.

வருகை புரியும் அனைவர்மீதும் இறைவனின் அருளும் சாந்தியும் அளவில்லாமல் கிடைக்கட்டும் Photobucket

அன்புள்ள ஆன்மாவே13 [சிறப்புமிகுந்த மாதம்]

| |

بسم الله الرحمن الرحيم
அளவற்ற அருளானனும் நிகரற்ற அன்புடையோனுமாகி இறைவனின் திருப்பெயரால்.


அன்புள்ள ஆன்மாவே!
இந்த அருமையான மாதத்தில் எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கவ்வளவு
நன்மையின்பக்கம் செல்லவே முனையுங்கள்.
தங்களால் இயன்ற அளவு குர்ஆனை ஓதுங்கள்.
ஜக்காத்தை கொடுக்கங்கள்.
இரவிலும் பகலிலும்  இறைவனை இடைவிடாது வணங்குங்கள்
நன்மையை ஒன்றுக்கு பத்தாக. நூறாக. இறைவனிடம் பெறுங்கள்.

நம் இறைவன் நம்மை கண்கானித்துக்கொண்டிருக்கிறான். பாவத்தின் பக்கம் நெருங்காதீகள்.கண்ணியமிக்க இந்தமாதத்தின் பொருட்டால் நம் அனைவருக்கும் இறைவன் சுவர்க்கத்தை வழங்கி நம்மை நரகத்திலிருந்து பாதுக்காப்பானாக!

கீழேவரும் இந்த பகுதி எனக்கு மெயிலில் வந்தது.
 நான் அறிந்துகொண்டதை அனைவருக்கும் அறியத் தந்திருக்கிறேன்

குர்ஆன் அருள‌ப்ப‌ட்ட‌ மாத‌ம்:


ர‌ம‌ளான் மாத‌ம் எத்த‌கைய‌தென்றால் அதில் தான் ம‌னித‌ர்க‌ளுக்கு நேர்வ‌ழி காட்டியாக‌வும், இன்னும் நேர்வ‌ழியிலிருந்தும் (ச‌த்திய‌த்தையும் அச‌த்திய‌த்தையும்) பிரித்த‌றிவிக்க‌க் கூடிய‌திலிருந்தும் தெளிவான‌ விள‌க்க‌மாக‌வும் உள்ள‌ குர்ஆன் இற‌க்கிய‌ருள‌ப்ப‌ட்ட‌து; என‌வே எவ‌ர் உங்க‌ளில் அம்மாத‌த்தை அடைகிறாரோ அவ‌ர் அதில் நோன்பு நோற்க‌வும். குர் ஆன் (2;185)


