மறந்தமைக்கு மன்னிப்பாயா
-
உன்னைவிட்டுப் பிரிந்துவிட்டேன் மன்னித்துக்கொள்ளடி
நீதான் எனது முதல்தோழி
நீதான் என் முதல் கனவு
என்னை நான் உன்னிடமிருந்துதான் தெரிந்துகொண்டேன்
உன்னால்தான் என...
ஒற்றுமையோடு செயல்படுங்கள்...
Posted by அன்புடன் மலிக்கா | 9:54 PM |Labels: ஒற்றுமை. நல்லிணக்கம்.
بسم الله الرحمن الرحيم
அளவற்ற அருளாளனனும். நிகரற்ற அன்புடையோனுமாகிய இறைவனின் திருநாமத்தால் ஆரம்பம் செய்கிறேன்
.அன்புள்ள நல்லடியார்களே!
10. நம்பிக்கைகொண்டோர்[அனைவரும்] சகோதரர்கள் தாம். எனவே சகோதரர்களுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள். அருள் செய்யப்படுவீர்கள்.
அல்குர்ஆன் அல்ஹுஹ்ராத் பாகம்:26
ஒற்றுமையின் கயிற்றை பலமாக பற்றிப் பிடித்துக்கொள்ளுங்கள்
நாம் செய்யும் செயல்கள் யாவற்றையும் நம்பிடறி நரம்புக்கும் மிக அருகாமையிலிருந்து நன்கறிபவனும், மனங்களில் ஒளிந்துள்ளதையும் மிக நுண்ணியமாக அறியக்கூடியவனும் இறைவன் ஒருவனே
நாளை அவனிடமே நம்முடை மீளுதல் உள்ளது.
இதை மறந்த மனிதர்கள் ஒருவருக்கொருவர் சாடிக்கொள்வதும், சண்டையிட்டுக்கொள்வதும், குற்றங்கள் சுமத்திக்கொள்வதும்,அதுவும் பொதுயிடங்களில் நம்மைபற்றி நாமே தரைகுறைவாய் வார்த்தைகளை வாதங்கள் என்றபெயரில் வரைமுறையற்று நடந்துகொள்வதும், இஸ்லாத்தில் இல்லாத ஒரு செயலாகும். அச்செயல்களை அனைத்தையும் தவறானவைகளென அறிந்துகொண்டே இதுபோன்ற காரியங்களில் ஈடுபடுவதுதான் வருத்தமாக உள்ளது.
சாதரண மக்கள் இஸ்லாத்தின் சட்டதிட்டங்களை அறியும் முன்பே அதன் சாராம்சமான இஸ்லாமியனைப் பார்த்துதான் மற்ற சமுதாயதவர்கள் இஸ்லாத்தின்பேரில் நம்பிக்கை வைப்பதும், அவநம்பிக்கை வைப்பதும் என தெரிந்திருந்தும் இதுபோன்றவர்களின் செயல்களால் இஸ்லாத்தின்பால் ஓர் அச்சத்தை ஏற்படுதிவிடுமோ என்ற ஆதங்கம்தான் இப்பதிவையே எழுததூண்டியது.
சொல்லலாம் இஸ்லாமியனைகண்டு இஸ்லாமல்ல என்பது உண்மைதான். ஆனால் உண்மையான இஸ்லாமியரைக் கொண்டுதான் இம்மார்க்கமே உருவானதும் பூர்த்தியானதும். இம்மார்க்கத்தின் ஆணிவேரே ஓரிறைக்கொள்கை அதை ஒற்றுமையோடு ஓரினமாக பற்றிபிடித்து காப்பது என்பதுதானே சிறந்தது
அந்த ஓர் இறைவனின் வாக்குகளை மீறி நடப்பது எவ்விதத்தில் சரி. மனித மனங்களுக்குள், அவர்களின் கோட்பாட்களுக்குள், வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் இறைவன் என வரும்போதும் மார்க்கமென வரும்போதும் அவனின் சொல்படி நடக்கவேண்டும் என்று ஏன் நினைப்பதில்லை. ஒற்றுமையுடன் அல்லவா செயல்படவேண்டும். ஒன்றுபட்டால்தானே உண்டு வாழ்வு..
