.

வருகை புரியும் அனைவர்மீதும் இறைவனின் அருளும் சாந்தியும் அளவில்லாமல் கிடைக்கட்டும் Photobucket

அன்புள்ள ஆன்மாவே! -8 ஒழுக்கம்

| |

بسم الله الرحمن الرحيم
ஒழுக்கம் [கற்பு நெறி]




அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
இறைவனின் திருப்பெயரால் ஆரம்பிக்கிறேன்.

அன்புள்ள ஆன்மாவே!
இன்று ஒழுக்கம் [கற்பு நெறியை] பேணிக்காப்பது பற்றி!
எனக்கு தெரிந்ததை பகிர்ந்துக்கொள்ளவந்துள்ளேன்

ஆன்மாவே!

[முஹம்மதே!] தமது பார்வைகளை தாழ்த்திக்கொள்ளுமாறும்
தமது கற்பைப் பேணிக்கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட
ஆண்களுக்குக் கூறுவீராக!
இது அவர்களுக்குப் பரிசுத்தமானது.
அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிவான்.
[அல்குர் ஆன்: பாகம் 18-24.அந்நூர்]


தமது பார்வைகளை தாழ்த்திக்கொள்ளுமாறும் தமது கற்புகளைப்பேணிக்கொள்ளுமாறும் நம்பிக்கைகொண்ட
பெண்களுக்கு கூறுவீராக!
அவர்கள் தமது அலங்காரத்தை வெளியே தெரிபவைதவிர மற்றவற்றை வெளிப்படுத்தவேண்டாம்.
தமது முக்காடுகளை மார்பின்மேல் போட்டுக்கொள்ளட்டும்.
தமது கணவர்கள். தமது தந்தையர்.தமது புதல்வர்கள்.தமது கணவரின் புதல்வர்கள்.தமது சகோதரர்களில் புதல்வர்கள்.தமது சகோதரியின் புதல்வர்கள்.. பெண்கள். தாங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில்
தள்ளாத வயதின் காரணமக பெண்கள்மீது நாட்டமில்லாத பணியாட்கள்.
பெண்களின் மறைவிடங்களை அறிந்துக்கொள்ளாத குழந்தைகள் தவிர.
மற்றவர்களிடம் தனது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்தவேண்டாம்.
அவர்கள் மறைத்துவைத்திருக்கும் அலங்காரம் அறிப்படவேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்துக்கொண்டே நடக்கவேண்டாம்.
நம்பிக்கை கொண்டோரே!
அனைவரும் அல்லாஹ்வை நோக்கியே திரும்புங்கள்!
இதனால் வெற்றியடைவீர்கள்..


[அல்குர் ஆன்:பாகம் 18- 24.அந்நூர்]


ஒழுக்கம் என்பது மனிதனுக்கு மிக மிக முக்கியம்.
ஒழுக்கமற்று நடப்பவனை இவ்வுலகமட்டுமல்ல இறைவனும் வெறுத்து ஒதுக்குவான்.
ஒழுக்கம் என்பது வெளித்தோற்றத்துக்கல்ல உள்மனதுக்கு. மனம் ஒழுக்கத்துடன் இருந்தால்தான் மற்றது அனைத்தும் ஒழுக்கமாக இருக்கும்
ஒழுக்கம் மனதுக்குதான் உடலுக்கல்ல என்பதைப்போல். மனம்தான் ஒழுக்கமாக இருக்கிறதே. ஆதலால் உடலை மறைக்கும் ஆடையை எப்படியும் உடுத்தலாம் என்ற எண்ணம் சரியல்ல.

தனிமனித ஒழுக்கம் ஒரு தலைமுறையையே நன்நடத்தையோடு கொண்டுசெல்ல வழிவகுக்கிறது.
தனிமனித ஒழுக்கம் ஒன்று தரகுறைவாகிறதோ அன்று அவனின் வாழ்க்கையில் ஒருகரும்புள்ளி வந்துவிடுகிறது.

ஒழுக்கத்துடன் வாழ பூமியில் எத்தனையோ வழிகளிருந்தும் ஒழுக்கமற்ற வாழ்க்கையை தேர்ந்தெடுக்கும் மனிதர்களை காணும்போது வியப்பாகவும் வேதனையாகவும் இருக்கிறது. ஒழுக்கமற்று வாழ்க்கையை தேர்ந்தெடு[ப்ப]த்தற்கு ஒரு தன்னம்பிக்கையில்லாத காரணங்களைவேறு கூறிக்கொள்கிறார்கள்.

