بسم الله الرحمن الرحيم
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய இறைவனின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கின்றேன்.
மனிதர்களாய் படைக்கப்பட நமக்கு
மூன்று வகையான வாழ்க்கை இருக்கு!-அதிலொன்றுதான்
மண்ணறை வாழ்க்கையும்
இறைநம்பிக்கை கொண்டோரை அல்லாஹ் இவ்வுலக வாழ்விலும் மறுமையிலும் உறுதியான வார்த்தையைக் கொண்டு நிலைபெறச் செய்வான். மேலும் அநியாயக்காரர்களை அல்லாஹ் வழிகேட்டில் விட்டு விடுவான். அல்லாஹ், தான் நாடுவதைச் செய்வான் (அல்குர்ஆன் 14:27).
ஒன்று. இந்த பூமியில் பிறந்து வாழ்ந்து மரணிப்பது.
இரண்டு. பூமியில் வாழ்ந்த நாம் மரணித்தபின் மண்ணறைக்குள் வாழ்வது
மூன்று. மண்ணறையில் வாழ்ந்த நாம் மறுமையில் மரணமற்று நிரந்தரமாக வாழ்வது.
இன்று நாம் வாழும் வாழ்க்கை எந்தளவு உண்மையானதோ அதேபோன்று நாம் மரணித்தபின்பு மண்ணறையில் நமக்கான ஒருவாழ்க்கை உண்டு என்பதும் உண்மை. அவ்வாழ்க்கையில் சுகம் பெற மண்மீது வாழும்போது நாம் செய்த நன்மைகளின்பொருட்டே நமக்கான மண்ணறையோடு சேர்ந்து மறுமை வாழ்வும் தீர்மானிக்கப்படும்.
பூமியில் பிறந்தமனிதன் ஒருநாள் தன் உணர்வுகள், உணர்ச்சிகள், வீடு வாசல், மனைவி மக்கள், செல்வம் சுகபோக வாழ்க்கை,என அனைத்தையும் விட்டு விட்டு இதே பூமிக்குள்ளேயே புதைக்கப்படபோகிறான்,
ஆனபோதும் மனிதன் அலச்சியக்காரனகாவே இருக்கிறான்
மரணம் வரும்வரை மண்ணுலகத்தின்மீதே பற்றுதல்கொண்டு, அதனின் இச்சைகளுக்கு இணங்கி அதனுள்ளே மூழ்கிக் கிடக்கிறான். தன்
மரணத்திற்க்கு பிறகு வாழ்க்கை உண்டு என்பதை நினைத்தாலும் அதற்க்குண்டான செயல்களில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளத் தயங்குறான் சொல்லபோனால் அதற்க்குண்டான செயல்களை செய்யவே சோம்பேரித்தனம் செய்கிறான்.
إِنَّ الَّذِينَ كَذَّبُوا بِآيَاتِنَا وَاسْتَكْبَرُوا عَنْهَا لَا تُفَتَّحُ لَهُمْ أَبْوَابُ السَّمَاءِ وَلَا يَدْخُلُونَ الْجَنَّةَ حَتَّى يَلِجَ الْجَمَلُ فِي سَمِّ الْخِيَاطِ وَكَذَلِكَ نَجْزِي الْمُجْرِمِينَ
நிச்சயமாக நம்முடைய வசனங்களைப் பொய்ப்பித்து, அவற்றை (ஏற்பதை) விட்டும் பெருமையும் கொண்டார்களே அத்தகையோர் – அவர்களுக்கு (அல்லாஹ்வின் அருளுக்குரிய) வானத்தின் (அருள்) வாயில்கள் திறக்கப்படமாட்டாது, மேலும் ஊசியின் துவாரத்தில் ஒட்டகம் நுழையும் வரையில் அவர்கள் சுவனத்தில் நுழையமாட்டார்கள், மேலும் குற்றவாளிகளுக்கு இவ்வாறே நாம் கூலி கொடுப்போம். (அல்குர்ஆன் 7:40)
பூமியின்மீது பெருமையடித்து பகட்டுகாக தன்னை தயாரக்கி அகந்தைகொண்டு நடப்போருக்கு இறைவனின் அச்சம் விட்டுபோகக்கூடும் எனவே பெருமையடித்து திரியாதீர்கள். பெருமையும் புகழும் இறைவன் ஒருவனுக்கே.
