.

வருகை புரியும் அனைவர்மீதும் இறைவனின் அருளும் சாந்தியும் அளவில்லாமல் கிடைக்கட்டும் Photobucket

அன்புள்ள ஆன்மாவே 2

| |


இன்று இறைவனின் சோதனையைப்பற்றி பகிர்ந்துகொள்ளலாம் என வந்துள்ளேன்.
ஓரளவு அச்சத்தாலும்,பசியாலும்,
செல்வங்கள், உயிர்கள்,
மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும்
உங்களை சோதிப்போம்.
பொறுத்துக்கொண்டோருக்கு
நற்ச்செய்தி கூறுவீராக!
              [அல்குர்ஆன் பாகம்-2   155.]


நம்பிக்கைக் கொண்டோரே!
பொறுமை மற்றும் தொழுகையின் மூலம்
உதவி தேடுங்கள்!
இறைவன் பொறுமையாளார்களுடன்
இருகிறான்.
       [அல்குர்ஆன் பாகம்-2  153.]

சோதனை. மண்ணில் பிறந்த, பிறக்கின்ற, பிறக்கப்போகின்ற, ஒவ்வொரு ஜீவராசிகளுக்கும் உண்டு.

சோதிப்பதால் நாம் நஷ்டமடைந்துவிட்டோம் என்றுமட்டும் எண்ணம் கொள்ளாதே, இறைவன் சோதிப்பதே நாம் நலமாக வாழவேண்டும் ஈருலகிலும் என்பதற்க்காகத்தான்.

எந்த ஓரு ஆன்மாவுக்கும் அதன் சக்திக்குமீறிய சோதனையை இறைவன் தருவதில்லை.
நாம் ஒன்றைச் சரியென்போம் அதுவே தவறாக இருக்கலாம் நாம் தவறென்போம் அதுவே சரியாக இருக்கலாம்.

நமக்கு அனைத்தையும் அறியவைக்கத்தானே முதலில் பெற்றோரைத்தருகிறான்
நம்மை பெற்றடுத்தவர்களுக்கே நமக்கு எது நல்லது? எது கெட்டது? என
அறிந்து அதை நமக்காச்செய்யும்போது நம் பெற்றோர்களையே படைத்தவனுக்கு தெரியாதா எது நன்மை எது தீமையென?

ஆன்மாவே நீ கேட்கலாம்?

இவ்வளவு நுணுக்கமாகப்படைத்தவன் ஏன் நம்மை துன்ப துயரத்தில் ஆழ்த்துகிறான் கஷ்ட நஷ்டங்களைத்தருகிறான் என்று?

ஆன்மாவே!
உன்னை பெற்றெடுத்த பெற்றோர்கள் நீ நலமாக வாழவேண்டுமே என்று உன்னை ஏசிப்பேசி சோதனைகள் தருவதில்லையா?
உன் திறமைகள் வெளிவர உன் ஆசிரியர்கள் உனக்கு பரிட்சை என்ற சோதனை தருவதில்லையா?
உன்காதல் நிறைவேர உனக்கு நீயே பல பல சோதனைகளை செய்துக்கொள்வதில்லையா?
நீ உயர்ந்து முன்னுக்குவர பல சோதனைகளைக் கடக்கவில்லையா?

அதெல்லாம் சரியென்றால் இறைவன் செய்வது பிழையா?

நினைத்துப்பார் மனிதனாகப்பட்டவனையே மனிதன் சோதித்துதான் வெற்றியடைச்செய்கிறான்.
எதையும் சுலபமாக அடைந்துவிடமுடியாது அப்படி அடைந்துவிட்டுவதென்றால் நம்முடைய பிறப்பென்பதெதற்கு?

அனைத்தையும் படைத்து அதை மனிதர்களுக்காகவே நலம்பயக்கச்செய்த
இறைவனுக்கு அதனை மிக சுலபமாக அனுப்பவிக்க வைக்ககவும் வழிவகுக்கத்தெரியாதா?

