بسم الله الرحمن الرحيم
அஸ்ஸலாமு அலைக்கும்.
இறைவனின் சாந்தியும் சமதானமும்.அனைவரின்மீதும் உண்டாகட்டும்.
இஸ்லாமிய புதுவருடப்பிறப்பு.ஹிஜ்ரி 1432 முஹர்ரம்.
அல்லாஹ் அல்குர்ஆனில் 9:36 வசனத்தில் உலகை படைத்த நாள் முதலே மாதங்களின் எண்ணிக்கை 12 என்பதை தெளிவுபடுத்தியுள்ளதை நாம் தெளிவாக அறிந்துள்ளோம். வருடத்தின் முதல் மாதமாக புனித முஹர்ரம் மாதம் இருப்பதையும் நாம் அறிந்தே வைத்துள்ளோம். அல்ஹம்துலில்லாஹ்.
அனைத்து இஸ்லாமிய நல்லுள்ளங்களுக்கும் புதுவருடப்பிறப்பின் வாழ்த்துக்கள்.
ஏக இறைவன் படைத்த இப்பூமியில், மகத்துமிக்கவனாக மனிதனையும் படைத்தான். மற்ற அனைத்தையும் படைத்தவன் அவைகள் மனிதனின் உபயோகதிற்காகவே படைத்துள்ளான்.
அத்தனையும் அனுபவிக்கும் மனிதன் தன்னை படைத்த அவனை மறந்திடாவாறு, ஐந்துகடமைகளை உருவாக்கினான். அதனில்
முதன்மையானதாக இறை நம்பிக்கை / சத்தியத்தை ஏற்று
அவனை முழுமையாக பின்பற்றவும்.
இரண்டாவதாக அவனை வணங்குவதற்காக ஐவேளை தொழுகையை ஏற்படுத்தியும்.
மூன்றாவதாக.
ரமளான் / நோன்பு.
புனித மாதமான ரமளானில் நோன்பென்னும் விரதமிருந்து மனிதன் தன்னுள்ளத்தையும் தன் உடலையும் தூய்மையாக்கிகொள்ளவும்.
நான்காவதாக.
ஜகாத் / ஏழைவரி. இருப்போர் இல்லாதோர்களுக்கு வாரிவழங்குவதையும்.
ஐந்தாவதாக.
இறுதிக்கடமையாய் புனிதப் பயணமான ஹஜ்ஜையும் நிறுவினான்.
அவன் மனிதர்களுக்கு முன் நன்மைகளையும் தீமைகளையும் கொட்டிக்குவித்து, அதனை பிரித்தறிக்கூடிய ஆறாவது அறிவையும் கொடுத்து படைத்துள்ளான்.படைதவன் வகுத்துக்கொடுத்த மிக அழகான நெறிமுறைகளையும். அதற்காக அவன் வழங்கிய வேதமான திருகுரானையும். அதனை நமக்கறிவிக்க அனுப்பிய திருநபியையும் வழங்கினான்.இறைவன் மிகவும் நுண்ணறிவு உள்ளவன். அவன் இவ்வுலகில் மனிதர்களை படைத்ததின் நோக்கத்தை அவர்கள் அறிந்து அவன் கூறியவற்றிக்கு செவிசாய்த்து. இன்பம் துன்பம் தானறிந்து, தீமைகள் தன்முன்னே அழகானதாக கண்முன்னே காட்சியளித்தபோதும் அவைகளைவிட்டு விலகியிருந்து,மூடப்பலக்கவழக்கங்களை துடைத்தெறிந்து,ஆணவ ஆகபாவம் விட்டொழித்து, தனக்குதரப்பட ஆறாவது அறிவால் சிந்தித்து செயல்பட்டு, நன்மைகளின் பக்கம் தங்களை இணைத்துக்கொள்வார்கள் என்றுதான்.
எது நல்லது எது கெட்டது என பிரித்தறியும் பக்குவம் நம் அனைவரிடமுமே கொடுக்கப்பட்டுள்ளது. அப்படி அறியத்தவறிவிடுபவர்களுக்காக பிறர்மூலம் அறிவுறுத்தபடுகிறது. அதனினைக்கொண்டும் நம் அறிவினைக்கொண்டும் நன்மையின்பக்கமே நம் முகங்களும். மனங்களும் சாய்ந்துகிடக்கட்டும். இறைவனின் சாந்தி என்றென்றும் நமக்கு கிடைக்கட்டும்..