நீங்கள் (ஜனாஸாவை) அடக்கம் செய்யமாட்டீர்கள் என்ற பயம் இல்லையென்றிருந்தால் எனக்கு கேட்கும் கப்ருடைய வேதனையை உங்களுக்கும் கேட்க வேண்டும் என்று அல்லாஹ்விடத்தில் நான் துஆச் செய்திருப்பேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(முஸ்லிம்)
حَتَّى إِذَا جَاءَ أَحَدَهُمْ الْمَوْتُ قَالَ رَبِّ ارْجِعُونِي. لَعَلِّي أَعْمَلُ صَالِحًا فِيمَا تَرَكْتُ كَلَّا إِنَّهَا كَلِمَةٌ هُوَ قَائِلُهَا وَمِنْ وَرَائِهِمْ بَرْزَخٌ إِلَى يَوْمِ يُبْعَثُونَ
அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும்போது, அவன்; “என் இறைவனே! என்னை (உலகுக்குத்) திருப்பி அனுப்புவாயாக!’ என்று கூறுவான். “நான் விட்டுவந்ததில் நல்ல காரியங்களைச் செய்வதற்காக” (என்றும் கூறுவான்). அவ்வாறில்லை! அவன் கூறுவது வெறும் வார்த்தையே(யன்றி வேறில்லை); அவர்கள் எழுப்பப்படும் நாள் வரையிலும் அவர்கள் முன்னே ஒரு திரையிருக்கிறது. (அல்குர்ஆன் 23:99-100)
மறுமைக்கான முன்னோட்டமாகத்தான் மண்ணறை வாழ்க்கையென்ற ஒன்றை இறைவன் வைத்துள்ளான் மண்மீது நாம் செய்யும் அத்தனையும் கணக்கெடுக்கப்பட்டுக்கொண்டேயிருக்கும். அதில் செய்யும் நன்மை தீமைகளின் பட்டியல் பொருத்தே மண்ணறைக்குள் கேள்விகள் கேட்கப்படும். அங்கு கேட்க்கப்படும் கேள்விகளின் பதில்களைப்பொருத்தே மறுமையில் சுவர்க்கம் நரகமென என தீர்மானிக்கப்படும் ஆகவே,
மண்ணறை வாழ்க்கையைப்பற்றி ஒருவன் முன்னமே அறிந்தால் அதற்காக தயாராகயிருப்பான் அதன்பொருட்டு திருமறையிலும் நபிமொழியிலலும் சிலவற்றுகள் எடுத்துக்காட்டப்பட்டு, சொல்லப்பட்டும் உள்ளன. அவைகளைத் தெரிந்து அதன்படி நடப்போர் வெற்றிபெறுவார். தெரிந்தும் தெரியாததுமான பாராமுகங்களில் இருப்போருக்கு கேடுதான்.