அதனை மிகவும் சுலபமாக கிடைக்கச்செய்தால்
அதன் மதிப்பே தெரியாமல் போய்விடுமே
துன்பம் வந்தால்தானே இன்பத்தின் அர்த்தம் புரியும் அதன் இனிமையுமயறியும்.

தான்படைத்த ஒன்று தன்சொல்லைமீறி தவறும்போது சாதரண மனிதர்களுக்கே தாங்கமுடியாத பட்ச்சத்தில்!
நமக்காக, நம் சுகங்களுக்காக, இந்த பூமியையும் அதனுள் படைக்கப்பட்ட அத்தனையும், மனிதர்களாகிய நமக்கான உபயோகமானதாக்கி
அதில் நல்லவைகளையும், கெட்டவைகளையும், கொடுத்து அதனை பிரித்துப்பார்க்கும் பொருட்டாய் மற்ற ஜீவராசிகளூக்கில்லாத ஒரு மேன்மையாய்
ஆறாவது அறிவையும் கொடுத்தது எதற்க்கு?

அறிவைக்கொடுத்தும் அறிவிழந்து நடக்கிறோமென்றால் அதற்காகத்தான் அப்பப்ப சோதனைகளை பலவடிவங்களாய் மாற்றி அதனை நம்மை உணரவைக்கிறான்.
சிலநேரம் நன்மைக்கே தீமைவந்துசேரும் அதுபோல் நமக்குதோன்றும்
அதிலும் நம்மை சோதிக்கத்தான்

நல்லது கிடைகும்போது அதை ஏற்று என் இறைவன் எனக்காக எவ்வளவு நல்லது செய்கிறான் என போற்றிப்புகழும் மனம்
சிறு துன்பத்தை சோதனையாய் தரும்போது ஏற்றுக்கொள்ள மறுத்து படைத்த இறைவனையே பழிப்பது சரியா? அவன்மேலேயே பழிசொல்லுதல் முறையா?
உலகம் ஓர் சோதனைக்களம் அந்த சோதனைகளை நீ முறியடித்து நல்வழியையே பின்பற்றி
முன்னுவர உன்னால் முடிகிறாதா என இறைவன் சோதிக்கிறான்.

ஆன்மாவே
உன்னால் முடியாதா?
முடியும். முடியும் என்பதால்தான் முடிந்தவரை சோதிக்கிறான்
முடியவில்லையென்னும் பட்ச்சத்தில்
முடிவை அவனே முடிவு செய்வான்.

அகிலத்தையே படைத்த இறைவனுக்கு அனைத்தும் தெரியும்
நம்மை எப்படி வழிநடத்தவேண்டுமென்றும் அவனே அறிவான்.

ஆகவே ஆன்மாவே!
சோதனையின்போதும் கலங்காமல் என் இறைவன் எனக்கு நன்மைகளையே செய்வான். நல்லதுக்காவே செய்வான்.
என்று உணர்ந்து
சோதனையான சமயத்திலும் இறைவனை பிராத்தனை செய்

என் இறைவா!
இச்சோதனையில் நன்மையளிப்பாயாக!
இச்சோதையைக்கொண்டு எனக்கு வெற்றி தருவாயாக!
இச்சோதனையின் மூலம் உனக்கும் எனக்குமுள்ள
நெருக்கத்தை அதிக்கப்படுத்துவாயாக!
என்று மனமுருகி இறைவனிடம்
பிரத்தனை செய்.

வந்த சோதனைகள் அனைத்தும்
வந்த தடம் தெரியாமல்போய்விடும்.

ஆன்மாவே இன்று இறைவனின் சோதனையைப்பற்றி
அறியத்தந்த இறைவன்

இன்ஷாஅல்லாஹ்
இறைவன் நாடினால்
அடுத்த நல்லதொரு விசயத்தை பகிர்ந்துகொள்ள உதவுவான்
என்ற நம்பிக்கையோடும்
அதுவரை நம் இறைவன்மீதும்
உன்மீதும்
அனைத்துமனித்குலத்தின்மீதும் அன்புகொண்டவாறு
விடை பெறுகிறேன்.

