.

வருகை புரியும் அனைவர்மீதும் இறைவனின் அருளும் சாந்தியும் அளவில்லாமல் கிடைக்கட்டும் Photobucket

அன்புள்ள ஆன்மாவே!12 [பிறருக்காக வாழ்வதா?]

| | 10 comments

بسم الله الرحمن الرحيم
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய இறைவனின் திருப்பெயரைக்கொண்டு ஆரம்பிக்கிறேன்

அன்புள்ள ஆன்மாவே இன்று
முகஸ்துதியை [பிறரின் வஞ்சப்புகழ்ச்சிக்காக வாழ்வதைப்] பற்றி அறிந்ததை அறியத்தர வந்துள்ளேன்

36;அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனுக்கு எதையும் இணையாக கருதாதீர்கள்! பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும் நெருங்கிய அண்டை வீட்டாருக்கும், தூரமான அண்டை வீட்டாருக்கும்,பயணத்தோழருக்கும், நாடோடிகளுக்கும், உங்கள் அடிமைகளுக்கும், நன்மை செய்யுங்கள் பெருமையடித்து கர்வம் கொள்ளும் எவரையும் அல்லாஹ் நேசிக்கமாட்டான்.

37.தாமும் கஞ்சத்தனம் செய்து. மக்களையும் கஞ்சத்தனம் செய்யதூண்டி,அல்லாஹ் அவர்களுக்கு அளித்துள்ள அருளை யார் மறைக்கிறார்களோ அத்தகைய மறுப்போருக்கு இழிபடுத்தும் வேதனையைத் தயாரித்துள்ளோம்.

38; இறைவனையும் இறுதிநாளையும் நம்பாது மக்கள் மெச்சுவதற்காக தமது செல்வத்தை செலவிடுவோர் [ஷைத்தானின் நண்பர்கள்] யாருக்கு ஷைத்தான் நண்பனாகிவிட்டானோ அவனே கெட்டவன்.
அல்குர்ஆன் பாகம் 5: 4.அன்னிஸா

47.தமது இல்லங்களிலிருந்து பெருமைக்காகவும், மக்களுக்கு காட்டவும் புறப்பட்டோரைப்போன்றும், அல்லாஹ்வின் பாதையைவிட்டும் [மக்களை]தடுத்தோரைப்போன்றும் ஆகிவிடாதீர்கள். அவர்கள் செய்தவற்றை அல்லாஹ் முழுமையாக அறிவான்.
அல்குர்ஆன் பாகம்10: 8.அல் அன்ஃபால்:

146 .மன்னிப்புக் கேட்டுத்திருந்தி, அல்லாஹ்வைப் பற்றிபிடிதுக்கொண்டு, வணக்கத்தை அல்லாஹ்வுக்குமட்டுமே உளத்தூய்மையுடன் உரித்தாக்கியோரைத் தவிர, அவர்கள் நம்பிக்கை கொண்டோருடன் இருப்பார்கள்.
நம்பிக்கை கொண்டோருக்கு அல்லாஹ் மகத்தான கூலியை வழங்குவான்.
அல்குர்ஆன் பாகம் 5: 4.அன்னிஸா.

ஆன்மாவே! உனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் வாழ்க்கையின் வரையரைக்குள் வாழப்பழகிக்கொள்.  இறைவனுக்கு பயந்துநட.
அவன் சொல்லாத ஒன்றை மனிதருக்காச்செய்யாதே! நாளை நற்க்கூலி வழங்குபவன் மனிதனல்ல இறைவனே!
தன்னிடமுள்ளவைகளை பிறருக்காக பிறரின் பார்வைக்காக செலவிடுவதும் அல்லது செலவிடுவதுபோல் நடிப்பதும் பாவமே!

தாம் செய்யாத ஒன்றை தானே செய்ததாய் தம்பட்டம் அடித்துக்கொள்வதும்,
தம்மிடம் இல்லாத ஒன்றை இருப்பதாய் காட்டுவதும். அல்லது தம்மிடமுள்ளைவகளை மறைத்து பிறர் முன்னிலையில் இல்லாதாவரைபோல் போலியாய் கஞ்சனாய் வாழ்வதும். பாவமே!
பெருமையடித்துக்கொள்வதும், கஞ்சத்தனம் செய்வதும், மக கெட்டகுணம். பிறர் முன்னிலையில் ஆகோ ஓகோவென பேசிவிட்டு பின்னால்போய் அதற்கு நேர்மாராய் நடப்பது மனிதனுக்கு அழகா!

