மல்லியின் காதலுடன்..
-
என்றும் என் நினைவில் நீ
💕🌷💕🌷💕🌷💕🌷💕🌷💕
என்ன செய்தாய் என்னை -நான்
எப்படித் தொலைந்தேன் உன்னில்
கடக்கும் நிமிடம் யாவும்-என்
கண்ணுக்குள் காட்சியானாய் ...
Showing posts with label இறுதிக்கடமை. ஹஜ்.குர்பான்.. Show all posts
Showing posts with label இறுதிக்கடமை. ஹஜ்.குர்பான்.. Show all posts
இறுதிக்கடமையும். குர்பானியும்..
Posted by அன்புடன் மலிக்கா | 8:37 PM | 14 commentsLabels: இறுதிக்கடமை. ஹஜ்.குர்பான்.
بسم الله الرحمن الرحيم
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
இறைவனின் திருப்பெயரால்..
ஐந்து கடமைகளில் இறுதிகடமையாக ஹஜ் செய்வதை இறைவன் ஏற்படுத்தியுள்ளான். வசதியுள்ளோர்களின்மீது கட்டாயக்கடமை. வசதியில்லாவர்களை வசதியுள்ளோர்கள் அனுப்பிவைக்கலாம். அதற்கான கூலியை இறைவனிடத்தில் பெறலாம்.
இஸ்லாத்தில் வணக்கங்களை பொருத்த வரையில் சக்தி இருந்தால் மட்டுமே கடமைகளை செய்ய வேண்டும். சக்தி இல்லாத போது அந்த கடமைகளை செய்ய வேண்டிய அவசியமில்லை. அல்லாஹ் எந்த ஆத்மாவையும் அதன் சக்திக்கு மீறி சோதிக்கவும்மாட்டான். அவர்களின்மீது சுமைகளை சுமத்தவும் மாட்டான்.
இறைவன் எவ்வித தேவையுமற்றவன். மனிதகுலத்திற்கு அவன் செய்யும் அத்தனையும் நன்மைக்கே என விளங்குவோர்க்கு நற்கூலியுண்டு.
இறைவன் தனது திருமறையில் கூறுகிறான்.
அதில் தெளிவான சான்றுகளும் மகாமே இப்ராஹீமும் உள்ளன. அதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார். அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை. யாரேனும் (ஏக இறைவனை) மறுத்தால் அல்லாஹ் அகிலத்தாரை விட்டும் தேவையற்றவன். 3 : 97
இறைவனின் பொருத்தைநாடி, அவனின் அருளைவேண்டி, ஹஜ்ஜின் கடமைகளையும் நிறைவேற்றுவது முஃமீன்களின் மிகச்சிறப்பான
வணக்கவழிபாடாகும்.
இறைவன் நம் அனைவருக்கும் அந்த பாக்கியத்தை நிறைவேற்ற உறுதியான ஈமானையும். உடலாரோக்கியத்தையும், மனவலிமையையும். வசதியையும். தந்தருள்வானாக! ஆமீன்.ஆமீன் யாரப்பல் ஆலமீன்.
குர்பானி கொடுப்பதின் விளக்கம்.
நான் படித்தவைகள் அனைவரும் அறிய பதிந்திருக்கிறேன்..
அல்லாஹுத்தஆலாவின் நெருக்கத்தை பெருவதற்காக நபி இப்ராஹீம்(அலை) அவர்கள் காட்டிய வழிமுறையில் கால்நடைகளில் (ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றில்) ஏதாவது ஒன்றை அறுத்து பலியிடுவதற்கு குர்பானி என்று கூறப்படும்.