இறைவா!
உன்னையே வணங்குகிறேன்
உன்னிடமே உதவியும் தேடுகிறேன்


அன்புடன் மலிக்கா

9 comments:

S.A. நவாஸுதீன் said...

////////நம்பிக்கைக் கொண்டோரே!
பொறுமை மற்றும் தொழுகையின் மூலம்
உதவி தேடுங்கள்!
இறைவன் பொறுமையாளார்களுடன்
இருகிறான்.////////

நல்ல பகிர்வு. ரொம்ப நல்ல விளக்கத்துடன் நன்றாக எழுதியிருக்கேமா. நம் அனைவரின் இம்மை/மறுமை வாழ்க்கை வெற்றியடைய வல்ல இறைவனை வேண்டுவோம்.

Jackiesekar said...

ரொம்பவே...இறைஞ்சி கேட்கின்றீர்கள்... கடவுள் நிச்சயம் செவி சாய்பார்...

அன்புச்சாமி said...

/சோதனை. மண்ணில் பிறந்த, பிறக்கின்ற, பிறக்கப்போகின்ற, ஒவ்வொரு ஜீவராசிகளுக்கும் உண்டு/

சத்தியமான உண்மை நாங்களும் நல்ல்வைகளை அறிய இன்னும் எதிர்பார்க்கிறோம்

அருள் said...

/என் இறைவா!
இச்சோதனையில் நன்மையளிப்பாயாக!
இச்சோதையைக்கொண்டு எனக்கு வெற்றி தருவாயாக!
இச்சோதனையின் மூலம் உனக்கும் எனக்குமுள்ள
நெருக்கத்தை அதிக்கப்படுத்துவாயாக!
என்று மனமுருகி இறைவனிடம்
பிரத்தனை செய்/

என் பிதாவே.ன்னு நான் கேட்டதுபோல் இருக்கு மிக அருமைங்க தொடர்ந்து எழுதுங்க...

பாத்திமா ஜொஹ்ரா said...

உருக்கமான,விளக்கமான,நெஞ்சை உருக்கும் துவா.ஏக இறைவன் நம்மை பொருந்திக் கொள்வானாக

ஸாதிகா said...

அல்ஹம்துலில்லாஹ்.மலிக்கா,அழகுற குர் ஆன் வசனங்களைத்தேர்வு செய்து விளக்கி இருக்கின்றீர்கள்.வல்ல ரஹ்மான் எல்லா வித பரகத்துகளையும் அருள்வானாக!

ஹுஸைனம்மா said...

//எந்த ஓரு ஆன்மாவுக்கும் அதன் சக்திக்குமீறிய சோதனையை இறைவன் தருவதில்லை.//

தன்னம்பிக்கை தரும் இறைவசனம் இது!!

பாலா said...

மிகவும் தேவையான பதிவு அனைவரும் அறிந்துக்கொள்ளவேண்டியது மிக்க நன்றி

பாலா

Starjan (ஸ்டார்ஜன்) said...

நல்ல அருமையான விளக்கங்கள் மலிக்கா
அருமையான துவா
இறைவன் நம் பிராத்தனைகளை செவி சாய்ப்பானாக ஆமீன் .

Post a Comment

கருத்துக்களை பகிர்ந்துகொள்ளும்போது நிறைகுறைகளை சரிபார்க்கலாம். பகிந்துகொள்ளுங்களேன் கருத்துக்களை
நானும் என்னை சரிசெய்து கொள்கிறேன் .
பிடிதிருந்தால் ஓட்டும் போடுங்கள்

வேண்டுகோள்..

இங்கே பதியப்படும் அனைத்தும், நான் என்னை தெளிவுப்படுத்திக்கொள்ளவும். ஈருலக வாழ்க்கையையும் அறிந்துக்கொள்ளவும். தொடங்கியுள்ள பயணம். அதில் தாங்களும் தெரிந்துகொள்வதில் பெருமிதம். ஆனால் இதை தவறானமுறையில் விளங்கிக்கொண்டு வீணான விவாதங்களோ தர்க்கங்களான கருத்துக்களாகவோ அமைத்துவிட வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்..