.

வருகை புரியும் அனைவர்மீதும் இறைவனின் அருளும் சாந்தியும் அளவில்லாமல் கிடைக்கட்டும் Photobucket

அந்த நாட்களில்....

| | 4 comments

 بسم الله الرحمن الرحيم


இஸ்லாம் அழகிய முறையில் பெண்களுக்கான சட்டங்களை வகுத்துக்கொடுத்திருக்கிறது. அதில் ஒன்று மாதவிடாய் [பீரியட்ஸ்] சமயத்தில் பெண்களுக்குண்டானவைகள்..

மாதத்தில் 1 வாரம் அல்லது 3, 4 நாட்கள் வந்து செல்லும்  மாதவிடாய்காலத்தில் அவளை தனித்து வைத்திருக்கவோ! தீண்டப்படாதவளாக கருதவோ சொல்லவில்லை. மாறாக அச்சமயத்தில் அவளுக்கு ஆறுதலாய் பலவிசயங்கள் சொல்லிக்கொடுத்திருக்கிறது.இதுதான் இஸ்லாத்தின் மாண்பு. மாதவிடாய் வந்த பெண்ணொருத்தி என்னென்ன சிரமங்களுக்கு ஆளாகுவாள் அந்த சமயத்தில் அவளால் எது முடியாதோ அதை தடுத்தும். எது முடியுமோ அதை செய்யவும் வலியுருத்துகிறது.

சிலயிடங்களின் மாதவிடாய் வந்தபெண்கள் தனித்துவிடப்பட்டு அந்த நாட்கள் மட்டும் தீண்டத்தகாதவள்என கருத்தபடுகிறாள். அவள் அதைத்தொடக்கூடாது இதைதொடக்கூடாது என்றும் அவள் தொட்ட அனைத்தும் தீட்டு [[பண்ட பாத்திரங்கள் உள்பட]எனவும்.இன்னும் பல மூடநம்பிகைகளும் சேர்த்து புறக்கணிப்படுகிறாள்.

மாதவிடாய் என்பது உடல்ரீதியாய் உண்டான ஒரு கழிவு. அது வெளியேறவில்லையென்றால் உடலுக்கு கேடு. இதை உணர்ந்துதான் இஸ்லாம் அதற்க்குண்டான தீர்வை சொல்லியிருக்கிறது.

தொழுவது நோன்பு நோற்பது கஃபாவை வலம் வருவது தாம்பத்தியம் கூடுவது இந்த ஐந்து காரியங்கள் மட்டுமே அவளுக்கு தடுக்கப்பட்டுள்ளது.

ஒரு பெண் மாதவிடாய்க்காரியாக இருக்கும் நிலையில் தொழுவது, நோன்பு நோற்பது தடுக்கப்பட்டுள்ளது. அக்காலத்தில் அவள் இந்த வணக்கங்களைச் செய்தாலும் அது அங்கீகரிக்கப்படாது.
”ஒரு பெண் மாதவிடாய்க்காரியாக இருக்கும் நிலையில் தொழாமலும், நோன்பு நோற்காமலும் இருக்க வில்லையா?” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டார்கள்.
(நூற்கள்: புகாரி, முஸ்லிம்)

ஒரு பெண் மாதவிடாய்க் காலத்தில் விடுபட்டுப் போன தொழுகைகளை அக்காலம் முடிந்தபின் தொழ வேண்டியதில்லை, விடுபட்ட நோன்புகளை மட்டும் நோற்க வேண்டும்.
”நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் எங்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் விடுபட்ட நோன்பை நோற்றுக் கொள்ளுமாறு நாங்கள் ஏவப்பட்டோம். விடுபட்ட தொழுகையை நிறைவேற்றுமாறு நாங்கள் ஏவப்பட வில்லை” என ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கிறார்.
(நூல்: புகாரி, முஸ்லிம்)

நோன்பிற்கும் தொழுகைக்கும் இடையில் வேறு படுத்தப்பட்டிருப்பதற்குக் காரணம் உண்டு. தொழுகை நாள் ஒன்றிற்கு ஐவேளைகள் நிறைவேற்றியாக வேண்டிய ஒரு கடமையாகும். தகுந்த காரணங்களுக்காக விடுபட்ட தொழுகையை களா செய்ய வேண்டியது கடமையல்ல, ஆனால் நோன்பு அவ்வாறு அல்ல.
மாதவிடாய் பெண் குர்ஆனை திரையின்றி தொடுவது தடுக்கப்பட்டுள்ளது.

