்கும்.....
//இறைவா!
உன்னையே வணங்குகிறேன்
உன்னிடமே உதவியும் தேடுகிறேன்.//
நல்ல பதிவு அக்கா.. யார் திருந்துறா?
// மனிதன் கடளாகமுடியுமென்றால் ஆதாம்தான் நம்மைப்படைத்தாரா? ஏனென்றால் அவர்தானே முதல்மனிதர்.
அவர். தானே தன் விலாயெலும்பிலிருந்து தன் துணையை படைத்துக்கொண்டாரா? //
நீங்க இன்னுமா இதை நம்புரிங்க.
//இதுபோன்ற போலிக்கடவுள்களை, அல்லது கடவுள்களின் தூதுவன்[ஏஜெண்ட்] என நம்பி இனியாவது ஏமாறாமல் தன்னையே ஏமாற்றிக்கொள்ளாமல் இருக்குமா மனிதயினம்//
இதற்கு முன் வந்துபோன எல்லா தூதுவர்களும் இதைத் செய்திருப்பார்கள் போல. யாருக்குத் தெரியும். அந்த காலத்தில் கமெரா என்ற ஒன்று இல்லை. இருந்திருந்தால் அவர்கள் வண்டவாளாமும் தண்டவாளம் வந்திருக்கும்.
மனிதனா பார்த்து திருந்தா விட்டால் திருட்டை தடுக்க முடியாது என்ற வரிகள் போன்று... மனிதனாக பகுத்தறிவை உபயோகித்து செயல்படாத வரையில் இதனை தடுக்க முடியாது...
\\ அபுஅஃப்ஸர் கூறியது...
வியந்தேன் வாதத்திறமையை கண்டு
கடவுளையும், மனிதனையும் சுட்டிக்காட்டிய விதம் அருமை, இதுக்கு மேல் என்ன விளக்கம் வேண்டும்
4 மார்ச், 2010 12:24 pm//
அபு நீரோடையில் இதைப்பற்றி சொல்லியை நானும் அப்படியே ஆமோதிக்கிறேன்..
மூடமனிதர்கள் திருந்தவேண்டும்..
தவறு செய்பவனைக் காட்டிலும் தூண்டுபவன் மிகக் கொடியவர் அதற்கு யார் இடம் கொடுத்தது ?
உலகில் வாழும் மனிதர்கள் யாவரும் தவறிழைக்கக்கூடியவர்களே! அந்தத் தவறிலிருந்து மனிதர்களைத் திருத்தவேண்டுமென்ற நோக்கில், ``பல்வேறு சட்டங்கள் மனிதனால் இயற்றப்பட்டாலும் தவறுகள் குறைந்தபாடில்லை. நாகரீகம் வளர வளர தவறும் பல்வேறு பரிமாணங்களில் மனிதனை ஆட்டிப்படைக்கிறது. இத்தகைய தீமையிலிருந்து இரண்டு விஷயங்களால் மட்டுமே மனிதனை தீமைகளிலிருந்து மீட்டெடுக்க முடியும்.
1. இறை அச்சம்
2. வெட்கம் [நாணம்]``
அருமையான எடுத்துக்காட்டுகளுடன் நல்ல பதிவு.தேவையான ஒன்று,மக்கள் சிந்திக்கட்டும்,திருந்தட்டும்....
இதுவரை சிந்திக்காதவர்(?)களையும்
இந்தக் கட்டுரை வாயிலாக சிறிதாவது
யோசிக்க வைத்துவிட்டீர்கள்!
இறைவனின் சாந்தியும் அருளும் நன் அனைவரின்மீதும் அளவில்லாமல் அள்ளிச்சொரியட்டும்.
என் பத்திவை படித்துவிட்டு கருத்துக்களும், விளக்கங்களும் பகிர்ந்துகொண்ட அத்தனை உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. தொடர்ந்து வரும்படியும் கேட்டுக்கொள்கிறேன்.
முதல்முறையாக என்தளத்திற்கு வருகைதந்த பெரியவர்கள்.மற்றும் புதியவர்கள் அனைவரையும் வருக வருகவென வரவேற்கிறேன், தொடர்ந்து அனைவரும் வந்து, என் பதிவுகளூக்கு ஊக்கமும்.கருத்துக்கலும் தருவதோடு, தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டவும் செய்யுங்கள்.
மீண்டும் அனைவருக்கும் என் நன்றிகள் பல..
என்றும் அன்புடன் மலிக்கா
இனிமேலாவது யாரும் ஏமாறாமல் புத்திசாலியாக இருக்க வேண்டும்.
Post a Comment
கருத்துக்களை பகிர்ந்துகொள்ளும்போது நிறைகுறைகளை சரிபார்க்கலாம். பகிந்துகொள்ளுங்களேன் கருத்துக்களை
நானும் என்னை சரிசெய்து கொள்கிறேன் .
பிடிதிருந்தால் ஓட்டும் போடுங்கள்