.

வருகை புரியும் அனைவர்மீதும் இறைவனின் அருளும் சாந்தியும் அளவில்லாமல் கிடைக்கட்டும் Photobucket

நமக்கு நாமே

| |

இறைவனின் திருப்பெயரால் ஆரம்பிக்கின்றேன்.
நம்முடைய ஒவ்வொரு செயல்களும் நமக்கு திரும்பிவரும் நன்மை செய்யும் பட்சத்தில் நன்மையாகவும் தீமை செய்யும் பட்சத்தில் தீமையாகவும் வந்துசேரும்.


தினந்தோறும் நம்மை நாம் கேள்விகள் கேட்கவேண்டும்.


 இன்று நீ செய்ததில் எத்தனை நன்மை?
எத்தனை தீமை? யாருக்கேனும் கெடுதல் செய்தாயா? அப்படி செய்திருந்தால் ஏன் செய்தாய்?
மனதளவில் யாருக்கும் தீங்கு நினைத்தாயா?
முகம் சுளிக்கும்படி நடந்து கொண்டாயா?
மற்றவரின் பொருளுக்கு ஆசைப்பட்டாயா?
தாய் தந்தையரின் மனம் நோகும்படி நடந்தாயா?
கண்களால் செய்த தவறென்ன?
கைகளால் செய்த தவறென்ன?
கால்களால் செய்த தவறென்ன?
இப்படி நம்மை நாமே கேட்டுக்கொள்ளும் போது நமக்குத்தெரியும்
நம் செய்தவைகளில் கூடுதல் சரியா? தவறா? என்று


மற்றவர்களின் குறை நிறைகளைப் பார்ப்பதைவிட்டு விட்டு நம்மை நாம் முதலில் திருத்துவோம்.
நம்மைக்கண்டு மற்றவரும் திருந்த நாம் முன்னுதாரனமாக இருப்போம்.


நமக்கு ஒருவர்
 கெடுதல் செய்தபோதும் அவர்களூக்காக இறைவனிடம் துஆ கேட்ப்போம், இறைவா இன்னாரின் குற்றங்களை மன்னித்து அவரையும் நல்வழிப்படுத்து என்று .. விரைவிலேயே அவரின் குணம் மாறிவிடும் நம்மைத்தேடி வந்து நன்மை புரிவார்.


நம்மை நாமே கேள்விகள் கேட்டு நம் தவறுகளை நாமே திருத்திக்கொண்டால்,
இறைவன் நம்மை பெரும் பாவங்களிலிருந்து நம்மைக் காப்பாற்றுவான்.


மனிதர்களே!
உங்களையும் உங்களுக்கு
முன் சென்றோரையும் படைத்த
உங்கள்
இறைவனை வணங்குங்கள்
இதனால் [தண்டனையிலிருந்து]
தப்பித்துக்கொள்வீர்கள்.


2:21. [அல் குர்ஆன்]..இந்த விபரங்கள் ரவுலத்துல் ஜன்னாவிலிருந்து எடுத்தேன் நன்றி..  [http://rawlathuljanna.blogspot.com/]

//////விசாரிக்கப்படுவதற்கு முன்னர் விசாரித்துக் கொள்வோம்

ஒவ்வொரு நாள் முடிவிலும் அன்றைய தினத்தின் நம்முடைய நடவடிக்கைகள் பற்றிச் சிறிது சிந்தித்துப் பார்க்க வேண்டும். நாம் செய்த நன்மைகள் என்ன? தீமைகள் என்ன? சீர்திருத்தப்பட வேண்டியது என்ன? அதிகப்படுத்த வேண்டியது, தவிர்ந்து கொள்ள வேண்டியது என்ன? என்பன போன்ற கேள்விகளைக் கேட்டுக் கொள்வது நல்லது.

ஒவ்வொரு நாளும் இஸ்லாத்துடன் இருப்பதற்கு - உங்களது நினைவுக்குச் சில துளிகள் :-
அதிகாலைத் தொழுகையை, அதன் குறித்த நேரத்தில், கூட்டாக இணைந்து, பள்ளியில் தொழுதீர்களா?

ஐங்காலத் தொழுகைகளை பள்ளிவாசலில் வைத்து, முதல் ஜமாஅத்துடன் நிறைவேற்றினீர்களா?

