بسم الله الرحمن الرحيم
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய இறைவனின் திருப்பெயரால் ஆரம்பிக்கிறேன்.
“முஃமின்களே! அல்லாஹ்வை அஞ்சி நடந்து கொள்ளுங்கள். நேர்மையான சொல்லையே சொல்லுங்கள். (அவ்வாறு செய்தால்) உங்களுடைய செயல்களை உங்களுக்கு அவன் சீராக்கி வைத்து, உங்களுடைய பாவங்களையும் உங்களுக்கு மன்னிப்பான்”
[அல்-அஹ்ஸாப்: 70, 71].
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “அடியான் அல்லாஹ்வுக்கு விருப்பமான ஒரு சொல்லை நாவினால் மொழிகின்றான். ஆனால் அதில் அவன் கவனஞ் செலுத்துவதில்லை. எனினும் அந்தச் சொல்லின் காரணத்தால் அல்லாஹ் அவனது தகுதியை உயர்த்திவிடுகிறான். இவ்வாறே அடியான் இறைவனுக்குக் கோபம் உண்டாக்கக் கூடிய ஒரு சொல்லை அலட்சியமாகச் சொல்லிவிடுகிறான். அச்சொல்லே அவனை நரகில் தள்ளிவிடுகிறது”.
[அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), நூல்: புகாரி].
ஒருவரை ஒருவர் சபிப்பதும், [அதாவது] சாபமிடுவதும் வெருக்கத்தக்க செயலாகும்.
கோபமோ! ரோசமோ!.ஆத்திரமோ! தலைக்கேறும்போது என்ன பேசுகிறோமென அறியாமல் வார்த்தைகளை கொட்டித் தீர்த்துவிடுவது. நாவை அடக்கத்தெரியாமல் ஆத்திரத்தின்மேல் சபிப்பதும் சாபமிடுவதும்.பாவச்செயல்.
வரம்பு மீறி வீசப்படும் வசைமொழிகள் இருக்கிறதே அது அணுகுண்டைக் காட்டிலும் ஆபத்தானது; ஏவுகணையைக் காட்டிலும் நாசம் விளைவிக்கக் கூடியது. சிலர் கடுமையான வார்த்தைகளை கண்ணிமைக்கும் நேரத்தில் கக்கி விடுவார்கள். கணநேர ஆத்திரம் அவர்களின் கண்களை மறைத்து விடும். அதன் பின்னர் அவர்கள் அறியாமல் சொன்னதை நினைத்து மனம் வருந்துவார்கள்.
இதில் வேதனையான விசயம்.தன் சொந்தக் குழந்தைகள். தன் கணவன். தன் மனைவி. தாய் தந்தை. என யாரையும் விட்டுவைப்பத்தில்லை அந்த கோபத்தினால் உண்டாகும் சாபவார்த்தைகள்.இது எந்தளவுக்கு ஆபத்து நிறைந்த தீமையான விசயம் என அறியாமல் செய்வதுதான் வருந்ததக்க ஒன்று.
அநியாயமாக ஒருவன் ஒருவனை சபித்தால் அவனது சாபம் அவன் மீதே திரும்பி விடுகின்றது. அந்த நேரத்தில் அவன் தனக்கெதிராக தானே இறையருளை விட்டும் தூரமாவதற்குப் பிராத்தித்தவனாகின்றான். [அஸ்தஹ்பிர்ல்லாஹ்].
சட்டென எதற்கெடுத்தாலும் உடனுக்குடன் கோபப்படுவதும். அதை ஆய்ந்து ஆராயாது.உண்மையறியாது சபிப்பதும்.சாபமிடுவதும் ஈருலகிற்க்கும் தீமையே.
பெண்கள் அதிகம் சபிக்கின்றார்கள். அதுவே அவர்கள் நரகில் நுழைவதற்குக் காரணமாக அமைகின்றது என்பதை நபி (ஸல்) அவர்களும் தெளிவுபடுத்தி உள்ளார்கள். அதுபோல சபிக்கின்றவர்கள் மறுமையில் பரிந்துரை செய்பவர்களாக இருக்க மாட்டார்கள்.
எனவே நம்முடைய எந்த நிலையிலும். யாரையும் சபிக்கவோ சாபமிடவோ கூடாது. அநீதி இழைத்தவன் அதன் கூலியை பெறுவான்.
அநியாயம் செய்தவன் அதன் பலனை அடைவான்.
நம்மை நாம் பேணிக்கொள்ளவேண்டும் முக்கியமாக நாவை.அதை எந்நிலையிலும் பேணிக்காக்கத்தவறி நரகத்தின் பக்கம் இழுத்துசென்றுவிடாதிருக்க மிக கவனமாக இருக்கவேண்டும்.
“அல்லாஹ்வின் தூதரே! நான் தொடர்ந்து பற்றிப் பிடித்துக் கொள்ள வேண்டிய ஒன்றை எனக்குச் சொல்லித் தாருங்கள்” என்றேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “எனது இரட்சகன் அல்லாஹ் என்று கூறி, பின் அதிலேயே நிலைத்திரும்” என்றனர். (மீண்டும்) “அல்லாஹ்வின் தூதரே, என்மீது நீங்கள் பயப்படக்கூடிய மிகப் பயங்கரமான விடயம் எது” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் தமது நாவைப் பிடித்து, “இதைத்தான் (பயப்படுகிறேன்)” எனக் கூறினர்.