அல்லாஹ் கூறுகிறான்: ”பரிசுத்தமானவர்களைத் தவிர அதை யாரும் தொடமாட்டார்கள்.”
(அல்குர்ஆன் 56:79)


பெண்கள் மாதவிடாயாக இருக்கும்போது அவளுடன் உடலுறவில் ஈடுபடுவது தடுக்கப்பட்டுள்ளது.

அல்லாஹ்கூறுகிறான்: ”(நபியே!) அவர்கள் உம்மிடம் மாதவிடாய் பற்றியும் கேட்கிறார்கள். அது ஒரு தீட்டு ஆகும்; ஆகவே மாதவிடாயின்போது பெண்களை விட்டும் விலகியிருங்கள், அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை அணுகாதீர்கள் அவர்கள் தூய்மையடைந்த பின் அல்லாஹ் எப்படிக் கட்டளையிட்டிருக்கின்றானோ அதன்படி அவர் களிடம் செல்லுங்கள், என்று நீர் கூறும்! நிச்சயமாக அல்லாஹ் பாவங்களை விட்டு மீள்பவர்களை நேசிக்கிறான்; தூய்மை யானவர்களையும் நேசிக்கிறான்.” (அல்குர்ஆன் 2:222)

மாதவிடாய் இரத்தம் வெளியாகி முடிந்து குளிக்கும் வரை இந்தத்தடை நீடிக்கும். காரணம் அல்லாஹ்வுடைய சொல்லாகும்.”(மாதவிடாய்) பெண்கள் தூய்மையாகும் வரை அவர்களை அணுகாதீர்கள், அவர்கள் தூய்மையடைந்த பின் அல்லாஹ் எப்படி கட்டளையிட்டிருக்கின்றானோ அப்படி அவர்களிடம் செல்லுங்கள்.

மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில் ஒரு பெண் மக்காவிலுள்ள கஅபாவை வலம் வருவதும் தடுக்கப்பட்டுள்ளது.
ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்ட போது ”ஹாஜிகள் செய்யவேண்டிய எல்லா கிரியை களையும் நீ செய்து கொள்! ஆனால் ‘தவாஃப்’ மட்டும் செய்யாதே! சுத்தமான பின்பே அதைச் செய்துகொள்! என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கட்டளையிட்டார்கள்.” (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பள்ளிவாசலில் இருந்து கொண்டு ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் தொழுவதற்கான பாயை எடுத்துக் கொண்டு வருமாறு கூறினார்கள், அப்போது நான் மாதவிடாய்க் காரியாக இருக்கிறேனே என அவர்கள் கூறியதற்கு ‘மாதவிடாய் உன்னுடைய கையில் இல்லையே!” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (தெளிவுபடக்) கூறினார்கள்.
(நூற்கள்: முஸ்லிம், திர்மிதீ மற்றும் நஸயீ)

அனுமதிக்கப்பட்ட திக்ருகள், துஆக்களை மாத விடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில் ஒருபெண் ஓதிக் கொள்வதில் தவறில்லை. காலை மாலையில் வழக்கமாக ஓதக்கூடியவற்றை ஒதிவருவதும், தூங்கும்போதும், தூக்கத்திலிருந்து எழுந்ததும் துஆக்கள் ஓதுவதிலும், தஃப்ªர், ஹதீஸ், பிக்ஹ் போன்ற நூல்களைப் படிப்பதிலும் தவறில்லை.

மஞ்சள், கலங்கல் நிற இரத்தம் :
மஞ்சள் நிறச்சீழ் போன்ற இரத்தமோ, கலங்கலான, ஊத்தைத் தண்¡ர் நிறத்தைப் போன்ற இரத்தமோ மாதவிடாய்க் காலத்தில் வெளியாகுமானால் அது மாதவிடாய் இரத்தமாகவே கருதப்படும். மாதவிடாய்க் கான சட்டம்தான் அதற்கும் பொருந்தும். மாதவிடாய் அல்லாத நாட்களில் அது வெளியாகுமானால், மாதவிடாய் இரத்தமாக அது கருதப்படாது. அவள் தூய்மையானவளாகவே கருதப்படுவாள்.

”நாங்கள் மாதவிடாயிலிருந்து தூய்மையான பிறகு வெளியாகும் மஞ்சள் அல்லது கலங்கல் நிற இரத்தத்தை (மாதவிடாய் என) ஒரு பொருட்டாகக் கருதுவதில்லை என உம்மு அதிய்யா ரளியல்லாஹு அன்ஹா கூறினார்.” (நூற்கள்: புகாரி, அபூ தாவூது)

ஆகவே மாதவிடாய் காலங்களில் தவிர்க்கவேண்டியவைகளை தவிர்த்து சேர்க்கவேண்டியவைகளை சேர்த்து
இறைவன்கூறியபடியே நடக்க எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவரையும் நல்லதின் பக்கம் நம்மனங்களையும் முகங்களையும் திருப்புவானாக!