உன் செயல் பிறரை எவ்விதத்திலும் பாதிக்கூடாது. அது நடையாகட்டும், உடையாகட்டும், சொல்லாகட்டும், செயலாகட்டும்.
உன் நல்லொழுக்கத்தைப்பார்த்து அதைபோல் பிறரும் நடக்கும்படி உன்னை நீ தயார்படுத்திக்கொள்.

ஒழுக்கம் உயிரோடு சம்பந்தப்படுத்தப்பட்டது. ஒழுக்கம் தவறியவன் உயிரோடிருந்தும் நடைபிணமே [ஒழுக்கம் விழுப்பம் தரலாம். ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்]

மனிதன் எப்படியும் வாழலாம் என்பதல்ல! இப்படித்தான் வாழனும் என்பதுதானே
அப்படியிருக்கும் பட்சத்தில் ஒழுக்கத்தை நிச்சியம் நாம் கடைப்பிடிக்கனும்.

ஒழுக்கமற்ற வாழ்க்கை வாழ்வோரைப்பாருங்கள் அவர்கள் எவ்விதத்திலும் நிம்மதியடையமாட்டார்கள். பிறரையும் நிம்மதியடையவிடமாட்டார்கள்.
ஒழுக்கத்தின் காலம் கடந்துவிட்டதென்றும் ஒழுக்கம் உடைகளிலில்லை என்றுசொல்லி ஒட்டுத்துணியில் உலாவருகிறது நாகரீக ஒழுக்கம்.
நவ நாகரீக மோகத்தின் உச்சானியில் நாய்வாலைப்போல் நாங்களிருப்போம் என்பவர்களை ஒன்றும் செய்யமுடியாது. அவர்களாக தங்களை உணரும்வரை.

காலங்கள் கடந்தபோதும், மாற்றங்கள் நிகழ்ந்தபோதும், நாம் தந்தையின் வயிற்றிலிருந்து வந்துவிடவில்லை என்பது உண்மைதானே!
ஆக ஒழுக்கத்துடன் வாழ்வது சிறந்தது, மேன்மையானது..

ஒழுக்கத்துடன் வாழும்பொழுது
ஒவ்வொரு நொடியும் நம்மை நாமே நேசிக்கத்தொடங்கி இந்த உலகமே நம்மை நேசிக்கும்படியாகும். அனைத்திற்ககும் மேலாக
எல்லாம் வல்ல இறைவனின் நேசத்திற்கு உடையவர்களாகிவிடுவோம்
அந்த பாக்கியத்தை அனைவருக்கும் ஏக இறைவன் தந்தருள்வானாக ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்...

ஆன்மாவே!
இன்று ஒழுக்கம் [கற்பு நெறியை] பேணிக்காப்பதுப்பற்றி
அறியத்தந்த இறைவன்

இன்ஷாஅல்லாஹ்
இறைவன் நாடினால்
அடுத்த நல்லதொரு விசயத்தை பகிர்ந்துகொள்ள உதவுவான்
என்ற நம்பிக்கையோடும் அதுவரை நம் அனைவரையும் பொறாமையென்னும் தீமையிலிருந்து நம்மை காத்து ஈருலக்கிலும் நற்பாக்கியங்கள் பெற்றிட இறைவனை வேண்டியவாறு
விடை பெறுகிறேன் வஸ்ஸலாம்...

அன்புடன் மலிக்கா

இறைவா!
உன்னையே வணங்குகிறேன்
உன்னிடமே உதவியும் தேடுகிறேன்

29 comments:

நாடோடி said...

ஒழுக்கத்தை பற்றி இதை விட ஆழமாக சொல்ல முடியாது.. நல்ல பதிவு..

அன்புடன் மலிக்கா said...

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நாடோடி..

சபேஷன் said...

ஒழுக்கம் உயிரிலும் மேலானது சரியாகச்சொன்னீர்கள் பாராட்டுக்கள் மலிக்கா.