இறைவன் நபி இப்ராஹீம்(அலை) அவர்களை சோதிக்க நாடி, அவர்களது பாச மகன் இஸ்மாயீல்(அலை) அவர்களை அறுத்து தியாகம் செய்ய கட்டளையிட்டான். இறைவனின் கட்டளைக்குக் கட்டுப்பட்ட அவ்விருவரைப் பற்றி தனது திருமறைக் குர்ஆனில் ……
“என்னருமை மகனே! நிச்சயமாக நான் உன்னை அறுத்துப் பலியிடுவதாய் மெய்யாகவே கனவில் கண்டேன்; ஆகையால் நீ என்ன கருதுகிறாய்? என்று சிந்திப்பாயாக!” என்று கூறினார். (அதற்கு) ”என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடி செய்யுங்கள். இன்ஷாஅல்லாஹ் பொறுமையாளர்களில் உள்ளவனாக என்னை நீங்கள் காண்பீர்கள்” என்று அவர் கூறினார். (37;102)
இருவரின் துணிவையும் ஏற்றுக்கொண்ட இறைவன், இஸ்மாயீல்(அலை) அவர்களுக்குப் பகரமாக ஒரு ஆட்டை பலியிடச் செய்தான்.
வலுப்பமான ஓர் ஆட்டை (பலியிடப்படவிருந்த) அவருக்குப் பகரமாக்கிக் கொடுத்தோம். (37;107)
குர்பானி ஓர் கடமை:
ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு முதல் நபி(ஸல்) அவர்களின் உம்மத்தாகிய நமக்கு ‘குர்பானி’ கடமையாக்கப்பட்டது.
அல்லாஹ் தன் அருள்மறை குர்ஆனில்………
ஆகவே, உம்முடைய ரப்பை தொழுது, (அவனுக்காக) குர்பானி கொடுப்பீராக! (108;02) என்று கட்டளையிட்டுள்ளான்.
மேலும், நபி(ஸல்) அவர்கள், கருப்பு நிறம் கலந்த கொம்புள்ள இரண்டு வெள்ளை ஆடுகளை தங்களது திருக்கரத்தால் அருத்துப் பலியிட்டார்கள். முதல் ஆட்டை அறுத்த போது, அல்லாஹ்வே! இது முஹம்மதாகிய எனக்கும், என் குடும்பத்தாருக்காகவும் என்றார்கள். பின்பு இரண்டாவதை அறுத்தபோது, இது எனது உம்மத்(சமுதாயத்திற்)காக என்று துஆச் செய்தார்கள்.
குர்பானி கொடுக்கத் தகுதியானவை:
ஒவ்வொரு சமுதாயத்தினருக்கும் (ஆடு,மாடு,ஒட்டகம் போன்ற) கால்நடைப்பிராணிகளிலிருந்து அவர்களுக்கு அவன் உணவாக கொடுத்தவற்றின் மீது (அவற்றை அறுக்கும்போது) அல்லாஹ்வின் திருப்பெயரை அவர்கள் கூறுவதற்காக, குர்பானியை நாம் ஏற்படுத்தினோம். (22;34)
மாடு, ஒட்டகம் ஆகியவற்றில் ஏழு நபர்கள் கூட்டு சேர்ந்து கொடுக்கலாம். ”ஆடு” தனி நபராக கொடுக்க வேண்டும்.
ஒட்டகம் ஐந்து வயது பூர்த்தியடைந்ததாகவும், ஆடு, மாடு இரண்டு வயது பூர்த்தியடைந்ததாகவும் இருக்க வேண்டும்.
குர்பானி கொடுக்கும் நேரம்:
துல்ஹஜ் பிறை-10 (ஹஜ்ஜுப் பெருநாள் அன்று) சூரியன் உதயமாகி பெருநாள் தொழுகையை நிறைவேற்றிய பின்னாலிருந்து …, பிறை – 13 வரை நான்கு நாட்கள் கொடுக்கலாம்.
பெருநாள் தொழுகைக்கு முன்பு குர்பானி கொடுக்கக் கூடாது. ஏனென்றால் அல்லாஹ் குர்ஆனில் ……..
