.

வருகை புரியும் அனைவர்மீதும் இறைவனின் அருளும் சாந்தியும் அளவில்லாமல் கிடைக்கட்டும் Photobucket

சிந்திக்க தவறுகிறோமோ?

| | 0 comments



بسم الله الرحمن الرحيم 


நன்றி கூகிள்

அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்]

அன்புடையோர் அனைவரின்மீதும் இறைவனின் சந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக!

முன்னோட்டமாய்: ஆறெழு தலைமுறைக்கு முன்னால் இஸ்லாத்தின்பால் ஈர்க்கப்பட்டு இம்மார்க்கத்தை ஏற்றுகொண்டு வந்த நாம் இன்று இஸ்லாத்தின் கடமைகளை சரிவர செய்கிறோமா? அதன் வழியில் நடக்கிறோமா? அப்படியே நடந்தாலும் அதனை தொடர்ந்து செய்கிறோமா? ஈமானின் உறுதி நிலைத்திருக்கிறதா? உணர்சிவசப்படக்கூடியவைகளுக்கு மட்டும் உறுதியாய் இருக்கும் ஈமான், உணர்வு மயமானவைகளுக்காவும் இருக்கிறதா? ஒவ்வொரு சொல்லிலும் செயலிலும் நம்மிடம் ஈமானும் இஸ்லாமும் கலந்து இருக்கிறதா? எப்போதாவது இதைப்பற்றி சிந்திக்கிறோமா?

இஸ்லாம் தூய்மைப்படுத்தப்பட்ட மார்க்கம்; அதன் தூய்மை எவராலும் எதுவாலும் உலகநாள் அழிகின்றவரையில் அதனை அழிக்கவோ, அல்லது
அதனை கலங்கப்படுத்தவோ கறையேற்படுத்தவோ முடியாது.
இம்மார்க்கத்தை கண்ட கூத்தாடிகளும், காழ்ப்புணர்வு கொண்டவர்களும்
எவ்வழியிலும் கறைபடுத்த நினைத்தாலும், குற்றங்கானத் துடித்தாலும் ஒருபோதும் நடக்காது. ஏனெனில் இது அகிலத்தைப் படைத்து பாதுகாக்கும் எல்லாம் வல்ல ஏகன் ஒருவனின் இனியமார்க்கம். இது இறைவன் வகுத்த ஏற்றமிகு தூயமார்க்கம் .

இம்மார்க்கம் ஐந்து  தூண்களால் நிறுவப்பட்டுள்ளது

முதலாவது: கலிமா

லாயிலாக இல்லல்லாஹு முகம்மதுர் ரசூலில்லாஹி
பொருள்: வணக்கத்திற்குரியவன்  இறைவன் ஒருவனைத்தவிர வேறு யாருமில்லை
முகம்மதுநபி [ஸல்] அவர்கள் இறைவனின் திருத்தூதராக இருக்கிறார்கள்.

2.தொழுகை

வணக்கத்திற்க்குறிய இறைவனை ஒரு நாளைக்கு ஐந்துவேலை தொழுதுகொள்ளுதல்.

"விசுவாசிகளே! நீங்கள் தொழுகைக்குத் தயாரானால் உங்கள் முகங்களையும்,
முழங்கை உட்பட இரு கைகளையும் கழுவிக்கொள்ளுங்கள்!
உங்கள் தலைகளை நீரினால் தடவி, கரண்டை உட்பட இரு கால்களையும் கழுவிச் சுத்தம் செய்யுங்கள்! (5:6)

3.நோன்பு

வணக்கத்திற்குறிய இறைவனுக்காக வருடத்திற்கொருமுறை
30 அல்லது 29 [பிறைப் பார்த்து] உண்ணா நோன்பு இருத்தல்.

"ஈமான் கொண்டோர்களே!உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு
விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது;
(அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்". (2:183)

4.ஜக்காத்

ஏழை எளிவருக்கு தன்னிடமுள்ள பணம் மற்றும் பொருள்களை வாரி[வரியாக] வழங்குதல்.

"நிச்சயமக என் இறைவன் தன் அடியார்களில் யாருக்கு நாடுகிறானோ,
அவருக்கு செல்வத்தை விசாலப்படுத்துவான்; இன்னும் தான் நாடியோருக்கு
சுருக்கியும் விடுகிறான்; ஆகவே நீங்கள் எந்தப் பொருளை (அல்லாஹ்வின் பாதையில்) செலவு செய்த போதிலும், அவன் அதற்குப் பிரதிபலன் அளிக்கிறான்; மேலும், அவன் கொடையாளிகள்
அனைவரிலும் மிகவும் மேலானவன்" என்று (நபியே) நீர் கூறும். (34:39)

5.ஹஜ்
வாழ்நாட்களில் ஒருமுறையாவது இறுதிக் கடமையாம் ஹஜ்ஜை நிறைவேற்றுதல். இது வசதியிருதால் மட்டுமே! வசயிருப்போரும் பிறர் இக்கடமையை முடிக்க உதவலாம்.

