.

வருகை புரியும் அனைவர்மீதும் இறைவனின் அருளும் சாந்தியும் அளவில்லாமல் கிடைக்கட்டும் Photobucket

அன்புள்ள ஆன்மாவே! 11. தடுக்கப்பட்ட பொருளாதாரம்

| |

بسم الله الرحمن الرحيم

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புனையோனுமாகிய இறைவனின் திருப்பெயரால்...

அன்புள்ள ஆன்மாவே!
இன்று மனசாட்சியோடு வாழ்வதைப் பற்றி!
எனக்கு தெரிந்ததை பகிர்ந்துக்கொள்ளவந்துள்ளேன்.

லஞ்சம்

62. அவர்களில் அதிகமானோர் பாவத்திற்கும், வரம்பு மீறலுக்கும்,
தடுக்கப்பட்டதை உண்பதற்க்கும் விரைந்து செல்வதை நீர் காண்பீர்! அவர்கள் செய்வது மிகவும் கெட்டது.
அல்குர்ஆன் அல்மாயிதா பாகம்: 6

188 உங்களுகிடையே [ஒருவருக்கொருவர்] உங்கள் பொருட்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள்! தெரிந்துகொண்டே மக்களின் பொருட்களில் ஒரு பகுதியைப் பாவமான முறையில் சாப்பிடுவதற்காக அதிகாரிகளிடம் உங்கள் பொருட்களைக் கொண்டு செல்லாதீர்கள்.
அல்குர்ஆன். 2 அல்பகரா   பாகம்:2

எதற்கெடுத்தாலும் எந்த வேலைகளுக்கும் லஞ்சம் லஞ்சம்.
பிறப்புமுதல் இறப்புவரை அத்தனைக்கும் லஞ்சம்.
உயிர் வெளியாகும் சமயதிலிருந்து. உயிர்போகும் நிலையில்கூட லஞ்சம். கள்ளத்தனமாக கொடுக்கப்படுவதும். அதையே மறைத்து அன்பளிப்பென்றயரில் கொடுப்பதும். அனைத்தும் பிறரை வதைத்து தான் வாழ வாங்கும் லஞ்சம். தனக்காவது நிலைக்குமா! அல்லது தன்னையாவது நிம்மதியாய் வாழவிடுமா! என்றால் இல்லை இல்லவேயில்லை. எல்லாம் தெரிந்தும் மனிதன் தன் மனஆசைக்கு கட்டுப்பட்டு மதியிழக்கிறான்...

அனாதைகளின் சொத்தை அபகரிப்பது

2. அனாதைகளின் சொத்துக்களை அவர்களிடம் அளித்துவிடுங்கள்[அவர்களின் சொத்துக்களில்] நல்லதை [உங்களிடம் உள்ள] கெட்டதற்கு பகரமாக மாற்றிவிடாதீர்கள்!
அவர்கள் சொத்துக்களை உங்கள் சொத்துக்களுடன் சேர்த்து சாப்பிடாதீர்கள்! இது மிகப்பெரிய குற்றமாக உள்ளது.
அல்குர்ஆன் 4. அன்னிஸா பாகம் 4

10.அனாதைகளின் சொத்துக்களை
அநியாயமாக உண்போர் தனது
வயிறுகளில் நெருப்பயே உண்ணுகின்றனர்.
நரகில் அவர்கள் நுழைவார்கள்.
அல்குர்ஆன் 4.அன்னிஸா பாகம்: 4

அனாதைகளின் சொத்துக்களை சூரையாடுவதும்
அவர்களுக்கு துரோகம் செய்தும். அதனை தான்மட்டும் அனுபவிக்க நினைப்பதும்..
அடுத்தவர்களின் அமானிதத்தை. அதாவது தன்னை நம்பி ஒப்படைக்கப்பட்ட ஒரு பொருளை. அவர் அறிந்தோ அறியாமலோ அவருக்கு துரோகம் செய்துவது மகாபாவம்.
நம்மிக்கைக்கு பாத்திரமாக இருக்கவேண்டும்.
பிறரை ஏமாற்றி தானும் தன் வம்சமும் வாழநினைப்பது குற்றமில்லையா!. இங்கும் மனஇச்சை மனிதனை வென்று மதிகெடுக்கிறது.