மற்ற சமுதாயம் இதைபார்த்து போற்றும்படியாக நடக்கவேண்டுமே தவிர இவர்களுக்குள்ளேயே ஒற்றுமையில்லையே என்ற எண்ணைத்தை உருவாக்குவது சரியா? ஒருகுடும்பத்துக்குள் நடக்கும் பிரச்சனை வீதிக்கு வருமானால் அது எவ்வளவு பெரிய விளைவுகளை ஏற்படுத்துமோ அதைவிட பலமடங்கு..தன்னுயிரான சன்மார்க்கத்துகுள் தன்இனத்தைச் சார்ந்த சகோதரர்களுக்குள் வாதமென்ற பெயரில் அடுத்தவர்களின் கேளிக்கும் கிண்டலுக்கும் ஆளாவதுதான் வேதனையளிக்கிறது
இஸ்லாமார்க்கத்தில் சாதிமத பேதமில்லை இனவெறி, நிறவெறியில்லை அனைவரும் இறைவன்முன் சமம். லாயிலாஹ இல்லல்லாஹ் முகம்மதுர் ரசூலில்லாஹ். வணக்கத்துக்குறியவன் இறைவன் ஒருவனை தவிர யாருமில்லை . முகமது நபி இறைவனின் திருத்தூதர். ஆக இறைவேதத்தின்படியும் இறைத்தூதர் அவர்களில் சொல்படியும் உலகிலுள்ள அனைவருக்காகவும் அனைவரின் நல்வழிக்காவும் அதனை பின்பற்றி நடக்க சொல்லியிருக்கிறார்கள். அதனைவிடுத்து ஆளாளுக்கு நான் சொல்வதுசரி நீ சொல்வதுசரியென வாக்குவாதம் செய்து ஒரேகொள்கையில் பலபிரிவுகளாக பிறர் சிரிக்கும்படி நடப்பது சிறந்த்தாகுமா!
மனிதன் என்பவன் தவறிழைக்கக்கூடியவன். அப்படிதான் படைக்கப்பட்டுள்ளான். யாரும் தவறாமல் இருந்ததேயில்லை ஏதோ ஒருவகைகளில்.தவறின்பக்கம் போகக்கூடும்.அது தவறென்று உணர்ந்து அதைதிருத்தி திருந்திவாழ நினைக்கும் மனிதன் மனிதனில் சிறந்தவனாகிறான்.
மார்க்க விசயத்திலும் சரி. மனவேறுபாடு விசயங்களிலும் சரி, ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து, அனைவரும் அமர்ந்துபேசி நல்லிணக்கத்திற்கு வழிவகுப்பதே மிகசிறந்த மார்க்கவழியாக நமக்கு சொல்லிதரப்படிருக்கிறது அதன்படி நாம் அனைவரும் நடக்கவேண்டும்
எல்லாம் வல்ல இறைவன்முன் நாம் நிலைதடுமாறி நின்றுவிடாமலும், அவன் சொல்லை மறுதவர்களாக ஆகிவிடாமலும், இறைவாக்கை மீறி எவ்விதத்திலும் குற்றமிழைத்த பாவியாகிவிடாமலும், நன்மையின்பக்கம் நம்முகங்களும் மனங்களும். சாய்ந்தைவையாகவும், இம்மையிலும் மறுமையிலும் நற்பாக்கியங்களை பெற்றவர்களாக ஒற்றுமையென்னும் பலத்தை பலமாக பற்றிப்பிடித்தபடியே. இறைவனின் சொல்படி நடந்து சுவர்கத்தில் நுழைய ஏக இறைவன் நமக்கு நல்லருள் புரிவானாக.
நான் அதிகம் அறிந்தவளில்லை என்றபோதிலும். இறைவனால் எனக்கு தரப்பட்ட அறிவால் விளங்கியவகையில் இதை எழுதியுள்ளேன். இதில் பிழைகளில் இருப்பின் இறைவனுக்காக பொருந்திக்கொள்ளுங்கள்..