இறைவன் மனிதர்களுக்கு வேண்டிய சலுகைகளை கொடுத்து அவன் எவ்வாறு நடந்துக் கொள்கிறான் என்று கவனித்தவனாகவே இருக்கிறான், நம்முடைய அத்துமீறிய போக்கு இறை அங்கீகாரத்தை பாதித்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும். (2:198)

ஆக இந்த ஐந்து தூண்களின் எழுப்பட்ட இந்த எளியயமார்க்கம்தான் இஸ்லாமென்னும் இறையளித்த அற்புத மார்க்கம். இதை உலகிலுள்ள அனைவரும் பெரும்பாலானவர்கள் கட்டாயம் அறிந்திருப்பார்கள், அறியாதவர்களுமிருக்கலாம்,

உலகம் உண்டாக்கிய நாள்தொட்டு தொடங்கிய இஸ்லாம், இறைதூதர் முகமத்து நபி [ஸல்]அவர்களால் முழுமைபெற்று பூர்த்தியடைந்து 1434 அன்றுதொட்டு இன்றுவரை, இறுதிவரை இதிலிருந்து ஒரு கொசுவளவுகூட மாறவும் மாறாது, மாற்றமுமிருக்காது. இதுதான் இஸ்லாம், இதுதான் இறைவனின் இன்றியமையா மார்க்கம்.

பிறப்பு  என்பதில் தொடங்கி மரணிக்கும் வரைக்கும்,
அதன் இடைபட்ட வாழ்க்கையிலும் நாம் எப்படியிருக்கவேண்டும், எப்படி நடக்கவேண்டும், என்று குர்ஆன் சொல்லிலும் நபிவழி செயலிலும், இம்மார்க்கத்தை ஏற்றுள்ள இஸ்லாமியர்களாகிய நமக்கும் உலகமக்கள் அனைவருக்கும் அதில் படிப்பினையும், எச்சரிக்கைகளும் பல்வேறு விதங்களில் கூறப்பட்டுள்ளது.
இறைவனை ஏற்காதோருக்கு வேண்டுமெனில் அவைகள் மிக சாதரமாக இருக்கலாம். ஆனால்
ஓரிறைவனை ஏற்று அவனின் சட்டதிட்டங்கள் அறிந்து, இன்னதற்கு இன்ன நன்மை, இன்னதற்கு இன்ன தீமையென்று புரிந்து வாழும் முஸ்லீம்களாகிய நாம், அவற்றை பொடுபோக்காக எடுத்துக்கொண்டு செயல்படுவதுதான்
வேதனைக்குறிய விசயமாக இருந்துவருகிறது,

இந்த அற்புத மார்க்கத்தை தழுவியவர்கள் முஸ்லீம்களாக வாழ்கிறார்கள், அப்படி முஸ்லீமாக, இஸ்லாமியனாக வாழும் அவர்கள் தங்களின் வாழ்க்கைமுறையை பிறரும் பின்பற்றி நடப்பதுபோலவும் வாழ்ந்துகாட்டுகிறார்கள். அதேசமயம் முஸ்லீம் பெயர்தாங்கிகளாய் வாழும் பெரும்பாலானோர்கள், தாங்கள் வழிகெடுவதோடு மற்றவர்களையும் வழிகெடுக்கிறார்கள், இப்படியான முஸ்லீம்களைகண்டு பிறமதத்தவர்கள், இதுதான் இஸ்லாம், இதுதான் இஸ்லாத்தின் கொள்கை, இதுதான் இஸ்லாத்தில் சொல்லப்பட்டிருக்கும்  பழக்கவழக்கம் எனதவறாக புரிந்துகொண்டு பலயிடங்களில் இஸ்லாத்தை கேலிசெய்வதோடு, இது ஒரு வன்முறையான மார்க்கம், வாலால் பரப்பட்ட மார்க்கம், இன்னும்பல புரிதல்களால் உண்மைபுரியாமல் கண்ட கண்ட கழிசடையில் கடைந்தெடுத்த சாக்கடைகள்கூட தாமும் தன்னைச் சார்ந்தவர்களும் சந்தனமென பேசித்திரியுமளவுக்கு நடந்துகொள்கிறார்கள்.

பிறர் பேசுவதாலோ! அல்லது பிறர் குறைகூறுவதாலோ!அல்லது பிறர் சீண்டிப்பார்ப்பதாலோ. தீன்மார்க்கம் ஒருபோதும் தன் தரத்திலிருந்து சிறிதளவேனும் மாறாது, ஆனால் அதனை தவறாக எண்ணுவதற்கு காரணமாக நாமே ஆகிவிடக்கூடாது என்பதில் மிக மிக கவனமும் அக்கரையும் வேண்டுமல்லவா?

