.

வருகை புரியும் அனைவர்மீதும் இறைவனின் அருளும் சாந்தியும் அளவில்லாமல் கிடைக்கட்டும் Photobucket

அன்புள்ள ஆன்மாவே- 4

| | 9 comments

                                                                         بسم الله الرحمن الرحيم
அளவற்ற அருளாளனும் நிகறற்ற அன்புடையோனுமாகிய

இறைவனின் திருப்பெயரால் ஆரம்பிக்கிறேன்

அன்புள்ள ஆன்மாவே

இன்று இறையச்சத்தைபற்றி அறிந்தவைகளையும் தெரிந்தவைகளையும் பகிர்ந்துகொள்ளவந்துள்ளேன்.

மனிதர்களே!
இறைவனின் வாக்குகுறுதி உண்மையானது.இவ்வுலக வாழ்வு உங்களை ஏம்மாற்றிவிடவேண்டாம். ஏமாற்றுபவன், இறைவன் விசயத்தில் உங்களை ஏமாற்றிவிட வேண்டாம்.
[அல்குர்ஆன் பாக: 22 ஃபாத்திர்]


1. பூமி பேரதிர்ச்சியாக குலுக்கப்படும் போது.
2. தனது சுமைகளை பூமி வெளிப்படுத்தும்போது,
3.இதற்கு என்ன நேர்ந்தது? என்று மனிதன் கேட்கும்போது,
4, 5. அந்நாளில் தனது இறைவன் இவ்வாறு அறிவித்ததாக
தனது செய்திகளை அது அறிவிக்கும்.
6. அந்நாளில் மக்கள் தமது செயல்களைகாண்பதற்காக பல பிரிவினர்களாக ஆவார்கள்.
7. அணு அளவும் நன்மை செய்தவர் அதைக்காண்பார்.
8. அணு அளவும் தீமைசெய்தவர் அதைக்காண்பார்.
[அல்குர்ஆன் பாகம்: 30 அஸ்ஸில்ஸால்]


15, 16. இறைவனை அஞ்சியோர் இறைவன் தங்களுக்கு வழங்கியதைப்பெற்றுக்கொண்டு சொர்க்கச்சோலைககளில்லும் நீரூற்றுகளிலும் இருப்பார்கள் அவர்கள் இதற்குமுன் நன்மை செய்வோராக இருந்தனர்.
 [அல்குர்ஆன். பாகம்: 26 அத்தாரியாத்]


ஆன்மாவே
நீ இறைனுக்கு மட்டும் அச்சப்படு அவன் அகிலஉலகையும் படைத்து அதில்
நம்மையும்படைத்து நமக்கு வேண்டியதை நாம் கேட்காமலே வழக்கி
நம்மை மிகவும் கண்ணியப்படுத்தியுள்ளான்.

நம்முடைய உலக வாழ்வுக்காக இத்தனையும் தந்த இறைவனை
மறந்து உலக காரியங்களில் மூழ்கிவிடுகிறோம்.
மனிதர்களுக்கு அச்சப்படுகிறோம். அவர் இதை சொல்லிவிடுவார், இவர் அதைச்சொல்லிவிடுவார், என்பதற்காக இறைவனுக்கு மாற்றமான காரியங்களில் ஈடுபடுகிறோம்.

யார் இவர் அவர்கள்? அவர்களும் இறைவனால் படைக்கப்பட்ட நம்மைபோன்ற மனிதர்கள். மனிதர்களுக்கு தரும் மதிப்பும் அச்சமும் அவனைப்படைத்த இறைவனுக்கு தரமறுப்பதேன்?
நாம் செய்யும் ஒவ்வொரு விசயத்தையும் நம்கூடவேஇருந்து கவனிப்பவன் இறைவன் அதனை மறந்த நிலைக்கு தள்ளப்படுவது எதனால்?

இறையச்சம் நம்மளில் குறைந்துவிட்டது, அதை பிறகு பார்த்துக்கொள்வோம் என ஒதுக்கிவைத்துவிட்டோம். இறைவனுடைய கோபத்தை மறந்துவிட்டோம். பிறமனிதன் கோபப்படுகிறான் என்பதற்காக, பிறமனிதனை திருப்தி படுத்துவதற்காக, பிறமனிதர்களிடம் நம் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக, அவர்களுக்காக அச்சப்படுகிறோம்.
அவன் இறைவனுக்கு மாற்றமாக நம் மனதுக்கு ஒவ்வாததாக இருந்தாலும் அவன் சொன்னதற்காக செய்யப்பழகிக்கொண்டோம் இது சரியா?
மனிதனுக்கு மனிதன் அச்சப்படுவது இன்று விளைந்து நாளையழியக்கூடியது.
ஆனால் இறைவனுக்கு அச்சப்படுவது விளைந்தது விளைந்துகொண்டே இருப்பதைப்போன்றது அதற்கு அழிவேயில்லை.

இறையச்சம் இல்லாத ஆன்மா எதற்குமே தகுதியில்லாதது.
மனித சக்தியைமீறீ ஏதோ ஓர் சக்தி நம்மையட்டிவைக்கிறது என்பதை மனிதன் தெளிவாகவே உணர்ந்துள்ளான். ஆனாலும் அதை உணரமறுக்கிறான்.