மாதவிடாய் ஏற்படும்போது கடைபிடிக்கவேண்டிய  சில குறிப்புகள்.

முதலில் மனதில் தோன்றும் வெறுப்பை மாற்றிக்கொள்ள வேண்டும்.
மாதவிடாய் தோன்றும் நாட்களை கவனத்தில் கொண்டு அந்த காலங்களில் வெளியூர் பயணம், மற்ற கடின வேலைகளை தவிர்க்க வேண்டும்.

மாதவிடாய் காலத்தில் மென்மையான எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவுகளை உண்ண வேண்டும்.

எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளைத் தவிர்த்தல் நல்லது.

அதிக நார்ச்சத்துள்ள பழங்களை சாப்பிட வேண்டும். பழங்கள் மலச்சிக்கலைப் போக்குவதுடன் உடலுக்கு வலுவைத் தரும்.

அதிக உதிரப்போக்குள்ள காலத்தில் தலைக்கு தண்­ணீர் ஊற்றி குளிப்பதை தவிர்க்க வேண்டும். பருத்தியினால் ஆன உடைகளை அணியவேண்டும்.

ஓய்வு மிகவும் அவசியம். உதிரப்போக்கு காரணமாக சிலருக்கு களைப்பு ஏற்படும். ஓய்வும், உறக்கமும் நல்லது. தலைவலி, எரிச்சல், இருந்தால் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்ளுங்கள். மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்துகளோ, மாத்திரைகளையோ உபயோகிக்கக் கூடாது.

மாதவிலக்கின் போது வயிற்று வலியிருந்தால்:

இளக்கொழுந்து வேப்பில்லை ஒரு கைப்பிடி, பசும்பால் ஒரு கப், வேப்பிலையை மையாக அரைத்து அதனை காய்சாத பசும்பாலில் கலக்கி ,மூக்கை பொத்திக்கொண்டு மாதவிடாய் வந்த முதல் நாளிலிருந்து மூன்று நாட்கள் காலை, வெரும் வயிற்றில் குடித்தால் அந்த நாள் வலி வராது .

பத்து கிராம் சீரகத்துடன் 50 மி.லி. தண்ணீ­ர் சேர்த்து நன்கு காய்ச்சி அது பாதியாக வந்தவுடன் வடிகட்டி அதனுடன் சிறிது பெருங்காயத்தூள் சேர்த்து காலை, மாலை அருந்தி வந்தால் வயிற்று வலி நீங்கும். இந்தக் காலங்களில் உணவில் அதிக அளவு பெருங்காயம் சேர்த்துக் கொண்டால் அது நரம்புகள் மற்றும் மூளையின் செயல்பாட்டை புத்துணர்வு பெறச் செய்யும்.

மாதவிலக்கின் போது ஓழுங்கற்ற உதிரப்போக்கு இருந்தால் இரண்டு ஸ்பூன் கருப்பு எள்ளைக் கழுவி எடுத்துக்கொண்டு அதில் ஒரு டீஸ்பூன் பனைவெல்லம் கலந்து தண்ணீ­ரில் காய்ச்சி வடிகட்டி அந்த தண்­ணீரை ஆறவைத்து குடித்து வந்தால் உதிரப்போக்கு சீராக இருக்கும்.

மாதவிலக்கின்போது கடுமையான உபாதைகள் தோன்றினால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.

இறைவா!
உன்னையே வணங்குகிறேன்
உன்னிடமே உதவியும் தேடுகிறேன்

கொடுங்கள் குறையாது!

| | 3 comments

بسم الله الرحمن الرحيم
அளவற்ற அருளாளனும் நிகறற்ற அன்புடையோனுமாகிய இறைவனின் பெயரால்
தர்மம் செய்வது தலை சிறந்தது.
இறைவன் தனது திருமறையில் கூறுகிறான்.