ஒன்றை கவனிக்கவேண்டும். இஸ்லாமியனென்றால் இப்படிதான் இருக்கவேண்டும், இப்படித்தான் நடக்கவேண்டும், இப்படிதான் வாழவேண்டும்,என்ற வரையறைகுப்படுத்தபட்டே வாழ வழிவகுத்ததந்த மார்க்கத்தில் வந்துவிட்டு, பெயரவில்மட்டும் நான் இஸ்லாமியன்! நான் முஸ்லீமென்று சொல்லிக்கொண்டு நடப்பதில் நமக்கு நாமே தீங்கிழைத்துக்கொள்கிறோம் என்பதை மறந்துவிடுகிறோமே!

பலதரப்பட மக்கள் வாழும் தமிழ்நாட்டில் பண்பட்டவர்களாக வாழ்ந்துகாட்டி இஸ்லாத்தின் மாண்புகளை எடுத்துச்சொல்லி புரியவைக்க முயச்சிக்கும் நாம், நமக்குள் ஒற்றுமைகளற்று நம்மை நாமே ஏசிக்கொண்டு
நீ செய்வது சரியா? நான் செய்வது சரியாயென வாதிட்டு, பிறமதத்தவர்கள் முன்னால் நாம் காட்சிப்பொருளாக ஆக்கபடுகிறோம் என்பதை சிந்திக்கத் தவறிவிடுகிறோம். அதே சமயம் இஸ்லாமியர்களென்றால்
இப்படிதான் என்ற எண்ணத்தையும் வளர்த்துவருகிறோமே! இதை இல்லையென்று யாரேனும் சொல்லமுடியுமா?.

மேலும் சிலர், மாற்றுமத கலச்சாரங்களோடு பின்னிப் பிணைந்து அதனில் தன்னை நுழைத்துக்கொண்டதோடு, பிறரையும் நுழைய தூண்டுகோலாக இருப்பதும், இறைவன் என்பவன் ஒருவன் அவனுக்கு
இணை துணையில்லை என்பதை தெளிவாக தெரிந்தபின்பு சீர்கேடென்னும் வழிகேட்டில் இருக்கிறார்கள். தான் இறந்தபின்பு தனது கப்ரை உயர்த்துவதே கூடாது என நமது உயிரிலும் மேலான நபிகள் பெருமானார்[ஸல்]அவர்கள் கூறிய சென்ற மார்க்கத்தில், ஆங்காங்கே நல்லவர்களுக்காகவென கூறிக்கொண்டு கப்ரெழுப்பி, அதற்குள் அடங்கியிருப்பவர்களையும் தர்ம சங்கடதுக்குள்ளாக்கி, அதன்மூலம் வருவாய்திரட்டி இறைவனுக்கும் நபிக்கும் மாறுசெய்கிறார்கள்.

இன்னும் சிலர், இஸ்லாத்தில் திருமணமென்பது மிகுந்த எளிய காரியமாய்
மணமகன் மஹர்கொடுத்து மணமுடிப்பது என்ற வரம்பையே மீறி, மணமகள் வீட்டில் வரசட்சனைகள் கேட்டு மணமுடிக்கிறார்கள். வரதட்சணை வாங்குவதால் ஒரு குடும்பத்துக்கு மாபெரும் அநீதம் செய்கிறோம் என்றில்லாமல், அவர்களை வறுமையிலும் ஆழ்த்தி, கடனென்னும் புதைகுழிக்குள் தள்ளி, அந்தக் குடும்பத்தையே அழிக்கிறோம் என்பதை வரதட்சனை வாங்கும் மணமகனும், மணமகனின் குடும்பத்தாரும் நன்கு புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். [இதில்மட்டும் தன் தாய் தந்தையை கைகாட்டி தப்பிக்கும் இளைஞர்களாகவும் ஆகுகிறார்கள்]

அநீதம் செய்வதால் ஏற்படும் நிலைகுறித்து இஸ்லாம் கடுமையாகக் கண்டிதிருந்தும் இதுபோன்ற காரியங்கள் செய்கிறார்கள். மேலும்,
அநியாயக்காரர்களுக்கு துன்புறுத்தும் வேதனையை நாம் தயாராக வைத்துள்ளோம். அல்குர்ஆன் (25:37)

இன்னும் சிலரோ, மார்க்கப்பற்று  நிறைந்தவர்களாக, மார்க்கம் எதை சொல்கிறதோ அதில் எவ்வித மாற்றுக் கருத்துமில்லை,
அதன்படிதான் நாம் நடக்கவேண்டுமென பிறருக்கு கட்டளையிட்டுவிட்டு, அதற்கும் தனக்கு கொஞ்சமும் சம்மந்தமில்லததுபோல் தாங்கள் நடந்துகொள்வதும், மனைவியை இப்படி நடக்கக்கூடாது இது மார்க்கம் தடுத்துள்ளது என சொல்லும் கணவர், தான் செய்வதை சூழ்நிலையென சூழ்நிலைமேல் பழிபோட்டு தப்பித்துக்கொள்வதும், மார்க்கத்தில் அனுமதிக்கப்படாத செயல்களை தானே புரிந்துகொண்டும் அதை பிறர் புரியும்போது, இது கடுகளவும் கூடாதென கோபம்கொண்டு கொதித்தெழுகிறார்கள்.

