.

வருகை புரியும் அனைவர்மீதும் இறைவனின் அருளும் சாந்தியும் அளவில்லாமல் கிடைக்கட்டும் Photobucket

எதில் நுழைக்கப் போகிறீர்கள்?

| |

بسم الله الرحمن الرحيم

எதில் நுழைய விரும்புவோம். சொர்க்கத்திலா? நரகத்திலா? நாம் மட்டும் நுழைந்தால் போதுமா? நமது குழந்தைகள் நுழைய வேண்டாமா? அவர்கள் எதில் நுழைக்க விரும்புவோம். நன்மையின் பக்கமா? தீமைகளின் பக்கமா? சொர்கத்திலா? நரகத்திலா? கேள்விகள் நிறைய கேட்கலாம் ஆனால் பதில்கள்?


ஒரு குழந்தை நல்லது ஆவதும் கெட்டது ஆவதும் அதன் வளர்ப்பை பொருத்தது என பெரியோர்கள் சொல்வார்கள் அது எந்தளவிற்க்கு  உண்மையென்று வளர்த்து பார்த்தால்தானே தெரியும். வளரும் பிள்ளைக்களுக்கு எது நல்லது எது கெட்டது என எடுத்துசொல்லி அதனை நல்லதின் பக்கம் அழைத்து செல்வது பெற்றோர்களின் கட்டாயக்கடமை.  சரி பீடிகையெல்லாம் வேண்டாம் நேராக விசயத்திற்க்கு வருகிறேன்..

தற்போதெல்லாம் கல்வி காசாகிவிட்டது இது நான் சொல்லி தெரியவேண்டியதில்லை உலகே அறிந்தது. தரமான கல்வி வேண்டுமா? தராசில் நிறுத்துக்கொண்டுங்கள் காசை. ஆங்காங்கே முளைத்துவிட்டது பணம் பறிக்கும் பள்ளிக்கூடங்கள். அது அவர்கள் தவறில்லை எங்கு எதனைக் கண்டாலும் அதனை தேடியோடுவோர்களின் தவறு.
ஒரு குழந்தைக்கு கல்வி என்பது மிக மிக அவசியம் அதனை நெறிய முறையில் பயில்விக்கவேண்டியதும். கற்பித்துக்கொடுக்கவேண்டியதும் மிகவும் அவசியம். அதுவும் தற்காலத்தில் கல்விகற்கப்போகுமிடங்களில் சூழலைபொருத்தே குழந்தைகளின் மனவளர்ச்சியும் செயல்பாடுகளும் வளர்கிறது.

முன்பெல்லாம் காலை எழுந்தவுடன் முகங்கழுவி தேநீர் அருந்தியவுடன் பள்ளிக்கு ஓத அனுப்புவார்கள் பின் பள்ளிக்கூடம் முடிந்து மாலை வந்ததும் மீண்டும் பள்ளிக்கு ஓத அனுப்பி குர் ஆனை கற்றுக்கொள்ளவும் மார்க்கவிசயங்களை கொஞ்சமேனும் தெரிந்துகொள்ளவும் செய்வார்கள் ஆனால் தற்காலத்தில் அப்படியா? எழுந்ததிலிருந்து உறங்கும்வரை உலக கல்வியோடு போராட வைப்பதிலும். உலகவிசயங்களை கற்றுக்கொள்ள செய்வதற்க்குமே அவர்களை பாடாய் படுத்துகிறோம் பின்பு எங்கே மார்க்கத்தை பற்றியும் அதன் செயல்பாடுகளைபற்றியும் அறிந்துகொள்ள்போகிறார்கள். அப்படியே அறிந்தாலும் அதனை அரைகுறையாக அறிந்துகொண்டு வீண்விவாதங்களை ஏற்படுத்துவதும். வீணான குழப்பங்களை உருவாக்குவதிலுமே முனைகிறார்கள். சரி இதற்க்கு தீர்வுதான் என்ன?
என்ன எல்லாம் நம்மிடத்தில்தான் இருக்கிறது.  எப்படி? குழந்தை பிறந்ததும் எப்படியெல்லாம் வளர்க்கவேண்டுமெனவும் எப்படியெல்லாம் ஆடை அணிவித்து அழகு பார்க்கவேண்டும் எப்படியெல்லாம் அதன் செயல்பாடுகள் இருக்க வேண்டும் வளர்ந்து ஆளானதும் இப்படிதான் இருக்கவேண்டுமெனவும் கற்பனைகளை கலந்து ஏதோதோ நினைக்கும் நாம் இவ்வுலக வாழ்க்கைக்கு மட்டுமே நம் குழந்தைகளை தயாராக்குகிறோமே என்ற குற்ற உணர்வை ஒருபோதும் நாம் உணர்வதேயில்லை. 