குர்ஆன் ஓத‌வும் அத‌ன் பொருள் விள‌ங்கி ஆராய்ந்து பார்க்க‌வும் இறைவ‌ன் ம‌னித‌ ச‌முதாய‌த்திற்கு க‌ட்ட‌ளையிட்டுள்ளான். இத‌ன் மூல‌ம் ம‌னித‌னின் அறியாமை எனும் இருள் நீங்கி ச‌த்திய‌ம், நேர்வ‌ழி என்ற‌ ஒளியை பெற்றுக் கொள்கின்றான்.மேலும் குர்ஆனை யார் க‌ண்டு கொள்ள‌வில்லையோ,அவ‌ர்க‌ளைப் ப‌ற்றியும் இறைவ‌ன் க‌டுமையாக‌ எச்ச‌ரிக்கின்றான்
உங்க‌ள் இறைவ‌னிட‌மிருந்து (ச‌த்திய‌த்திற்குறிய‌) ப‌ல‌ ஆதார‌ங்க‌ள் உங்க‌ளிட‌ம் வ‌ந்திருக்கின்ற‌ன‌. எவ‌ன் (அவ‌ற்றைக் க‌வ‌னித்துப்) பார்க்கின்றானோ (அது) அவ‌னுக்கே ந‌ன்று. எவ‌ன் (அவ‌ற்றைப் பார்க்காது) க‌ண்ணை மூடிக்கொள்கின்றானோ (அது) அவ‌னுக்கே கேடாகும். (ந‌பியே! நீங்க‌ள் அவ‌ர்க‌ளை நோக்கி) "நான் உங்க‌ளைப் பாதுகாப்ப‌வ‌ன் அல்ல‌" (என்று கூறுங்க‌ள்). குர்ஆன் (6;104)
குர்ஆனின் ஞான‌ம் ஒவ்வொரு த‌னி ம‌னித‌னின் உள்ள‌த்திலும் இருக்க‌ வேண்டும். அப்ப‌டி இல்லாத‌ உள்ள‌த்தை பாழ‌டைந்த‌ வீட்டிற்கு ஒப்பிட்டு ந‌பி (ஸ‌ல்) அவ‌ர்க‌ள் கூறியுள்ளார்க‌ள்.
ந‌பி (ஸ‌ல்) அவ‌ர்க‌ள் ந‌வின்ற‌தாக‌ அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ர‌ழி) அவ‌ர்க‌ள் அறிவிக்கிறார்க‌ள்:"குர்ஆனிலிருந்து சிறிதள‌வு கூட‌ த‌ம் உள்ள‌த்தில் ம‌ன‌ன‌ம் இல்லாத‌வ‌ர் பாழ‌டைந்த‌ வீடு போன்ற‌வ‌ராவார். (திர்மிதி)

மேலும் ர‌ம‌ழான் மாத‌த்தில் திருக்குர்ஆனை அதிக‌ம் ஓத‌வும், தான‌ த‌ர்ம‌ங்க‌ளை அதிக‌ப்ப‌டுத்த‌வும் அண்ண‌ல் நபி(ஸ‌ல்) அவ‌ர்க‌ள் ஆர்வ‌மூட்டியுள்ளார்க‌ள்.

அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ர‌ழி) அவ‌ர்க‌ள் அறிவிக்கிறார்க‌ள்: ந‌பி(ஸ‌ல்) அவ‌ர்க‌ள் ம‌க்க‌ளில் அதிகமாக‌க் கொடை கொடுப்ப‌வ‌ர்க‌ளாக‌ இருந்தார்க‌ள். ஜிப்ரீல்(அலை) அவ‌ர்க‌ளைச் ச‌ந்திக்கும் புனித‌ ர‌ம‌ழானில் மிக‌ அதிக‌மாக‌ கொடை கொடுப்ப‌வ‌ர்க‌ளாக‌ இருந்தார்க‌ள். ஜிப்ரீல்(அலை) அவ‌ர்க‌ள் ர‌ம‌ழானில் ஒவ்வொரு இர‌விலும் நாய‌க‌த்தைச் ச‌ந்திப்பார்க‌ள், குர்ஆனை அவ‌ர்க‌ளுக்கு ஓதிக்காண்பிப்பார்க‌ள். ஜிப்ரீல் ச‌ந்திக்கும் புனித‌ ர‌ம‌ழானில் வேக‌மாக‌ வீசும் காற்றை விட‌ அதிக‌மாகக்‌ கொடை கொடுப்ப‌வ‌ர்க‌ளாக‌ இருந்தார்க‌ள். (புகாரி_முஸ்லிம்)