இன்றைய தினம் திருமறையில் இருந்து சில வசனங்களை ஓதினீர்களா?
ஒவ்வொரு தொழுகையின் முடிவிலும் அல்லாஹ்வின் திருநாமங்களை (திக்ருகளை)த் துதித்தீர்களா?
தொழுகைக்கு முன்பும் அல்லது பின்பும் உள்ள சுன்னத்தான

தொழுகைகளை நிறைவேற்றினீர்களா?
தொழுகையின் பொழுது நீங்கள் ஓதக் கூடிய வசனங்களின் பொருள்களை விளங்கி ஓதினீர்களா?
மரணத்தையும், மரணத்திற்குப்பின் உள்ள விசாரணை நாள் பற்றியும்
நினைவு கூர்ந்தீர்களா

மறுமைத் தீர்ப்பு நாள் பற்றியும், அந்த நாளின் கடுமை பற்றியும் நினைத்துப் பார்த்தீர்களா?

யா அல்லாஹ்..! என்னை அந்த சுவனத்தினுள் பிரவேசிக்க அனுமதிப்பாயாக..! என்று மூன்று முறை கூறினீர்களா? ஏனென்றால், ''யா அல்லாஹ், என்னை சுவனத்தினுள் அனுமதிப்பாயாக - என்று மூன்று முறை கூறினால், அந்த சுவனம் (இவ்வாறு) பதிலளிக்கின்றது : யா அல்லாஹ், அவன் அல்லது அவளை என்னுள் நுழைந்து விட அனுமதிப்பாயாக..! (என்று சுவனம் அல்லாஹ்விடம் மன்றாடுகின்றது). (திர்மிதீ)

இறைத்தூதர் (ஸல்) அவர்களின் நபிமொழி ஒன்றையேனும் இன்று வாசித்தீர்களா?
தீமைகளிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும், அத்தகைய தீங்கினைச் செய்து கொண்டிருப்பவர்களிடமிருந்தும் விலகிக் கொள்ள வேண்டும் என்று நினைத்தீர்களா?

செவிப்புலனையும், பார்வையையும், சிந்திக்கும் திறனையும் இன்னும் இது போன்ற எண்ணற்ற அருட்கொடைகளை உங்களுக்கு வழங்கியிருக்கும் அல்லாஹ்விற்கு, தினமும் நன்றி கூறிக் கொண்டிருக்கின்றீர்களா?

இன்றைய தினம் ஏழைகளுக்கும், தேவையுடையவர்களுக்கும் உணவளித்தீர்களா அல்லது அவர்களுக்கு உதவினீர்களா?

உங்களின் (தவறுகளின்) மீதும், அல்லாஹ்வின் பொருட்டும் உங்களை நீங்களே கடிந்து கொண்டீர்களா?

பிறர் மீது கடுமையாக நடந்து கொள்வது அல்லது சுய விளம்பரத்துடன் நடந்து கொள்வதனின்றும் தவிர்ந்து கொண்டீர்களா?

அல்லாஹ்வின் அச்சத்தால் அழுதீர்களா?

ஃபஜ்ருத் தொழுகை அல்லது இஷாத் தொழுகைக்குப் பின் அல்லாஹ்வினை நினைவு கூர்ந்தீர்களா?

நீங்கள் செய்து விட்ட பாவங்களுக்காகவும், இன்னும் வரம்பு மீறி நடந்து கொண்டதற்காகவும், இஸ்திஃக்ஃபார் என்ற பாவ மன்னிப்புக் கோரினீர்களா?

இறைவா..! உன்னுடைய உவப்பிற்குரிய வழியில், ''ஷஹீத்"" என்ற அந்தஸ்தில் நான் மரணமடைய வேண்டும் என்று அல்லாஹ்விடம் மனமுருகி வேண்டிக் கொண்டீர்களா? இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ''எவரொருவர் அல்லாஹ்விடம் நேர்மையான முறையில் தான் ஷஹீத் என்ற அந்தஸ்தில் மரணமடைய வேண்டும் என்று விரும்பிக் கேட்கின்றாரோ, அவ்வாறு பிரார்த்திக்கும் அவன் அல்லது அவளின் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக் கொள்கின்றான், அவன் அல்லது அவள் - அவர்களுடைய படுக்கையில் மரணமடைந்தாலும் சரியே..! (முஸ்லிம்)
மார்க்கத்தில் என்னுடைய இதயத்தை நிலைத்திருக்கச் செய்வாயாக என்று பிரார்த்திப்பதுண்டா?
உங்களது பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்படக் கூடிய நேரங்கள் என்று சில நேரங்கள் உண்டு. அந்த நேரங்களில் நீங்கள் அல்லாஹ்வினிடத்தில் பிரார்த்தித்ததுண்டா?
இஸ்லாமிய மார்க்க அறிவினை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற நன்னோக்கோடு, புதிய இஸ்லாமிய நூல்களை வாங்கினீர்களா?

