மறந்தமைக்கு மன்னிப்பாயா
-
உன்னைவிட்டுப் பிரிந்துவிட்டேன் மன்னித்துக்கொள்ளடி
நீதான் எனது முதல்தோழி
நீதான் என் முதல் கனவு
என்னை நான் உன்னிடமிருந்துதான் தெரிந்துகொண்டேன்
உன்னால்தான் என...
அன்புள்ள ஆன்மாவே!15 [வரம்பு மீறாதே!]
Posted by அன்புடன் மலிக்கா | 9:36 PM |Labels: பெரும் குற்றங்கள்.
بسم الله الرحمن الرحيم
அளவற்ற அருளாளனனும். நிகரற்ற அன்புடையோனுமாகிய இறைவனின் திருநாமத்தால் ஆரம்பம் செய்கிறேன்.
அன்புள்ள ஆன்மாவே!
இன்று மனிதன் இறைவனிடமே வரம்பு மீறுவதைப்பற்றி, எனக்குத்தெரிந்தவரையில் பகிர்ந்துகொள்ளவந்துள்ளேன்..
114:அல்லாஹ்வின் பள்ளிவாசல்களில் அவனது பெயர்கூறப்படுவதை தடுத்து அவற்றைப் பாழாக்க முயல்பவனைவிட பெரும் அநீதி இழைத்தவன் யார்?
பயந்துகொண்டே தவிர அவற்றில் நுழையும் உரிமை அவர்களுக்கு இல்லை அவர்களுக்கு இவ்வுலகில் இழிவும். மறுமையில் கடும் வேதனையுமுண்டு.
அல்குர்ஆன் பாகம்1: அல்பகரா
1.முஹம்மதே!]படைத்த உமது இறைவனின் பெயரால் ஓதுவீராக!
2. அவன் மனிதனை கருவுற்ற சினைமுட்டையிலிருந்து படைத்தான்.
3. ஓதுவீராக உனது இறைவன் கண்ணியமானவன்.
4.அவனே எழுது கோலால் கற்றுத் தந்தான்.
5.அறியாதவற்றை மனிதனுக்குக் கற்றுத்தந்தான்.
6.7.அவ்வாறில்லை! தன்னை தேவையற்றவன் எனக் கருதியதால் மனிதன் வரம்பு மீறுகின்றான்.
8. உனது இறைவனிடமே திரும்பிச் செல்லுதல் உண்டு.
9..10. தொழும் அடியாரைத் தடுப்பவனைப் பார்க்கவில்லையா?
11. 12. 13. அவர் நேர்வழியில் இருப்பதையே, அல்லது இறையச்சத்தை ஏவுவதையே அவன் பொய்யெனக் கருதி அலச்சியம் செய்வதை நீர் கவனித்தீரா?
14. அல்லாஹ் பார்க்கிறான் என்பதை அவன் அறியவில்லையா?.
15 அவ்வாறில்லை அவன் விலகிக் கொள்ளவில்லையானால் முன் நெற்றியைப் பிடிப்போம்.
16. அது குற்றமிழைத்த பொய் கூறிய முன் நெற்றி.
17. அவன் சபையோரை அழைக்கட்டும்.
18. நாம் நரகின் காவலைரை அழைப்போம்.
19.எனவே, அவனுக்குக் கட்டுப்படாதீர் ஸஜதாச் செய்வீராக!
அல்குர்ஆன் பாகம் 30: அல் அலக்
அன்புள்ள ஆன்மாவே!
உன்னால், உன் உள்ளத்தால், ஒருவருக்கும் தீங்கிழைத்துவிடாதே! அதுவும் உனக்கு உயிர்கொடுத்து உடல்கொடுத்து இவ்வுலகில் உலாவவிட்டிருக்கும் இறைவனோடு பிணக்கம் கொண்டுவிடாதே!
உன்னை இப்பூமியில் படைத்ததே! அவனை வணங்கி வழிபடவே! கூடவே உன் வாழ்க்கையையும் நெறிப்படுதவே!
மனிதன் மனிதனின் விசயத்தில் வரம்பு மீறுவதே பாவம். அதைவிடப் பெரும்பாவம் தன்னை உண்டாக்கிய இறைவனிடமே
வரம்புமீறி தர்க்கம் செய்வதுதான்.
