.

வருகை புரியும் அனைவர்மீதும் இறைவனின் அருளும் சாந்தியும் அளவில்லாமல் கிடைக்கட்டும் Photobucket

அன்புள்ள ஆன்மாவே!-9 இல்லறமே நல்லறம்!

| |

بسم الله الرحمن الرحيم

திருமணம் தாம்பத்தியம்.[குடும்பவாழ்க்கை]

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
இறைவனின் திருப்பெயரால் ஆரம்பிக்கிறேன்.
அன்புள்ள ஆன்மாவே!
இன்று திருமணம் தாம்பத்தியம் பற்றி!
எனக்கு தெரிந்ததை பகிர்ந்துக்கொள்ளவந்துள்ளேன்.

21.நீங்கள் அமைதிபெற
உங்களிருந்தே துணைவியரை
உங்களுக்காகப் படைத்து
உங்களுக்கிடையே அன்பையும், இரக்கத்தையும்
ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும்.
சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சன்றுகள் உள்ளன.
[அல்குர்ஆன் பாகம்:21---30 அர்ரூம்]

74.எங்கள் இறைவா!
எங்கள் வாழ்க்கைத்துணைகளிலிருந்தும்,மக்ககளிலிருந்தும்,
எங்களுக்கு கண்குளிரச்சியைத் தருவாயாக!
[உன்னை] அஞ்சுவோருக்கு முன்னோடியாகவும்
எங்களை ஆக்குவாயாக!
என்று அவர்கள் கூறுகின்றனர்.
[அல்குர்ஆன் பாகம்:19---25.அல் ஃபுர்கான்]

223: உங்கள் மனைவியர் உங்கள் விளை நிலங்கள்
உங்கள் விளைநிலங்களுக்கு விரும்பியவாறு செல்லுங்கள்!
உங்களுக்காக[நல்லறங்களை] முற்படுத்துங்கள்!
அல்லாஹ்வை அஞ்சுங்கள்!
அவனை சந்திக்கவுள்ளீர்கள் என்பதை நினைவில்கொள்ளுங்கள்!
நம்பிக்கைக் கொண்டோருக்கு நற்ச்செய்தி கூறுவீராக!
[அல்குர்ஆன் பாகம்:2 அல் பகரா]

ஆன்மாவே!

திருமணமென்பதும் தாம்பத்தியம் என்பதும்
ஒரு ஆணும் ஒரு பெண்ணும் மனதார இணைந்து உடலால் ஒன்றுகூடி இவ்வுலக வாழ்க்கையை நிறைவடைச்செய்வதும், தம் மூலம் வாரிசுகளை உருவாக்கி அவர்களையும் நல்வழியில் நடத்திச்செல்வதே!

தம்பதியர்கள் ஒருவரை ஒருவர் மகிழ்ச்சியடைச்செய்வதும், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துக்கொள்வதும். விட்டுக்கொடுக்கும் வாழ்க்கைக்குள் சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் நிரந்தரமாக்கிக்கொள்வதுமாகும்

திருமணம் என்ற பந்தத்துக்குள் நுழைத்த அவர்கள். உடலாலும் உள்ளத்தாலும் தீயவைகளின்பக்கம் தங்களை திருப்பிக்கொள்ளாமலிருக்க ஒருவரையொருவர் புரிந்துகொண்டு இனிய துணைகளாக மன இச்சைகளுக்கு தாங்களுக்கு தாங்களே மருந்தாக விருந்தாக இல்லறம் நடத்துவதுதான்.