இறைநம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும், பெண்களுக்கும், உயிருடன் உள்ளவர்களுக்கும் அல்லது மரணித்தவர்களுக்கும் பாவ மன்னிப்புக் கோரினீர்களா? ஏனென்றால் அவ்வாறு நீங்கள் செய்கின்ற பிரார்த்தனை ஒவ்வொன்றுக்கும் அல்லாஹ் நற்கூலி வழங்குகின்றான்.

இஸ்லாம் என்ற அருட்கொடையை என்மீது அருளியதன் காரணமாக என்னை முஸ்லிமாக உருவாக்கியவனே.. உனக்கே நன்றிகள் பல என்று அவனது அருட்கொடைகள் பற்றி நினைவு கூர்ந்து நன்றி செலுத்தினீர்களா?
உங்களது சகோதர மற்றும் சகோதரிகளை அல்லாஹ்விற்காக மட்டுமே அவனது திருப்பொருத்ததினை நாடி சந்தித்ததுண்டா?

மக்களையும், உங்களது குடும்பத்தாரையும், உங்களது சகோதர, சகோதரிகளையும் அல்லது அண்டை அயலார்களையும் இன்னும் உங்களுடன் தொடர்புள்ள அனைவரையும் அல்லாஹ்வின் மார்க்கத்தின் பக்கம் அழைத்து அழைப்புப் பணி புரிந்தீர்களா?

உங்களைப் பெற்றவர்கள் மீது கருணையுடன் நடந்து கொண்டீர்களா?
இன்றைய தினத்தில் ஒரு பிரச்னையைச் சந்தித்து, அதன் பின்னர் : ''இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்"" (அவனிடமிருந்தே வந்தோம், அவனிடமே நம்முடைய மீளுதல் இருக்கின்றது) என்று கூறினீர்களா?

யா அல்லாஹ், ''நான் செய்து விட்ட தவறுகளுக்காகவும் இன்னும் அறிந்தும் செய்தவற்றுக்கும் உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகின்றேன். என்னுடைய அறியாமையின் காரணமாகச் செய்து விட்ட தவறுகளுக்காகவும் உன்னிடம் பாவமன்னிப்புக் கோருகின்றேன்."" இவ்வாறு நீங்கள் பாவ மன்னிப்புக் கோருவீர்களென்றால் அல்லாஹ் உங்களது சிறிய மற்றும் பெரிய பாவங்களை மன்னித்தருள்கின்றான். பிரார்த்தித்தீர்களா?

மரணத்திற்குப் பின் உயிர் கொடுத்து எழுப்பப்படவிருக்கின்ற அந்த மறுமைநாளில் இவ்வுலகில் நாம் செய்து கொண்டிருந்தவைகள் பற்றி, ''விசாரிக்கப்படுவதற்கு முன்னர் நம்மை நாமே விசாரித்துக் கொள்வோம்.""

'எங்கள் இறைவனே! உங்கள் இறைவன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் என்று ஈமானின் பக்கம் அழைத்தவரின் அழைப்பைச் செவிமடுத்து நாங்கள் திடமாக ஈமான் கொண்டோம்¢ 'எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! எங்கள் தீமைகளை எங்களை விட்டும் அகற்றி விடுவாயாக, இன்னும், எங்க(ளுடைய ஆன்மாக்க)ளைச் சான்றோர்களு(டைய ஆன்மாக்களு)டன் கைப்பற்றுவாயாக!" ஸ_ரது ஆல இம்றான் 193,


اللَّهُمَّ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ


”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக. மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”///

அன்புடன் மலிக்கா

27 comments:

அன்புடன் மலிக்கா said...

டெஸ்ட்

SUFFIX said...

நமக்கும் நாமே சுய பரிசோதனை செய்து கொண்டு பெரும்பாலான பாவங்களில் இருந்து தப்பிக்க நல்ல கருத்துக்களை எடுத்துக் கூறியுள்ளீர்கள். இறைவனின் அருள் என்றும் உஙகள் மீது நிலவட்டுமாக.