முக்கிய‌ நிக‌ழ்வுக‌ள்
வ‌ஹி(இறைச்செய்தி)யின் துவ‌க்க‌ம்:
ம‌க‌த்துவ‌மிக்க‌ இந்த‌ மாதத்திலே தான் ம‌னித‌குல‌ம் பெருமையடையும் வ‌கையில் பல‌ முக்கிய‌ நிக‌ழ்வுக‌ள் நிக‌ழ்ந்த‌ன‌. வ‌ழிகேட்டிலிருந்து நேர்வ‌ழிக்கும், இருளிலிருந்து பேரொளிக்கும், இறைநிராக‌ரிப்பிலிருந்து ஈமானுக்கும் ம‌னித‌ ச‌முதாய‌த்தை திருப்பி இவ்வுல‌கிலும் ம‌று உல‌கிலும் அவ‌ர்க‌ள் ஈடேற்ற‌ம் பெற‌க்கார‌ண‌மான‌ வ‌ஹியின் துவ‌க்க‌ம் புனித‌ ர‌ம‌ழானில் தான் ஆர‌ம்ப‌மான‌து.
புனித‌ ர‌ம‌ழான் மாத‌த்தில் ம‌க்காவிலுள்ள‌ ஹிரா குகையில் ந‌பி(ஸ‌ல்) அவ‌ர்க‌ளை ஜிப்ரீல்(அலை) அவ‌ர்க‌ள் ச‌ந்தித்து இறைவ‌ன் அருளிய‌ திருக்குர்ஆனின்.....

1.(ந‌பியே!) உம்முடைய‌ ர‌ப்பின் திருப்பெய‌ரைக் கொண்டு
ஓதுவீராக‌! அவ‌ன் எத்த‌கைய‌வ‌னென்றால் . (அனைத்தையும்) ப‌டைத்த‌வ‌ன்.

2. ம‌னித‌ர்க‌ளை இர‌த்த‌க்க‌ட்டியிலிருந்து அவ‌ன் தான். ப‌டைத்தான்.

3. ஓதுவீராக‌! உம்முடைய‌ ர‌ப்பு மிக்க‌ த‌யாள‌மான‌வ‌ன்.

4. அவ‌னே எழுதுகோலைக் கொண்டு க‌ற்றுக்கொடுத்தான்.

5. ம‌னித‌னுக்கு அவ‌ன் அறியாத‌வ‌ற்றை(யெல்லாம்) அவ‌ன் . க‌ற்றுக்கொடுத்தான். குர்ஆன்(96;1 முத‌ல் 5)

என்ற‌ இறைவ‌ச‌ன‌ங்க‌ளை ஓதிக்காட்டினார்க‌ள். இத‌ற்குபின் இஸ்லா‌த்தின் ஏக‌த்துவ‌ப் பிர‌ச்சார‌ அழைப்பு ஆர‌ம்ப‌மான‌து. இந்நிக‌ழ்வு ந‌பித்துவ‌த்தின் முத‌லாம் ஆண்டு ர‌ம‌ழான்_17 அன்று (ஹிஜ்ர‌த்திற்கு 13 வ‌ருட‌ங்க‌ளுக்கு முன், கி.பி.610 ஜூலை இல்) நிக‌ழ்ந்த‌து.

லைல‌த்துல் க‌த்ரு:
இம்மாத‌த்தில் லைல‌த்துல் க‌த்ரு இர‌வில் தான் புனித‌ குர்ஆன் லவ்ஹுல் ம‌ஹ்ஃபூலிலிருந்து முத‌ல் வான‌த்திற்கு மொத்த‌மாக‌ இற‌க்க‌ப்ப‌ட்ட‌து. பின் கால‌ச் சூழ்நிலைக‌ளுக்கு ஏற்ப‌ இருப‌த்து மூன்று வ‌ருட‌ங்க‌ளில் சிறிது சிறிதாக‌,முத‌ல் வான‌த்திலிருந்து ந‌பி(ஸல்) அவ‌ர்க‌ளுக்கு ஜிப்ரீல்(அலை) மூல‌ம் அருள‌ப்ப‌ட்ட‌து.