திருமணம் செய்யாமல் தாம்பத்தியம்கூடாது. அது மனிதகுலத்துக்கே அழிவைத்தரும் தனக்குத்தானே துரோகம் செய்துக்கொள்வதுபோலாகும்.
மனிதருக்கும் மிருகத்துக்கும் உள்ள வேறுபாடுகளை களைவதில் மிகமுக்கியமன ஒன்று இந்த திருமணம்.
அவைகள்தான் தான் இஷ்டப்பட்ட ஒன்றிடம் என்நேரமும் கூடிக்கொள்ளும் அவைகள் அப்படித்தான் படைக்கப்பட்டிருக்கின்றன. மற்றவைகளைவிட மனிதனை உயர்ந்தவன். சிறப்பனவன் என்பதற்கு இதைவிட சாட்சிவேண்டுமா.

ஆன்மாவே!
இன்றய உலகம் எந்திரமாக்கப்படுவிட்டது தங்களின் இஷ்டப்படி தீமைகளின் பக்கமே தங்களை செலுத்தவிரும்புகிறார்கள்.
திருமணம் திருமணத்தின்மூலம் கிடைக்கும் தம்பத்தியத்தைவிட
தரம்தாழ்ந்த வெருக்கத்தக்க விசயங்களை தேடிப்போகிறார்கள்.
மதியையும் இழந்து மனக்கட்டுப்பாட்டையும் இழந்து மனம்போனபோக்கில் வாழநினைக்கிறார்கள்
துறவரம் என்றெபயரில் தூயவைகளைத்துறந்து துப்புரவு இல்லாமல் தீயவழியில் நடகிறார்கள்.

திருமணம் மனிதனுக்கு மிகவும் முக்கியம். அவன் நடத்தையாகட்டும். அவன் செயலகட்டும். அவன் ஒழுக்கமாட்டும். அனைத்திலும் நல்லவனாகயிருந்தபோதும்  அவன் ஒரு மனிதனே! அவனுகுள் ஆசாபாசங்கள். ஆயிரம் ஆசைகள்.அத்துமீரத்துடிக்கும் எண்ணங்கள் அத்தனையும் அவனுக்குள்ளே அடக்கவா? இல்லை அப்பப்ப அடுத்தவர்களிடம் தன் அனைத்து தேவைகளையும்
 தீர்த்துக்கொள்வதா?.இது மனிதனுக்கு அழகா? மனிதகுணத்துக்கு சிறப்பா?

தன் சொல்லையும், செயலையும். நல்லதையும் கெட்டதையும். அணுஅணுவாய் ரசிக்க, அனுபவிக்க,பங்கேற்க. தனக்கென்று ஒரு சொந்தம் வேண்டும் அன்போடு பார்த்துக்கொள்ள, அனுசரணையோடு நடத்திசெல்ல, அவர்களுக்கென்று ஒருபாதை வகுத்துக்கொள்ள, அதில் நேரானமுறையில் பயணம் செய்ய. இவ்வுலக வாழ்கையிலும் மறு உலக வாழ்க்கையையும் வெற்றிக்கொள்ள. நிச்சியம் திருமணமும், அதனால் கிடைக்கும் தாம்பத்தியமும்தான் மனிதனுக்கு அவசியம் மிகமுக்கியம்.

காணும் இடத்திலெல்லாம் கழிந்துவைக்கும் காகமா? மனிதன்.
இல்லை
நினைத்தபொழுதிலெல்லாம் நினைத்தை நடத்திச்செல்லும் நான்குகால் மிருகமா? இல்லையே!

மனிதன் மதிப்புமிக்கவன்
தனக்கென்று ஒரு கம்பீரம். தனக்கென்று ஒருமரியாதை.
தனக்கென்று ஒரு கெளரவம். தான் எதற்காக படைக்கப்பட்டிருக்கிறோம்.
தன் பிறப்பிற்கான நோக்கமென்ன அதை உணர்ந்தால் நிச்சியம் தன்னை தரமிகுந்த.கண்ணியமான. ஆத்மார்தமான அழகியசெயலான திருமணத்தின் பக்கம் தன்னை இணைத்துக்கொண்டு தாம்பத்தியம் என்னும் உறவுக்குள் உல்லசமாய் உலாவருவான்.

