.

வருகை புரியும் அனைவர்மீதும் இறைவனின் அருளும் சாந்தியும் அளவில்லாமல் கிடைக்கட்டும் Photobucket

ஏன் இப்படி?

| | 5 comments

 
 
அன்பிற்கினிய சகோதர சகோதரிகளே! அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்.
ஒருவர் தனது மனைவியை அல்லது சகோதரியை அல்லது மகளை அரைகுறை ஆடையுடன் தலையைத் திறந்து போட்டவளாக, நெஞ்சுப் பகுதியை மறைக்காமல் வெளியேறிச் செல்வதைக் காணுகிறார். இஸ்லாமின் ஒழுக்கப் பண்புகளும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலும் இவ்வாறு புறக்கணிக்கப்பட்டுள்ள இந்தச் சூழலை மாற்றுவதற்குரிய முயற்சியை அவர் மேற்கொள்ள வேண்டும்.
இல்லையெனில் அவர் அவனுக்குரிய வீரத்தை இழந்து மார்க்கத்திலிருந்து விலகி அல்லாஹ்வின் கோபத்துக்கு இலக்காகி விட்டார் என்பதுதான் பொருளாகும். கண்டிக்காமலிருந்த குற்றத்திற்காக உண்மையான பாவமன்னிப்புக் கோருதலைத் தவிர வேறெந்த பரிகாரமும் அவருக்கு இருக்க முடியாது.

முஸ்லிம் பெண்மணி இஸ்லாமிய அமுதுண்டவள்; இஸ்லாமெனும் நீண்ட நிழலில் இளைப்பாறியவள். எனவே இஸ்லாமின் ஹிஜாபை திருப்தி கொண்ட நிம்மதியான இதயத்துடனும், ஆழிய விருப்பத்துடனும் ஏற்றுக் கொள்வாள். இது இரட்சகனாகிய அல்லாஹ்வின் கட்டளையாகும். 

ஹிஜாப் அணிவது அவணின் வற்புறுத்தலுக்காக இல்லை; அவளின் அகம்பாவத்தை திருப்திப்படுத்துவதற்காகவும் இல்லை. எவ்வித ஆதாரமுமின்றி அருள்மறையின் வழிகாட்டுதலின் மேன்மையை விளங்கிக் கொள்ளாத வெட்கமற்ற சில பெண்கள் ஹிஜாபைப் பேணாமல் தெருக்களில் திரிந்து கொண்டிருக்கிறார்கள்

 நன்றி நீடூர் டாட் காம்..
--------------------------------------------------------------- 
வெளியே செல்லும் இஸ்லாமிய பெண்கள்.தனியே பெண்களோடு செல்லும்போதும் . பைக்கிலோ அல்லது நடந்தோ கணவர்களோ அல்லது தன் உறவினரோ அவர்கள்கூட செல்லும்போதும். பலரை பார்க்கிறேன் முக்காட்டில் ஒருபகுதி எடுத்து அதனை முகத்தை மறைக்கிறேன் என்று கழுத்தும் மற்றும் முன்பகுதி தெரிவதுபோலவும் அதேபோல் பின்புறம் தலைமுடிகளோடு பூக்களையும் தொங்கவிட்டுக்கொண்டு செல்கிறார்கள். பார்க்கவே சங்கடமாக இருக்கிறது. 

அதேபோல் பல வெளியூர்களில் [நான் அடிக்கடி குற்றாலம்[மகன் படிக்கிறார்] மற்றும் பல ஊர்கள் செல்வதால் பார்க்கிறேன்] முஸ்லீம் பெண்கள் பர்தாவே அணிவதில்லை அப்படியே அணிந்தாலும் தலைதுணியை தோளிலேயே சுற்றிவைத்திருக்கிறார்கள். கடந்தவாரம் பஸ்ஸில் வரும்போது இரு பெண்களிடம் மனம் கேட்காமல் வாய் திறந்து கேட்டேவிட்டேன் ஏனிப்படின்னு அது பழகிடிச்சி என்கிறார்கள். இத்தனைக்கும் கூட வந்திருக்கும் கணவர்கள் தாடிவைத்து இஸ்லாமியமுறைப்படி காட்சியளித்தார்கள்.அவ்வூர்களில் அனைத்துதரப்பு மார்க்க பிரச்சார நோட்டிஸ்கள் ஆங்காங்கே ஒட்டப்பட்டிருக்கிறது. இருந்தும் பெண்களின் பர்தா விழிப்புணர்வு இப்படி இருக்கிறதே!ஏன்?

அதேபோன்று. பெண்பிள்ளைகளை நாகரீகமாக வளர்கிறோம் என்றபெயரில் அனாச்சாரங்களோடு அவர்கள் இணைவதைகண்டும் காணமல் இருக்கும் பெற்றோர்கள்.அதோடில்லாமல் அவைகளோடு அதை ஊக்கபடுத்தும் பெற்றோர்கள் அதேபொன்று கணவர்கள். இப்படி பொடுபோக்குதனமாக இருந்துவிட்டு பின்பு எல்லாம் போய்விட்டேதே என அழுதுபுலம்புவது ஏன்? வெளியே தெரிந்தால் அவமானமென்று மனதால் துடித்து மென்று விழுங்குவது ஏன்?
சுதந்திரம் கொடுங்கள் அதற்காக ஒரேடியாக ஆடவிடாதீர்கள் அப்புறம் அசிங்கபடுவதும் அவதிப்படுவதும் நீங்களுமாகத்தானிருக்கும். முஸ்லீமென்று பெயரலவில்மட்டும் இருந்துகொண்டு செய்வதெல்லாம் அசிங்களளிலும் அனாச்சாரங்களிலும் ஈடுபடாதீர்கள். 
மூஃமீன்களே! இவ்வுலகம் நிரந்தரமல்ல. நிரந்தர உலகத்திற்கான பரிட்சையே இவ்வுலகம். ஈமானுள்ளவர்களே அதனை புரிந்துகொண்டு  முழுமையாக ஈமானில் நுழையுங்கள்.உங்களை பாதுகாத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கான கடமைகளை சரிவர செய்து பேணி நடந்துக்கொள்ளுங்கள். இறைவன் அனைவரையும் காப்பாற்றுவானாக. நல்லோர்களின் கூட்டத்தில் நம்மையும் சேர்த்தருள்வானக..


இறைவா! 
உன்னையே வணங்குகிறேன் 
உன்னிடமே உதவியும் தேடுகிறேன்

வேண்டுகோள்..

இங்கே பதியப்படும் அனைத்தும், நான் என்னை தெளிவுப்படுத்திக்கொள்ளவும். ஈருலக வாழ்க்கையையும் அறிந்துக்கொள்ளவும். தொடங்கியுள்ள பயணம். அதில் தாங்களும் தெரிந்துகொள்வதில் பெருமிதம். ஆனால் இதை தவறானமுறையில் விளங்கிக்கொண்டு வீணான விவாதங்களோ தர்க்கங்களான கருத்துக்களாகவோ அமைத்துவிட வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்..