இன்னும் சிலர், ஜாதகம் சோதிடம் என்று படைத்தவனை நம்பாது அவனால் படைக்கப்படவைகளை, நம்பி அவர்களிடம் ஏமாருகிறார்கள். கோடிகோடியாய் பணமிருந்தும் கொடுக்கும் மனப்பான்மையற்று இருக்கிறார்கள், வட்டிக்குவிட்டு வசதியாக வாழ்கிறார்கள். [இத்தனைக்கும் இறைவன்மேல், நபியின்மேல் உயிரையே வைத்துள்ளேன் என்ற சப்பைக்கட்டுவேறு] இதற்குமேலும் போய் இன்னும் சிலரோ மார்க்கத்தில் இல்லாதவைகளை தாமாக சேர்த்துக்கொண்டு இதுவும் இஸ்லாம் சொன்னதுதான் என்று நடக்கிறார்கள்.

சரி இதற்கான தீர்வுதான் என்ன? வேறென்ன இஸ்லாம்தான்! திருகுர்ஆன்தான்! நபிவழிதான், இதனிலிருந்தே படிப்பினையை பெறவேண்டும். முஸ்லீம்களையோ, இஸ்லாமியர்களையோ சார்ந்ததல்ல இஸ்லாம், இஸ்லாத்தை சார்ந்து, அதன் வழிமுறையைபின்பற்றி  அதன்வழி நடப்பவர்களே, உண்மையான முஸ்லீமும் இஸ்லாமியனும் ஆவார்கள்.

பெயர்தாங்கி முஸ்லீம்களாக இஸ்லாமியர்களாக வாழ்வதால் யாருக்கு கேடு? நமக்குதான்!கவனத்தில்கொள்ளுங்கள், நாளை இதுபற்றி இறைவனிடம் கட்டாயமாக கேள்விகேட்கப்படுவோம்,

நல்லது கெட்டதுகளை பிரித்தறிந்த பின்பும், தவறுகளை தொடர்வது குற்றத்திலும் குற்றமல்லவா? அறியாதவர்களுக்கு எத்திவைக்கும் நாம், அறிந்தே குற்றங்கள் செய்யலாமா? நம்மைக் கண்டுதான் இஸ்லாமென்று மாற்றுமதத்தவர்கள் நினைக்கும்போது இஸ்லாத்தில் வழியில் நடந்து இதுதான் இஸ்லாத்தின் நிலை! இதுதான் இஸ்லாத்தின் அழகிய வழி! இதுதான் இஸ்லாத்தின் மகிமை! என்பதை நமது நடைமுறைகளில் கொண்டுவரவேண்டாமா? பலபிரிவுகளாக பிரிந்துகொண்டு, நீயா நானா? 
 நீ கூறுவது இஸ்லாமா? நான் கூறுவது இஸ்லாமா? என்று தானும் குழம்பி மற்றவரையும் குழப்புவதைவிட்டும் நாம் தெளிவு பெறவேண்டாமா? நம்மைக் கண்டு நாம் வாழ்வதைக் கண்டு, நம்மின் செயல்கள் கண்டு, நமது மார்க்கத்தின் தூயநிலையில்  இன்னும் அதிக்கப்படுத்தவேண்டாமா?

சிந்தியுங்கள் சிந்திக்கும் கூட்டத்தாருக்கே இறைவனின் சொல்லும், செயலும் புரியும், உண்மையான முஸ்லீமாக வாழ முயற்சிக்காதவரை இவ்வுலகத்தில் மட்டுமல்ல மறுவுலத்திலும் நஷ்டந்தான் ஏற்படும்.

நம்மிலிருக்கும் குறைகளை அகற்றி நாம் தெளிந்தால்தான் பிறரையும் தெளிவாக்கமுடியும். அருமை நாயகம் வாழ்ந்துக் காட்டினார்களே!
சொல்லிலும் செயலிலும் நடைமுறைப்படுத்திக் காட்டினார்களே! ஸஹாபா பெருமக்களும், அதனை பின்பற்றி வாழ்ந்துகாட்டினார்களே! அப்படியொரு வாழ்க்கையை நாம் முழுமையாக வாழ முடியாவிட்டாலும், அதனின்றும் அதன்வழி நடக்கவாவது முயற்சிகள் மேற்கொள்ளவேண்டாமா?
தீன்வழி நடக்கவேண்டாமா?

இனிமேலவது சிந்தியுங்கள் உங்கள் சிந்தனை உங்களையும், உங்களைச் சார்ந்தவர்களையும், இன்னும் உங்களைச் சுற்றி இருப்பவர்களையும், தெளிவு பெறும்படியாக சிந்தியுங்கள், அதற்கான கூலியை இறைவன் நிச்சயமாக வழங்குவான்.

இறைவா! எங்களை முஸ்லீமாகவே வாழச்செய்து,முஸ்லீமாகவே மரணிக்கசெய்வாயாக! மேலும் இஸ்லாத்தின் கொள்கையை இயன்றளவு இவ்வுலகத்தாருக்கு எத்திவைக்கும் பாக்கியத்தையும், எத்தி வைப்பதுபோலவே  நாங்கள் நடக்கவும் தவ்ஃபீக் செய்வாயாக!