அன்புடன் மலிக்கா said...

/நமக்கும் நாமே சுய பரிசோதனை செய்து கொண்டு பெரும்பாலான பாவங்களில் இருந்து தப்பிக்க நல்ல கருத்துக்களை எடுத்துக் கூறியுள்ளீர்கள். இறைவனின் அருள் என்றும் உஙகள் மீது நிலவட்டுமாக./

ஆமீன்..

ரொம்ப ரொம்ப சந்தோஷம் ஷபியண்ணா நான் வந்து சொன்னவுடன் இங்கு வந்துபார்த்தால் தாங்களின் கருத்துக்கள் அல்ஹம்துலில்லாஹ்.

மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி..

S.A. நவாஸுதீன் said...

மூன்றாவது ப்ளாக் ஓப்பன் பண்ணியாச்சா!

மாஷா அல்லாஹ்.

நல்ல விஷயம். தொடருங்கள்.

ஹுஸைனம்மா said...

மலிக்கா,

மேலும் ஒரு புது பிளாக்கிற்கு வாழ்த்துக்கள். இஸ்லாமின் இனிய பாதையை காட்டித் தரும் உங்களின் உயரிய நோக்கமறிந்து மகிழ்ச்சி!!

ஜெய்லானி said...

எங்கள் இறைவனே! உங்கள் இறைவன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் என்று ஈமானின் பக்கம் அழைத்தவரின் அழைப்பைச் செவிமடுத்து நாங்கள் திடமாக ஈமான் கொண்டோம்¢ 'எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! எங்கள் தீமைகளை எங்களை விட்டும் அகற்றி விடுவாயாக, இன்னும், எங்க(ளுடைய ஆன்மாக்க)ளைச் சான்றோர்களு(டைய ஆன்மாக்களு)டன் கைப்பற்றுவாயாக!" ஸ_ரது ஆல இம்றான் 193,
ஆமீன்....ஆமீன்..

ராஜவம்சம் said...

அஸ்ஸலாமு அலைகும் வரஹ்மத்துல்லாஹ்

வாழ்த்துக்கள்

தொடரட்டும் உங்கள் இறைப்பனி

மாற்றுமதத்தவர்களுக்கும் அழைப்புவிடலாம்

சந்தேகம் ஏதும் இருந்தால் தொடர்புக்கொள்ளவும்

வஸ்ஸலாம்
(என் பெயருக்குப்பின்னால் பெரி....யகதையிறுக்குங்க)

M.A.K said...

மிக அருமையாக சொல்லி இருக்கீங்க. சுய பரிசோதனை செய்வதின் மூலம் நிச்சயம் அநேக தவறுகளை தவிர்க்கலாம். நம்மை நாமே சரி பார்த்து நல்லவர்களாக வாழ்ந்து ஈருலகிலும் வெற்றி பெற எல்லாம் வல்ல அல்லாஹ் உதவி புரிவனாக!

அண்ணாமலையான் said...

அனைவரும் பின்பற்ற வேண்டிய நல்ல கருத்துக்கள்....

Paleo God said...

எல்லா மார்க்கமும் அன்பையும் ஒழுக்கத்தையுமே போதிக்கிறது சகோதரி..:)) இறைவனை விட்டுவிட்டு சடங்குகளில் கவனம் செலுத்துவதால் தான் என்ற அகந்தையில் மனிதன் தொலைதூரம் போகிறான். நல்ல பக்கம் ஒன்றை ஆரம்பித்திருக்கிறீர்கள். நல்ல விதைகளை தூவுவது மட்டுமே நாம் செய்யக்கூடிய வேலை விளைச்சல் நம் கையிலில்லை. நல்ல விதையை தூவினாயா என்று ஒரு சக்தி கேட்க்கும்போது நீங்கள் அங்கே ஆசிர்வதிக்கப்பட்ட ஆத்மாவாக இருப்பீர்கள் என்று எனக்கு தோன்றுகிறது. எல்லாம் வல்ல இறை மிக பெரியது அது நம்மை எப்போதும் காக்கட்டும். நன்றி.::)

அன்புடன் மலிக்கா said...

/S.A. நவாஸுதீன் said...
மூன்றாவது ப்ளாக் ஓப்பன் பண்ணியாச்சா!

மாஷா அல்லாஹ்.