உங்கள் வார்த்தைக்குள்ளும் வரிகளுக்குள்ளும் ஏதோ இருக்கு.
தொடரட்டும் பயணம்..

சபேஷன் said...

ஒழுக்கம் உயிரிலும் மேலானது சரியாகச்சொன்னீர்கள் பாராட்டுக்கள் மலிக்கா.

உங்கள் வார்த்தைக்குள்ளும் வரிகளுக்குள்ளும் ஏதோ இருக்கு.
தொடரட்டும் பயணம்..

சபேஷன் said...

ஒழுக்கம் உயிரிலும் மேலானது சரியாகச்சொன்னீர்கள் பாராட்டுக்கள் மலிக்கா.

உங்கள் வார்த்தைக்குள்ளும் வரிகளுக்குள்ளும் ஏதோ இருக்கு.
தொடரட்டும் பயணம்..

DREAMER said...

ஒழுக்கத்தைப்பற்றி மிக அழகாக சொல்லியிருக்கிறீர்கள்... அருமை...

-
DREAMER

Anonymous said...

நாடோடி said...
ஒழுக்கத்தை பற்றி இதை விட ஆழமாக சொல்ல முடியாது.. நல்ல பதிவு

இதையே நானும் வழிமொழிகிறேன் மிக அருமை..மலிக்கா

சாகுல் said...

ஒழுக்கத்தை எப்படி கடைப்பிடிக்கனும் என்ற விளக்கம் மிகிமிக அருமை.

ஒழுக்கத்தைமறந்து திரிவோருக்கு கேடுதான்.

S Maharajan said...

//உன் செயல் பிறரை எவ்விதத்திலும் பாதிக்கூடாது. அது நடையாகட்டும், உடையாகட்டும், சொல்லாகட்டும், செயலாகட்டும்.//

நல்ல விளக்கம்

மைதீன் said...

அவசியமான பதிவு, நல்ல விளக்கங்களும் கூட ,தொடருங்கள்.

nila said...

mikamika arumai allah nanmaiyai tharuvaan

இப்னு ஹம்துன் said...

அருமையான கட்டுரை.

தொடர்ந்து வருகையளிப்பேன்.

பனித்துளி சங்கர் said...

அருமை . சிறந்த சிந்தனை . பகிர்வுக்கு நன்றி .

நிஜாம் கான் said...

மலிக்கா! எப்படித்தான் இத்தனை பிளாக்கை வெச்சி எழுதுறீங்களோ தெரியல! என்னால ஒரு பிளாக்கை தொடர்ந்து எழுதமுடியல..இறைவன் அருளட்டும்,, நல்லதை எடுத்துவையுங்கள்.

அன்புடன் மலிக்கா said...

சபேஷன் said...
ஒழுக்கம் உயிரிலும் மேலானது சரியாகச்சொன்னீர்கள் பாராட்டுக்கள் மலிக்கா.

உங்கள் வார்த்தைக்குள்ளும் வரிகளுக்குள்ளும் ஏதோ இருக்கு.
தொடரட்டும் பயணம்//

ரொம்ப சந்தோஷம் சபேஷன்.
தாங்களைப்போன்றவர்களின் ஊக்கம் நிச்சியம் இன்னும் தொடரவைக்கும் இன்ஷாஅல்லாஹ்..

அன்புடன் மலிக்கா said...

/Anonymous said...
நாடோடி said...
ஒழுக்கத்தை பற்றி இதை விட ஆழமாக சொல்ல முடியாது.. நல்ல பதிவு

இதையே நானும் வழிமொழிகிறேன் மிக அருமை..மலிக்கா//

மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி தாங்களின் கருத்துக்கு..

அன்புடன் மலிக்கா said...

/DREAMER said...
ஒழுக்கத்தைப்பற்றி மிக அழகாக சொல்லியிருக்கிறீர்கள்... அருமை...

-
DREAMER//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
டிரீமர்

அன்புடன் மலிக்கா said...

/சாகுல் said...
ஒழுக்கத்தை எப்படி கடைப்பிடிக்கனும் என்ற விளக்கம் மிகிமிக அருமை.

ஒழுக்கத்தைமறந்து திரிவோருக்கு கேடுதான்//

மிக்க நன்றி சாகுல்..

அன்புடன் மலிக்கா said...