ஆமீன் ஆமின் யாரபல் ஆலமீன்

அன்புடன் மலிக்கா
இறைவா!
 உன்னையே வணங்குகிறேன்
உன்னிடமே உதவியும் தேடுகிறேன்

மூன்று வகை வாழ்க்கை!

| | 8 comments

بسم الله الرحمن الرحيم
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய இறைவனின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கின்றேன்.


மனிதர்களாய் படைக்கப்பட நமக்கு 
மூன்று வகையான வாழ்க்கை இருக்கு!-அதிலொன்றுதான்
மண்ணறை வாழ்க்கையும்


இறைநம்பிக்கை கொண்டோரை அல்லாஹ் இவ்வுலக வாழ்விலும் மறுமையிலும் உறுதியான வார்த்தையைக் கொண்டு நிலைபெறச் செய்வான். மேலும் அநியாயக்காரர்களை அல்லாஹ் வழிகேட்டில் விட்டு விடுவான். அல்லாஹ், தான் நாடுவதைச் செய்வான் (அல்குர்ஆன் 14:27).

ஒன்று.   இந்த பூமியில் பிறந்து வாழ்ந்து மரணிப்பது.
இரண்டு.  பூமியில் வாழ்ந்த நாம் மரணித்தபின்  மண்ணறைக்குள் வாழ்வது
மூன்று.  மண்ணறையில் வாழ்ந்த நாம்  மறுமையில் மரணமற்று நிரந்தரமாக வாழ்வது.

இன்று நாம் வாழும் வாழ்க்கை எந்தளவு உண்மையானதோ அதேபோன்று நாம் மரணித்தபின்பு மண்ணறையில் நமக்கான ஒருவாழ்க்கை உண்டு என்பதும் உண்மை. அவ்வாழ்க்கையில் சுகம் பெற மண்மீது வாழும்போது நாம் செய்த நன்மைகளின்பொருட்டே நமக்கான மண்ணறையோடு சேர்ந்து மறுமை வாழ்வும் தீர்மானிக்கப்படும்.

பூமியில் பிறந்தமனிதன் ஒருநாள்  தன் உணர்வுகள், உணர்ச்சிகள், வீடு வாசல், மனைவி மக்கள், செல்வம் சுகபோக வாழ்க்கை,என  அனைத்தையும் விட்டு விட்டு இதே பூமிக்குள்ளேயே புதைக்கப்படபோகிறான்,

ஆனபோதும் மனிதன் அலச்சியக்காரனகாவே இருக்கிறான்
மரணம் வரும்வரை மண்ணுலகத்தின்மீதே பற்றுதல்கொண்டு, அதனின் இச்சைகளுக்கு இணங்கி அதனுள்ளே மூழ்கிக் கிடக்கிறான். தன்
மரணத்திற்க்கு பிறகு வாழ்க்கை உண்டு என்பதை நினைத்தாலும் அதற்க்குண்டான செயல்களில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளத் தயங்குறான் சொல்லபோனால் அதற்க்குண்டான செயல்களை செய்யவே சோம்பேரித்தனம் செய்கிறான்.

إِنَّ الَّذِينَ كَذَّبُوا بِآيَاتِنَا وَاسْتَكْبَرُوا عَنْهَا لَا تُفَتَّحُ لَهُمْ أَبْوَابُ السَّمَاءِ وَلَا يَدْخُلُونَ الْجَنَّةَ حَتَّى يَلِجَ الْجَمَلُ فِي سَمِّ الْخِيَاطِ وَكَذَلِكَ نَجْزِي الْمُجْرِمِينَ

நிச்சயமாக நம்முடைய வசனங்களைப் பொய்ப்பித்து, அவற்றை (ஏற்பதை) விட்டும் பெருமையும் கொண்டார்களே அத்தகையோர் – அவர்களுக்கு (அல்லாஹ்வின் அருளுக்குரிய) வானத்தின் (அருள்) வாயில்கள் திறக்கப்படமாட்டாது, மேலும் ஊசியின் துவாரத்தில் ஒட்டகம் நுழையும் வரையில் அவர்கள் சுவனத்தில் நுழையமாட்டார்கள், மேலும் குற்றவாளிகளுக்கு இவ்வாறே நாம் கூலி கொடுப்போம். (அல்குர்ஆன் 7:40)

பூமியின்மீது பெருமையடித்து பகட்டுகாக தன்னை தயாரக்கி அகந்தைகொண்டு நடப்போருக்கு இறைவனின் அச்சம் விட்டுபோகக்கூடும் எனவே பெருமையடித்து திரியாதீர்கள். பெருமையும் புகழும் இறைவன் ஒருவனுக்கே.

