.

வருகை புரியும் அனைவர்மீதும் இறைவனின் அருளும் சாந்தியும் அளவில்லாமல் கிடைக்கட்டும் Photobucket

ஒற்றுமையோடு செயல்படுங்கள்...

| | 14 comments

بسم الله الرحمن الرحيم
அளவற்ற அருளாளனனும். நிகரற்ற அன்புடையோனுமாகிய இறைவனின் திருநாமத்தால் ஆரம்பம் செய்கிறேன்

.அன்புள்ள நல்லடியார்களே!
10. நம்பிக்கைகொண்டோர்[அனைவரும்] சகோதரர்கள் தாம். எனவே சகோதரர்களுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள். அருள் செய்யப்படுவீர்கள்.
அல்குர்ஆன் அல்ஹுஹ்ராத் பாகம்:26 

ஒற்றுமையின் கயிற்றை பலமாக பற்றிப் பிடித்துக்கொள்ளுங்கள்
நாம் செய்யும் செயல்கள் யாவற்றையும் நம்பிடறி நரம்புக்கும் மிக அருகாமையிலிருந்து நன்கறிபவனும்,  மனங்களில் ஒளிந்துள்ளதையும் மிக நுண்ணியமாக அறியக்கூடியவனும் இறைவன் ஒருவனே
நாளை அவனிடமே நம்முடை மீளுதல் உள்ளது.

இதை மறந்த மனிதர்கள் ஒருவருக்கொருவர் சாடிக்கொள்வதும், சண்டையிட்டுக்கொள்வதும், குற்றங்கள் சுமத்திக்கொள்வதும்,அதுவும் பொதுயிடங்களில் நம்மைபற்றி நாமே தரைகுறைவாய் வார்த்தைகளை வாதங்கள் என்றபெயரில் வரைமுறையற்று நடந்துகொள்வதும், இஸ்லாத்தில் இல்லாத ஒரு செயலாகும். அச்செயல்களை அனைத்தையும் தவறானவைகளென அறிந்துகொண்டே இதுபோன்ற காரியங்களில் ஈடுபடுவதுதான் வருத்தமாக உள்ளது.

சாதரண மக்கள் இஸ்லாத்தின் சட்டதிட்டங்களை அறியும் முன்பே அதன் சாராம்சமான இஸ்லாமியனைப் பார்த்துதான் மற்ற சமுதாயதவர்கள் இஸ்லாத்தின்பேரில் நம்பிக்கை வைப்பதும், அவநம்பிக்கை வைப்பதும் என தெரிந்திருந்தும் இதுபோன்றவர்களின் செயல்களால் இஸ்லாத்தின்பால் ஓர் அச்சத்தை ஏற்படுதிவிடுமோ என்ற ஆதங்கம்தான் இப்பதிவையே எழுததூண்டியது.

சொல்லலாம் இஸ்லாமியனைகண்டு இஸ்லாமல்ல என்பது உண்மைதான். ஆனால் உண்மையான இஸ்லாமியரைக் கொண்டுதான் இம்மார்க்கமே உருவானதும் பூர்த்தியானதும். இம்மார்க்கத்தின் ஆணிவேரே ஓரிறைக்கொள்கை அதை ஒற்றுமையோடு ஓரினமாக பற்றிபிடித்து காப்பது என்பதுதானே சிறந்தது

அந்த ஓர் இறைவனின் வாக்குகளை மீறி நடப்பது எவ்விதத்தில் சரி. மனித மனங்களுக்குள், அவர்களின் கோட்பாட்களுக்குள், வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் இறைவன் என வரும்போதும் மார்க்கமென வரும்போதும் அவனின் சொல்படி நடக்கவேண்டும் என்று ஏன் நினைப்பதில்லை. ஒற்றுமையுடன் அல்லவா செயல்படவேண்டும். ஒன்றுபட்டால்தானே உண்டு வாழ்வு..