"(லைல‌த்துல் க‌த்ரு என்னும்) க‌ண்ணிய‌மிக்க‌ இர‌வு ஆயிர‌ம் மாத‌ங்க‌ளை விட‌ மிக‌ச் சிற‌ந்த‌து" குர்ஆன் (97;3)

ந‌பி(ஸ‌ல்) அவ‌ர்க‌ள் ந‌வின்றதாக‌ ஹ‌ஜ்ர‌த் அபூஹுரைரா(ர‌ழி) அவ‌ர்க‌ள் அறிவிக்கிறார்க‌ள்: யார் லைல‌த்துல் க‌த்ரு இர‌வில் ஈமானுட‌ன் ந‌ற்கூலியை ஆத‌ர‌வு வைத்த‌வ‌ராக‌ நின்று வ‌ண‌ங்குகிறாரோ அவ‌ரின் முன் பாவ‌ங்க‌ள் ம‌ன்னிக்க‌ப்ப‌டும். (புகாரி, முஸ்லிம்)

க‌தீஜா(ர‌ழி)அவ‌ர்க‌ளின் வ‌ஃபாத்:
அன்னை க‌தீஜா(ர‌ழி) அவ‌ர்க‌ள், ந‌பி(ஸ‌ல்) அவ‌ர்க‌ளின் ஏக‌த்துவ‌ அழைப்பை முத‌ன் முத‌லாக‌ ஏற்று ஈமான் கொண்டவ‌ர்க‌ளில் பெண்க‌ளில் முத‌லாம‌வ‌ர் ஆவார்க‌ள். அவ‌ர்க‌ளின் வ‌ஃபாத் ந‌பித்துவ‌த்தின் ப‌த்தாம் ஆண்டு (ஹிஜ்ர‌த்திற்கு மூன்று ஆண்டுக‌ளுக்கு முன்) ர‌ம‌ழான் மாத‌த்தில் நிக‌ழ்ந்த‌து.

ப‌த்ரு யுத்த‌ம்:
ஹிஜ்ரி இர‌ண்டாம் ஆண்டு, ர‌மழான் பிறை 17 வெள்ளிக் கிழ‌மை ப‌த்ரு யுத்த‌ம் நிக‌ழ்ந்த‌து. இந்த‌ யுத்த‌தில் சிறிய‌ ப‌டையின‌ராக‌ இருந்த‌ முஸ்லிம்க‌ளுக்கு அல்லாஹ் உத‌வி செய்து வெற்றி பெற‌ச் செய்தான்.

"நீங்க‌ள் அல்ல‌ஹ்வைக் கொண்டும்,(ச‌த்திய‌த்திற்கும், அச‌த்திய‌த்திற்குமிடையே) தீர்ப்ப‌ளித்த‌ (ப‌த்ரு போரின்) நாளில்_ இரு ப‌டையின‌ர் ச‌ந்தித்துக் கொண்ட‌ நாளில்_ நம் அடியாரின் மீது நாம் இறக்கி வைத்த‌ (உத‌வி முத‌லிய‌)வ‌ற்றைக்கொண்டும் நீங்க‌ள் ஈமான் கொண்ட‌வ‌ர்க‌ளாக‌ இருந்தால்(இத‌னை அறிந்து கொள்ளுங்க‌ள்); அல்லாஹ் எல்லாப் பொருட்க‌ளின் மீதும் ச‌க்தியுள்ள‌வ‌ன். (8;41)

ஜ‌காத்துல் ஃபித்ரு
ஜ‌காத்துல் ஃபித்ரு (ஸ‌த‌கத்துல் ஃபித்ரு) க‌ட‌மையாக்க‌ப் ப‌ட்ட‌தும், பெருநாள் தொழுகை ந‌டைமுறைப்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌தும் ஹிஜ்ரி இர‌ண்டாம் ஆண்டு ர‌ம‌ழானிலிருந்து தான்.

ம‌க்கா வெற்றி:
ம‌க்கா வெற்றி கொள்ள‌ப்ப‌ட்ட‌ நாள் ஹிஜ்ரி எட்டாம் ஆண்டு, ர‌ம‌ழான் பிறை 21 (10_ ஜ‌ன‌வ‌ரி‍‍‍_630கி.பி)இல் நிக‌ழ்ந்த‌து.