நீங்கள் (ஜனாஸாவை) அடக்கம் செய்யமாட்டீர்கள் என்ற பயம் இல்லையென்றிருந்தால் எனக்கு கேட்கும் கப்ருடைய வேதனையை உங்களுக்கும் கேட்க வேண்டும் என்று அல்லாஹ்விடத்தில் நான் துஆச் செய்திருப்பேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(முஸ்லிம்)

حَتَّى إِذَا جَاءَ أَحَدَهُمْ الْمَوْتُ قَالَ رَبِّ ارْجِعُونِي. لَعَلِّي أَعْمَلُ صَالِحًا فِيمَا تَرَكْتُ كَلَّا إِنَّهَا كَلِمَةٌ هُوَ قَائِلُهَا وَمِنْ وَرَائِهِمْ بَرْزَخٌ إِلَى يَوْمِ يُبْعَثُونَ
அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும்போது, அவன்; “என் இறைவனே! என்னை (உலகுக்குத்) திருப்பி அனுப்புவாயாக!’ என்று கூறுவான். “நான் விட்டுவந்ததில் நல்ல காரியங்களைச் செய்வதற்காக” (என்றும் கூறுவான்). அவ்வாறில்லை! அவன் கூறுவது வெறும் வார்த்தையே(யன்றி வேறில்லை); அவர்கள் எழுப்பப்படும் நாள் வரையிலும் அவர்கள் முன்னே ஒரு திரையிருக்கிறது. (அல்குர்ஆன் 23:99-100)

மறுமைக்கான முன்னோட்டமாகத்தான் மண்ணறை வாழ்க்கையென்ற ஒன்றை இறைவன் வைத்துள்ளான் மண்மீது நாம் செய்யும் அத்தனையும் கணக்கெடுக்கப்பட்டுக்கொண்டேயிருக்கும். அதில் செய்யும் நன்மை தீமைகளின் பட்டியல் பொருத்தே மண்ணறைக்குள் கேள்விகள் கேட்கப்படும். அங்கு கேட்க்கப்படும் கேள்விகளின் பதில்களைப்பொருத்தே மறுமையில் சுவர்க்கம் நரகமென என தீர்மானிக்கப்படும் ஆகவே,

மண்ணறை வாழ்க்கையைப்பற்றி ஒருவன் முன்னமே அறிந்தால் அதற்காக தயாராகயிருப்பான் அதன்பொருட்டு திருமறையிலும் நபிமொழியிலலும் சிலவற்றுகள் எடுத்துக்காட்டப்பட்டு, சொல்லப்பட்டும் உள்ளன. அவைகளைத் தெரிந்து அதன்படி நடப்போர் வெற்றிபெறுவார். தெரிந்தும்  தெரியாததுமான பாராமுகங்களில் இருப்போருக்கு கேடுதான்.

"ஓர் அடியானது உடலைக் கப்ரில் அடக்கம் செய்துவிட்டு, அவனுடைய தோழர்கள் திரும்பும்போது அவர்களின் செருப்பின் ஓசையை அந்த மய்யித் செவியேற்கும். அதற்குள் இரண்டு வானவர்கள் அவனிடம் வந்து அவனை எழுப்பி உட்கார வைத்து, 'முஹம்மத் என்பவரைப் பற்றி நீ என்ன கருதிக் கொண்டிருந்தாய்?' எனக் கேட்பர். அதற்கவன், 'அவர் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாவார் என நான் சாட்சி கூறுகிறேன்' என்பான். பிறகு '(நீ கெட்டவனாக இருந்திருந்தால் நரகத்தில் உனக்கு கிடைக்கவிருந்த) தங்குமிடத்தைப் பார்! (நீ நல்லவனாக இருப்பதால்)அல்லாஹ் அதற்குப் பதிலாக உனக்குச் சொர்க்கத்தில் தங்குமிடத்தை ஏற்படுத்தியுள்ளான்' என்று அவனிடம் கூறப்பட்டதும் அவன் அவ்விரண்டையும் ஒரே நேரத்தில் காண்பான். நிராகரிப்பவனாகவோ நயவஞ்சகனாகவோ இருந்தால் கேள்வி கேட்கப்பட்டதும், 'எனக்குத் தெரியாது; மக்கள் சொல்வதையே நானும் சொல்லிக் கொண்டிருந்தேன்' என்பான். அப்போது அவனிடம் 'நீயாக எதையும் அறிந்ததுமில்லை; (குர்ஆனை) ஓதி(விளங்கி)யதுமில்லை என்று கூறப்படும். பிறகு இரும்பாலான சுத்தியால் அவனுடைய இரண்டு காதுகளுக்குமிடையே (பிடரியில்) ஓர் அடி கொடுக்கப்படும். அப்போது மனிதர்ளையும் ஜின்களையும் தவிர மற்ற அனைத்தும் செவியேற்குமளவுக்கு அவன் கதறுவான்"

இப்பூலோக வாழ்வு அற்பமானது ஆனாலதை மனிதன் அற்புதமானதென நினைத்து ஆணவம் கொண்டலைகிறான், பல்வேறு அனாச்சாரங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொள்கிறான்.சர்வசாதரணமாக குற்றங்களும் கொலைகளும் புரிகிறான்.