யார் தங்கள் பொருள்களை (தான தர்மங்களில் )இரவிலும், பகலிலும் இரகசியமாகவும் பகிரங்கமாகவும் செலவு செய்கின்றார்களோ அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் நற்கூலி இருக்கிறது. (அல்குர்ஆன் 2:274) 

  அவனை நேசித்ததற்காக ஏழைக்கும் அனாதைக்கும் சிறைப்பட்டவருக்கும் உணவளிப்பார்கள். அல்லாஹ்வின் முகத்துக்காகவே உங்களுக்கு உணவளிக்கிறோம். உங்களிடமிருந்து பிரதிபலனையோ நன்றியையோ நாங்கள் எதிர்பார்க்கவில்லை எங்கள் இறைவனிடமிருந்து கடுமையும் நெருக்கடியும் நிறைந்த நாளை நாங்கள் அஞ்சுகிறோம்" (எனக் கூறுவார்கள்.) எனவே அந்த நாளின் தீங்கி ருந்து அவர்களை அல்லாஹ் காப்பாற்றி னான். அவர்களுக்கு முக மலர்ச்சியையும் மகிழ்ச்சியையும் வழங்கினான். அவர்கள் பொறுத்துக் கொண்டதால் சொர்க்கத்தையும் பட்டையும் பரிசாக அவர்களுக்கு வழங்கினான். (அல்குர்ஆன் 76:8-12)

தர்மம் செய்வதில் கஞ்சத்தனம் கூடாது
இரகசியமாக தர்மம் செய்தல்.
பகிரங்கமாவும் தர்மம் செய்தல்.
தாராளமாக தர்மம் செய்தல்.
இருப்போர்கள் இல்லாதோருக்கு வாரிவழங்குதல் என தர்மங்களை தாளரமாக வழங்கவேண்டும்.
 
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: தேவைபோக எஞ்சியதை தர்மம் செய்வதே சிறந்ததாகும். மேலும் முதலில் உம்முடைய வீட்டாரிடமிருந்து தர்மம் செய்ய ஆரம்பிப்பீராக!" அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:  
யார் முறையான சம்பாத்தியத்தில் ஒரு பேரீச்சம் பழத்தின் மதிப்புக்குத் தர்மம் செய்தாரோ.. அல்லாஹ் பரிசுத்தமானவற்றைத் தவிர வேறெதையும் ஏற்றுக் கொள்வதில்லை - அதை நிச்சயமாக அல்லாஹ் தன்னுடைய வலது கரத்தால் ஏற்று, பிறகு நீங்கள் உங்களின் குதிரைக் குட்டியை வளர்ப்பது போன்று அதன் நன்மையை மலைபோல் உயரும் அளவுக்கு வளர்த்து விடுவான்."  
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
 
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:  
ஒவ்வொரு நாளும் இரண்டு வானவர்கள் இறங்குகின்றனர். அவ்விருவரில் ஒருவர், 'அல்லாஹ்வே! தர்மம் செய்பவருக்குக் பிரதிபலனை அளித்திடுவாயாக!' என்று கூறுவார். இன்னொருவர் அல்லாஹ்வே! (தர்மம் செய்யாமல் பொருளைத்) தடுத்து வைத்துக் கொள்பவர்களுக்கு அழிவை ஏற்படுத்துவாயாக!" என்று கூறுவார். அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
 
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
 ஓரிரு கவளம் உணவுக்காக, அல்லது ஓரிரு பேரீச்சம் பழங்களுக்காக மக்களிடம் அலைபவன் ஏழையல்லன்; ஏழை யாரெனில் அவன் தன் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள எச்செல்வத்தையும் பெற்றிருக்க மாட்டான்; பிறரும் அவனுடைய நிலையை அறிந்து தர்மம் செய்ய மாட்டார்கள், தானும் வலியச் சென்று கேட்கமாட்டான்." (இத்தகையவனே உண்மையான ஏழையாவான்.) 
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: பேரீச்சம் பழத்தின் சிறு துண்டையேனும் (தர்மம்) செய்து நரகத்திலிருந்து (உங்களைப்) பாதுகாத்துக் கொள்ளுங்கள். 
அதீ இப்னு ஹாத்திம்(ரலி) அறிவித்தார்.

தவித்தநேரத்தில் தாகம் தீர்ப்பதும் தர்மம்  அதிகமதிகம் தர்மங்கள் செய்து இம்மைக்கும் மறுமைக்குமான நன்மைகளை அதிகரிக்க எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவானாக..

இறைவா!
உன்னையே வணங்குகிறேன்
உன்னிடமே உதவியும் தேடுகிறேன்..

நம்பிக்கைகொண்டோருக்கு..

| | 7 comments


بسم الله الرحمن الرحيم
அளவற்ற அருளாளனும் நிகறற்ற அன்புடையோனுமாகிய இறைவனின் பெயரால் .

உறங்கும் முன் ஓதும் துஆ

اللهم با سمك أمو ت و ا حيا

அல்லாஹும்ம பிஸ்மி(க்)க அமூத்து வஅஹ்யா.
பொருள்: 
இறைவா!
உன் பெயரைக் கொண்டே மரணிக்கிறேன்,
உயிர் பெறுகிறேன்.
நூல் புகாரி
 --------------------------------------------------------------------

“அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தரவேண்டாம். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தாளியைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது வாய் மூடி இருக்கட்டும்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் :அபூ ஹுரைரா (ரலி),  
ஆதாரம் : புகாரி. 