பிறரின் வஞ்சப்புகழ்ச்சிக்காக நடப்பது அந்நிமிடம், அல்லது அன்றைய பொழுது, அல்லது அதற்கான அவகாசம் வரும்வரையே! அந்தபுகழும், புகழ்ச்சியும் இருக்கும்.ஆனால் அதற்கு இறைவனிடம் தண்டனையுண்டு.இவ்வுலக்கில இழிவுமுண்டு.
அதே இறைவனின் ஆணைகளை ஏற்று அவனின் சொல்செயற்ப்படி நடக்கும்போது வந்துசேரும் புகழும் புகழ்ச்சியும் நீடித்து நிலைக்கும். இறைவனிடமும் மகத்தான கூலிகிடைக்கும். வேசமிட்டு வாழ்வதெல்லாம் ஒரு வாழ்க்கையா! பிறர்புகழவேண்டுமென நம்மைநாமே இகழ்ந்துக்கொள்வது தேவையா?

முகஸ்துதிக்காக வாழும் வாழ்க்கையில் திருப்தியிருக்குமா! 5,க்கு வாங்கிவிட்டு 500 என்பதும்.அடுத்தவர் மெச்சவேண்டுமென்பதற்காக அளவுக்கதிகமாய் தம்மையே வதைப்படுதிக்கொள்வதும்.தேவையா?
நமக்கென்று என்ன எழுதியிருக்கோ அதன்படியே நடக்கும்.
ஷைத்தானின் தூண்டுதலின்பேரில் தன்னை பிறருக்காக தன்னையறியாது துன்புறுத்திக்கொள்வது முட்டாள்தனமில்லையா?
அளவுக்குமீறி சொத்தை வைத்துக்கொண்டு அடுதவர் சிரமப்படுவதைக்கண்டும் அரைகாசு கொடுக்காமல் அடுக்கிவைப்பது அரக்கத்தனமில்லையா!

ஆன்மாவே நீ நீயாகவே இரு. நீயாகவே வாழு!
பிறரின் வஞ்சப்புகழ்சிக்காக உன் நெஞ்சத்தை வஞ்சித்துவிடாதே!உன்
ஆன்மாவை அன்றைய அர்ப்பத்திற்க்காக ஆட்டிவைக்காதே!
பிறரின் புகழ்ச்சி வற்றிடும் குட்டைநீர் அல்லது கண்ணெதிரே தெரியும் கானல்நீர். அதைகண்டு அள்ளிக்குடிக்க அலறியடித்து ஓடாதே! அங்கே சென்றதும் அரண்டு நிற்பாய் அர்பமானதைக்கண்டு.
கஞ்சத்தனமும் முகஸ்துதியும். உன்னை அவதிக்குள்ளாமே தவிர ஆனந்தப்படவைக்காது.

ஆண்டவனில் சொல்கேட்டு அவன் வகுத்து வைத்த வரையரைக்குள் வாழந்துபார் வாழ்க்கையின் உன்னதம் உனக்கேப்புரியும்...

இன்று முகஸ்துதியைப் பற்றி
அறியத்தந்த இறைவன்.

இன்ஷாஅல்லாஹ்
இறைவன் நாடினால்
அடுத்த நல்லதொரு விசயத்தை பகிர்ந்துகொள்ள உதவுவான்
என்ற நம்பிக்கையோடும் அதுவரை நம் அனைவரையும் மாபெரும் தீமையிலிருந்து நம்மை காத்து ஈருலக்கிலும் நற்பாக்கியங்கள் பெற்றிட இறைவனை வேண்டியவாறு விடை பெறுகிறேன் வஸ்ஸலாம்...

அன்புடன் மலிக்கா
இறைவா!
உன்னையே வணங்குகிறேன்
உன்னிடமே உதவியும் தேடுகிறேன்

வேண்டுகோள்..

இங்கே பதியப்படும் அனைத்தும், நான் என்னை தெளிவுப்படுத்திக்கொள்ளவும். ஈருலக வாழ்க்கையையும் அறிந்துக்கொள்ளவும். தொடங்கியுள்ள பயணம். அதில் தாங்களும் தெரிந்துகொள்வதில் பெருமிதம். ஆனால் இதை தவறானமுறையில் விளங்கிக்கொண்டு வீணான விவாதங்களோ தர்க்கங்களான கருத்துக்களாகவோ அமைத்துவிட வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்..