திருமணத்தை ஒதுக்கி துறவரம்! [துறவரம் என்ற பெயரில் நடக்கும் அட்டூளியங்கள் சொல்லித்தெரியவேண்டியதில்லை]அல்லது தன் முன்னேற்றங்களுக்கு தடை!
அல்லது தொண்டுகளுக்கு இடையூறு. என நினைத்து திருமணத்தை வெறுப்பவன். அவன் சாதித்து என்ன? முன்னேறியென்ன? அதை திருமணம் செய்து பல இடைஞ்சலுகளுக்கு மத்தியில், சாதனைகளும் முன்னேற்றங்களும் காண்பவனே முழுமையான வெற்றியடைகிறான்.
எவ்வித இடைஞ்சலும் இல்லாமல் கல்லும் முல்லும் குத்தாமல் ஓடும்பாதையில் யாரும் குறுக்கே வராமல் தான்மட்டும் ஓடி நான் வெற்றிபெற்றுவிட்டேன் என்பதில் என்ன இருக்கு வெற்றி. அது ஒரு வெற்றியா?

திருமணம் என்பது சுகமான சுமை, அந்த சுமையில் இருக்கும் சுகம் வேறெதிலும் கிடைப்பதில்லை அப்படியே கிடைத்தாலும் அது நிரந்தரமில்லை. நிச்சியம் இல்லை. கடலும் காட்டாறும் ஒன்றா? உலகில் ஓடும் அத்தனை நீரும் சங்கமம் கடலோடு என்றபோதும். காட்டாற்றில் களங்கம் கண்ட கண்ட அசிங்கங்கள் அதில் கலக்கும். கடல் அப்படியல்ல அசிங்கத்தையும் சுத்தப்படுத்தி அதையும் குடிநீராக்கி உயிர்வாழச்செய்யும் உன்னதம் மிகுந்தது.

ஆகவே ஆன்மாவே!
திருமணமென்னும் தூயதை புணைந்து தாம்பத்தியமென்னும் இனியதில்
இணைந்து. வாரிசுகளென்னும் வளமையை உருவாக்கி நன்மையின்பக்கமே நாம் அனைவரையும் வாழ்வாங்கு வாழ வல்ல ரஹ்மான்[இறைவன்] வழிசெய்வானாக ஆமீன் ஆமீன் ஆமீன்..

ஆன்மாவே!
இன்று திருமணம் தாம்பத்தியம்பற்றி
அறியத்தந்த இறைவன்
இன்ஷாஅல்லாஹ்
இறைவன் நாடினால்
அடுத்த நல்லதொரு விசயத்தை பகிர்ந்துகொள்ள உதவுவான்
என்ற நம்பிக்கையோடும் அதுவரை நம் அனைவரையும் தீமையிலிருந்து நம்மை காத்து ஈருலக்கிலும் நற்பாக்கியங்கள் பெற்றிட இறைவனை வேண்டியவாறு விடை பெறுகிறேன் வஸ்ஸலாம்...

அன்புடன் மலிக்கா

இறைவா!
உன்னையே வணங்குகிறேன்
உன்னிடமே உதவியும் தேடுகிறேன்

18 comments:

Anonymous said...

இஸ்லாத்தில் திருமணம் என்பது வெறும் ஒரு சடங்காக மட்டுமில்லாமல், அதுவும் ஒரு வணக்க வழிபாடாகவே பார்க்கப்படுகிறது.. திருமணம் செய்வதன் மூலம் நபி வழியை கடைப்பிடிக்கிறோம்..

அல்ஹம்துலில்லாஹ்!!

ஜஸகல்லாஹு க்ஹைர் சகோதரீஈஈஈஈஈ

S Maharajan said...