 இறைவா!
உன்னையே வணங்குகிறேன்
உன்னிடமே உதவியும் தேடுகிறேன்

மரண அறிவிப்பு.

| | 8 comments

بسم الله الرحمن الرحيم
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய இறைவனின் திருப்பெயரால்.

சமையல் அட்டகாசம் ஜலீலாக்காவின் தந்தை  இன்று காலை மரணமடைந்து விட்டார்கள் . [இன்னா லில்லாஹி வ இன்னா இளைஹி ராஜிவூன்.]

உடல் நலம் சரியிலாமல் இருந்து  காலில் ஆப்ரேஷன் செய்திருந்தார்கள். ஹாஸ்பிட்டலில் இருந்து நேற்றைய முன்தினம்தான் வீட்டுக்கு டிச்சார்ஜ் ஆகிபோனவர்கள் இன்று இறந்துவிட்டார்கள்.. அவர்களின் இழப்பு அக்குடும்பத்திற்க்கு ஈடுசெய்யமுடியாத இழப்பு. என்ன ஆறுதல் சொன்னாலும் ஏற்கமுடியாத நிலையில் அவர்கள் மனமிருக்கும். ஆனாலும் இதுபோன்ற இழப்புகளை ஏற்கத்தானே பூமிக்கு வந்துள்ளோம். இதிலிருந்துமட்டும்  யாரும் தப்பிக்கமுடியாது..மண்ணிற்கு வரும் ஒவ்வொரு உயிரும் மீண்டும் மண்ணிற்கு போவது உறுதி இது மான்புடையோன் வகுத்த நியதி.. 

ஜலீலாக்காவின் தந்தைக்காக அவர்களின் மறுமை வாழ்வுக்காவும் . அவர்களின் குடும்பத்தின் மனநிம்மதிக்காவும்அனைவரும் துஆச்செய்யுங்கள். 

யாஅல்லாஹ் நிச்சியமாக நீ மிக்க மன்னிப்பவன். மன்னிப்பதை விரும்புகிறவன். ஆகையால் தந்தையவர்கள் அறிந்தும் அறியாமலும் செய்த  பிழைகள் யாவற்றையும் நீ மன்னித்து விடுவாயாக!  இறைவா! அவர்களின் பாவங்களை மன்னிதருள்வாயாக! அவர்களுக்கு  நற்பதவியை கொடுத்து சொர்க்கத்தில் நுழைச்செய்து நல்லோர்களின் கூட்டத்தில் சேர்தருள்வாயாக!
எங்களின் துவாக்களை யாவற்றையும் ஏற்றுக்கொள்வாயாக.

ஜலீலாக்கா ஊருக்கு கிளம்புகிறார்கள். அவர்களின் பயணம் நல்லபடியாக அமைந்து குடும்பதைகண்டு ஆறுதல் அளித்துவிட்டுவர எல்லாம் வல்ல இறைவன் நல்லருள் புரிவானாக..காலையில் ஏழுமணிக்கு அக்கா போன்செய்து செய்தியை சொல்வதற்குள் அழுகையின் ஒலி ஓங்கியது மனதை கனகச்செய்துவிட்டது [இதோ கிளம்பப்போகிறோம் ஏர்போட்டுக்கு வழியனுப்ப]  வெளிநாட்டுவாழ்க்கையில் பலதை இழக்கிறோம் அதிலும் இதுபோன்ற மரண நிகழ்வுகளை அறியும்போது நம்   நெஞ்சம் உடைந்து கண்ணீரை அடக்கமுடியாமல் தவிக்கிறோம்..
நமது தவிப்புகளை தீர்ப்பது கண்ணீர்களை துடைப்பதும் இறைவன் வசமே உள்ளது..

இறைவா!
உன்னையே வணங்குகிறேன்
உன்னிடமே உதவியும் தேடுகிறேன்

கையேந்துங்கள்.

| | 4 comments


                இறைவனிடம் கையேந்துங்கள்
..بسم الله الرحمن الرحيم

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய இறைவனின் திருப்பெயரால்.


  إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ  صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!. (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியுமல்ல. 1:5-7


  نَرَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِي
“எங்கள் இறைவா! எங்களுக்குப் பொறுமையைத் தந்தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாக்குவாயாக! காஃபிரான இம்மக்கள் மீது (நாங்கள் வெற்றியடைய) உதவி செய்வாயாக!”. 2:250

رَّبِّ اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِمَن دَخَلَ بَيْتِيَ مُؤْمِنًا وَلِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ
“என் இறைவா! எனக்கும், என் பெற்றோருக்கும், என் வீட்டில் நம்பிக்கையாளர்களாகப் பிரவேசித்தவர்களுக்கும், முஃமினான ஆண்களுக்கும், முஃமினான பெண்களுக்கும், நீ மன்னிப்பளிப்பாயாக!. 71:128

  قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ  مِن شَرِّ مَا خَلَقَ  وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ وَمِن شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ
அதிகாலையின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன். அவன் படைத்தவற்றின் தீங்கை விட்டும்- இருள் பரவும் போது ஏற்படும் இரவின் தீங்கை விட்டும்- இன்னும், முடிச்சுகளில் (மந்திரித்து) ஊதும் பெண்களின் தீங்கை விட்டும், பொறாமைக்காரன் பொறாமை கொள்ளும் போதுண்டாகும் தீங்கை விட்டும் (காவல் தேடுகிறேன்). 113:1-5

  قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ  مَلِكِ النَّاسِ  إِلَٰهِ النَّاسِ  مِن شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ  الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ
மனிதர்களின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன். (அவனே) மனிதர்களின் அரசன்; (அவனே) மனிதர்களின் நாயன். பதுங்கியிருந்து வீண் சந்தேகங்களை உண்டாக்குபவனின் தீங்கை விட்டும் (இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்). அவன் மனிதர்களின் இதயங்களில் வீண் சந்தேகங்களை உண்டாக்குகிறான். (இத்தகையோர்) ஜின்களிலும், மனிதர்களிலும் இருக்கின்றனர். 114:1-6

ஆமண  ரசூல்  அல்  குரான்  2 .286

அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை. அது சம்பாதித்ததின் நன்மை அதற்கே, அது சம்பாதித்த தீமையும் அதற்கே! (முஃமின்களே! பிரார்த்தனை செய்யுங்கள்;)

"எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!"

யாஅல்லாஹ் நிச்சியமாக நீ மிக்க மன்னிப்பவன். மன்னிப்பதை விரும்புகிறவன். ஆகையால் எங்கள் குற்றங்கள் யாவற்றையும் நீ மன்னித்து விடுவாயாக! எங்களின் துவாக்களை யாவற்றையும் ஏற்று மன்னித்தருள்வாயாக.

இறைவா!
உன்னையே வணங்குகிறேன்
உன்னிடமே உதவியும் தேடுகிறேன்

சபித்தல்.சாபமிடுதல்...

| | 8 comments

بسم الله الرحمن الرحيم
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய இறைவனின் திருப்பெயரால் ஆரம்பிக்கிறேன்.


முஃமின்களே! அல்லாஹ்வை அஞ்சி நடந்து கொள்ளுங்கள். நேர்மையான சொல்லையே சொல்லுங்கள். (அவ்வாறு செய்தால்) உங்களுடைய செயல்களை உங்களுக்கு அவன் சீராக்கி வைத்து, உங்களுடைய பாவங்களையும் உங்களுக்கு மன்னிப்பான்
[அல்-அஹ்ஸாப்: 70, 71].


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “அடியான் அல்லாஹ்வுக்கு விருப்பமான ஒரு சொல்லை நாவினால் மொழிகின்றான். ஆனால் அதில் அவன் கவனஞ் செலுத்துவதில்லை. எனினும் அந்தச் சொல்லின் காரணத்தால் அல்லாஹ் அவனது தகுதியை உயர்த்திவிடுகிறான். இவ்வாறே அடியான் இறைவனுக்குக் கோபம் உண்டாக்கக் கூடிய ஒரு சொல்லை அலட்சியமாகச் சொல்லிவிடுகிறான். அச்சொல்லே அவனை நரகில் தள்ளிவிடுகிறது”.
[அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), நூல்: புகாரி].


ஒருவரை ஒருவர் சபிப்பதும், [அதாவது] சாபமிடுவதும் வெருக்கத்தக்க செயலாகும்.
கோபமோ! ரோசமோ!.ஆத்திரமோ! தலைக்கேறும்போது என்ன பேசுகிறோமென அறியாமல் வார்த்தைகளை கொட்டித் தீர்த்துவிடுவது. நாவை அடக்கத்தெரியாமல் ஆத்திரத்தின்மேல் சபிப்பதும் சாபமிடுவதும்.பாவச்செயல்.