இறைவா! என்பாவங்களை மன்னிதருள்வாயாக!
நல்லோர்களின் கூட்டத்தில் சேர்தருள்வாயாக!
அன்புடன் மலிக்கா
இறைவா!
உன்னையே வணங்குகிறேன்
உன்னிடமே உதவியும் தேடுகிறேன்
7 comments:
இஸ்லாமிய புது வருட நல்வாழ்த்துகக்ள்.
அருமையான பதிவு
இதுவரை என்ன தவறுகள் தெரியாமல் செய்து இருக்கோமோ அது இனி நடக்காமல் நல்வழிபடுத்த ஏக வல்ல இறைவனை பிராத்திப்போமாக.
இஸ்லாமிய புது வருட நல்வாழ்த்துகக்ள்.
மிகவும் அருமையான பதிவு
இறைவன் அனைவருக்கும் நல்லருள் புரியட்டும்.
உங்களுக்கு நல்ல சிந்தனைகளும் எழுதுக்களின் தனி தெளிவும் தெரிகிறது வாழ்த்துக்கள் மலிக்கா
இஸ்லாமிய புது வருட நல்வாழ்த்துகக்ள்.
அன்பு தோழியே!
அன்பான அருமையான பதிவு. இத்தளதிற்கு முதல்முறையாக வருகிறேன்.நல்ல பதிவுகள் இடப்பட்டுள்ளது. அனைவருக்கும் தெரிவியுங்கள்.பயனடையட்டும்
இஸ்லாமிய புது வருட நல்வாழ்த்துக்கள்,
தொடரட்டும் உங்கள் தூயபணி..
அஸ்ஸாலமு அலைக்கும் (வரஹ்)
சகோதரி மலிக்கா நல்ல ஒரு ஆக்கத்தை மக்கள் அறிய வெளியிட்டுள்ளீர்கள். அல்ஹம்துல்லாஹ். அல்லாஹ் உங்களுக்கும் உங்கள் குடுப்பத்தாருக்கும் நல்லருள் புரிவானாக.
// மூன்றாவதாக.
ஜகாத் / ஏழைவரி. இருப்போர் இல்லாதோர்களுக்கு வாரிவழங்குவதையும்.//
நீங்கள் குறிப்பிட்ட மூன்றாவது இடத்தில் நோன்பு இடம்பெற வேண்டும், நீங்கள் தவறுதலாக "ஜகாத்" எனக் குறிப்பிட்டுள்ளீர்கள். திருத்திக்கொள்ளவும். நான் ஏதாவது தவறுதலாக சுட்டிக்காட்டிருந்தால் இறைவனுக்காக மனம் பொருத்துக்கொள்ளவும்.
பதிவுகள் அருமை...
akkaraiyullavan. said...
dear sisttar. anaivarukum soloringka ungka firansukumsolungka. marravangka peesurathupool wadkaveendamenru.velinadukalil oru viittukku adikakadi vawthum thangkuvathum angkullavangkalukku disdapa irukumunnu avangkaluku thoonanum. mathavangka kelviku pathil sollamudiyala. ningka konjsam eduththu solungka sis.. bortharaa keddukireen.
ithuku munnadiyum oru karuththupooddeen ningka sonningkaLaa.//
அன்புள்ள சகோதரர் அவர்களுக்கு: எனக்குத்தெரிந்த நன்மை தீமைகள் பற்றி பிறரிடம் பகிர்ந்துக்கொள்ளவேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு இந்த தளத்தை தொடங்கியுள்ளேன். இதில் எழுதப்படுபவைகளுக்கு அவைகள் சம்மந்தப்பட்ட விளக்கங்களை பகிர்ந்துகொள்வது நலம். மற்றபடி சிலரின் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கான தளமாக இதை பயன்படுத்திக்கொள்ளவேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்..
Post a Comment
கருத்துக்களை பகிர்ந்துகொள்ளும்போது நிறைகுறைகளை சரிபார்க்கலாம். பகிந்துகொள்ளுங்களேன் கருத்துக்களை
நானும் என்னை சரிசெய்து கொள்கிறேன் .
பிடிதிருந்தால் ஓட்டும் போடுங்கள்