திருமண பந்தத்தை பற்றிய அருமையான பதிவு,ஒரு மனிதன் முழு மனிதனாவது அவன் திருமணம் செய்யும் போது தான் என்று சொல்வார்கள்.நான் இபோதைக்கு அரை மனிதன்தான்,"திருமணம் என்ற சுகமான சுமை நானும் சுமக்க அந்த "இன்ஷா அல்லா" விடம் எனக்கும் சேர்த்து வேண்டி கொள்ளுங்கள்.

காஞ்சி முரளி said...

///இன்றய உலகம் எந்திரமாக்கப்படுவிட்டது தங்களின் இஷ்டப்படி தீமைகளின் பக்கமே தங்களை செலுத்தவிரும்புகிறார்கள்.
திருமணத்தின்மூலம் கிடைக்கும் தம்பத்தியத்தைவிட தரம்தாழ்ந்த வெருக்கத்தக்க விசயங்களை தேடிப்போகிறார்கள்.////

நீங்கள் துபையில் வசிக்கிறீர்கள்... சென்னையில் வந்து பாருங்கள்.... touristஆக அல்ல... ஓர் ஆறு மாதங்களோ அல்லது ஒரு வருடமோ வசித்து பார்த்தால்... இங்கு நடக்கும் அலங்கோலங்களை காணலாம்... 'பெண் விடுதலை' என்ற பெயரில் நடக்கும் அநியாங்களை பிரதான சாலைகளிலும் - பீச்சிலும் - தியட்டர்களிலும் குறிப்பாக ஸ்டார் ஹோடேல்களிலும் காணலாம்... இது தமிழ்நாட்டின் தலைநகரா? என்று வியந்து போவீர்கள்...
மனிதன், .............விட கேவலமாய் சாலைகளில்....

என் கவிதை வரிகளில் சொல்லவேண்டுமென்றால்...

"பெண் விடுதலை என்ற பெயரில்...
அவயங்களைக் காட்டி...
அடுத்தோரை சுண்டியிழுக்கும்...
சில வக்கிரங்களின் அணிவகுப்பு...
சாலைகளில்...

பட்டப்பகலில்...
மாநகரத்தின்..
மையச் சாலைகளில்...
முகத்தில்... முக்காடிட்டபடி...
ஆணுடலோடு
சங்கமித்து செல்லும்
பெண்ணினத்தைக் கண்டும்....

காலையிலேயே....
கடற்கரையில்...
சுடுமணலில்...
ஈருயிர் ஓருடலாய்...
பின்னிப் பிணைந்திருக்கும்
பெண்ணினத்தைக் கண்டும்...."

கல்வியில் சிறந்த பெண்கள்....
கலாச்சாரச் சீரழிவை
ஏற்படுத்தும் வகையில்...
"டேட்டிங்"கில் ஈடுபடும்
இன்றைய பெண்ணினத்தைக் கண்டும்....

மேல்சொன்ன வகையில் நடந்திடும் சில பெண்களுக்கு தங்களின் பின்வரும் அறிவுரை சரியான சவுக்கடி...

அவர்கள் தங்களின் இந்த அறிவுரை ஏற்றால் அவர்களும் - இச்சமுதாயமும் நலம் பெறும்....

///திருமணம் செய்யாமல் தாம்பத்தியம்கூடாது. அது மனிதகுலத்துக்கே அழிவைத்தரும் தனக்குத்தானே துரோகம் செய்துக்கொள்வதுபோலாகும்.மனிதருக்கும் மிருகத்துக்கும் உள்ள வேறுபாடுகளை களைவதில் மிகமுக்கியமன ஒன்று இந்த திருமணம்////
///தம்பதியர்கள் ஒருவரை ஒருவர் மகிழ்ச்சியடைச்செய்வதும், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துக்கொள்வதும். விட்டுக்கொடுக்கும் வாழ்க்கைக்குள் சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் நிரந்தரமாக்கிக்கொள்வதுமாகும் திருமணம் என்ற பந்தத்துக்குள் நுழைத்த அவர்கள். உடலாலும் உள்ளத்தாலும் தீயவைகளின்பக்கம் தங்களை திருப்பிக்கொள்ளாமலிருக்க ஒருவரையொருவர் புரிந்துகொண்டு இனிய துணைகளாக மன இச்சைகளுக்கு தாங்களுக்கு தாங்களே மருந்தாக விருந்தாக இல்லறம் நடத்துவதுதான்.///