வரம்பு மீறி வீசப்படும் வசைமொழிகள் இருக்கிறதே அது அணுகுண்டைக் காட்டிலும் ஆபத்தானது; ஏவுகணையைக் காட்டிலும் நாசம் விளைவிக்கக் கூடியது. சிலர் கடுமையான வார்த்தைகளை கண்ணிமைக்கும் நேரத்தில் கக்கி விடுவார்கள். கணநேர ஆத்திரம் அவர்களின் கண்களை மறைத்து விடும். அதன் பின்னர் அவர்கள் அறியாமல் சொன்னதை நினைத்து மனம் வருந்துவார்கள்.

இதில் வேதனையான விசயம்.தன் சொந்தக் குழந்தைகள். தன் கணவன். தன் மனைவி. தாய் தந்தை. என யாரையும் விட்டுவைப்பத்தில்லை அந்த கோபத்தினால் உண்டாகும் சாபவார்த்தைகள்.இது எந்தளவுக்கு ஆபத்து நிறைந்த தீமையான விசயம் என அறியாமல் செய்வதுதான் வருந்ததக்க ஒன்று.

அநியாயமாக ஒருவன் ஒருவனை சபித்தால் அவனது சாபம் அவன் மீதே திரும்பி விடுகின்றது. அந்த நேரத்தில் அவன் தனக்கெதிராக தானே இறையருளை விட்டும் தூரமாவதற்குப் பிராத்தித்தவனாகின்றான். [அஸ்தஹ்பிர்ல்லாஹ்].

சட்டென எதற்கெடுத்தாலும் உடனுக்குடன் கோபப்படுவதும். அதை ஆய்ந்து ஆராயாது.உண்மையறியாது சபிப்பதும்.சாபமிடுவதும் ஈருலகிற்க்கும் தீமையே.

பெண்கள் அதிகம் சபிக்கின்றார்கள். அதுவே அவர்கள் நரகில் நுழைவதற்குக் காரணமாக அமைகின்றது என்பதை நபி (ஸல்) அவர்களும் தெளிவுபடுத்தி உள்ளார்கள். அதுபோல சபிக்கின்றவர்கள் மறுமையில் பரிந்துரை செய்பவர்களாக இருக்க மாட்டார்கள்.

எனவே நம்முடைய எந்த நிலையிலும். யாரையும் சபிக்கவோ சாபமிடவோ கூடாது. அநீதி இழைத்தவன் அதன் கூலியை பெறுவான்.
அநியாயம் செய்தவன் அதன் பலனை அடைவான்.
நம்மை நாம் பேணிக்கொள்ளவேண்டும் முக்கியமாக நாவை.அதை எந்நிலையிலும் பேணிக்காக்கத்தவறி நரகத்தின் பக்கம் இழுத்துசென்றுவிடாதிருக்க மிக கவனமாக இருக்கவேண்டும்.

அல்லாஹ்வின் தூதரே! நான் தொடர்ந்து பற்றிப் பிடித்துக் கொள்ள வேண்டிய ஒன்றை எனக்குச் சொல்லித் தாருங்கள்” என்றேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “எனது இரட்சகன் அல்லாஹ் என்று கூறி, பின் அதிலேயே நிலைத்திரும்” என்றனர். (மீண்டும்) “அல்லாஹ்வின் தூதரே, என்மீது நீங்கள் பயப்படக்கூடிய மிகப் பயங்கரமான விடயம் எது” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் தமது நாவைப் பிடித்து, “இதைத்தான் (பயப்படுகிறேன்)” எனக் கூறினர்.
[அறிவிப்பவர்: ஸுப்யான் பின் அப்துல்லாஹ் (ரலி), நூல்: திர்மிதி]

இறைவன் நம் அனைவருக்கும் தீமையிலிருந்து பாதுகாப்பளித்து நன்மையின் பக்கமே நம்மை அழைத்துசெல்வானாக.  ஆமீன்..


இறைவா!
உன்னையே வணங்குகிறேன்
உன்னிடமே உதவியும் தேடுகிறேன்..
அன்புடன் மலிக்கா.

முத்தான முத்துக்கள்.

| | 7 comments

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
இறைவனின் திருப்பெயர்கொண்டு ஆரம்பம் செய்கிறேன்.

1.  ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி, யார் ஈமான் கொண்டவர்களாக நற்கருமங்கள் செய்கிறார்களோ,அவர்கள் சுவனபதியில் நுழைவார்கள்.
இன்னும் அவர்கள் சிறிதளவேனும் அநியாயம் செய்யப்படமாட்டார்கள்.
                                                                          அல்குர்ஆன்-4:124

2.  நபிகள் நாயகம் ஸல்லல்லாஹ் அலைகிவஸ்ஸலம் அவர்கள் கூறினார்கள்:  கண்ணேறு [கண் திருஷ்டி] உண்மையாகும். தலைவிதியை ஏதேனும் வெல்லமுடியுமானால்,கண்ணேறு அதை வென்றிருக்கும்.  
                                                                          நூல்:முஸ்லீம்:4405

3.  நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள். நிச்சயமாக அது மானக்கேடானதாகும்.மேலும் [வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச்செல்லும்] தீயவழியாகவும் இருக்கிறது.