நல்ல விஷயம். தொடருங்கள்./

என்னை ஊக்கப்படுத்துவதில் முன்னுக்குவரும் நவாஸண்ணாவுக்கு மிக்க நன்றி..
தொடர்ந்துவந்து தாங்களீன் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளவும்..

அன்புடன் மலிக்கா said...

/ஹுஸைனம்மா said...
மலிக்கா,

மேலும் ஒரு புது பிளாக்கிற்கு வாழ்த்துக்கள். இஸ்லாமின் இனிய பாதையை காட்டித் தரும் உங்களின் உயரிய நோக்கமறிந்து மகிழ்ச்சி!!/

வாங்க ஹுஸைனம்மா. எல்லாம் இறைவனின் அருள்தான் அவனின் துணையிருந்தால் எதையும் சாதிக்கலாம் என்ற நம்பிக்கையில் நல்வழிப்படுத்தும் பாதையில் என்னை செலுத்துவதோடு முடிந்தால் அனைவரையும் அழைத்துசெல்லலாம் என்ற நல்நோக்கத்தோடு ஆரம்பித்திருக்கிறேன்.

தாங்களைப்போன்றவர்களின் ஆதரவும் இறைவனின் துணையுமிருந்தால் நிச்சயம் நிறைவேரும் என்று நம்புகிறேன்

மிக்க நன்றி ஹுஸைனம்மா..

விஜய் said...

மிக்க மகிழ்ச்சி சகோதரி

இந்த வலைப்பூவின் மூலம் நல்ல பல கருத்துகளை அறிய ஆவலாக உள்ளேன்.

ஏற்கனவே பல முஸ்லிம் நண்பர்கள் மூலம் பல விஷயங்களை தெரிந்து கொண்டு வருகிறேன்.

வாழ்த்துக்கள்

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி இருந்தால் அல்லாஹ்வுக்கு கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும்(முஹம்மதுக்கும்), உங்களில் அதிகாரம் உடையோருக்கும் கட்டுப்படுங்கள்! ஏதேனும் ஒரு விஷயத்தில் நீங்கள் முரண்பட்டால் அதை அல்லாஹ்விடமும், இத்தூதரிடமும் கொண்டு செல்லுங்கள்! இதுவே சிறந்ததும், மிக அழகிய விளக்கமுமாகும்’ (4:59)

விஜய்

நட்புடன் ஜமால் said...

நல்ல பகிர்வு சகோதரி.

தினம் இரவு உறங்க போகும் முன் சுய பரிசோதனை செய்து கொண்டால் அடுத்த நாள் இன்னும் இனிய நாளாக அமையும்.

இதனை பழக்கமாக இருத்தி கொள்ளலாம் வழக்கமாக்கிட கூடாது.

(வழக்கத்தில் மனது ஒட்டாது)

சோலை ராசா said...

தாங்களின் இப்பணி சிறக்க கடவுளை வேண்டுகிறேன் நல்லவைகளை தெரிந்துகொள்ள ஆவலாய் இருக்கிறேன்,

உங்கள் பயணத்தில் எங்களையும் இணைத்துக்கொள்ளுங்கள். நன்மை தீமையை உணரந்துகொள்ள இதுவும் ஒரு பாலமாக இமையுமென எதிர்பார்கிறேன்,

கடவுள் துணையிருபார் என்றேன்றும்..


நட்புடன் சோலை ராசா

saivakothuparotta said...

//மற்றவர்களின் குறை நிறைகளைப் பார்ப்பதைவிட்டு விட்டு நம்மை நாம் முதலில் திருத்துவோம்.
நம்மைக்கண்டு மற்றவரும் திருந்த நாம் முன்னுதாரனமாக இருப்போம்.//

எந்த காலத்திற்கும் இது பொருந்தும்.

வாழ்த்துக்கள், தங்கள் வருகைக்கு நன்றி.

பாத்திமா ஜொஹ்ரா said...

அன்பு மலிக்கா அக்கா,மிக்க மகிழ்ச்சி,உங்கள் தளம் அருமை.இன்ஷா அல்லாஹ்,இன்னும் எழுதுங்கள்,இவைகள் போன்று அல்லாஹ் நமக்கு துணை நிற்பான்.மேலும் எல்லா முஸ்லிம் சகோதர்களையும் ஒருங்கிணைத்து நாம் இஸ்லாத்தினை அழகிய முறையில் மற்ற மக்களுக்கு அறிமுகப்படுத்தவேண்டும்,அதற்கு ராஜ வம்சம் போன்ற சகோதரர்கள் ஊக்கமளிப்பார்கள்.இது பற்றி கருத்து தாங்களேன்.நன்றி

கமலேஷ் said...