/S Maharajan said...
//உன் செயல் பிறரை எவ்விதத்திலும் பாதிக்கூடாது. அது நடையாகட்டும், உடையாகட்டும், சொல்லாகட்டும், செயலாகட்டும்.//

நல்ல விளக்கம்//


மிக்க நன்றி மகராஜன்..

அன்புடன் மலிக்கா said...

//மைதீன் said...
அவசியமான பதிவு, நல்ல விளக்கங்களும் கூட ,தொடருங்கள்//

மிக்க நன்றி மைதீன்

அன்புடன் மலிக்கா said...

இப்னு ஹம்துன் said...
அருமையான கட்டுரை.

தொடர்ந்து வருகையளிப்பேன்..//

வாங்க ஹம்துன். மிக்க நன்றி தொடர்ந்துவாருங்கள்..

அன்புடன் மலிக்கா said...

/ ♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
அருமை . சிறந்த சிந்தனை . பகிர்வுக்கு நன்றி//

மிக்க மகிழ்ச்சி பனித்துளி மிக்க நன்றி..

அன்புடன் மலிக்கா said...

/இப்படிக்கு நிஜாம்.., said...
மலிக்கா! எப்படித்தான் இத்தனை பிளாக்கை வெச்சி எழுதுறீங்களோ தெரியல! என்னால ஒரு பிளாக்கை தொடர்ந்து எழுதமுடியல..இறைவன் அருளட்டும்,, நல்லதை எடுத்துவையுங்கள்//


எனக்கே சிலசமயம் ஆச்சர்யமாகதான் தோன்றும் நாமா எழுதுகிறோம் என்று.

எல்லாம் அல்லாஹ்வின் அருள்தான் நிஜாம்
இறைவனுக்கு நான் நொடிவிடாமல் நன்றிசொல்லவேண்டும்..//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..நிஜாம்

காஞ்சி முரளி said...

//// ஒழுக்கமற்று வாழ்க்கையை தேர்ந்தெடு[ப்ப]த்தற்கு ஒரு தன்னம்பிக்கையில்லாத காரணங்களைவேறு கூறிக்கொள்கிறார்கள்./////

///ஒழுக்கம் தவறியவன் உயிரோடிருந்தும் நடைபிணமே///

மேலே சொன்ன வரிகள்... மிக அற்புதமான வைர வரிகள்...
இந்த இடுகை முழுவதுமே மிகச் சிறந்தவை....

கவியரசு கண்ணதாசனின் "உண்மையை சொல்லி, நன்மையை செய்தால் - உலகம் உன்னிடம் மயங்கும்" என்ற வரிகளுக்கேற்ப நல்லத சொன்ன நாங்க கேப்போமா என்ன?

"நீங்க ஒரு பழைய பஞ்சாங்கங்க....! எந்த காலத்துல வந்து இத சொல்றீங்க....! இப்படியெல்லாம் கட்டுபெட்டித்தனமா வாழ்ற வாழ்கை ஒரு வாழ்கையா? ஒன்லி லோ ஹிப், ஒன்லி டைட் ஜீனு, ஹை ஹீல்ஸ்" என்று சொல்லும் இன்றைய இளைய தலைமுறைகளிடம் தங்கள் அட்வைஸ் எடுபடாது சகோதரி....

வாய் வலிக்க சங்க ஊதரிங்க? அது இந்த செவிடர்கள்... இல்லையில்ல.... காதே இல்லாதவங்ககிட்டபோய்...... வேதங்களை எடுத்துக்காட்டினால்.... வேஸ்ட்....

நல்ல இடுகை....
வாழ்த்துக்கள்....

நட்புடன்...
காஞ்சி முரளி....

அன்புடன் மலிக்கா said...

Kanchi Murali said...
//// ஒழுக்கமற்று வாழ்க்கையை தேர்ந்தெடு[ப்ப]த்தற்கு ஒரு தன்னம்பிக்கையில்லாத காரணங்களைவேறு கூறிக்கொள்கிறார்கள்./////

///ஒழுக்கம் தவறியவன் உயிரோடிருந்தும் நடைபிணமே///

மேலே சொன்ன வரிகள்... மிக அற்புதமான வைர வரிகள்...
இந்த இடுகை முழுவதுமே மிகச் சிறந்தவை.... //

முதலில் வருக வருக காஞ்சிமுரளி.
வந்ததோடு வழங்கிய கருத்துக்களுக்கு முதலில் நன்றி.

