.

வருகை புரியும் அனைவர்மீதும் இறைவனின் அருளும் சாந்தியும் அளவில்லாமல் கிடைக்கட்டும் Photobucket

முத்தான முத்துக்கள்.

| |

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
இறைவனின் திருப்பெயர்கொண்டு ஆரம்பம் செய்கிறேன்.

1.  ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி, யார் ஈமான் கொண்டவர்களாக நற்கருமங்கள் செய்கிறார்களோ,அவர்கள் சுவனபதியில் நுழைவார்கள்.
இன்னும் அவர்கள் சிறிதளவேனும் அநியாயம் செய்யப்படமாட்டார்கள்.
                                                                          அல்குர்ஆன்-4:124

2.  நபிகள் நாயகம் ஸல்லல்லாஹ் அலைகிவஸ்ஸலம் அவர்கள் கூறினார்கள்:  கண்ணேறு [கண் திருஷ்டி] உண்மையாகும். தலைவிதியை ஏதேனும் வெல்லமுடியுமானால்,கண்ணேறு அதை வென்றிருக்கும்.  
                                                                          நூல்:முஸ்லீம்:4405

3.  நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள். நிச்சயமாக அது மானக்கேடானதாகும்.மேலும் [வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச்செல்லும்] தீயவழியாகவும் இருக்கிறது.

                                                                        அல்குர்ஆன் - 17:32


தீமைகளிலிருந்து நம் அனைவரையும் எல்லாம் வல்ல இறைவன் காப்பாற்றி நல்லவைகளின் பக்கம் நன் முகங்களையும் மனங்களையும் திருப்புவானாக ஆமீன்..

இறைவா!
உன்னையே வணங்குகிறேன்
உன்னிடமே உதவியும் தேடுகிறேன்.

அன்புடன் மலிக்கா

7 comments:

நட்புடன் ஜமால் said...

Alhamdulillah ...

ஜெய்லானி said...

இறைவா!
உன்னையே வணங்குகிறோம்
உன்னிடமே உதவியும் தேடுகிறோம் ...!!

இராஜராஜேஸ்வரி said...

தீமைகளிலிருந்து நம் அனைவரையும் எல்லாம் வல்ல இறைவன் காப்பாற்றி நல்லவைகளின் பக்கம் நன் முகங்களையும் மனங்களையும் திருப்புவானாக ஆமீன்..

பறத்தல் பறத்தல் நிமித்தம் said...

மலிக்கா.. உங்கள் வலைப்பூவை இப்போதுதான் பார்க்கிறேன் அடடா அழகு ... இறைவனை நேசிப்பதை வெறும் வாய் சொல்லாக மட்டுமல்லாமல் அதற்கென தனி வலைப்பூ .. பாராட்டுக்கள் உங்கள் முகப்பில் பொழியும் மழை போல் இறைவனின் அருள் உங்களுக்கும் , உங்கள் குடும்பத்தார்க்கும் கிட்டட்டும் ...

RAZIN ABDUL RAHMAN said...

ஸலாம் சகோ மலிக்கா.
தங்களின் இந்த வலையை நான் இப்போது தான் பார்க்கிறேன்.மாஷா அல்லாஹ்.நல்லா இருக்கு,பதிவுகளும் கூட..

இன்றைய தினம் என்னை சில குர் ஆன் வசனங்களையும், ஹதீஸ்களையும் வாசிக்க வைத்த உங்களுக்கு எனது நன்றிகள்..

அன்புடன்
ரஜின்

அன்புடன் மலிக்கா said...

என் அன்பார்ந்த நெஞ்சங்களின் வருகைக்கும் என் பதிவிற்கான தங்களின் அன்பான கருத்திற்க்கும் எனம்மனப்பூர்வமான நன்றிகள்.

தங்கள் அனைவரின் தொடர் வருகையையும் எதிர்பார்க்கிறேன்.

என்றும் அன்புடன் மலிக்கா

அன்புடன் மலிக்கா said...

பாரதிக்குமார் said...

மலிக்கா.. உங்கள் வலைப்பூவை இப்போதுதான் பார்க்கிறேன் அடடா அழகு ... இறைவனை நேசிப்பதை வெறும் வாய் சொல்லாக மட்டுமல்லாமல் அதற்கென தனி வலைப்பூ .. பாராட்டுக்கள் உங்கள் முகப்பில் பொழியும் மழை போல் இறைவனின் அருள் உங்களுக்கும் , உங்கள் குடும்பத்தார்க்கும் கிட்டட்டும் ...//

வாங்க பாரதி. தங்களின் நெஞ்சார்ந்த கருத்திற்க்கு எனது மனம்மார்ந்த நன்றிகள் பல..

Post a Comment

கருத்துக்களை பகிர்ந்துகொள்ளும்போது நிறைகுறைகளை சரிபார்க்கலாம். பகிந்துகொள்ளுங்களேன் கருத்துக்களை
நானும் என்னை சரிசெய்து கொள்கிறேன் .
பிடிதிருந்தால் ஓட்டும் போடுங்கள்

வேண்டுகோள்..

இங்கே பதியப்படும் அனைத்தும், நான் என்னை தெளிவுப்படுத்திக்கொள்ளவும். ஈருலக வாழ்க்கையையும் அறிந்துக்கொள்ளவும். தொடங்கியுள்ள பயணம். அதில் தாங்களும் தெரிந்துகொள்வதில் பெருமிதம். ஆனால் இதை தவறானமுறையில் விளங்கிக்கொண்டு வீணான விவாதங்களோ தர்க்கங்களான கருத்துக்களாகவோ அமைத்துவிட வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்..