"ஒரு முஸ்லிம் (இறந்தபின்) மண்ணறையில் விசாரிக்கப்படும்போது, அவர் 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை; முஹம்மத்(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார்கள்' என்று உறுதிமொழி கூறுவார். இதுதான் '(இறை) நம்பிக்கை கொண்டோரை, அல்லாஹ் ஒரு வலுவான வாக்கின் அடிப்படையில் இம்மையிலும், மறுமையிலும் உறுதிப்படுத்துகிறான்' எனும் (14:27 வது) இறை வசனத்தின் கருத்தாகும்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் 

ஒரு மனிதனின் மரணத்திற்குப் பின் அவரது அமல்களில் மூன்றைத் தவிர மற்றவை எல்லாம் செயலற்றவைகளாகி விடுகின்றன.

மரணத்தபின்பு மனிதன் கூடவே செல்லும் அம்மூன்று செயல்கள்-
 1.சதக்கத்துல் ஜாரியா
தான தர்மங்கள்

2.பலன் தரும் கல்வி
இம்மை மறுமை இரண்டிற்க்கும் நன்மை பயக்கும் கல்வி.
 
3.பெற்றோருக்காக துஆசெய்யும் [பிரார்த்திக்கும்] நேர்மையான (ஸாலிஹான) பிள்ளைகள். 
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்:முஸ்லிம்

ஒரு முஸ்லிமின் மரணத்தோடு அவரது செயல்கள் முற்றுப்பெறுகின்றன. நற்செயல்கள் செய்து நன்மையைத் தேடிக்கொள்வதும் இயலாமல் ஆகிவிடுகின்றது. ஆயினும் அவர் உயிரோடு இருந்த காலத்தில் செய்த நற்செயல்களில் சில மரணத்திற்குப் பின்னரும் நிரந்தரமாக என்றென்றும் எந்நோக்கத்துடன் அச்செயல் நிறைவேற்றப்பட்டனவோ அந்நோக்கங்கள் நிறைவேறிக் கொண்டு இருக்கும் காலமெல்லாம் அவர் மரணமடைந்த பின்னரும் நன்மைகள் [சேர்ந்தும்] சேர்த்துக் கொண்டிருக்கும். உதாரணமாக!

பள்ளிவாசல்கள், , மக்கள் குடிநீர் பெற தோண்டிய கிணறுகள், கல்விக்கூடங்கள்,அநாதை இல்லங்கள்,ள்,  தர்ம ஸ்தாபனங்கள், மருத்துவமனைகள், பலன் தரும் விஞ்ஞான கண்டு பிடிப்புகள். இவையாவும் அதனிலடங்கும்.

2:215. அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்; “எதை, (யாருக்குச்) செலவு செய்யவேண்டும்” என்று; நீர் கூறும்: “(நன்மையை நாடி) நல்ல பொருள் எதனை நீங்கள் செலவு செய்தாலும், அதை தாய், தந்தையருக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப்போக்கர்களுக்கும் (கொடுங்கள்); மேலும் நீங்கள் நன்மையான எதனைச் செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதை அறிந்து (தக்க கூலி தருபவனாக) இருக்கிறான்.” 

இரண்டாவதாக தான் வாழ்ந்த காலத்தில் மக்களுக்கு பலனளித்து கொண்டிருந்த அவரது மார்க்க கல்வியும் மனிதர்களுக்கு பலனளிக்கும் மற்ற கல்வியும், இறந்தவர் தன் கல்வி அறிவால் போதித்தவைகள் பலனாக நன்மைகள் செய்தவருக்குறிய பலன்கள் குறைவில்லாமல் கிடைப்பதோடு அந்நன்மைகளை செய்ய ஊக்குவித்த கல்வியாளருக்கும் அவரது மரணத்திற்குப் பின்னரும் நன்மைகள் சேர்ந்து கொண்டே இருக்கும்.

படைத்த உமது இறைவனின் பெயரால் ஓதுவீராக! அவனே மனிதனை ஒட்டிக்கொண்டிருக்கும் அட்டை போன்ற ஒன்றிலிருந்நு படைத்தான். நீர் ஓதும்.  உமது இறைவன் மாபெரும் கொடையாளி. அவன்தான் எழுதுகோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான். மனிதன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்.                                                         (96: 1-5)

ஓருவர் ஓர் அறிவைத் தேடி ஒரு பாதையில் சென்றால் அல்லாஹ் அதனைக் கொண்டு அவருக்கு சுவனம் செல்லும் ஒரு பாதையை இலேசாக்கிக் கொடுக்கிறான். (முஸ்லிம்)

    மூன்றாவதாக மார்க்க நெறிகளை பேணி ஒழுக்கமுடன் வளர்க்கப்பட்ட மக்கள் செய்கின்ற நற்செயல்கள் யாவும் மரணமடைந்த பெற்றோர்களுக்கு நன்மைகள் சேர்ப்பவையாகும். இத்தகைய சாலிஹான பிள்ளைகளின் இறைவணக்கம், அவர்களின் பிள்ளைகள் இறை உணர்வோடு நிறைவேற்றும் அனைத்து செயல்களும் பெற்றோர்களுக்கு அவர்களின் மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்ப்பவையாகும்.