நிச்சயம் இறையசத்தைக்கொண்டு உன்னை ஓரு சக்தி கண்காணித்துக்கொண்டே இருக்கிறதென்ற நம்பிக்கையில் உன் வாழ்க்கையின்
பாதையில் நட, உன் உள்மனம் எச்சரித்துக்கொண்டேயிருக்கும்
நீ தவறு செய்ய நாடினால்கூட அது உன்னை தடுத்துவிடும்.

ஆன்மாவே
உன் ஒவ்வொரு நற்ச்செயலுக்கும் நற்கூலியுண்டு இறையச்சத்தை மறந்த நிலையில் உன் மனதுக்கு மாறுசெய்துவிடாதே! அது உன்னை அழிவில் கொண்டுநிறுத்தும்.

ஏதோ ஒருவகையில் உலக காரியங்களுக்காக மனிதன் இறையச்சத்தை மறந்து ஆட்டுவிக்கப்படுகிறான் என் நிலையானாலும் இறையச்சம் இல்லையெனில் அன்னிலை அந்தோ பரிதாபமே!

ஆன்மாவே
நீ உலகில் வாழும் நாள்வரை இறைவனின் அச்சம் உன்னைவிட்டு விலகாதவாறு நிலைநிறுத்திக்கொள்! உன்மனைதை இறையச்சத்தால் பதப்படுத்திக்கொள்! உன்பாவச்செயல்களின் கடிவாளம் இந்த இறையச்சம் சிறும்பெரும் தவறுகளுக்கும் தடுப்புச்சுவர்! பற்றிபிடித்துக்கொள் இறையச்சத்தை பலமாக பற்றிப்பிடித்துக்கொள் அதுவே உன் ஈருலக வாழ்வை தீர்மானிப்பதும் உன்னை மேன்மையடைச்செய்வதும் இந்த இறையச்சம்தான்!

ஆன்மாவே
இன்று இறைவனின் இறையச்சத்தைப்பற்றி
அறியத்தந்த இறைவன்

இன்ஷாஅல்லாஹ்
இறைவன் நாடினால்
அடுத்த நல்லதொரு விசயத்தை பகிர்ந்துகொள்ளஉதவுவான்
என்ற நம்பிக்கையோடும் அதுவரை நம் இறைவன்மீதும்
உன்மீதும்
அனைத்து மனித்குலத்தின்மீதும் அன்புகொண்டவாறு
விடை பெறுகிறேன்

இறைவா!
உன்னையே வணங்குகிறேன்
உன்னிடமே உதவியும் தேடுகிறேன்.

அன்புடன் மலிக்கா

அன்புள்ள ஆன்மாவே -3

| | 23 comments


அன்புள்ள ஆன்மாவே -3
இறைவனின் திருப்பெயரால் ஆரம்பிக்கிறேன்.

இன்று உன்னிடன் இறைவனை புகழ்வதைபற்றி அறிந்ததை பகிர்ந்துகொள்ளவந்துள்ளேன்


1,2.அளவற்ற அருளான் குர்ஆனை கற்றுக்கொடுத்தான்.
3. மனிதனைப் படைத்தான்.
4.விளங்கும் திறனை அவனுக்கு கற்றுக்கொடுத்தான்.
5. சூரியனும் சந்திரனும் கணக்கின்படி இயக்கினான்.
6 மரங்களும் செடிகொடிகளும் [அவனுக்கு] பணிந்தன.
7, 8. அவன் வானத்தை உயர்த்தினான்; நிறுப்பதில்
வரன்பு மீறாதீர்கள்! என்று திராசையும் நிறுவினான்.
9 நியாயமாக எடையை நிலைநாட்டுங்கள்!
எடையில் குறைத்துவிடாதீர்கள்.
10. பூமியை மனிதர்களுக்காக அமைத்தான்.
11, 12. அதில் கனிகளும், பாளைகளுடைய பேரிச்சமரங்களும்,
தோல்மூடிய தானியமும்,மணம்வீசும் மலர்களும் உள்ளன.
13.அவன் இரண்டு கிழக்கு திசைகளுக்கும் இறைவன்
இரண்டு மேற்குத் திசைகளுக்கும் இறைவன்.
14. இரண்டு கடல்கள் சந்திக்கும்மாறு அவன் ஏற்ப்படுத்தியுள்ளான்.
15. இரண்டுக்குமிடையே ஒரு திரையுள்ளது
ஒன்றையொன்று கடக்காது.

[அல்குர் ஆன் -பாகம் 27 அர் ரஹ்மான்] 


இன்னும் இன்னும் ஏராளமான சான்றுகள் இறைவனை போற்றிப்புகழ உள்ளது.
அவனை அனுதினமும் புகழ்வதில் ஆன்மாவே
நீ சற்று
பின்வாங்குவதுதான் வேதனையளிக்கிறது.


ஈடு இணையற்ற இறைவனை புகழ்வதை தவிர்த்து
சாதாரண மனிதர்களை புகழ்வதை அதிமாக்கிக்கொண்டாய்!
மனிதப்புகழ்ச்சி மதிப்பிழந்தது
அது இன்று ஒருவரை உயரத்தூக்கும் நாளை அதேபுகழ் அவரையே மண்ணில் சாய்க்கும்.
ஒரு மனிதரை எல்லைமீறி புகழாதே!
எல்லைகடந்த புகழ் இறைவனுக்கு மாத்திரமே சொந்தமானது.