"ஓர் அடியானது உடலைக் கப்ரில் அடக்கம் செய்துவிட்டு, அவனுடைய தோழர்கள் திரும்பும்போது அவர்களின் செருப்பின் ஓசையை அந்த மய்யித் செவியேற்கும். அதற்குள் இரண்டு வானவர்கள் அவனிடம் வந்து அவனை எழுப்பி உட்கார வைத்து, 'முஹம்மத் என்பவரைப் பற்றி நீ என்ன கருதிக் கொண்டிருந்தாய்?' எனக் கேட்பர். அதற்கவன், 'அவர் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாவார் என நான் சாட்சி கூறுகிறேன்' என்பான். பிறகு '(நீ கெட்டவனாக இருந்திருந்தால் நரகத்தில் உனக்கு கிடைக்கவிருந்த) தங்குமிடத்தைப் பார்! (நீ நல்லவனாக இருப்பதால்)அல்லாஹ் அதற்குப் பதிலாக உனக்குச் சொர்க்கத்தில் தங்குமிடத்தை ஏற்படுத்தியுள்ளான்' என்று அவனிடம் கூறப்பட்டதும் அவன் அவ்விரண்டையும் ஒரே நேரத்தில் காண்பான். நிராகரிப்பவனாகவோ நயவஞ்சகனாகவோ இருந்தால் கேள்வி கேட்கப்பட்டதும், 'எனக்குத் தெரியாது; மக்கள் சொல்வதையே நானும் சொல்லிக் கொண்டிருந்தேன்' என்பான். அப்போது அவனிடம் 'நீயாக எதையும் அறிந்ததுமில்லை; (குர்ஆனை) ஓதி(விளங்கி)யதுமில்லை என்று கூறப்படும். பிறகு இரும்பாலான சுத்தியால் அவனுடைய இரண்டு காதுகளுக்குமிடையே (பிடரியில்) ஓர் அடி கொடுக்கப்படும். அப்போது மனிதர்ளையும் ஜின்களையும் தவிர மற்ற அனைத்தும் செவியேற்குமளவுக்கு அவன் கதறுவான்"
இப்பூலோக வாழ்வு அற்பமானது ஆனாலதை மனிதன் அற்புதமானதென நினைத்து ஆணவம் கொண்டலைகிறான், பல்வேறு அனாச்சாரங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொள்கிறான்.சர்வசாதரணமாக குற்றங்களும் கொலைகளும் புரிகிறான்.
"ஒரு முஸ்லிம் (இறந்தபின்) மண்ணறையில் விசாரிக்கப்படும்போது, அவர் 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை; முஹம்மத்(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார்கள்' என்று உறுதிமொழி கூறுவார். இதுதான் '(இறை) நம்பிக்கை கொண்டோரை, அல்லாஹ் ஒரு வலுவான வாக்கின் அடிப்படையில் இம்மையிலும், மறுமையிலும் உறுதிப்படுத்துகிறான்' எனும் (14:27 வது) இறை வசனத்தின் கருத்தாகும்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்
ஒரு மனிதனின் மரணத்திற்குப் பின் அவரது அமல்களில் மூன்றைத் தவிர மற்றவை எல்லாம் செயலற்றவைகளாகி விடுகின்றன.
மரணத்தபின்பு மனிதன் கூடவே செல்லும் அம்மூன்று செயல்கள்-
1.சதக்கத்துல் ஜாரியா
தான தர்மங்கள்
2.பலன் தரும் கல்வி
இம்மை மறுமை இரண்டிற்க்கும் நன்மை பயக்கும் கல்வி.
3.பெற்றோருக்காக துஆசெய்யும் [பிரார்த்திக்கும்] நேர்மையான (ஸாலிஹான) பிள்ளைகள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்:முஸ்லிம்
ஒரு முஸ்லிமின் மரணத்தோடு அவரது செயல்கள் முற்றுப்பெறுகின்றன. நற்செயல்கள் செய்து நன்மையைத் தேடிக்கொள்வதும் இயலாமல் ஆகிவிடுகின்றது. ஆயினும் அவர் உயிரோடு இருந்த காலத்தில் செய்த நற்செயல்களில் சில மரணத்திற்குப் பின்னரும் நிரந்தரமாக என்றென்றும் எந்நோக்கத்துடன் அச்செயல் நிறைவேற்றப்பட்டனவோ அந்நோக்கங்கள் நிறைவேறிக் கொண்டு இருக்கும் காலமெல்லாம் அவர் மரணமடைந்த பின்னரும் நன்மைகள் [சேர்ந்தும்] சேர்த்துக் கொண்டிருக்கும். உதாரணமாக!