அளவு நிறுவையில் மோசடி.

161 மோசடி செய்வது எந்த நபிக்கும் தகாது. மோசடி செய்தபொருளை கியாமத் நாளில் கொண்டு வருவார். பின்னர் ஒவ்வொருவருக்கும் அவர் செய்தது முழுமையாக வழங்கப்படும், அவர்கள் அநீதி இழைக்கப்பட்ட மாட்டார்கள்..
அல்குர்ஆன் 3. ஆலு இம்ரான் பாகம்:4


என் சமுதாயமே! அளவையும் நிறுவையும் நேர்மையாக நிறைவாக்குங்கள்! மக்களுக்கு அவர்களின் பொருட்களைக் குறைத்துவிடாதீகள்!
இப்பூமியில் குழப்பம் விளைவித்துத் திரியாதீகள்!”
அல்குர்ஆன் 11. ஹூது பாகம்:12


ஐந்து பைசாவுக்கு பொருள் வாங்கினாலும் ஐநூறு ரூபாய்க்கு பொருள்வாங்கினாலும் அதில் மோசடி செய்வது குற்றமே!
அளவு நிறுவைகளில் கவனமாக இருத்தல் வேண்டும். பிறர் பாடுபட்டு சம்பாத்தித்து அதில் பொருள்வாங்க வந்திருக்கும்போது
அவரறியாமல் அவரின் பொருளை குறைத்துகொடுத்து பணத்தை கூடுதல் பெறுவது நியாயமா! இங்கும் மிதம்மீறிய ஆசை மனிதனின் மதியைக் கெடுக்கிறது.
ஒரு மனிதன் இன்னொரு மனிதனை வதைத்தும். வருத்தியும். மோசடி செய்தும். ஏமாற்றியும். துரோகம் செய்தும். குற்றத்திலும் பெரும்குற்றம்.

பூமியில் வந்திருக்கும் நாம். சிலகாலம்தான் வாழப்போகிறோம் மரணத்தை மடியில் கட்டியிருக்கும்போதே தன்மன இச்சைக்களுக்கு மட்டும் இடம் கொடுத்து வாழ்ந்தோமேயானால். தான்மட்டும் வாழவேண்டுமென நினைத்தோமேயானால்! நாம் பிறந்ததிற்கான பலந்தான் என்ன?
பிறந்தோம் வாழ்ந்தோம் இறந்தோம் என்றிருப்பது வாழ்க்கையா! பிறரையும் வாழவைத்து தானும் வாழ்வது வாழ்க்கையா?

மனசாட்சியோடு வாழ்ந்துபாருங்கள்.
வாழும்போதும் வாழ்க்கைக்கும் பிறகும்.
சிறப்பானதையே பெருவீர்கள்..


இன்று மனசாட்சியோடு வாழ்வதைப் பற்றி
அறியத்தந்த இறைவன்.

இன்ஷாஅல்லாஹ்
இறைவன் நாடினால்
அடுத்த நல்லதொரு விசயத்தை பகிர்ந்துகொள்ள உதவுவான்
என்ற நம்பிக்கையோடும் அதுவரை நம் அனைவரையும் மாபெரும் தீமையிலிருந்து நம்மை காத்து ஈருலக்கிலும் நற்பாக்கியங்கள் பெற்றிட இறைவனை வேண்டியவாறு விடை பெறுகிறேன் வஸ்ஸலாம்...

அன்புடன் மலிக்கா

 இறைவா!
உன்னையே வணங்குகிறேன்
உன்னிடமே உதவியும் தேடுகிறேன்

11 comments:

நாஸியா said...