ஆன்மாவே
நீ ஒருவரை புகழும்போது அதனால் அவர் பயனடையும்படியாக இருக்கவேண்டுமே தவிர
உன் புகழ்ச்சியால் அவரின் நற்குணங்களில் மாற்றம் ஏற்பட்டு மங்கிவிடுவதைபோல் செய்துவிடாதே!
.
மனிதபுகழ் என்பது போதைக்கு சமமானது.
புகழ்ச்சியின் அளவு அதிகரிக்க அதிகரிக்க மனிதர்கள் மனம்
ஏதோ எல்லைகடந்துவிட்டதாக உணர்ந்து
தன்னை மறந்தவனாகிறான். தன்னைமறந்து 
தன்னிலை இழக்கிறான்.


அதற்கு உன் அதிகப்புகழ்ச்சியான வார்த்தைகள்
ஒருகாரணமாக இருக்கும்படி செய்துவிடாதே!
ஒருவரை நீ புகழ விரும்பினால் அது இறைவனோடு சேர்த்தோ அவனைவிட அதிகமாகவோ புகழ்ந்துவிடாதே!

மனிதன் மிக சாதாரணமானவன் அவனை
ஓர் எல்லைக்குள் புகழ்ந்து பழகு,
உன் புகழ்ச்சியால் அவனை மேன்மையாக்கும்படியாக இருக்கவேண்டுமேதவிர,
அவனை மேலேற்றிவிட்டு தான்கீழே இறங்கிவிடாமலிருக்க எவ்வித பாவத்திற்கும் அவன் துணிந்திறங்குவதற்கு துணை செய்வதல்ல
அவனை புகழின்போதைக்கு அடிமையாக்கிவிடுவதுமல்ல!

உன் அகப்புகழை நம்பி,  அனைத்தும் உண்மையென நினைத்து உச்சானிக்கொம்பில் ஏறியமர ஆசைப்படுகிறான் அது தவறல்ல,
தான் நிலைத்து நிற்க மற்றவர்களை கீழேதள்ளிவிட்டுவிடுகிறான் அதனுடைய பாவத்திற்க்கும் நீ ஒருவிதத்தில் துணைபுரிந்தவனாகிறாய்.

வெறும் வாய்வசீகரிக்கும் வார்த்தைக்களைக்கொண்டு
ஒருவரை புகழ்வது சரியா?
மனம் வசீகரிக்கும் வார்த்தைகளைக்கொண்டு
புகழ்வது சரியா?


ஆன்மாவே
நீ பிறரை புகழ்ப்படுத்த விரும்பினால் இறைவனின் நாட்டத்தோடு இணைத்து, அவன் நாடினால் இது உன்னை மேலும் வலுப்படுத்தும் என்ற நம்பிக்கை விதையை அவன்மனதில் ஏற்படுத்து, அதுவே உனக்கும் அவனுக்கும் மிக மிக சிறந்தது


மேன்மைப்பட்ட புகழ்ச்சி அனைத்தும் இறைவன்
ஒருவனுக்கே சொந்தம்.
அகம்மகிழ, புறம் மிளிர
இறைவனின் புகழ்பாடு அனுதினமும்
அவனின் துணைநாடு.


ஆன்மாவே
இன்று இறைவனின் இறைப்புகழைபற்றி
அறியத்தந்த இறைவன்


இன்ஷாஅல்லாஹ்
இறைவன் நாடினால்
அடுத்த நல்லதொரு விசயத்தை பகிர்ந்துகொள்ளஉதவுவான்
என்ற நம்பிக்கையோடும் அதுவரை நம் இறைவன்மீதும்
உன்மீதும்
அனைத்து மனித்குலத்தின்மீதும் அன்புகொண்டவாறு
விடை பெறுகிறேன்.


இறைவா!
உன்னையே வணங்குகிறேன்
உன்னிடமே உதவியும் தேடுகிறேன்










அன்புடன் மலிக்கா

அன்புள்ள ஆன்மாவே 2

| | 9 comments


இன்று இறைவனின் சோதனையைப்பற்றி பகிர்ந்துகொள்ளலாம் என வந்துள்ளேன்.
ஓரளவு அச்சத்தாலும்,பசியாலும்,
செல்வங்கள், உயிர்கள்,
மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும்
உங்களை சோதிப்போம்.
பொறுத்துக்கொண்டோருக்கு
நற்ச்செய்தி கூறுவீராக!
              [அல்குர்ஆன் பாகம்-2   155.]


நம்பிக்கைக் கொண்டோரே!
பொறுமை மற்றும் தொழுகையின் மூலம்
உதவி தேடுங்கள்!
இறைவன் பொறுமையாளார்களுடன்
இருகிறான்.
       [அல்குர்ஆன் பாகம்-2  153.]

சோதனை. மண்ணில் பிறந்த, பிறக்கின்ற, பிறக்கப்போகின்ற, ஒவ்வொரு ஜீவராசிகளுக்கும் உண்டு.