பள்ளிவாசல்கள், , மக்கள் குடிநீர் பெற தோண்டிய கிணறுகள், கல்விக்கூடங்கள்,அநாதை இல்லங்கள்,ள், தர்ம ஸ்தாபனங்கள், மருத்துவமனைகள், பலன் தரும் விஞ்ஞான கண்டு பிடிப்புகள். இவையாவும் அதனிலடங்கும்.
2:215. அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்; “எதை, (யாருக்குச்) செலவு செய்யவேண்டும்” என்று; நீர் கூறும்: “(நன்மையை நாடி) நல்ல பொருள் எதனை நீங்கள் செலவு செய்தாலும், அதை தாய், தந்தையருக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப்போக்கர்களுக்கும் (கொடுங்கள்); மேலும் நீங்கள் நன்மையான எதனைச் செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதை அறிந்து (தக்க கூலி தருபவனாக) இருக்கிறான்.”
இரண்டாவதாக தான் வாழ்ந்த காலத்தில் மக்களுக்கு பலனளித்து கொண்டிருந்த அவரது மார்க்க கல்வியும் மனிதர்களுக்கு பலனளிக்கும் மற்ற கல்வியும், இறந்தவர் தன் கல்வி அறிவால் போதித்தவைகள் பலனாக நன்மைகள் செய்தவருக்குறிய பலன்கள் குறைவில்லாமல் கிடைப்பதோடு அந்நன்மைகளை செய்ய ஊக்குவித்த கல்வியாளருக்கும் அவரது மரணத்திற்குப் பின்னரும் நன்மைகள் சேர்ந்து கொண்டே இருக்கும்.
படைத்த உமது இறைவனின் பெயரால் ஓதுவீராக! அவனே மனிதனை ஒட்டிக்கொண்டிருக்கும் அட்டை போன்ற ஒன்றிலிருந்நு படைத்தான். நீர் ஓதும். உமது இறைவன் மாபெரும் கொடையாளி. அவன்தான் எழுதுகோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான். மனிதன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான். (96: 1-5)
ஓருவர் ஓர் அறிவைத் தேடி ஒரு பாதையில் சென்றால் அல்லாஹ் அதனைக் கொண்டு அவருக்கு சுவனம் செல்லும் ஒரு பாதையை இலேசாக்கிக் கொடுக்கிறான். (முஸ்லிம்)
மூன்றாவதாக மார்க்க நெறிகளை பேணி ஒழுக்கமுடன் வளர்க்கப்பட்ட மக்கள் செய்கின்ற நற்செயல்கள் யாவும் மரணமடைந்த பெற்றோர்களுக்கு நன்மைகள் சேர்ப்பவையாகும். இத்தகைய சாலிஹான பிள்ளைகளின் இறைவணக்கம், அவர்களின் பிள்ளைகள் இறை உணர்வோடு நிறைவேற்றும் அனைத்து செயல்களும் பெற்றோர்களுக்கு அவர்களின் மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்ப்பவையாகும்.
ஒரு நல்ல பெற்றோர் எப்படி இருக்கவேண்டும். உண்மையான, அன்பான, முறையான கணவன் மனைவியாக இறைவனை ஜந்து வேளை தொழுது குழந்தைகளையும் சிறு வயது முதலே தொழவும், ஓதவும், தீன் வழியில் ஈடுபடவும் செய்ய வேண்டும். இஸ்லாத்தின் கடமைகளை பெற்றோர்களும் பின்பற்றி பிள்ளைகளையும் கட்டாயமாக பின்பற்றச் செய்ய வேண்டும். இஸ்லாத்தின் மார்க்க விஷயங்களை பிள்ளைகளுக்கு போதித்து அதை முறையாக பின்பற்ற செய்யவைப்பது பெற்றோர்களின் மிகப்பெரிய கடமை மார்க்க விஷயங்களைக் கற்று அதைப் பின்பற்றச் செய்வதில் பிள்ளைகளை ஆர்வம் காட்ட வேண்டும். அப்படி வளர்க்கபடும் பிள்ளைகள் பெற்றோர்களுக்காக அவர்கள் இறந்தபின்பும் அவர்களுக்காக துஆ [பிராத்தனை] செய்துகொண்டேயிருக்கும்
ஆகவே மனிதர்களே நீங்கள் உயிரோடு இருக்கும் காலத்தில் உங்களுக்கான நல்லவிசயங்களை செய்துகொள்வதோடு நீங்கள் மரணித்தபின் உங்களுக்காக கூடவருபவைகளையும் தயார்செய்துகொள்ளுங்கள்.