இறைவனை வணங்கி வழிபட கட்டப்பட்டிருக்கும் பள்ளிகளில். அங்குவந்து வணங்குவோரை தடுப்பதும் தர்க்கம் செய்வதும் முறையா?
இறையில்லத்தில் இணைகற்பிப்பதும் சரியா?
ஆங்காங்கே மனிதனை மனிதன் வெட்டுவதும். குத்துவதும். சாடுவதும். சண்டையிடுவதும். நீயா? நானா? எனபோட்டியிடுவதிலுமே மனிதன் தன்னைத் தொலைக்கிறான் தன் மனிதம் தொலைக்கிறான்.
இரக்கமிழக்கிறான். கடைசியில் இருளில் அடைகிறான்.
இப்படி தன்னைத்தொலைக்கும் மனிதர்களுக்கிடையில் தன்னப்படைத்த இறைவனை நினைக்க இறையில்லம் சென்று இறையருள் வேண்டுபவனை தடுப்பதும். ஏனென்று கேட்டால் இறையில்லைத்தை இடிப்பதும் இறைவாசியா!
இறைவனோடு மனிதனுக்கென்ன கோபம். ஈன்றெடுத்த தாயின்மீது
இருக்கும் பாசம்கூட, அந்த தாயையும். தன்னையும். இணைத்த இறைவன்மேல் வராததென்ன?
இறைவனுக்காக எதையும் செய்யத் துணிந்தவன்
இரக்கமில்லாமல் இருப்பானா? பிறருக்கு இன்னல்கள் தருவானா?
இறைவனை வணங்குமிடத்தையும். அவனை வணங்குபவனையும்.
தடுப்பதும். கெடுப்பதும். இறையச்சமில்லாமல் செய்யும் செயலல்லவா.
சகோதரத்துவமும். சமத்துவமும். சாந்தியையும். அமைதியையும். விரும்பும் மனங்கள். இறை சத்தியத்தையே விரும்பும்.
சத்தியம் சாகாதெனில் சகோதரத்துவம் மகத்துவம்பெறும்.
மனிதர்களை மனிதம்கொண்டு பார்க்கும் எந்த மனிதர்களும்,
மற்ற மனிதர்களோடு சண்டையிடுவதுமில்லை. சினம் கொள்வதுமில்லை.
மனிதம்கொண்டு பார்க்கும் மனம். சாந்தியிழப்பதுமில்லை.
ஒற்றுபட்டல் உண்டு வாழ்வு என்பதைபோல். ஒரு சகோதரனை மற்றொரு சகோதரன் வெறுக்கவேண்டாம். விரோதம் கொள்ளவேண்டாம்.
இவ்வுலகில்.சில நேரம் அநியாங்கள் அத்துமீறும்போது நியாங்களின் கண்கள் கட்டப்பட்டிருக்கும்.
கட்டப்படிருந்தாலும் அதனைமீறிய வெளிச்சம் வேகமாய் வெளியுலகை எட்டிப்பார்த்து நியாத்தைக் காட்டிக்கொடுக்கும்
இறைவனின்முன் நாம் அனைவரும் ஒற்றுகூடி நிற்கும் நாளொன்று வரும் . அவரவர் செய்த நன்மை தீமைகளுக்குதகுந்தவாறு.
தீர்ப்புகள் வழங்கப்படும்.அங்கே அணுவளவும் அநீதி இழைக்கப்படமாட்டாது.
இறைவனின் கோபத்திற்க்கும் சாபத்திற்க்கும் ஆளாகிவிடாமல். அவனை வணங்கி,நேர்வழியில் செல்ல எல்லாம் வல்ல அவனிடம் இருகரம் ஏந்தி பிராத்தனை செய்யவேண்டும்.
இறைவனை அஞ்சி இவ்வுலகில் நல்லறம் புரிவோருக்கு சொர்கமே கூலியா வழங்கப்படும்.
அந்த சொர்கத்தை நமக்கு கிடைக்கும்படி நாம் நடந்துக்கொள்ளவேண்டும். அதற்கான முயற்சியாவது செய்யவேண்டும்
பாவச்செயல் களைந்து. நல்லறங்கள் புரிந்து. நன்மைகளையடையந்து. நன்மைகளின் மூலம் சொர்கத்தினை அடைய ஏக இறைவன் உதவிசெய்வானாக ஆமீன்.