ஒரு நல்ல பெற்றோர் எப்படி இருக்கவேண்டும். உண்மையான, அன்பான, முறையான கணவன் மனைவியாக இறைவனை ஜந்து வேளை தொழுது குழந்தைகளையும் சிறு வயது முதலே தொழவும், ஓதவும், தீன் வழியில் ஈடுபடவும் செய்ய வேண்டும். இஸ்லாத்தின் கடமைகளை பெற்றோர்களும் பின்பற்றி பிள்ளைகளையும் கட்டாயமாக பின்பற்றச் செய்ய வேண்டும். இஸ்லாத்தின் மார்க்க விஷயங்களை பிள்ளைகளுக்கு போதித்து அதை முறையாக பின்பற்ற செய்யவைப்பது பெற்றோர்களின் மிகப்பெரிய கடமை மார்க்க விஷயங்களைக் கற்று அதைப் பின்பற்றச் செய்வதில் பிள்ளைகளை ஆர்வம் காட்ட வேண்டும். அப்படி வளர்க்கபடும் பிள்ளைகள் பெற்றோர்களுக்காக அவர்கள் இறந்தபின்பும் அவர்களுக்காக துஆ [பிராத்தனை] செய்துகொண்டேயிருக்கும்

ஆகவே  மனிதர்களே நீங்கள் உயிரோடு இருக்கும் காலத்தில் உங்களுக்கான நல்லவிசயங்களை செய்துகொள்வதோடு நீங்கள் மரணித்தபின் உங்களுக்காக கூடவருபவைகளையும் தயார்செய்துகொள்ளுங்கள்.

ஆடம்பரம்  பகட்டு. கேலிக்கூத்து, புகழ், அந்தஸ்து, செல்வ செழிப்பு, என எல்லாம் இவ்வுலகிலேயே முடிவடைந்துவிடும் எதுவும் உங்களுடன் வரப்போவதில்லை. என்பதை தெளிவாக உணர்ந்துகொள்ளுங்கள்

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வேடிக்கையும், அலங்காரமுமே தவிர வேறில்லை!
"அந்நாளில் செல்வமும், பிள்ளைகளும் (யாதொரு) பயனுமளிக்க மாட்டா" (அல்-குர்ஆன் 26:88)

  கலிமா சொல்லி முஸ்லீமாக இருந்துகொண்டு ஓறிறைக்கொள்கையை ஊன்றிப்பிடித்துள்ளேன் என வாயளவில்மட்டும் சொல்லிக்கொண்டு இருந்தால்மட்டும் போதாது, செயல்களிலும் வரவேண்டும்.

  இறைவிசுவாசிகளே! இறைவனுக்கு அஞ்சுங்கள் அவனின் கட்டளைகளுக்கு அஞ்சுங்கள். மறைவானவற்றைகள்தானே என பொடுபோக்குத்தனமாக இருந்துவிட்டு, நாளை மண்ணறையில் கேட்க்கும் கேள்விகளுக்கு பதில்தெரியாமல் கோட்டைவிட்டு விட்டு மறுமையில் நஸ்டவாளர்களில் ஒருவராக ஆகுவதைவிட்டும் தவிர்ந்துகொள்ள முனையுங்கள்.

  இவ்வுலக  இன்பம், துன்பம், ஆசை,இச்சை, யென அனைத்தும் வழங்கப்பட்ட ஒரு பரிட்சைக்கூடம். ஆகவே இதில் கவனம் அதிகம் வேண்டும். பகுதறியும் தன்மை கொண்டும், படைத்தவனின் உண்மைகொண்டும், உங்களை நீங்களே பரிசோதித்து  வெல்ல உங்களுக்கான ஒரு சந்தர்ப்பமே இந்த மண்ணுலக வாழ்க்கை,

  அதனால் மனிதர்களே! இறைவனுக்கு அஞ்சி அடிபணியுங்கள். அவன் இட்ட கட்டளைகளை நிறைவேற்றுங்கள். உங்களுக்காக நன்மைகளை  நீங்களே தேடிக்கொள்ளுங்கள் மறுமையில் வெற்றியடையுங்கள் சுவர்க்கம் நுழையுங்கள்..

வஸ்ஸலாம்
அன்புடன் மலிக்கா

 இறைவா! 
 உன்னையே வணங்குகிறேன்
உன்னிடமே உதவியும் தேடுகிறேன்

வேண்டுகோள்..

இங்கே பதியப்படும் அனைத்தும், நான் என்னை தெளிவுப்படுத்திக்கொள்ளவும். ஈருலக வாழ்க்கையையும் அறிந்துக்கொள்ளவும். தொடங்கியுள்ள பயணம். அதில் தாங்களும் தெரிந்துகொள்வதில் பெருமிதம். ஆனால் இதை தவறானமுறையில் விளங்கிக்கொண்டு வீணான விவாதங்களோ தர்க்கங்களான கருத்துக்களாகவோ அமைத்துவிட வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்..