நல்ல இடுகை...
ஓர் மனிதனுக்கு கல்வி, செல்வம் இவற்றைவிட மேலானது "ஒழுக்கம்". அதனை பட்டவர்த்தமாய் - விளக்கத்துடன் சொன்ன தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்...

நட்புடன்...
காஞ்சி முரளி...

பித்தனின் வாக்கு said...

நல்லா சொல்லியிருக்கீங்க. மலிக்கா, எனக்கு சேர்ந்து வேண்டிக் கொள்ளுங்கள். நன்றி.

SUFFIX said...

//மனிதன் மதிப்புமிக்கவன்
தனக்கென்று ஒரு கம்பீரம். தனக்கென்று ஒருமரியாதை.
தனக்கென்று ஒரு கெளரவம். தான் எதற்காக படைக்கப்பட்டிருக்கிறோம்.//

நமது ஒவ்வொரு செயல்களிலும் இந்த சிந்தனை வேண்டும். அருமையான இடுகை. நன்றி!!

நாடோடி said...

ந‌ல்ல‌ விள‌க்க‌மான‌ அறிவுரைக‌ள்.... அனைவ‌ரும் தெரிந்துகொள்ள‌ வேண்டிய‌தும்... ஆனால் இந்த‌ நாக‌ரீக‌ உல‌கில‌ இதை சொன்னால்?....

பனித்துளி சங்கர் said...

////////S Maharajan said...
திருமண பந்தத்தை பற்றிய அருமையான பதிவு,ஒரு மனிதன் முழு மனிதனாவது அவன் திருமணம் செய்யும் போது தான் என்று சொல்வார்கள்.நான் இபோதைக்கு அரை மனிதன்தான்,"திருமணம் என்ற சுகமான சுமை நானும் சுமக்க அந்த "இன்ஷா அல்லா" விடம் எனக்கும் சேர்த்து வேண்டி கொள்ளுங்கள்.
////////

நண்பர் சொல்லி இருக்கும் இதே வார்த்தைகள்தான் என் உள்ளத்திலும் .

பனித்துளி சங்கர் said...

நமது முன்னோர்கள் நமக்காக விட்டு சென்ற நூல்களில் இது போன்று எத்தனையோ உண்மைகள் புதைந்துகிடக்கிறது புதையாலாக . மனிதன்தான் அதை புரிந்துகொள்ள மறுக்கிறான் .
மிகவும் அழகாக சொல்லி இருக்கீங்க .
பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் .
மீண்டும் வருவேன்

தேடும்மனம். said...

மிகச்சரியாய் சொல்லியிருக்கிறாய்.
திருமணத்தை ஒதுக்கி வேறு வழியில் வாழ்நினைக்கும் சமுதாயத்திற்கு நல்ல அறிவுறை.

நல்லவைகள் சொல்லும்போது அதை கொஞ்செமேனும் காதில் விழாமல் போகாது நிச்சயம் கேட்ட்கும் சிலருக்காவது.

உங்களுக்கு அனைத்துமே அசத்தலாய் வருது.கவிதையாகட்டும் ஆன்மாவாகட்டும் கலையாகட்டும் சூப்பர். வாழ்த்துக்கள்

கவிதன் said...

நாகரீகம் என்ற பெயரில் நிறைய தவறுதலான மாற்றங்களை இந்த நவீன உலகம் சந்தித்து வருகிற சூழ்நிலையில் இது மிக உபயோகமான மற்றும் அவசியமான பதிவு.