புது வருடத்தில் புது ப்ளாக் தொடங்கி இருக்கறீர்கள்...முதல் பதிவே மிகவும் பயனுள்ளதாக அமைத்து இருக்கறீர்கள்...சுய பரிசோதனை அனைவருக்கும் முக்கியமான ஒன்றுதான்...இன்சா அல்லா... உங்களின் புது ப்ளாக்ம் , புது வருடமும் சிறக்க வாழ்த்துக்கள்...

எம்.எம்.அப்துல்லா said...

மாஷா அல்லாஹ். தொடரட்டும் உங்கள் அருட்பணி.தொடர்ந்து இயங்க என் துவா.

நாஸியா said...

மாஷா அல்லாஹ்! ஜஸகல்லாஹு க்ஹைர் சகோதரி.. தொடர்ந்து எழுதுங்கள்.. உங்களுக்கு நன்மை பெருகி பன்மடங்காக இறைவனிடத்தில் உயரும்..

சிங்கக்குட்டி said...

அருமையான ஒரு இடுகை வாழ்த்துகள்.

//நம்முடைய ஒவ்வொரு செயல்களும் நமக்கு திரும்பிவரும் //

ஆரம்பமே மிக அருமை.

ஒவ்வொரு ஆத்மாவும் அதன் அதன் செயலுக்கு பொறுப்பு.

வெற்றி said...

சாரி!எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லைங்க..
ஓர் கருத்து- உங்கள் ப்ளாக்கின் பின்புற வண்ணம் கருப்பாக இருப்பது பெரிய பதிவை படிக்கும் போது கண் எரிச்சலை கொடுக்கிறது..
எனக்கு மட்டும் தான் இப்படியா என தெரியவில்லை..மற்றவர்கள் சொல்லவும்..

அன்புடன் மலிக்கா said...

எனதன்பிற்கிய அனைத்து சகோதர சகோதரிகள். தோழமைகள் அனைவருக்கும் முதற்கன் என் மனமார்ந்த சலாத்தினை கூறிக்கொள்கிறேன்.

நான் எடுத்தித்திறுக்கும் இச்சிறு முயற்சிக்கு உங்கள் அனைவரின் உத்துழைபும் நிச்சயம் வேண்டும்.
இறைவனின் துணையுடன் மேலும் நான் பயணத்தைநோக்கிச்செல்ல
அனைவரின் ஆதரவும் வேண்டும்.

தொடர்ந்த தாங்கள் அனைவரின் வருகையை எதிர்பார்க்கும்
ஓர் இறையடிமை..

வருகைதந்த அனைவருக்கும் என நெஞ்சார்ந்த நன்றி

அன்புடன் மலிக்கா

nitingale said...

nallayirukku melum valere enn vazhthukkal

கலையரசன் said...

அருமைங்க.. அரும!!

தாஜ் said...

assalamu alaikkum malikka

உன் இவ்வலைப்பூக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.நீயும் பயனடைந்து மற்றவர்களும் பயன் பெற என் வாழ்த்துக்களும் துஆவும்

லேட்டான விமர்சனத்துக்கு சாரிப்பா

ஸாதிகா said...

வாழ்த்துக்கள் மலிக்கா!

Post a Comment

கருத்துக்களை பகிர்ந்துகொள்ளும்போது நிறைகுறைகளை சரிபார்க்கலாம். பகிந்துகொள்ளுங்களேன் கருத்துக்களை
நானும் என்னை சரிசெய்து கொள்கிறேன் .
பிடிதிருந்தால் ஓட்டும் போடுங்கள்

வேண்டுகோள்..

இங்கே பதியப்படும் அனைத்தும், நான் என்னை தெளிவுப்படுத்திக்கொள்ளவும். ஈருலக வாழ்க்கையையும் அறிந்துக்கொள்ளவும். தொடங்கியுள்ள பயணம். அதில் தாங்களும் தெரிந்துகொள்வதில் பெருமிதம். ஆனால் இதை தவறானமுறையில் விளங்கிக்கொண்டு வீணான விவாதங்களோ தர்க்கங்களான கருத்துக்களாகவோ அமைத்துவிட வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்..