இறை இல்ல‌ம் க‌ஃப‌துல்லாஹ்வில், சிலை வ‌ண‌க்க‌மும் இணை வைப்பும் ஒழிக்க‌ப்ப‌ட்டு க‌ஃபா ப‌ரிசுத்த‌மாக்க‌ப்ப‌ட்ட‌ நாள். அரேபிய‌ தீப‌க‌ற்ப‌த்தில் சிலை வ‌ண‌க்க‌ம், வேரோடும் வேர‌டி ம‌ண்ணோடும் அழிக்க‌ப்ப‌ட்ட‌ நாள். அல்லாஹ் த‌ன்னுடைய‌ மார்க்க‌த்தை‌ உய‌ர்வ‌டைய‌ச் செய்த நாள். அவ‌னுடைய‌ தூத‌ர் முஹ‌ம்மது(ஸ‌ல்) அவ‌ர்க‌ளுக்கும், அவ‌ர்க‌ளுடைய‌ தோழ‌ர்க‌ளுக்கும், கூட்ட‌த்தின‌ர்க‌ளுக்கும்‌ வெற்றியை கொடுத்து க‌ண்ணிய‌ப்ப‌டுத்திய‌ நாள். இஸ்லாமிய‌ அழைப்புப் ப‌ணி உல‌க‌ம் முழுவ‌தும் ப‌ர‌வ‌ கார‌ண‌மாக‌ விள‌ங்கிய‌ நாள்.
ஹ‌ம்ஜா இப்னு அப்துல்முத்த‌லிப்(ர‌ழி) ப‌டைப்பிரிவு:

ந‌பி(ஸ‌ல்) அவர்க‌ள் ஹிஜ்ர‌த் செய்து ம‌தீனா சென்ற‌ ஏழாவ‌து மாத‌ம், ர‌ம‌ழானில் (கி.பி 622,ஏப்ர‌லில்) ஹ‌ம்ஜா(ர‌ழி) அவ‌ர்க‌ளின் த‌லைமையில் 30 முஹாஜிர்க‌ளைக் கொண்ட‌ ஒரு ப‌டைப்பிரிவை அமைத்து,முத‌ன் முத‌லாக‌ வெண்மை நிற‌க்கொடியையும் கொடுத்து, ஷாம் நாட்டிலிருந்து ம‌க்கா நோக்கிவ‌ரும் அபூஜ‌ஹ்லின் 300 பேர் கொண்ட‌ வியாபார‌க்குழுவை வ‌ழி ம‌றித்து தாக்குத‌ல் நாட‌த்த "ஸாஹிலுல் ப‌ஹ்ர்" என்ற‌ இட‌த்திற்கு அப்ப‌டையை அனுப்பி வைத்தார்க‌ள்.

ப‌னூ ஸுலைம் குல‌த்த‌வ‌ருட‌ன் போர்:
ஹிஜ்ரி இர‌ண்டாம் ஆண்டு, ப‌த்ரு யுத்த‌திலிருந்து திரும்பிய‌ பின் ஏழு நாட்க‌ள் க‌ழித்து ப‌னு ஸுலைம் குல‌த்த‌வ‌ருட‌ன் போர் நிக‌ழ்ந்த‌து. அக்கூட்ட‌த்தின‌ர் த‌ப்பி ஓடிவிட்ட‌ன‌ர். எதிரிக‌ளில் யாரும் கைது செய்ய‌ப்ப‌ட‌வில்லை.