அன்புடன் மலிக்கா
இறைவா!
உன்னையே வணங்குகிறேன்
உன்னிடமே உதவியும் தேடுகிறேன்.
என்பாவங்களை மன்னிதருள்வாயாக!
Subscribe to:
Post Comments (Atom)
வேண்டுகோள்..
இங்கே பதியப்படும் அனைத்தும், நான் என்னை தெளிவுப்படுத்திக்கொள்ளவும். ஈருலக வாழ்க்கையையும் அறிந்துக்கொள்ளவும். தொடங்கியுள்ள பயணம். அதில் தாங்களும் தெரிந்துகொள்வதில் பெருமிதம்.
ஆனால் இதை தவறானமுறையில் விளங்கிக்கொண்டு வீணான விவாதங்களோ தர்க்கங்களான கருத்துக்களாகவோ அமைத்துவிட வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்..
10 comments:
ஹய்...!
நான்தான் 1stடா...
//அல்லாஹ்வின் பள்ளிவாசல்களில் அவனது பெயர்கூறப்படுவதை தடுத்து அவற்றைப் பாழாக்க முயல்பவனைவிட பெரும் அநீதி இழைத்தவன் யார்?//
இதனை புரிந்துக்கொள்ள வேண்டியவர்கள் புரிந்து கொல்கிறார்கள்...
கவிதையில் நீதான் “கவியரசி”
சமையற்கலையில் நீதான் “சுவையரசி”
ஆன்மீகத்தில் நீயோ “ராபியத்துல் பசரிய்யா”(இந்த பெண் ஞானியை எனக்கு ரொம்ப பிடிக்கும்)
கவிதையில் நீதான் “கவியரசி”
சமையற்கலையில் நீதான் “சுவையரசி”
ஆன்மீகத்தில் நீயோ “ராபியத்துல் பசரிய்யா”(இந்த பெண் ஞானியை எனக்கு ரொம்ப பிடிக்கும்
இல்லை ; தங்கையே! நீ கால்வைத்து விட்டாய்
எல்லை இல்லா சமுத்திரமாம் ஆன்மீகக் கடலில்
அதன் ஒரு பிரிவுதான் நீராடும் “நீரோடை”
அதில் தெளிவாய்க் காண்கின்றேன் ஞானவாடை
நீ பிறந்த மண்ணும்; தெருவும் “ஞான ஊற்றுக்களின்” பிறப்பிடம் என்பது பிறரை விட எனக்கு தெரியும். இறைவனின் நேரடியான “ஞான ஒளி” உன் அகத்திலும் முகத்திலும் உண்டென்பதும் மறுக்கவோ, மறைக்கவோ, மறக்கவோ முடியாத பேருண்மை; இதனைக் கண்டவர்கள் கொண்டனர் பொறாமை.
Please visit
Surat Al-`Alaq (The Clot) - سورة العلقhttp://seasonsali.blogspot.com/2010/09/surat-al-alaq-clot_25.html
நல்ல இடுகை. எனது தளத்தில் வெகுநாளாக உங்கள் கருத்துகளையே காணோமே?
அஸ்ஸலாமு அலைக்கும் ஒற்றுமை என்னும் கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள் என்று குரானில் எந்த இடத்திலும் கூறப்படவில்லை. ஹப்லில்லாஹி என்று தான் வருகிறது அதாவது அல்லாஹ்வின் கயிற்றைப் பற்றிப் பிடித்துக்கொள்ளுங்கள்(அதாவது குரான்)
அஸ்ஸலாமு அலைக்கும் ஒற்றுமை என்னும் கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள் என்று குரானில் எந்த இதத்திலும் வரவில்லை.ஹப்லில்லாஹி என்று தான் வருகிறது அதாவது அல்லாஹ்வினுடுடைய கயிற்றைப் பற்றிப்பிடித்துக்கொள்ளுங்கள் அதாவது(குரான்)
அப்துல் கபூர் அபுதாபி
Post a Comment
கருத்துக்களை பகிர்ந்துகொள்ளும்போது நிறைகுறைகளை சரிபார்க்கலாம். பகிந்துகொள்ளுங்களேன் கருத்துக்களை
நானும் என்னை சரிசெய்து கொள்கிறேன் .
பிடிதிருந்தால் ஓட்டும் போடுங்கள்