ஆடம்பரம் பகட்டு. கேலிக்கூத்து, புகழ், அந்தஸ்து, செல்வ செழிப்பு, என எல்லாம் இவ்வுலகிலேயே முடிவடைந்துவிடும் எதுவும் உங்களுடன் வரப்போவதில்லை. என்பதை தெளிவாக உணர்ந்துகொள்ளுங்கள்
இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வேடிக்கையும், அலங்காரமுமே தவிர வேறில்லை!
"அந்நாளில் செல்வமும், பிள்ளைகளும் (யாதொரு) பயனுமளிக்க மாட்டா" (அல்-குர்ஆன் 26:88)
கலிமா சொல்லி முஸ்லீமாக இருந்துகொண்டு ஓறிறைக்கொள்கையை ஊன்றிப்பிடித்துள்ளேன் என வாயளவில்மட்டும் சொல்லிக்கொண்டு இருந்தால்மட்டும் போதாது, செயல்களிலும் வரவேண்டும்.
இறைவிசுவாசிகளே! இறைவனுக்கு அஞ்சுங்கள் அவனின் கட்டளைகளுக்கு அஞ்சுங்கள். மறைவானவற்றைகள்தானே என பொடுபோக்குத்தனமாக இருந்துவிட்டு, நாளை மண்ணறையில் கேட்க்கும் கேள்விகளுக்கு பதில்தெரியாமல் கோட்டைவிட்டு விட்டு மறுமையில் நஸ்டவாளர்களில் ஒருவராக ஆகுவதைவிட்டும் தவிர்ந்துகொள்ள முனையுங்கள்.
இவ்வுலக இன்பம், துன்பம், ஆசை,இச்சை, யென அனைத்தும் வழங்கப்பட்ட ஒரு பரிட்சைக்கூடம். ஆகவே இதில் கவனம் அதிகம் வேண்டும். பகுதறியும் தன்மை கொண்டும், படைத்தவனின் உண்மைகொண்டும், உங்களை நீங்களே பரிசோதித்து வெல்ல உங்களுக்கான ஒரு சந்தர்ப்பமே இந்த மண்ணுலக வாழ்க்கை,
அதனால் மனிதர்களே! இறைவனுக்கு அஞ்சி அடிபணியுங்கள். அவன் இட்ட கட்டளைகளை நிறைவேற்றுங்கள். உங்களுக்காக நன்மைகளை நீங்களே தேடிக்கொள்ளுங்கள் மறுமையில் வெற்றியடையுங்கள் சுவர்க்கம் நுழையுங்கள்..
வஸ்ஸலாம்
அன்புடன் மலிக்கா
இறைவா!
உன்னையே வணங்குகிறேன்
உன்னிடமே உதவியும் தேடுகிறேன்

8 comments:
அஸ்ஸலாமு அலைக்கும்.
அன்பின் சகோதரி அவர்களுக்கு.. மண்ணறை வாழ்வைப்பற்றிய உங்கள் கட்டுரை அருமை.