ய‌ம‌ன் நாட்டுக்கு ப‌டை:
ஹிஜ்ரி பத்தாம் ஆண்டு ர‌ம‌ழானில்(கி.பி.631)அலி இப்னு அபூதாலிப்(ர‌ழி) அவ‌ர்க‌ளின் த‌ல‌மையில் ய‌ம‌ன் நாட்டுக்கு ஒரு ப‌டைப்பிரிவு சென்றார்க‌ள்.
ஜைது இப்னு ஹாரிஸா(ர‌ழி) ப‌டைப்பிரிவு:

ஹிஜ்ரி ஆறாம் ஆண்டு ரமழானில் (கி.பி.628) ஜைது இப்னு ஹாரிஸா(ரழி) அவர்களின் தலைமையில் ஒரு படைப்பிரிவு ’உம்மு கிர்ஃபா’ என்னும் பெண்ணைப் பிடிக்கச் சென்றார்கள். இவள் நபி(ஸல்) அவர்களை கொலை செய்ய 30வீரர்களை தயார் செய்துவைத்திருந்தாள். அவர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர். அத்தீயவளுக்கும் தக்க தண்டனை வழங்கப்பட்டது.

ஃபாத்திமா(ரழி) அவர்களின் வஃபாத்:
ஹிஜ்ரி 11ஆம் ஆண்டு ரமழானில் அண்ணல் நபி(ஸல்) அவர்களின் அருமை மகள் ஃபாத்திமா(ரழி) அவர்கள் இவ்வுலகை விட்டுப் பிரிந்தார்கள்
அலி(ரழி) அவர்களின் வீரமரணம்:

ஹிஜ்ரி 40ஆம் ஆண்டு ரமழான் 17வது நாள் ஃபஜ்ர் தொழுகையை நிறைவேற்ற வந்த அமீருல் முஃமினீன் அலி(ரழி) அவர்களை, காரிஜிய்யாக்களில் ஒருவனான அப்துர்ரஹ்மான் இப்னு முல்ஜிம் என்பவன் கொலைசெய்ததால் அன்னார் (ஷஹீத்) வீரமரணமடைந்தார்கள். அப்போது அவர்களின் வயது 63 ஆகும். இஸ்லாமியப் பேரரசின் கலீஃபாவாக நான்கு ஆண்டுகள், ஒன்பது மாதங்கள், ஆறு நாட்கள் சிறப்பாகஆட்சி செய்துள்ளார்கள்.

அன்னை ஆயிஷா(ரழி) அவர்களின் வஃபாத்:
ஹிஜ்ரி 58ஆம் ஆண்டு ரமழானில் அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள் இவ்வுலகை விட்டுப் பிரிந்தார்கள்.

தொகுப்பு: மவ்லவி அ. சீனி நைனார் முஹம்மது தாவூதி. துபாய்

தீமைகளிலிருந்து எங்களை காப்பாற்றி
நன்மைகளின் பக்கம் எங்கள் முகங்களையும்
எங்கள் மனங்களையும் திருப்புவாயாக!..


அன்புடன் மலிக்கா
இறைவா!
உன்னையே வணங்குகிறேன்
உன்னிடமே உதவியும் தேடுகிறேன்

6 comments:

சசிகுமார் said...

நல்ல பதிவு அக்கா , ரமலான் வாழ்த்துக்கள்

ஆயிஷா அபுல். said...

அஸ்ஸலாமு அழைக்கும் மலீக்கா,
ரமலான் மாதத்தின் சிறப்பையும், குர்ஆன ஓதுவதால்
அதன் நன்மையும் தெளிவாக விளக்கி உள்ளீர்கள்.
என் வலைபூ முகவரி iniyavasantham. blogspot.com
பார்த்து உங்கள் கருத்தை தெரிவிக்கவும்.

Unknown said...

அன்பு சகோதரி மலிக்கா'க்கு

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

ஊரில் இருந்து திரும்பி வந்தது அறிந்தேன் சந்தோசம்.

ஊரில் உங்கள் வீட்டில் எல்லோரும் அல்லாஹ் கிருபையால் நல்ல சுகமாக இருகிறார்கள் தானே!.