மற்ற சமுதாயம் இதைபார்த்து போற்றும்படியாக நடக்கவேண்டுமே தவிர இவர்களுக்குள்ளேயே ஒற்றுமையில்லையே என்ற எண்ணைத்தை உருவாக்குவது சரியா? ஒருகுடும்பத்துக்குள் நடக்கும் பிரச்சனை வீதிக்கு வருமானால் அது எவ்வளவு பெரிய விளைவுகளை ஏற்படுத்துமோ அதைவிட பலமடங்கு..தன்னுயிரான சன்மார்க்கத்துகுள் தன்இனத்தைச் சார்ந்த சகோதரர்களுக்குள் வாதமென்ற பெயரில் அடுத்தவர்களின் கேளிக்கும் கிண்டலுக்கும் ஆளாவதுதான் வேதனையளிக்கிறது

இஸ்லாமார்க்கத்தில் சாதிமத பேதமில்லை இனவெறி, நிறவெறியில்லை அனைவரும் இறைவன்முன் சமம். லாயிலாஹ இல்லல்லாஹ் முகம்மதுர் ரசூலில்லாஹ். வணக்கத்துக்குறியவன் இறைவன் ஒருவனை தவிர யாருமில்லை . முகமது நபி இறைவனின் திருத்தூதர். ஆக இறைவேதத்தின்படியும் இறைத்தூதர் அவர்களில் சொல்படியும் உலகிலுள்ள அனைவருக்காகவும் அனைவரின் நல்வழிக்காவும் அதனை பின்பற்றி நடக்க சொல்லியிருக்கிறார்கள். அதனைவிடுத்து ஆளாளுக்கு நான் சொல்வதுசரி நீ சொல்வதுசரியென வாக்குவாதம் செய்து ஒரேகொள்கையில் பலபிரிவுகளாக பிறர் சிரிக்கும்படி நடப்பது சிறந்த்தாகுமா!

மனிதன் என்பவன் தவறிழைக்கக்கூடியவன். அப்படிதான் படைக்கப்பட்டுள்ளான். யாரும் தவறாமல் இருந்ததேயில்லை ஏதோ ஒருவகைகளில்.தவறின்பக்கம் போகக்கூடும்.அது தவறென்று உணர்ந்து அதைதிருத்தி திருந்திவாழ நினைக்கும் மனிதன் மனிதனில் சிறந்தவனாகிறான்.

மார்க்க விசயத்திலும் சரி. மனவேறுபாடு விசயங்களிலும் சரி, ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து, அனைவரும் அமர்ந்துபேசி நல்லிணக்கத்திற்கு வழிவகுப்பதே மிகசிறந்த மார்க்கவழியாக நமக்கு சொல்லிதரப்படிருக்கிறது அதன்படி நாம் அனைவரும் நடக்கவேண்டும்

எல்லாம் வல்ல இறைவன்முன் நாம் நிலைதடுமாறி நின்றுவிடாமலும், அவன் சொல்லை மறுதவர்களாக ஆகிவிடாமலும், இறைவாக்கை மீறி எவ்விதத்திலும் குற்றமிழைத்த பாவியாகிவிடாமலும், நன்மையின்பக்கம் நம்முகங்களும் மனங்களும். சாய்ந்தைவையாகவும், இம்மையிலும் மறுமையிலும் நற்பாக்கியங்களை பெற்றவர்களாக ஒற்றுமையென்னும் பலத்தை பலமாக பற்றிப்பிடித்தபடியே. இறைவனின் சொல்படி நடந்து சுவர்கத்தில் நுழைய ஏக இறைவன் நமக்கு நல்லருள் புரிவானாக.

நான் அதிகம் அறிந்தவளில்லை என்றபோதிலும். இறைவனால் எனக்கு தரப்பட்ட அறிவால் விளங்கியவகையில் இதை எழுதியுள்ளேன். இதில் பிழைகளில் இருப்பின் இறைவனுக்காக பொருந்திக்கொள்ளுங்கள்..


இறைவா!
உன்னையே வணங்குகிறேன்
உன்னிடமே உதவியும் தேடுகிறேன்..

வேண்டுகோள்..

இங்கே பதியப்படும் அனைத்தும், நான் என்னை தெளிவுப்படுத்திக்கொள்ளவும். ஈருலக வாழ்க்கையையும் அறிந்துக்கொள்ளவும். தொடங்கியுள்ள பயணம். அதில் தாங்களும் தெரிந்துகொள்வதில் பெருமிதம். ஆனால் இதை தவறானமுறையில் விளங்கிக்கொண்டு வீணான விவாதங்களோ தர்க்கங்களான கருத்துக்களாகவோ அமைத்துவிட வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்..