“ஆகவே, உம்முடைய ரப்பை தொழுது, (அவனுக்காக) குர்பானி கொடுப்பீராக” (108;02)
”நிச்சயமாக என்னுடைய தொழுகையும், என்னுடைய அறுப்பு(குர்பானியு)ம், என் வாழ்வும், என் மரணமும் அகிலத்தின் இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே உரித்தானவையாகும்”, என்று (நபியே!) நீர் கூறுவீராக! (6;162)
என்று முதலில் தொழுகையையும், அடுத்ததாக குர்பானியையும் குறிப்பிட்டுள்ளான்.
பராஉ இப்னு ஆஜிப்(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் அன்று தொழுகைக்குப்பின் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். (அதில்) “யார் நமது தொழுகையைத் தொழுது, (அதன் பின்) நாம் குர்பானி கொடுப்பது போன்று கொடுக்கிறாரோ அவரே உண்மையில் குர்பானி கொடுத்தவராவார். யார் தொழுகைக்கு முன்பே அறுத்து விடுகிறாரோ அவர் தொழுகைக்கு முன் (தனக்காக) அறுத்தவராவார். குர்பானி கொடுத்தவராக மாட்டார்” என்று கூறினார்கள். (புகாரி)
குர்பானி கொடுப்பவர் பின்பற்ற வேண்டியவை:
குர்பானி கொடுக்க நாடி விட்டால், துல்ஹஜ் பிறை பிறந்தது முதல் குர்பானியை நிறைவேற்றும் வரை, நகம் வெட்டுவதையும் முடிகளை நீக்குவதையும் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
நபி(ஸல்) அவர்கள் கூறியதாக உம்மு ஸலமா(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: உங்களில் ஒருவர் குர்பானி கொடுக்க நாடினால் துல்ஹஜ் பிறை பிறந்தது முதல் அதை (குர்பானியை) நிறைவேற்றும் வரை தனது முடி, நகம் ஆகியவற்றை களைவதை தவிர்த்துக் கொள்ளட்டும். (முஸ்லிம்)
குர்பானி கொடுக்கும் வரை எதுவும் சாப்பிடாமல் இருந்து குர்பானி இறைச்சியை முதல் உணவாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.
நபி(ஸல்) அவர்கள் (ஹஜ்ஜுப் பெருநாள்) தொழுகையிலிருந்து திரும்பும் வரை உண்ணமாட்டார்கள். பின்னர், குர்பானி இறைச்சியை உண்பார்கள். (ஜாதுல் மஆது)
குர்பானியின் நோக்கம்:
[குர்பானி பிராணிகளாகிய] அவற்றின் மாமிசங்களோ, அவற்றின் இரத்தங்களோ ஒருக்காலும் அல்லாஹ்வை அடைவதில்லை; என்றாலும், உங்களிலுள்ள தக்வா (பயபக்தி) தான் அவனை அடையும். (22;37)
எங்கள் இறைவனே! எங்களின் பாவங்களை பிழைபொருந்து,
எங்களுக்கு இவ்வுலக வாழ்க்கையில் பரிபூரண
ஈமானோடு ஐந்து கடமைகளையும் நிறைவேற்றும் வலிமையைத் தந்தருள்வாயாக!
ஈருலகிலும் எங்களை நேரான வழியில் நடத்திசெல்வாயாக!
நரகநெருப்பிலிருந்து பாதுகாத்து சுவனத்தின் சோலைகளில் நிரந்த இடங்களைத்தந்து பாதுகாப்பாயாக!
இறைவா!
உன்னையே வணங்குகிறேன்
உன்னிடமே உதவியும் தேடுகிறேன்.
அன்புடன் மலிக்கா
Subscribe to:
Posts (Atom)
வேண்டுகோள்..
இங்கே பதியப்படும் அனைத்தும், நான் என்னை தெளிவுப்படுத்திக்கொள்ளவும். ஈருலக வாழ்க்கையையும் அறிந்துக்கொள்ளவும். தொடங்கியுள்ள பயணம். அதில் தாங்களும் தெரிந்துகொள்வதில் பெருமிதம்.
ஆனால் இதை தவறானமுறையில் விளங்கிக்கொண்டு வீணான விவாதங்களோ தர்க்கங்களான கருத்துக்களாகவோ அமைத்துவிட வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்..