//உங்களுக்கு அனைத்துமே அசத்தலாய் வருது.கவிதையாகட்டும் ஆன்மாவாகட்டும் கலையாகட்டும் சூப்பர். வாழ்த்துக்கள்// மலர் சொன்னதை நானும் அமோதிக்கிறேன்...... வாழ்த்துக்கள் மலிக்கா!

இப்னு ஹம்துன் said...

தேவையான நல்ல பதிவு.
தொடருங்கள்

இப்னு ஹம்துன் said...

தேவையான நல்ல பதிவு.
தொடருங்கள்

அன்புடன் மலிக்கா said...

மிக்க நன்றி சகோதரி நாஸியா.

மிக்க நன்றி சகோதரர் மகராஜன்.

நிச்சியமாக வேண்டிக்கிறேன்
சுதாகர் சார் மிக்க நன்றி..

பாத்திமா ஜொஹ்ரா said...

மனிதன் மனிதனாக வாழ-
அழகான முறையில் சொல்லியுள்ளீர்கள்.

அன்புடன் மலிக்கா said...

Kanchi Murali said...
///இன்றய உலகம் எந்திரமாக்கப்படுவிட்டது தங்களின் இஷ்டப்படி தீமைகளின் பக்கமே தங்களை செலுத்தவிரும்புகிறார்கள்.
திருமணத்தின்மூலம் கிடைக்கும் தம்பத்தியத்தைவிட தரம்தாழ்ந்த வெருக்கத்தக்க விசயங்களை தேடிப்போகிறார்கள்.////

நீங்கள் துபையில் வசிக்கிறீர்கள்... சென்னையில் வந்து பாருங்கள்.... touristஆக அல்ல... ஓர் ஆறு மாதங்களோ அல்லது ஒரு வருடமோ வசித்து பார்த்தால்... இங்கு நடக்கும் அலங்கோலங்களை காணலாம்... 'பெண் விடுதலை' என்ற பெயரில் நடக்கும் அநியாங்களை பிரதான சாலைகளிலும் - பீச்சிலும் - தியட்டர்களிலும் குறிப்பாக ஸ்டார் ஹோடேல்களிலும் காணலாம்... இது தமிழ்நாட்டின் தலைநகரா? என்று வியந்து போவீர்கள்...
மனிதன், .............விட கேவலமாய் சாலைகளில்.... //

முரளி. கலாச்சாரம் சீரழிந்த காலங்கள் பலவாகிவிட்டது. அதை எப்படிசொன்னாலும் திருந்தாத ஜென்மங்களை நாம் ஒன்று செய்யமுடியாது இறைவன் நாடினாலேதவிர..

அன்புடன் மலிக்கா said...

என் கவிதை வரிகளில் சொல்லவேண்டுமென்றால்...

"பெண் விடுதலை என்ற பெயரில்...
அவயங்களைக் காட்டி...
அடுத்தோரை சுண்டியிழுக்கும்...
சில வக்கிரங்களின் அணிவகுப்பு...
சாலைகளில்...

பட்டப்பகலில்...
மாநகரத்தின்..
மையச் சாலைகளில்...
முகத்தில்... முக்காடிட்டபடி...
ஆணுடலோடு
சங்கமித்து செல்லும்
பெண்ணினத்தைக் கண்டும்....

காலையிலேயே....
கடற்கரையில்...
சுடுமணலில்...
ஈருயிர் ஓருடலாய்...
பின்னிப் பிணைந்திருக்கும்
பெண்ணினத்தைக் கண்டும்...."

கல்வியில் சிறந்த பெண்கள்....
கலாச்சாரச் சீரழிவை
ஏற்படுத்தும் வகையில்...
"டேட்டிங்"கில் ஈடுபடும்
இன்றைய பெண்ணினத்தைக் கண்டும்....