சோதிப்பதால் நாம் நஷ்டமடைந்துவிட்டோம் என்றுமட்டும் எண்ணம் கொள்ளாதே, இறைவன் சோதிப்பதே நாம் நலமாக வாழவேண்டும் ஈருலகிலும் என்பதற்க்காகத்தான்.

எந்த ஓரு ஆன்மாவுக்கும் அதன் சக்திக்குமீறிய சோதனையை இறைவன் தருவதில்லை.
நாம் ஒன்றைச் சரியென்போம் அதுவே தவறாக இருக்கலாம் நாம் தவறென்போம் அதுவே சரியாக இருக்கலாம்.

நமக்கு அனைத்தையும் அறியவைக்கத்தானே முதலில் பெற்றோரைத்தருகிறான்
நம்மை பெற்றடுத்தவர்களுக்கே நமக்கு எது நல்லது? எது கெட்டது? என
அறிந்து அதை நமக்காச்செய்யும்போது நம் பெற்றோர்களையே படைத்தவனுக்கு தெரியாதா எது நன்மை எது தீமையென?

ஆன்மாவே நீ கேட்கலாம்?

இவ்வளவு நுணுக்கமாகப்படைத்தவன் ஏன் நம்மை துன்ப துயரத்தில் ஆழ்த்துகிறான் கஷ்ட நஷ்டங்களைத்தருகிறான் என்று?

ஆன்மாவே!
உன்னை பெற்றெடுத்த பெற்றோர்கள் நீ நலமாக வாழவேண்டுமே என்று உன்னை ஏசிப்பேசி சோதனைகள் தருவதில்லையா?
உன் திறமைகள் வெளிவர உன் ஆசிரியர்கள் உனக்கு பரிட்சை என்ற சோதனை தருவதில்லையா?
உன்காதல் நிறைவேர உனக்கு நீயே பல பல சோதனைகளை செய்துக்கொள்வதில்லையா?
நீ உயர்ந்து முன்னுக்குவர பல சோதனைகளைக் கடக்கவில்லையா?

அதெல்லாம் சரியென்றால் இறைவன் செய்வது பிழையா?

நினைத்துப்பார் மனிதனாகப்பட்டவனையே மனிதன் சோதித்துதான் வெற்றியடைச்செய்கிறான்.
எதையும் சுலபமாக அடைந்துவிடமுடியாது அப்படி அடைந்துவிட்டுவதென்றால் நம்முடைய பிறப்பென்பதெதற்கு?

அனைத்தையும் படைத்து அதை மனிதர்களுக்காகவே நலம்பயக்கச்செய்த
இறைவனுக்கு அதனை மிக சுலபமாக அனுப்பவிக்க வைக்ககவும் வழிவகுக்கத்தெரியாதா?

அதனை மிகவும் சுலபமாக கிடைக்கச்செய்தால்
அதன் மதிப்பே தெரியாமல் போய்விடுமே
துன்பம் வந்தால்தானே இன்பத்தின் அர்த்தம் புரியும் அதன் இனிமையுமயறியும்.

தான்படைத்த ஒன்று தன்சொல்லைமீறி தவறும்போது சாதரண மனிதர்களுக்கே தாங்கமுடியாத பட்ச்சத்தில்!
நமக்காக, நம் சுகங்களுக்காக, இந்த பூமியையும் அதனுள் படைக்கப்பட்ட அத்தனையும், மனிதர்களாகிய நமக்கான உபயோகமானதாக்கி
அதில் நல்லவைகளையும், கெட்டவைகளையும், கொடுத்து அதனை பிரித்துப்பார்க்கும் பொருட்டாய் மற்ற ஜீவராசிகளூக்கில்லாத ஒரு மேன்மையாய்
ஆறாவது அறிவையும் கொடுத்தது எதற்க்கு?

அறிவைக்கொடுத்தும் அறிவிழந்து நடக்கிறோமென்றால் அதற்காகத்தான் அப்பப்ப சோதனைகளை பலவடிவங்களாய் மாற்றி அதனை நம்மை உணரவைக்கிறான்.
சிலநேரம் நன்மைக்கே தீமைவந்துசேரும் அதுபோல் நமக்குதோன்றும்
அதிலும் நம்மை சோதிக்கத்தான்

நல்லது கிடைகும்போது அதை ஏற்று என் இறைவன் எனக்காக எவ்வளவு நல்லது செய்கிறான் என போற்றிப்புகழும் மனம்
சிறு துன்பத்தை சோதனையாய் தரும்போது ஏற்றுக்கொள்ள மறுத்து படைத்த இறைவனையே பழிப்பது சரியா? அவன்மேலேயே பழிசொல்லுதல் முறையா?
உலகம் ஓர் சோதனைக்களம் அந்த சோதனைகளை நீ முறியடித்து நல்வழியையே பின்பற்றி
முன்னுவர உன்னால் முடிகிறாதா என இறைவன் சோதிக்கிறான்.

ஆன்மாவே
உன்னால் முடியாதா?
முடியும். முடியும் என்பதால்தான் முடிந்தவரை சோதிக்கிறான்
முடியவில்லையென்னும் பட்ச்சத்தில்
முடிவை அவனே முடிவு செய்வான்.

அகிலத்தையே படைத்த இறைவனுக்கு அனைத்தும் தெரியும்
நம்மை எப்படி வழிநடத்தவேண்டுமென்றும் அவனே அறிவான்.