ஜஸகல்லாஹு க்ஹைர் சகோதரி.. இன்னும் நிறைய எழுதுங்கள்! :)

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

நல்ல தகவல்கள்

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமையான கருத்துகள்; இன்னும் நிறைய அறிய தாருங்கள் மலிக்கா.

காஞ்சி முரளி said...

நல்ல பதிவு...

தங்களின் இந்த அறிவுரையை காதிருந்தும் செவிடர்களாகவே வாழ்ந்து கொண்டிருக்கின்ற இவர்களிடம் சொல்லி பயனேதுமில்லை என்பது என் எண்ணம்....

பட்டுக்கோட்டையார் வரிகளில் சொல்லவேண்டுமானால் "திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது"....
இதுதான்.... நிஜம்... இன்றைய உண்மை நிலை...

நட்புடன்...
காஞ்சி முரளி....

ஜெய்லானி said...

//உயிர் வெளியாகும் சமயதிலிருந்து. உயிர்போகும் நிலையில்கூட லஞ்சம். //

சூரா அதிகம் தேடுதல்( சூரத்தகாஸுர் ) நினைவுக்கு வருகிறது ...ஜஸகல்லாஹு க்ஹைர்..

SUFFIX said...

அளவு நிறுவையில் மோசடி குறித்து இவ்வளவு தெளிவாக குரானில் கூறியிருப்பது நெகிழ வைக்கிறது. இறைவன் நாம் அனைவரையும் காப்பாற்ற வேண்டும்.

முத்து said...

திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது"..../////////


இதுவும் நடக்காது ஏன் என்றால் இவர்களுக்கு அவர்கள் செய்வது தவறு என்றே தெரியாது

Unknown said...

"அஸ்ஸலாமு அலைக்கும்" (வரஹ்)
அன்பு சகோதரிக்கு,
இன்றுதான் இந்த பதிவை பார்வையிடுகிறேன்! இன்ஷா அல்லாஹ்! தொடராக வந்து பார்வையிட்டு, என்னுடைய கருத்துக்களையும் பதிய வல்ல அல்லாஹ் உதவி செய்வானாக!.

சகோதரியின் எண்ணங்கள் மிகச் சிறந்தவை! அவைகள் இதிலே பிரகாசிக்கும் என்பதை உணர்கிறேன்! எல்லாம் வல்ல அல்லாஹ்
ஈருலக வாழ்வையும் நம் அனைவர்களுக்கும் சிறப்பாக்கி வைப்பானாகவும் ஆமீன்.

வஸ்ஸலாம்
அன்புடன், சகோதரன் " மஹ்மூது"
சவுதி அரேபியா.

கமலேஷ் said...

நல்ல பதிவு...

AkashSankar said...

எல்லாம் கேட்க நல்ல இருக்குங்க...நிசத்துல ஒருத்தரை அடையலாம் காட்டுறது கடினம்...என்னையும் சேர்த்து...

ராஜவம்சம் said...

இறையச்சத்துடன் சிறப்பான பதிவு அல்ஹம்துலில்லாஹ்

சட்டங்கல் கடுமையானால் குற்றங்கள் குறையும்

Post a Comment

கருத்துக்களை பகிர்ந்துகொள்ளும்போது நிறைகுறைகளை சரிபார்க்கலாம். பகிந்துகொள்ளுங்களேன் கருத்துக்களை
நானும் என்னை சரிசெய்து கொள்கிறேன் .
பிடிதிருந்தால் ஓட்டும் போடுங்கள்

வேண்டுகோள்..

இங்கே பதியப்படும் அனைத்தும், நான் என்னை தெளிவுப்படுத்திக்கொள்ளவும். ஈருலக வாழ்க்கையையும் அறிந்துக்கொள்ளவும். தொடங்கியுள்ள பயணம். அதில் தாங்களும் தெரிந்துகொள்வதில் பெருமிதம். ஆனால் இதை தவறானமுறையில் விளங்கிக்கொண்டு வீணான விவாதங்களோ தர்க்கங்களான கருத்துக்களாகவோ அமைத்துவிட வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்..