மேல்சொன்ன வகையில் நடந்திடும் சில பெண்களுக்கு தங்களின் பின்வரும் அறிவுரை சரியான சவுக்கடி...

அவர்கள் தங்களின் இந்த அறிவுரை ஏற்றால் அவர்களும் - இச்சமுதாயமும் நலம் பெறும்....

///திருமணம் செய்யாமல் தாம்பத்தியம்கூடாது. அது மனிதகுலத்துக்கே அழிவைத்தரும் தனக்குத்தானே துரோகம் செய்துக்கொள்வதுபோலாகும்.மனிதருக்கும் மிருகத்துக்கும் உள்ள வேறுபாடுகளை களைவதில் மிகமுக்கியமன ஒன்று இந்த திருமணம்////
///தம்பதியர்கள் ஒருவரை ஒருவர் மகிழ்ச்சியடைச்செய்வதும், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துக்கொள்வதும். விட்டுக்கொடுக்கும் வாழ்க்கைக்குள் சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் நிரந்தரமாக்கிக்கொள்வதுமாகும் திருமணம் என்ற பந்தத்துக்குள் நுழைத்த அவர்கள். உடலாலும் உள்ளத்தாலும் தீயவைகளின்பக்கம் தங்களை திருப்பிக்கொள்ளாமலிருக்க ஒருவரையொருவர் புரிந்துகொண்டு இனிய துணைகளாக மன இச்சைகளுக்கு தாங்களுக்கு தாங்களே மருந்தாக விருந்தாக இல்லறம் நடத்துவதுதான்.///

நல்ல இடுகை...
ஓர் மனிதனுக்கு கல்வி, செல்வம் இவற்றைவிட மேலானது "ஒழுக்கம்". அதனை பட்டவர்த்தமாய் - விளக்கத்துடன் சொன்ன தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்...

நட்புடன்...
காஞ்சி முரளி...//

கவிதை மிக அருமை. அதற்க்குள் பொதிந்திருக்கும் அர்த்தம் இதுபோன்றோருக்கு புரிந்தால் போதுமே!

நம்மாளான நற்போதனைகளை வழங்குவோம் ஓரிரு மனக்கள்கூடவா மாற்றம்கொள்ளாது நன்மைகளின்பக்கம் திரும்பாது. நம்பிக்கை கொள்வோம்
நல்லதே நடக்குமென்று..

மிக்க நன்றி முரளி

அன்புடன் மலிக்கா said...

SUFFIX said...
//மனிதன் மதிப்புமிக்கவன்
தனக்கென்று ஒரு கம்பீரம். தனக்கென்று ஒருமரியாதை.
தனக்கென்று ஒரு கெளரவம். தான் எதற்காக படைக்கப்பட்டிருக்கிறோம்.//

நமது ஒவ்வொரு செயல்களிலும் இந்த சிந்தனை வேண்டும். அருமையான இடுகை. நன்றி..

மிக்க நன்றி ஷஃபியண்ணா..

Post a Comment

கருத்துக்களை பகிர்ந்துகொள்ளும்போது நிறைகுறைகளை சரிபார்க்கலாம். பகிந்துகொள்ளுங்களேன் கருத்துக்களை
நானும் என்னை சரிசெய்து கொள்கிறேன் .
பிடிதிருந்தால் ஓட்டும் போடுங்கள்

வேண்டுகோள்..

இங்கே பதியப்படும் அனைத்தும், நான் என்னை தெளிவுப்படுத்திக்கொள்ளவும். ஈருலக வாழ்க்கையையும் அறிந்துக்கொள்ளவும். தொடங்கியுள்ள பயணம். அதில் தாங்களும் தெரிந்துகொள்வதில் பெருமிதம். ஆனால் இதை தவறானமுறையில் விளங்கிக்கொண்டு வீணான விவாதங்களோ தர்க்கங்களான கருத்துக்களாகவோ அமைத்துவிட வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்..