ஆகவே ஆன்மாவே!
சோதனையின்போதும் கலங்காமல் என் இறைவன் எனக்கு நன்மைகளையே செய்வான். நல்லதுக்காவே செய்வான்.
என்று உணர்ந்து
சோதனையான சமயத்திலும் இறைவனை பிராத்தனை செய்

என் இறைவா!
இச்சோதனையில் நன்மையளிப்பாயாக!
இச்சோதையைக்கொண்டு எனக்கு வெற்றி தருவாயாக!
இச்சோதனையின் மூலம் உனக்கும் எனக்குமுள்ள
நெருக்கத்தை அதிக்கப்படுத்துவாயாக!
என்று மனமுருகி இறைவனிடம்
பிரத்தனை செய்.

வந்த சோதனைகள் அனைத்தும்
வந்த தடம் தெரியாமல்போய்விடும்.

ஆன்மாவே இன்று இறைவனின் சோதனையைப்பற்றி
அறியத்தந்த இறைவன்

இன்ஷாஅல்லாஹ்
இறைவன் நாடினால்
அடுத்த நல்லதொரு விசயத்தை பகிர்ந்துகொள்ள உதவுவான்
என்ற நம்பிக்கையோடும்
அதுவரை நம் இறைவன்மீதும்
உன்மீதும்
அனைத்துமனித்குலத்தின்மீதும் அன்புகொண்டவாறு
விடை பெறுகிறேன்.

இறைவா!
உன்னையே வணங்குகிறேன்
உன்னிடமே உதவியும் தேடுகிறேன்


அன்புடன் மலிக்கா

அன்புள்ள ஆன்மாவே -1

| | 20 comments


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
இறைவனின் திருப்பெயரால்

1. எல்லாப்புகழும் இறைவனுக்கே[அவன்]
அகிலத்தை [படைத்து] பராமரிப்பவன்


2. அளவற்ற அருளாளன்
நிகரற்ற அன்புடையோன்


3. தீர்ப்பு நாளின் அதிபதி

4. [எனவே] உன்னையே வணங்குகிறோம்
உன்னிடமே உதவியும் தேடுகிறோம்

5. எங்களை நேர்வழியில் செலுத்துவாயாக!

6. 7. அது நீ யாருக்கு அருள் புரிந்தாயோ அவர்கள் வழி.
அவர்கள் [உன்னால்] கோபிக்கப்பட்டாதவர்கள்
மற்றும் பாதை மாறிச் செல்லாதவர்கள்.

[அல் பாத்திஹா] [1.1. அல்குர்ஆன்]

அன்புள்ள ஆன்மாவே
இன்று உன்னிடம் இறைவனின்மீது அன்புவைப்பதைப்பற்றி பகிர்ந்து கொள்ளலாம் எனவந்திருக்கிறேன்
அன்பு என்ற ஒன்று இருப்பதால்தான் இன்னும் இப்பிரபஞ்சம் ஈரப்பததுடன் இருக்கிறது
உண்மையானஅன்பு இருக்கும் இடத்தில் ஆணவம், அகந்தை, பொறாமை. மற்றும் தீய பழக்கங்கள்
இருப்பதற்கு வாய்ப்பில்லை.

நீ யார்மீது அன்புகொள்கிறாயோ அவரையும் உன் நல்வழியிலேயே அழைத்துச்செல். அவரின்
சுக துக்கங்களில் பங்குகொள்.
கஷ்டநஸ்டங்களில் உதவு.

அன்பை போதிப்பது அனைத்திலும் சிறந்தது.
அன்புகொண்டவர் அழகிய முறையில் சிந்திப்பார்.
அழகிய உபதேசம் செய்வார்.
அன்பை பெற்றவர் நல்வழியை கடைபிடிப்பார்.


யார் மீதும் யாரும் அன்புபாராட்டலாம்.
அன்பை அழகிய முறையில் கையாளுங்கள்.
அன்பை நல்வழிக்காக செலவிடுங்கள்
நம் அன்பால் கெடுதல் நினைப்பவரைக்கூட
நல்லவராக மாற்றியமைக்கும் வல்லமை
கொண்ட அன்பாக செயல்படுத்துங்கள்

.ஆன்மாவே

நாம் தாய்தந்தை மீது கொள்ளும் அன்பு
கணவன் மனைவி மீது கொள்ளும் அன்பு
பெற்றபிள்ளைகள் மீது கொள்ளும் அன்பு
ஏழை எளியவர்களின் மீது கொள்ளும் அன்பு
உற்றார் உறவினர் மீது கொள்ளும் அன்பு
காதலன் காதலியின் மீது கொள்ளும் அன்பு
உற்ற தோழமைகளின் மீது கொள்ளும் அன்பு
இவையனைத்தையும் முக்கியம்தான்

ஆனால்

அதைவிட பலமடங்கு இறைவன்மீது
அன்பு கொள்ளவேண்டும் ஏனென்றால்
இப்பூமியில்
நம்மைப் படைத்து பாதுக்காத்து பரிசுத்தப்படுத்தி
நமக்கு அன்பான தாய்தந்தை தந்து
நமக்கு அழகானமுறையில் உருவம்தந்து
பிறக்கவைத்து உயிர்வாழச்செய்துள்ளான்
உடல்தந்து உயிர்தந்து உலகில் வாழச்செய்த
இறைவன் தான் நமக்கு உயர்ந்தவன்

ஆன்மாவே

இறைவனின்மீது அன்புகொண்டு அன்புகொண்டு
அனைத்தையும் வெல்லப்பார்
அன்புகொள்ள அன்புகொள்ள நம்
அருகில் ஆவலாய் இருக்கிறான்
நேசங்கொண்டு இறைவனை நினைத்து வணங்கு
உன்னருகில் நெருங்கிவருவான்.