/கவியரசு கண்ணதாசனின் "உண்மையை சொல்லி, நன்மையை செய்தால் - உலகம் உன்னிடம் மயங்கும்" என்ற வரிகளுக்கேற்ப நல்லத சொன்ன நாங்க கேப்போமா என்ன?//

எப்பவாவது கட்டாயம் கேட்டுதான் ஆகனும் நல்லதை எனும் சூழ்நிலை ஒவ்வொரு மனிதனுக்கும் வந்தே தீரும். என்ற நம்பிக்கையில்தான் அவரவரின் எண்ணங்களை பிரதிபளிக்கிறோம்...

//"நீங்க ஒரு பழைய பஞ்சாங்கங்க....! எந்த காலத்துல வந்து இத சொல்றீங்க....!//

எக்காலமானாலும் நல்லவை நல்லவையே இதில் மாற்றமில்லையே முரளி!

//இப்படியெல்லாம் கட்டுபெட்டித்தனமா வாழ்ற வாழ்கை ஒரு வாழ்கையா? ஒன்லி லோ ஹிப், ஒன்லி டைட் ஜீனு, ஹை ஹீல்ஸ்" என்று சொல்லும் இன்றைய இளைய தலைமுறைகளிடம் தங்கள் அட்வைஸ் எடுபடாது சகோதரி....//

இதுபோன்ற இன்றைய தலைமுறையினர் அனுபவிக்கும் அல்லல்களைத்தான் அன்றாடம் பார்க்கிறோமே! இதை என் வாயால் அச்சோ எழுத்தால் வேறு சொல்லவேண்டுமா!
நல்லதென்று எடுத்துக்கொண்டால் நன்மையே!

இல்லை அவரவரின் சீரழிவும் சிறப்பும் அவரவர்கைகளில் சரிதானே சகோதரரே!


/வாய் வலிக்க சங்க ஊதரிங்க? அது இந்த செவிடர்கள்... இல்லையில்ல.... காதே இல்லாதவங்ககிட்டபோய்...... வேதங்களை எடுத்துக்காட்டினால்.... வேஸ்ட்....//

கண் இருக்கு பார்க காதுஇருக்கு கேட்க என்று எல்லோரும் ஒதுங்கினால் எப்படி.

இது இல்லாதவங்கிட்ட எப்படி சொல்லனுமோ அப்படிச்சொல்வோம்.
எடுத்துக்கொண்டால் பெஸ்ட்.
இல்லையென்றால் அவர்களுக்கே நன்மையெல்லாம் ஆகிப்போகும் வேஸ்ட் ஓகேவா..

நல்ல இடுகை....
வாழ்த்துக்கள்....//


நட்புடன்...
காஞ்சி முரளி....//

இறைவேதத்தின் செய்திகளை தெரிந்தவர்கள் தெரியாதவர்களுக்கு எத்திவைப்பது மனிதனின் கடமை.
எனக்கு தெரிந்தவைகளை. தெரிந்தும். தெரியாமலிப்பருப்பவர்களுக்காகவும்.
சொல்ல விருப்படுகிறேன். அதனை அப்படியே ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டுமென்பதில்லை.

நல்லது கெட்டதை பிரித்தறிந்து அவரவர்களே முடிவுசெய்துகொள்ளட்டும். நன்மையின் பக்கம் வரட்டும்..

நீண்ட கருத்துகளை பரிமாறிக்கொள்வதில் தெளிவுகள் பிறக்கிறது.

வருகைக்கும் அன்பான கருத்துக்கும் மிக்க நன்றி. தொடர்ந்து வரவிருப்பமிருந்தால் நிச்சியமாக வரவும்..

நட்பான
அன்புடன் மலிக்கா

காஞ்சி முரளி said...