[அறிவிப்பவர்: ஸுப்யான் பின் அப்துல்லாஹ் (ரலி), நூல்: திர்மிதி]
இறைவன் நம் அனைவருக்கும் தீமையிலிருந்து பாதுகாப்பளித்து நன்மையின் பக்கமே நம்மை அழைத்துசெல்வானாக. ஆமீன்..
இறைவா!
உன்னையே வணங்குகிறேன்
உன்னிடமே உதவியும் தேடுகிறேன்..
அன்புடன் மலிக்கா.

8 comments:
வரம்பு மீறி வீசப்படும் வசைமொழிகள் இருக்கிறதே அது அணுகுண்டைக் காட்டிலும் ஆபத்தானது; ஏவுகணையைக் காட்டிலும் நாசம் விளைவிக்கக் கூடியது.
சிறப்பான சிந்தனை.
அல்லாஹ் நம் அனைவரையும் நாவை கட்டுப்படுத்துபவர்களாகவும், பொறுமையாளர்களாகவும் ஆக்கியருள்வானாக!
அசலாமு அழைக்கும்
இன்சா அல்ல உன்கள் படைப்பு அல்லாவால் எழுதப்பட்டது
.
பொறுமைய இழந்தால் தான் கோபத்தில் நமமி அறியாமல் வெளியாகும் வார்த்தைகள் தான் இது போல் சாபம், எல்லாம்.
எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவருக்கும் பொறுமையை தருவானாக
தீயினால் சுட்டபுண் உள் ஆறினாலும்,நாவினால் சுட்ட வடு மாறுவதில்லையே! அளவற்ற அன்புடையொனும், நிகரற்ற அருளாளருமான அல்லாவின் வரிகளைச் சிந்திக்கக் கொடுத்தமைக்கு நன்றி.
//மு.ஜபருல்லாஹ் said...
வரம்பு மீறி வீசப்படும் வசைமொழிகள் இருக்கிறதே அது அணுகுண்டைக் காட்டிலும் ஆபத்தானது; ஏவுகணையைக் காட்டிலும் நாசம் விளைவிக்கக் கூடியது.
சிறப்பான சிந்தனை.
அல்லாஹ் நம் அனைவரையும் நாவை கட்டுப்படுத்துபவர்களாகவும், பொறுமையாளர்களாகவும் ஆக்கியருள்வானாக!//
வாங்க சகோதரர் அவர்களே தங்களின் வருகைக்கும் அன்பான கருத்திற்க்கும் மிக்க நன்றி..
//யாதவன் said...
அசலாமு அழைக்கும்
இன்சா அல்ல உன்கள் படைப்பு அல்லாவால் எழுதப்பட்டது//
வ அலைக்குமுஸ்ஸலாம் யாதவன்.
இறைவன் கூறியவைகளை எனக்கு அறிந்ததிலிருந்தும் அறியத்தமையிலிருந்தும், நான் பிறக்கு எடுத்துசொல்வது கட்டாயக்கடமை. அந்த வகையில் எனக்கு தெரிந்தவைகளை இங்கு பகிர்ந்துகொல்இறேன். இதில் பிழைகளிருப்பின் அந்த இறைவன் பொருந்திக்கொண்டு மன்னித்தருளவேண்டும்..
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ..
//jaleela Kamal said...
.
பொறுமைய இழந்தால் தான் கோபத்தில் நமமி அறியாமல் வெளியாகும் வார்த்தைகள் தான் இது போல் சாபம், எல்லாம்.
எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவருக்கும் பொறுமையை தருவானாக//
ஆமீன். ஆமாக்கா பொருமை இழக்கப்படும்போது ஏற்படும் விழைவுகளே இவைகள்.. நன்றிக்கா
//இராஜராஜேஸ்வரி said...
தீயினால் சுட்டபுண் உள் ஆறினாலும்,நாவினால் சுட்ட வடு மாறுவதில்லையே! அளவற்ற அன்புடையொனும், நிகரற்ற அருளாளருமான அல்லாவின் வரிகளைச் சிந்திக்கக் கொடுத்தமைக்கு நன்றி.//
வாங்க சகோதரி. நம்மை பூமியில் படைத்து சிந்தக்கவும் அதை செயல்படுத்தவும். நல்லது கெட்டதுகளை பிரித்தறிவதையும் கற்றத்தந்த இறைவனுக்கே புகழ் அனைத்தும்.
தங்களின் வருகைக்கும் அனபான கருத்திற்க்கும் மிக்க நன்றி..
Post a Comment
கருத்துக்களை பகிர்ந்துகொள்ளும்போது நிறைகுறைகளை சரிபார்க்கலாம். பகிந்துகொள்ளுங்களேன் கருத்துக்களை
நானும் என்னை சரிசெய்து கொள்கிறேன் .
பிடிதிருந்தால் ஓட்டும் போடுங்கள்