இறைவா!
உன்னையே வணங்குகிறேன்
உன்னிடமே உதவியும் தேடுகிறேன்..
Subscribe to:
Post Comments (Atom)
வேண்டுகோள்..
இங்கே பதியப்படும் அனைத்தும், நான் என்னை தெளிவுப்படுத்திக்கொள்ளவும். ஈருலக வாழ்க்கையையும் அறிந்துக்கொள்ளவும். தொடங்கியுள்ள பயணம். அதில் தாங்களும் தெரிந்துகொள்வதில் பெருமிதம்.
ஆனால் இதை தவறானமுறையில் விளங்கிக்கொண்டு வீணான விவாதங்களோ தர்க்கங்களான கருத்துக்களாகவோ அமைத்துவிட வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்..
11 comments:
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி...
இந்த பதிவை எழுத தூண்டிய காரணம் சரியானதே.
இக்கால சூழ்நிலையில் மிக்க அவசியமான பதிவு.
///அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடித்துக் கொள்ளுங்கள்! பிரிந்து விடாதீர்கள். நீங்கள் பகைவர்களாக இருந்த நிலையில் அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருளை எண்ணிப் பாருங்கள்! அவன் உங்கள் உள்ளங்களுக்கிடையே இணைப்பை ஏற்படுத்தினான். எனவே, அவனது அருளால் சகோதரர்களாகி விட்டீர்கள்! நரகத்தின் விளிம்பில் இருந்தீர்கள். அதிலிருந்து உங்களைக் காப்பாற்றினான். நீங்கள் நேர்வழி பெறுவதற்காக இவ்வாறே அல்லாஹ் தனது சான்றுகளை தெளிவுபடுத்துகிறான். (அல்குர்ஆன்: 3: 103)///
வேற்றுமையில் ஒற்றுமை காண்பது இந்திய ஒற்றுமை.
'ஒற்றுமையில்' ஒற்றுமை காண்பது இஸ்லாமிய ஒற்றுமை.
'ஒற்றுமையில்' = குர்ஆன் & ஹதீஸ்.
ஒற்றுமை என்பது குர்ஆனையும் நபிவழியையும் உறுதியாக பிடித்து அதனை பின்பற்றுவதால் தான் ஏற்படும் என்பதை விளங்கி, குர்ஆனையும் நபிவழியையும் பின்பற்றக்கூடிய சமுதாயமாக நம்மை எல்லாம் வல்ல அல்லாஹ் ஆக்கி வைப்பானாக!
தற்போதக்கு மிகுந்த அவசியமான பதிவு சகோதரி.
சகோதரத்துவத்துள்ளேயே ஒற்றுமையில்லையின்ன எப்படி.
அழகிய முறையில் எடுதுக்கூறிய தாங்களுக்கு இறைவன் அருள்புரிஆனாக. இதை உணந்து நடக்க அனைவருக்கும் தவ்பீக் செய்வானாக.
சகோதரியின் இந்த பதிவு நிறைய பேர்களுக்கு சென்றடையவேண்டும்.
இதையுணரும் சகோதரர்கள் தெளிவு பெருவார்கள்.