"பரபரப்பு இங்கேயும்" என்ற தலைப்பில்
'மனிதக்கடவுளின் மர்மலீலைகள் அம்பலம்' என்ற இடுகை மூலம்
நான் ஏற்கனவே 'இனிய பாதை'க்கு வந்திருக்கிறேன்...
மறந்துவிட்டீர்கள் என நினைக்கிறேன்.....
அதனால் ///முதலில் வருக வருக காஞ்சிமுரளி. வந்ததோடு வழங்கிய கருத்துக்களுக்கு முதலில் நன்றி.//
///தொடர்ந்து வரவிருப்பமிருந்தால் நிச்சியமாக வரவும்..////
இந்த வரவேற்பு தேவையில்லை....
அதோடு...
எனக்கு சமூக அக்கறை (கொஞ்சம்) உள்ளதினால் தங்கள் இந்த இடுகையும் சமூகம் அக்கறை கொண்டதால்...... என் கருத்தினையும் பகிர்ந்துகொள்ள வந்தேன்... நல்ல இடுகை இட்டால் மீண்டும் வருவேன்....

நட்புடன்...
காஞ்சி முரளி......

அன்புடன் மலிக்கா said...

Kanchi Murali said...
"பரபரப்பு இங்கேயும்" என்ற தலைப்பில்
'மனிதக்கடவுளின் மர்மலீலைகள் அம்பலம்' என்ற இடுகை மூலம்
நான் ஏற்கனவே 'இனிய பாதை'க்கு வந்திருக்கிறேன்...
மறந்துவிட்டீர்கள் என நினைக்கிறேன்..... //

மறக்கவில்லை முரளி இங்குவந்து படித்துவிட்டு கருத்துக்கள் நீரோடையில் வெளியிட்டிருந்தீர்கள்.
முதல் வருகையின்னுக்கு பதிலாக முதல் கருத்து இனியபாதையில் என்று சொல்லியிருக்கனுமோ என்னவோ..


//அதனால் ///முதலில் வருக வருக காஞ்சிமுரளி. வந்ததோடு வழங்கிய கருத்துக்களுக்கு முதலில் நன்றி.//
///தொடர்ந்து வரவிருப்பமிருந்தால் நிச்சியமாக வரவும்..////
இந்த வரவேற்பு தேவையில்லை....///

எத்தனைமுறைவந்தபோதும் மீண்டும் வருக என்று சொல்வதில்லையா அதேபோல்தான் இதுவும் என நினைக்கிறேன்.
வருக வருக என வரவேற்பதும்
மீண்டும் நிச்சியமாக வரனும் என சொல்லியனுப்புவதும் இந்ததமிழச்சியின் பண்பாடு..


//அதோடு...
எனக்கு சமூக அக்கறை (கொஞ்சம்) உள்ளதினால் தங்கள் இந்த இடுகையும் சமூகம் அக்கறை கொண்டதால்...... என் கருத்தினையும் பகிர்ந்துகொள்ள வந்தேன்... நல்ல இடுகை இட்டால் மீண்டும் வருவேன்....

நட்புடன்...
காஞ்சி முரளி......//

மிக்க நன்றி மீண்டும் வருக
[ஹா ஹா]

Ahamed irshad said...

இந்த ப்ளாக்கை பார்த்ததுமே என்ன ஒரு சாந்தம். க்ரேட்.

அன்புடன் மலிக்கா said...

/அஹமது இர்ஷாத் said...
இந்த ப்ளாக்கை பார்த்ததுமே என்ன ஒரு சாந்தம். க்ரேட்
//

மிக்க நன்றி இர்ஷாத் வருகைக்கும் அன்பான கருத்துக்கும். தொடர்ந்து வாங்க..

Post a Comment

கருத்துக்களை பகிர்ந்துகொள்ளும்போது நிறைகுறைகளை சரிபார்க்கலாம். பகிந்துகொள்ளுங்களேன் கருத்துக்களை
நானும் என்னை சரிசெய்து கொள்கிறேன் .
பிடிதிருந்தால் ஓட்டும் போடுங்கள்

வேண்டுகோள்..

இங்கே பதியப்படும் அனைத்தும், நான் என்னை தெளிவுப்படுத்திக்கொள்ளவும். ஈருலக வாழ்க்கையையும் அறிந்துக்கொள்ளவும். தொடங்கியுள்ள பயணம். அதில் தாங்களும் தெரிந்துகொள்வதில் பெருமிதம். ஆனால் இதை தவறானமுறையில் விளங்கிக்கொண்டு வீணான விவாதங்களோ தர்க்கங்களான கருத்துக்களாகவோ அமைத்துவிட வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்..