இறையன்பு கிடைத்துவிட்டால் எதையும் ஜெயிக்கலாம்
மனித அன்பு கிடைத்துவிட்டாலே நம்மால் நிலை கொள்ளாது
அதையெல்லாம்விட
மனிதனைப்படைத்த இறைவனின் அன்புக்கிடைத்தால்!!

ஆன்மாவே எண்ணிப்பார்
அன்பை பொழிந்துப்பார் நீ எப்படியிருப்பாய் என்பதை
உன்னால் உணர்ந்துகொள்ளமுடியும்


//உமது இறைவனைக் காலையிலும் மாலையிலும்
மனதிற்குள் பணிவாகவும், அச்சத்துடன்,
சொல்லில் உரத்த சப்தமில்லாமலும் நினைப்பீராக!
கவனமற்றவராக ஆகிவிடாதீர்
7:205. [அல் குர்ஆன்]//


உன் உலக காரியங்களை செய்யும் ஒவ்வொரு நொடியும்
உன் இறைவனையும் அனுதினமும் அன்போடு நினைத்துக்கொள்
அடுக்கடுக்காய் வெற்றிகள் வந்துகுவியக்காண்பாய்.

.ஆன்மாவே.
இன்று அன்பைப்பற்றி பகிர்ந்துக்கொள்ள இறைவன் உதவினான்
இன்ஷாஅல்லாஹ்

இறைவன் நாடினால்
அடுத்த நல்லதொரு விசயத்தை பகிர்ந்துகொள்ள உதவுவான் என்ற
நம்பிக்கையோடும்
அதுவரை நம் இறைவன்மீதும்
உன்மீதும்
அனைத்துமனித்குலத்தின்மீதும் அன்புகொண்டவாறு
விடை பெறுகிறேன்.

.
இறைவா!
உன்னையே வணங்குகிறேன்
உன்னிடமே உதவிதேடுகிறேன்..

அன்புடன் மலிக்கா












நமக்கு நாமே

| | 27 comments

இறைவனின் திருப்பெயரால் ஆரம்பிக்கின்றேன்.




நம்முடைய ஒவ்வொரு செயல்களும் நமக்கு திரும்பிவரும் நன்மை செய்யும் பட்சத்தில் நன்மையாகவும் தீமை செய்யும் பட்சத்தில் தீமையாகவும் வந்துசேரும்.


தினந்தோறும் நம்மை நாம் கேள்விகள் கேட்கவேண்டும்.


 இன்று நீ செய்ததில் எத்தனை நன்மை?
எத்தனை தீமை? யாருக்கேனும் கெடுதல் செய்தாயா? அப்படி செய்திருந்தால் ஏன் செய்தாய்?
மனதளவில் யாருக்கும் தீங்கு நினைத்தாயா?
முகம் சுளிக்கும்படி நடந்து கொண்டாயா?
மற்றவரின் பொருளுக்கு ஆசைப்பட்டாயா?
தாய் தந்தையரின் மனம் நோகும்படி நடந்தாயா?
கண்களால் செய்த தவறென்ன?
கைகளால் செய்த தவறென்ன?
கால்களால் செய்த தவறென்ன?
இப்படி நம்மை நாமே கேட்டுக்கொள்ளும் போது நமக்குத்தெரியும்
நம் செய்தவைகளில் கூடுதல் சரியா? தவறா? என்று


மற்றவர்களின் குறை நிறைகளைப் பார்ப்பதைவிட்டு விட்டு நம்மை நாம் முதலில் திருத்துவோம்.
நம்மைக்கண்டு மற்றவரும் திருந்த நாம் முன்னுதாரனமாக இருப்போம்.


நமக்கு ஒருவர்
 கெடுதல் செய்தபோதும் அவர்களூக்காக இறைவனிடம் துஆ கேட்ப்போம், இறைவா இன்னாரின் குற்றங்களை மன்னித்து அவரையும் நல்வழிப்படுத்து என்று .. விரைவிலேயே அவரின் குணம் மாறிவிடும் நம்மைத்தேடி வந்து நன்மை புரிவார்.


நம்மை நாமே கேள்விகள் கேட்டு நம் தவறுகளை நாமே திருத்திக்கொண்டால்,
இறைவன் நம்மை பெரும் பாவங்களிலிருந்து நம்மைக் காப்பாற்றுவான்.


மனிதர்களே!
உங்களையும் உங்களுக்கு
முன் சென்றோரையும் படைத்த
உங்கள்
இறைவனை வணங்குங்கள்
இதனால் [தண்டனையிலிருந்து]
தப்பித்துக்கொள்வீர்கள்.