இஸ்லாதின்மீது எனக்கு இருக்கும் நம்பிக்கைதான் இதையும் எழுததூண்டியது
நட்புடன்
ராஜாராம்
தேவையான நேரத்தில தேவையான பதிவு ...!! ஜஸாகல்லாஹ் க்கைர்
”நமது சமுதாயம் சீரழியக்காரணம் யார்/” இப்படி ஒரு தலைப்பை எந்த ஒரு இயக்கத்தினர் சமுதாயத்தை கூறு போட்டார்களோ-கீறி போட்டார்களோ அவர்கள் வைத்த கட்டுரைப் போட்டியின் தலைப்பு!?). நான் அந்த தலைப்பை தெரிவு செய்து அக்கட்டுரைப் போட்டியில் கலந்து கொண்டு எழுதினேன்: எனது கட்டுரையின் உட்கருத்து இதுதான்: “ego" என்னும் மனோயிச்சை தான் சமுதாய ஒற்றுமை குலைவுக்கு காரணம் என்று ஆழமாக- அழுத்தமாக அக்கட்டுரையில் வடித்தேன்; ஆனால் போட்டி விதிகளின்படி இருக்கவேண்டிய 5 பக்கத்திற்கும் மேல் இருந்தமையால் எனது கட்டுரை முதலிடம் பெறாவிட்டாலும் எனது கருத்துக்கள் உரியவர்களின் மனதை- மன்சாட்சியை எட்டியிருக்கும். அக்கட்டுரையினை இங்கு பதிவு செய்யலாமா? அன்புத் தங்கையே, உனது தனிமடலுக்கு அனுப்புகின்றேன். படித்து விட்டு பதிவு செய்ய இயலுமானால் பதிவு செய் இவ்விட்த்தில் ; இல்லை என்றால் பரவாயில்லை.
மிகவும் அவசியமான பதிவு. சத்திய இஸ்லாத்தை எடுத்துரைக்கும் சகோதரர்களே இன்று பிரிந்து கிடப்பது வருத்தம் தருகிறது. சகோதரர் முஹம்மத் ஆஷிக் அவர்கள் சொன்னதுபோல், "ஒற்றுமையில் ஒற்றுமை" கண்டால் நமக்குள் சண்டைகளே இருக்காது.
மிக மிக அவசியமான பதிவு சகோதரி.
ஒற்றுமை குழைவதால் ஏற்படும் பிரச்சனைகளை யாரும் கண்டுகொள்வதில்லை அவரவர்களுக்கு அவரவர்களின் காரியம் நடக்கவேண்டும்.
இறைவனின் பயமிருந்தால் இப்படி செய்யமாட்டார்கள்.
தாங்களின் உபதேசம் மிகவும் அருமையானது இறைவன் சொன்னபடி எடுத்துச்சொல் அது உன்கடமை. கேட்பதும் கேட்காததும் அவரவர்களின் விருப்பம். உன்செய்கையில் நீ சரியாக இரு எபதற்க்கு தகுந்தார்போல் இப்பதி அமைந்துள்ளது மாசாஅல்லாஜ் இறைவனின் கருணை உங்கள் மீது பொழியட்டும்..
இன்னும் தொடர்ந்து நல்ல விசயங்களை எதிர்பாக்கிறோம்
அன்புடன் அண்ணன்
ஹாஜாக்கனி.
மிக அருமையான பதிவு. ஒற்றுமைதானே மிக முக்கியம். அதுயிருந்தால் அனைத்தையும் சாதிக்கலாம். நல்ல கருதுக்கள் மல்லி.
கருத்துக்களை பகிர்ந்துகொண்ட அனைத்து நல்லுள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் பல பல.
உலகிலுள்ள அனைவரும் ஒற்றுமையில் பலமாக ஆக்க எல்லாம் வல்ல இறைபன் அருள்புரிவானாக.