குட்டிபொண்ணு ஆதிரா எப்படி இருக்கிறா?.


சகோதரி, சிறப்பு மிகுந்த மாதம் பாதியை தாண்டி விட்டது. என்னதான் அரபு நாட்டில் நாம் இருந்தாலும், நம் ஊரில் ரமலானில் செய்கின்ற இபாதத் போல் பயபக்தியோடு (இஹ்லாசுடன்) இங்கே ரமலானை பெரும்பாலோர்
கண்ணியபடுத்துவதில்லை.

சகோதரியே! தான், பதிந்திருக்கிற "சிறப்பு மிகுந்த மாதம்" கட்டுரை மிக நன்றாக இருக்கிறது. இந்த மாதத்தின் சிறப்பை அதன் கண்ணியத்தை மக்கள் உணர்ந்து நல்ல அமல்களை செய்து வல்ல இறைவனிடம் அதிகமதிகம் நன்மைகளை பெறுவோமாக.

சகோதரி கட்டுரையின் மூலம் நினைவுப்படுத்தியபடி இன்று ரமலான் பிறை பதினேழு,
வெள்ளிகிழமை பத்ரு யுத்தம் நடந்த நாள். இந்த மாதிரி சரித்திர சம்பவங்களை படித்தால் தெரியும் நம் அருமை சஹாபாக்கள் எவ்வளவு தியாகங்கள் செய்தார்கள் என்பது.

சகோதரி, கடைசி பத்து நெருங்கி விட்டது "லைலத்தில் கதிர் இரவு" எது? ஒத்தப்படை இரவு என்றால் சரியாக பிறை பார்த்திருந்தால் ஒத்தப்படையில் தேடலாம், இல்லாவிட்டால் எப்படி?.
அதுவும் நீங்கள் ஊரில் நோன்பை தொடங்கியதால் மேலும் சிக்கல். அதனாலே நாம் எல்லோருமே கடைசி பத்து முழுவதும் நல்ல இபாதத்துக்களை செய்து லைலத்தில் கதிரை அடைய எல்லாம் வல்ல அல்லாஹ் கிருபை செய்வானாக ஆமீன்.

வஸ்ஸலாம்

அன்புடன், சகோதரன் "மஹ்மூது"

Chitra said...

கருத்துள்ள பதிவு.

சுதாகர். said...

அருமையான பதிவு.
தாங்கள் அறிந்ததை பிறருக்கும் அறியும் வண்ணம்தந்திருப்பதற்கு மிக நன்றி.
அறியாதவற்றை நாங்களுக் அறிந்துகொள்ள உங்கலால் எங்களுக்கு ஓர்வாய்ப்பு தொடரட்டும் உங்கல் இப்பணி வாழ்த்துக்கள்

புல்லாங்குழல் said...

அருமையான பதிவு. மீண்டும் உற்சாகத்துடன் தொடருங்கள் உங்கள் இனிய பணியை.

Post a Comment

கருத்துக்களை பகிர்ந்துகொள்ளும்போது நிறைகுறைகளை சரிபார்க்கலாம். பகிந்துகொள்ளுங்களேன் கருத்துக்களை
நானும் என்னை சரிசெய்து கொள்கிறேன் .
பிடிதிருந்தால் ஓட்டும் போடுங்கள்

வேண்டுகோள்..

இங்கே பதியப்படும் அனைத்தும், நான் என்னை தெளிவுப்படுத்திக்கொள்ளவும். ஈருலக வாழ்க்கையையும் அறிந்துக்கொள்ளவும். தொடங்கியுள்ள பயணம். அதில் தாங்களும் தெரிந்துகொள்வதில் பெருமிதம். ஆனால் இதை தவறானமுறையில் விளங்கிக்கொண்டு வீணான விவாதங்களோ தர்க்கங்களான கருத்துக்களாகவோ அமைத்துவிட வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்..