2:21. [அல் குர்ஆன்]..



இந்த விபரங்கள் ரவுலத்துல் ஜன்னாவிலிருந்து எடுத்தேன் நன்றி..  [http://rawlathuljanna.blogspot.com/]

//////விசாரிக்கப்படுவதற்கு முன்னர் விசாரித்துக் கொள்வோம்

ஒவ்வொரு நாள் முடிவிலும் அன்றைய தினத்தின் நம்முடைய நடவடிக்கைகள் பற்றிச் சிறிது சிந்தித்துப் பார்க்க வேண்டும். நாம் செய்த நன்மைகள் என்ன? தீமைகள் என்ன? சீர்திருத்தப்பட வேண்டியது என்ன? அதிகப்படுத்த வேண்டியது, தவிர்ந்து கொள்ள வேண்டியது என்ன? என்பன போன்ற கேள்விகளைக் கேட்டுக் கொள்வது நல்லது.

ஒவ்வொரு நாளும் இஸ்லாத்துடன் இருப்பதற்கு - உங்களது நினைவுக்குச் சில துளிகள் :-
அதிகாலைத் தொழுகையை, அதன் குறித்த நேரத்தில், கூட்டாக இணைந்து, பள்ளியில் தொழுதீர்களா?

ஐங்காலத் தொழுகைகளை பள்ளிவாசலில் வைத்து, முதல் ஜமாஅத்துடன் நிறைவேற்றினீர்களா?

இன்றைய தினம் திருமறையில் இருந்து சில வசனங்களை ஓதினீர்களா?
ஒவ்வொரு தொழுகையின் முடிவிலும் அல்லாஹ்வின் திருநாமங்களை (திக்ருகளை)த் துதித்தீர்களா?
தொழுகைக்கு முன்பும் அல்லது பின்பும் உள்ள சுன்னத்தான

தொழுகைகளை நிறைவேற்றினீர்களா?
தொழுகையின் பொழுது நீங்கள் ஓதக் கூடிய வசனங்களின் பொருள்களை விளங்கி ஓதினீர்களா?
மரணத்தையும், மரணத்திற்குப்பின் உள்ள விசாரணை நாள் பற்றியும்
நினைவு கூர்ந்தீர்களா

மறுமைத் தீர்ப்பு நாள் பற்றியும், அந்த நாளின் கடுமை பற்றியும் நினைத்துப் பார்த்தீர்களா?

யா அல்லாஹ்..! என்னை அந்த சுவனத்தினுள் பிரவேசிக்க அனுமதிப்பாயாக..! என்று மூன்று முறை கூறினீர்களா? ஏனென்றால், ''யா அல்லாஹ், என்னை சுவனத்தினுள் அனுமதிப்பாயாக - என்று மூன்று முறை கூறினால், அந்த சுவனம் (இவ்வாறு) பதிலளிக்கின்றது : யா அல்லாஹ், அவன் அல்லது அவளை என்னுள் நுழைந்து விட அனுமதிப்பாயாக..! (என்று சுவனம் அல்லாஹ்விடம் மன்றாடுகின்றது). (திர்மிதீ)

இறைத்தூதர் (ஸல்) அவர்களின் நபிமொழி ஒன்றையேனும் இன்று வாசித்தீர்களா?
தீமைகளிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும், அத்தகைய தீங்கினைச் செய்து கொண்டிருப்பவர்களிடமிருந்தும் விலகிக் கொள்ள வேண்டும் என்று நினைத்தீர்களா?

செவிப்புலனையும், பார்வையையும், சிந்திக்கும் திறனையும் இன்னும் இது போன்ற எண்ணற்ற அருட்கொடைகளை உங்களுக்கு வழங்கியிருக்கும் அல்லாஹ்விற்கு, தினமும் நன்றி கூறிக் கொண்டிருக்கின்றீர்களா?

இன்றைய தினம் ஏழைகளுக்கும், தேவையுடையவர்களுக்கும் உணவளித்தீர்களா அல்லது அவர்களுக்கு உதவினீர்களா?

உங்களின் (தவறுகளின்) மீதும், அல்லாஹ்வின் பொருட்டும் உங்களை நீங்களே கடிந்து கொண்டீர்களா?

பிறர் மீது கடுமையாக நடந்து கொள்வது அல்லது சுய விளம்பரத்துடன் நடந்து கொள்வதனின்றும் தவிர்ந்து கொண்டீர்களா?

அல்லாஹ்வின் அச்சத்தால் அழுதீர்களா?

ஃபஜ்ருத் தொழுகை அல்லது இஷாத் தொழுகைக்குப் பின் அல்லாஹ்வினை நினைவு கூர்ந்தீர்களா?

நீங்கள் செய்து விட்ட பாவங்களுக்காகவும், இன்னும் வரம்பு மீறி நடந்து கொண்டதற்காகவும், இஸ்திஃக்ஃபார் என்ற பாவ மன்னிப்புக் கோரினீர்களா?