//ஆனபோதும் மனிதன் அலச்சியக்காரனகாவே இருக்கிறான்
மரணம்வருவரை மண்ணுலகத்தின்மீதே பற்றுதல்கொண்டு,//
ஒவ்வொரு மனிதலும் பொடுபோக்குடனே இருக்கிறோம் அப்பப்ப கேள்விபட்டும் இதுபோல் கட்டுரைகள் படிக்கும்போதுமட்டும் மனதில் பயம் ஏற்ப்படுகிறது அச்சம் கொள்கிறது ஆனபோதும் மறுகனம் மறந்து உலகவாழ்க்கையோடு ஒன்றிவிடுகிறோம்..
எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவருக்கும் ஈமானில் உறுதியையும் பற்றையும் தந்தருள்வானாக ஆமீன்
ஜசாக்கல்லஹ் ஹைரைன்..
அஸ்ஸலாமு அலைக்கும் மலிக்கா.
//பூமியின்மீது பெருமையடித்து பகட்டுகாக தன்னை தயாரக்கி அகந்தைகொண்டு நடப்போருக்கு இறைவனின் அச்சம் விட்டுபோகக்கூடும். எனவே பெருமையடித்து திரியாதீர்கள்//
அற்பமானவற்றிற்கு கூட பெருமையடித்து திரிபவர்களை நினைத்தால் பரிதாபப்பட்டு மட்டுமே செல்லமுடிகிறது மல்லி! உதாரணமாக 'ஆங்கிலப் புலமைதான் அறிவின் அடையாளம்' என்று கூறி ஆங்கிலம் தெரியாதவர்களை அல்லது அரைகுறையாக தெரிந்தவர்களை அறிவீனர்களாக சித்தரித்து இன்சல்ட் செய்பவர்கள். இதுபோன்றவர்கள் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளட்டும்!
//இஸ்லாத்தின் மார்க்க விஷயங்களை பிள்ளைகளுக்கு போதித்து அதை முறையாக பின்பற்ற செய்யவைப்பது பெற்றோர்களின் மிகப்பெரிய கடமை//
எத்தனை பேர் இக்கடமையை சரியாக செய்கிறார்கள்?! :((
//கலிமா சொல்லி முஸ்லீமாக இருந்துகொண்டு ஓறிறைக்கொள்கையை ஊன்றிபிடித்துள்ளேன் என வாயளவில்மட்டும் சொல்லிக்கொண்டு இருந்தால்மட்டும்போதாது செயல்களில் வரவேண்டும்//
'முஸ்லிம்' என்று சொல்லிக் கொண்டாலே போதும் என்று சொல்பவர்களுக்கு மண்டையில் கொட்டும் உன்னுடைய இந்த வார்த்தைகள்!
இறையச்சமூட்டும் அருமையான தொகுப்பு, மாஷா அல்லாஹ்!
அஸ்ஸலாமு அலைக்கும்!
சத்தியத்தை அழகாக உபதேசித்து, மறுமையை நினைவூட்டி, இறையச்சத்தை அதிகரிக்கச் செய்கிறது உம் பதிவு...
ஜஸாக்கல்லாஹு கைர்!
மண்ணறை வாழ்வைப்பற்றிய உங்கள் கட்டுரை அருமை.. மாஷா அல்லாஹ்
சலாம்! சிறந்த அறிவுரை!
இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக
மாஷா அல்லாஹ் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் அருமையான பதிவு. அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி வழங்குவானாக சகோ
இன்றைய என் பதிவைப் படிக்க அழைக்கிறேன். நன்றி.
வணக்கம்!
அல்லா அளித்த அமுத மொழிகளை
எல்லோரும் ஏற்போம் இனிது
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
Post a Comment
கருத்துக்களை பகிர்ந்துகொள்ளும்போது நிறைகுறைகளை சரிபார்க்கலாம். பகிந்துகொள்ளுங்களேன் கருத்துக்களை
நானும் என்னை சரிசெய்து கொள்கிறேன் .
பிடிதிருந்தால் ஓட்டும் போடுங்கள்