கலாம் காக்கா இக்கருத்துக்களின் வாயிலாகவே தாங்களின் கருத்துக்களையும் பதியலாம்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
அருமையான பதிவு.,
தனக்கு நன்மைப்பயக்கும் அனைத்து செய்கைகளும் தனது உள்ளத்தாலும், செயல்களாலும் பிறிதொரு மனிதனுக்கும் வழங்கப்பட வேண்டும் என்ற உயர்ந்த சிந்தனையே உலகிற்கு தந்த அந்த மாநபி வழிவந்தவர்களாகிய -நாம் இன்று இருக்கும் நிலை சற்று கவலைக்குறியதாய் தான் இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. இறையும்,மறையும் ஒன்றென ஏற்றுக்கொண்ட நாம் உலகளாவிய "ஒற்றுமையென்னும் ஆணிவேர் நமக்குள் ஆழமாய் உன்றிருந்தப்போதிலும் தம்மில் வளர்ந்த தன்னலம் என்ற விழுதுகள் நம்மை பல்வேறாய் வி(பி)ரிந்து கிடக்கச்செய்கிறது.பாலஸ்தீனிலும்,ஆப்கானிலும் நம் சகோதரர்கள் படும்பாட்டை உரக்கச்சொல்லக்கூட திரானியற்று தம் உமிழ் நீரை உறிஞ்சுவோர் நம்மில் பலர்.அதனிலும் அவர்கள் நிலைக்கூற முன் செல்வோர் கூட தாம் சார்ந்த இயக்கத்தை முன்னிருத்தி சொல்ல முனைவதுதான் வேதனையளிக்கக்கூடியதாக இருக்கிறது. இன்று யாரும் உலகளாவிய சகோதரத்துவத்திற்கு முக்கியத்துவம் தரும் வகையில் ஒற்றுமைக் குறித்து ஓராயிரம் முறை எழுதினாலும், பேசினாலும் உள்ளூர் நிலையென வரும்போது ஒரு சார்புக்கொள்கை பக்கமாக பேச தலைப்படுவது தான் வருத்தப்படக்கூடிய விசயம்!
அறியாமை மற்றும் தன்னலம் போன்ற அடிப்படையே மையமாக வைத்து ஒருவர் செயல்படும்போதுதான் இது போன்ற ஒருதலைப்பட்ச செயல்பாடுகள் உருவாக்கத்திற்கு காரணம். இதை மிகப்பெரிய ஆயுதமாக கொண்டு இன்று உலகளாவிய இஸ்லாமிய ஒற்றுமையே சீர்குலைக்க யுத நஸ்ரானிய சக்திகள் முயல்கின்றன என்பதை விட அதில் வெற்றியும் பெற்றிருக்கின்றன என்பதே இங்கு சரி!அத்தகையே சீர்குலைப்பு முயற்சிக்கு நாம் பலியாகிட அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுவதை நாம் அன்றாடம் கண்டும் கேட்டும் வருகிறோம்.எனவே அப்பெரும் முயற்சியே முறியடிக்க வான் மறை கூறும் வழியிலும்,நன்னபிகளாரின் வாழ்வின் நிழலிலும் நம் வாழ்கையே அமைத்துக்கொண்டால் மட்டுமே சாத்தியம்! அத்தகையே உலக ஒற்றுமையே நம் உயிருடன் உணர்வாய் கலக்க எல்லாம் அறிந்த நாயன் அருள்பாலிப்பானாக!
ஒற்றுமையின் இலக்கணமாக நாம் இல்லாவிட்டாலும் உலகளாகவிய ஒற்றுமை நமது இலக்காக இருக்கட்டும். "
நிச்சயமாக முஃமின்கள் (யாவரும்) சகோரர்களே ஆகவே, உங்கள் இரு சகோதரர்களுக்கிடையில் நீங்கள் சமாதானம் உண்டாக்குங்கள்; இன்னும் உங்கள் மீது கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சங்கள்.(49:10)
மிகச்சரியான பகிர்வு மலிக்கா, மூமூனானா ஆண் பெண் கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க ஆண்டவன் கிருபை புரிவானாகவும்.
(அதிகம் அறிந்தவள் இல்லை, வீனாக நேரத்தை வீனாக்க்க்காமல் இது போல் பதிவு போட்டு எல்லார் மத்தியிலும் இப்படி ஒரு விழிப்புணர்வு கொண்டு வருவது சாதாரண விஷியம் இல்லை அருமை சகோதரி மலிக்கா, எல்லா பிழைகளையும் பொருப்ப்பவன் அல்லா,தொடர்ந்து எழுதுங்கள்.முடிந்த போது வருகிறேன்)
Post a Comment
கருத்துக்களை பகிர்ந்துகொள்ளும்போது நிறைகுறைகளை சரிபார்க்கலாம். பகிந்துகொள்ளுங்களேன் கருத்துக்களை
நானும் என்னை சரிசெய்து கொள்கிறேன் .
பிடிதிருந்தால் ஓட்டும் போடுங்கள்