                                                                        அல்குர்ஆன் - 17:32


தீமைகளிலிருந்து நம் அனைவரையும் எல்லாம் வல்ல இறைவன் காப்பாற்றி நல்லவைகளின் பக்கம் நன் முகங்களையும் மனங்களையும் திருப்புவானாக ஆமீன்..

இறைவா!
உன்னையே வணங்குகிறேன்
உன்னிடமே உதவியும் தேடுகிறேன்.

அன்புடன் மலிக்கா

ஆறடியை வீழ்த்தும் அரையடி.

| | 6 comments

بسم الله الرحمن الرحيم
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
இறைவனின் திருப்பெயர்கொண்டு ஆரம்பம் செய்கிறேன்58: நம்பிக்கை கொண்ட ஆண்களையும் பெண்களையும் அவர்கள் செய்யாததைக்கூறி துன்புறுத்துவோர் அவதூறையும், தெளிவான பாவத்தையும் சுமந்து விட்டார்கள்.
அல் குர்ஆன்:  22 பாகம் :   33. அல் அஹ்ஸாப்

குற்றங்குறைகள் கூறிக்கொண்டு திரிபவர்களுக்கு கேடுதான்.யார் ஒருவர் தன்னைசார்ந்த மற்றும் தன்னைச்சாராத தன் சகோதரனை தரைக்குறைவாக எண்ணுகிறானோ அல்லது பேசுகிறானோ அவன்
இறைவனின் கோபத்திற்கு ஆளாகநேரிடும்.

எந்த ஒரு மனிதர்மேலும் அநியாயமாக, அவதூறாக, இட்டுக்கட்டி பேசாதீர்கள். இப்படி செய்திருக்கலாம் அப்படி செய்திருக்கலாம் என்ற யூகத்தில் குற்றம் சுமத்தாதீர்கள். நாளை இதே நிலைக்கு நீங்களும் தள்ளப்படலாம். எந்த ஓர் செயலும் நம்மிடமிருந்து புறப்படுவதுதான் நமக்கே திருப்பவரும் அதற்கு நேரம்காலம் கிடையாது எந்த ரூபத்திலும் வரும்.

ருவர் தவறிழைத்துவிட்டால் அவரை தனிமையில் கண்டியுங்கள் அதனால் ஏற்படும் விளைவுகளை அன்போடு எடுத்துச்சொல்லுங்கள் அதைவிடுத்து
அடுத்தவர் அறிவதுபோல் அவருடைய செயல்களை இடித்துரைக்காதீர்கள் அதையே குத்திக்காட்டாதீர்கள். ஒருவருக்கு இருக்கும் திறமைகள்போல் மற்றவருக்கு இருப்பதில்லை அதற்காக அவர்கள் எதற்குமே லாயக்கில்லாவர்கள் என்று சொல்லாதீர்கள் அதைவிட சிறப்பானவைகள் அவர்களிடமிருக்கும்..

அரையடி நாக்கு ஆறடி மனிதரையும் வீழ்த்திவிடும்
எலும்பில்லாநாக்கு எதையும் எடுத்தெறிந்து பேசத்துணியும்
அதை அடக்கியே வாசிக்க கற்றுக்கொடுக்கவேண்டியது
நம்மிடதான் இருக்கிறது..

பொல்லாத தீமைகளிலிருந்து நம் அனைவரையும் எல்லாம் வல்ல இறைவன் காப்பாற்றுவானாக ஆமீன்..

இறைவா! உன்னையே வணங்குகிறேன்
உன்னிடமே உதவியும் தேடுகிறேன்

அன்புடன் மலிக்கா

வேண்டுகோள்..

இங்கே பதியப்படும் அனைத்தும், நான் என்னை தெளிவுப்படுத்திக்கொள்ளவும். ஈருலக வாழ்க்கையையும் அறிந்துக்கொள்ளவும். தொடங்கியுள்ள பயணம். அதில் தாங்களும் தெரிந்துகொள்வதில் பெருமிதம். ஆனால் இதை தவறானமுறையில் விளங்கிக்கொண்டு வீணான விவாதங்களோ தர்க்கங்களான கருத்துக்களாகவோ அமைத்துவிட வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்..