தரமான கல்விக்காக எங்கு கொண்டேனும் சேர்க்க விரும்புகிறோம். கொஞ்சகாலமெ நம்மிடம் இருக்கும் குழந்தைகளைக்கூட எல்லாம் எல்லாரும் இருந்தும் இதே படிப்புக்காக விட்டுபிரிந்து அனாதையாக நாமும் மாறி பிஞ்சுகளையும் அனாதையாக்கிவிடுகிறோம். ஆனால் இதே நிலையை மார்க்க கல்விக்காக செய்வோமா என்றால் ? தான். அதிலும் சிலர் மார்கத்திற்காக மறுமைகாக தனது வாழ்நாட்களை தனது குழந்தைகளை தயார் செய்யும் பெற்றோர்களாகவும் இருக்கத்தான்  செய்கிறார்கள். 

மார்க்கம் மட்டும்போதுமா உலக்கல்வி வேண்டாமா? இல்லை அப்படியில்லை உலக கல்வியோடு மார்க்கல்வியும் அவசியம் ஏனெனில் நமது சமூகத்திற்க்கு இம்மை மட்டுமல்ல வாழ்க்கை மறுமையிலும் உண்டு ஆக அதனை நோக்கியும் செயல்படவேண்டும். இரண்டு கல்வியும் கிடைக்குமிடமாக தேடி தனது பிள்ளைகளை சேர்த்திடுங்கள். அவர்களுக்கு நல்லதொரு எதிர்காலத்தையும் நல்லதொரு மனவளர்ச்சியையும் கொடுத்திடுங்கள்.விதைக்கும்போதே சரியாக விதைத்து அதனை சரிவர பராமரித்தால்தான் நல் விளைச்சலை பெறமுடியும். அதைவிடுத்து ஏதோ எல்லோரும் விதைக்கிறார்கள் நாமும் விதைப்போம் எனவிதைத்து வருவதை அறுவடை செய்வோமென நினைத்தால் நஷ்டமே மிஞ்சும். மிஞ்சும் நஷ்டம் நமக்குமட்டுமல்ல நாளை நமது குழந்தைகளுக்கும்தான்.

நாளை என்றால் அது மறுமை அங்கே உலக்க்கல்வியை பற்றி கேள்வி கேட்கப்படமாட்டாது. உலக்க்கல்வியை உலகில் தன்னை ஒரு நிலைப்படுத்திக்கொள்ள தன்னை இங்கு மட்டுமே பாதுகாத்துக்கொள்ள ஆனால் மார்க்கக்கல்வி அப்படியல்ல இம்மை மறுமை இரண்டிலுமே நன்மையை தேடித்தரும். இம்மை மறுமை இரண்டிலுமே நல் வாழ்வைத்தரும். நமது குழந்தைகள் இன்பப்படுவதை விரும்புவோமா? அல்லது துன்பப்படுவதை விரும்புவோமா? அல்லது இரண்டையும் விரும்புவோமா? ஒரு உலகில் இன்பட்டு மறு உலகில் துன்பப்படுவதை விரும்புவோமா? அல்லது ஈருகிலும் இன்பப்படுவதை விரும்புவோமா? தீர்மானிக்கவேண்டியது நாமே! தெளிவாக முடிவு எடுக்கவேண்டியதும் நாமே!  

அடித்தளத்தை நாம் சரியாக அமைத்துவிட்டால் மேல்கூரையை அவர்கள் சரி செய்துகொள்வார்கள்..