இறைவா..! உன்னுடைய உவப்பிற்குரிய வழியில், ''ஷஹீத்"" என்ற அந்தஸ்தில் நான் மரணமடைய வேண்டும் என்று அல்லாஹ்விடம் மனமுருகி வேண்டிக் கொண்டீர்களா? இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ''எவரொருவர் அல்லாஹ்விடம் நேர்மையான முறையில் தான் ஷஹீத் என்ற அந்தஸ்தில் மரணமடைய வேண்டும் என்று விரும்பிக் கேட்கின்றாரோ, அவ்வாறு பிரார்த்திக்கும் அவன் அல்லது அவளின் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக் கொள்கின்றான், அவன் அல்லது அவள் - அவர்களுடைய படுக்கையில் மரணமடைந்தாலும் சரியே..! (முஸ்லிம்)
மார்க்கத்தில் என்னுடைய இதயத்தை நிலைத்திருக்கச் செய்வாயாக என்று பிரார்த்திப்பதுண்டா?
உங்களது பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்படக் கூடிய நேரங்கள் என்று சில நேரங்கள் உண்டு. அந்த நேரங்களில் நீங்கள் அல்லாஹ்வினிடத்தில் பிரார்த்தித்ததுண்டா?
இஸ்லாமிய மார்க்க அறிவினை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற நன்னோக்கோடு, புதிய இஸ்லாமிய நூல்களை வாங்கினீர்களா?

இறைநம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும், பெண்களுக்கும், உயிருடன் உள்ளவர்களுக்கும் அல்லது மரணித்தவர்களுக்கும் பாவ மன்னிப்புக் கோரினீர்களா? ஏனென்றால் அவ்வாறு நீங்கள் செய்கின்ற பிரார்த்தனை ஒவ்வொன்றுக்கும் அல்லாஹ் நற்கூலி வழங்குகின்றான்.

இஸ்லாம் என்ற அருட்கொடையை என்மீது அருளியதன் காரணமாக என்னை முஸ்லிமாக உருவாக்கியவனே.. உனக்கே நன்றிகள் பல என்று அவனது அருட்கொடைகள் பற்றி நினைவு கூர்ந்து நன்றி செலுத்தினீர்களா?
உங்களது சகோதர மற்றும் சகோதரிகளை அல்லாஹ்விற்காக மட்டுமே அவனது திருப்பொருத்ததினை நாடி சந்தித்ததுண்டா?

மக்களையும், உங்களது குடும்பத்தாரையும், உங்களது சகோதர, சகோதரிகளையும் அல்லது அண்டை அயலார்களையும் இன்னும் உங்களுடன் தொடர்புள்ள அனைவரையும் அல்லாஹ்வின் மார்க்கத்தின் பக்கம் அழைத்து அழைப்புப் பணி புரிந்தீர்களா?

உங்களைப் பெற்றவர்கள் மீது கருணையுடன் நடந்து கொண்டீர்களா?
இன்றைய தினத்தில் ஒரு பிரச்னையைச் சந்தித்து, அதன் பின்னர் : ''இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்"" (அவனிடமிருந்தே வந்தோம், அவனிடமே நம்முடைய மீளுதல் இருக்கின்றது) என்று கூறினீர்களா?

யா அல்லாஹ், ''நான் செய்து விட்ட தவறுகளுக்காகவும் இன்னும் அறிந்தும் செய்தவற்றுக்கும் உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகின்றேன். என்னுடைய அறியாமையின் காரணமாகச் செய்து விட்ட தவறுகளுக்காகவும் உன்னிடம் பாவமன்னிப்புக் கோருகின்றேன்."" இவ்வாறு நீங்கள் பாவ மன்னிப்புக் கோருவீர்களென்றால் அல்லாஹ் உங்களது சிறிய மற்றும் பெரிய பாவங்களை மன்னித்தருள்கின்றான். பிரார்த்தித்தீர்களா?

மரணத்திற்குப் பின் உயிர் கொடுத்து எழுப்பப்படவிருக்கின்ற அந்த மறுமைநாளில் இவ்வுலகில் நாம் செய்து கொண்டிருந்தவைகள் பற்றி, ''விசாரிக்கப்படுவதற்கு முன்னர் நம்மை நாமே விசாரித்துக் கொள்வோம்.""

'எங்கள் இறைவனே! உங்கள் இறைவன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் என்று ஈமானின் பக்கம் அழைத்தவரின் அழைப்பைச் செவிமடுத்து நாங்கள் திடமாக ஈமான் கொண்டோம்¢ 'எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! எங்கள் தீமைகளை எங்களை விட்டும் அகற்றி விடுவாயாக, இன்னும், எங்க(ளுடைய ஆன்மாக்க)ளைச் சான்றோர்களு(டைய ஆன்மாக்களு)டன் கைப்பற்றுவாயாக!" ஸ_ரது ஆல இம்றான் 193,


اللَّهُمَّ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ


”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக. மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”///

அன்புடன் மலிக்கா

வேண்டுகோள்..

இங்கே பதியப்படும் அனைத்தும், நான் என்னை தெளிவுப்படுத்திக்கொள்ளவும். ஈருலக வாழ்க்கையையும் அறிந்துக்கொள்ளவும். தொடங்கியுள்ள பயணம். அதில் தாங்களும் தெரிந்துகொள்வதில் பெருமிதம். ஆனால் இதை தவறானமுறையில் விளங்கிக்கொண்டு வீணான விவாதங்களோ தர்க்கங்களான கருத்துக்களாகவோ அமைத்துவிட வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்..