இறைவன் இவ்வுலகை படைக்கும்போது தந்த இஸ்லாம் அதன் தூய வடிவில் என்றென்றும் இருக்கிறது. ஆனால் அதனை பின்பற்றோருவோர் என்ற பெயரில் பல கொள்கைகள் பல பிரிவுகளாகி தானும் குழம்பி மற்றவர்களை குழப்பிக்கொண்டிருக்கும் குழப்பங்களுக்கு நடுவில், மார்க்கத்தை எப்படி அறிந்துகொள்வதென்ற கேள்விகளுக்கும் எங்கு சென்று அதனை அதன் தூய வடிவில் தெரிந்துகொள்வது என்ற கேள்விகளையும் முன்வைக்கும் பெற்றோர்களும் இருக்கிறார்கள் அதேபோன்று எங்கு அதற்கான முழுமையான கல்விக்கூடங்கள் இருக்கிறதென்று தெரியாமலும் தவிக்கிறார்கள்.முஸ்லீமகளால் நடத்தப்படும் பள்ளிகளில்கூட இஸ்லாமியமார்க்கத்தைபற்றி முழுமையாக அறிந்துகொள்வதற்கான வாய்ப்புகளில்லையே என ஏங்கும் பெற்றோர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். 

இதற்கான விடைகள் தெரிந்தவர்கள் இங்கே பகிரலாம்.
இவ்வருடம் இல்லாவிட்டாலும் மறுவருடத்திலிருந்து தமது குழந்தைகளை நேரான வழியில் வழிநடத்திச்செல்லும் பள்ளிகளில் சேர்க்க ஒரு சந்தர்ப்பமாக அமையட்டுமே உங்களின் பகிர்தல்கள்..

எல்லாம் வல்ல இறைவன் நம்மை ஈருலகிற்க்கும் ஏற்ற மனிதனாக்கி! மண்ணில் மறைந்தாலும் மறுமையில் நிலைக்கும்படி செய்வானாக!

 இறைவா! உன்னையே வணங்குகிறேன்
உன்னிடமே உதவியும் தேடுகிறேன்

4 comments:

rajamelaiyur said...

//ஒரு குழந்தை நல்லது ஆவதும் கெட்டது ஆவதும் அதன் வளர்ப்பை பொருத்தது என பெரியோர்கள் சொல்வார்கள் அது எந்தளவிற்க்கு உண்மையென்று வளர்த்து பார்த்தால்தானே தெரியும்
//
ரொம்ப சரியா சொன்னிங்க

rajamelaiyur said...

ஒரு குழந்தை நல்லது ஆவதும் கெட்டது ஆவதும் அதன் வளர்ப்பை பொருத்தது என பெரியோர்கள் சொல்வார்கள் அது எந்தளவிற்க்கு உண்மையென்று வளர்த்து பார்த்தால்தானே தெரியும்

ஜெய்லானி said...

ஃபாண்ட் ரொம்ப சின்னதா இருக்கு . கொஞ்சம் பெரிசா இருந்தா நல்லா இருக்கும் :-)

ஆத்மா said...

சிந்திக்க வேண்டியதுதான்..காலைப் பள்ளியும் மாலைப் பள்ளியும்:)

Post a Comment

கருத்துக்களை பகிர்ந்துகொள்ளும்போது நிறைகுறைகளை சரிபார்க்கலாம். பகிந்துகொள்ளுங்களேன் கருத்துக்களை
நானும் என்னை சரிசெய்து கொள்கிறேன் .
பிடிதிருந்தால் ஓட்டும் போடுங்கள்

வேண்டுகோள்..

இங்கே பதியப்படும் அனைத்தும், நான் என்னை தெளிவுப்படுத்திக்கொள்ளவும். ஈருலக வாழ்க்கையையும் அறிந்துக்கொள்ளவும். தொடங்கியுள்ள பயணம். அதில் தாங்களும் தெரிந்துகொள்வதில் பெருமிதம். ஆனால் இதை தவறானமுறையில் விளங்கிக்கொண்டு வீணான விவாதங்களோ தர்க்கங்களான கருத்துக்களாகவோ அமைத்துவிட வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்..