.

வருகை புரியும் அனைவர்மீதும் இறைவனின் அருளும் சாந்தியும் அளவில்லாமல் கிடைக்கட்டும் Photobucket

அன்புள்ள ஆன்மாவே -1

| |


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
இறைவனின் திருப்பெயரால்

1. எல்லாப்புகழும் இறைவனுக்கே[அவன்]
அகிலத்தை [படைத்து] பராமரிப்பவன்


2. அளவற்ற அருளாளன்
நிகரற்ற அன்புடையோன்


3. தீர்ப்பு நாளின் அதிபதி

4. [எனவே] உன்னையே வணங்குகிறோம்
உன்னிடமே உதவியும் தேடுகிறோம்

5. எங்களை நேர்வழியில் செலுத்துவாயாக!

6. 7. அது நீ யாருக்கு அருள் புரிந்தாயோ அவர்கள் வழி.
அவர்கள் [உன்னால்] கோபிக்கப்பட்டாதவர்கள்
மற்றும் பாதை மாறிச் செல்லாதவர்கள்.

[அல் பாத்திஹா] [1.1. அல்குர்ஆன்]

அன்புள்ள ஆன்மாவே
இன்று உன்னிடம் இறைவனின்மீது அன்புவைப்பதைப்பற்றி பகிர்ந்து கொள்ளலாம் எனவந்திருக்கிறேன்
அன்பு என்ற ஒன்று இருப்பதால்தான் இன்னும் இப்பிரபஞ்சம் ஈரப்பததுடன் இருக்கிறது
உண்மையானஅன்பு இருக்கும் இடத்தில் ஆணவம், அகந்தை, பொறாமை. மற்றும் தீய பழக்கங்கள்
இருப்பதற்கு வாய்ப்பில்லை.

நீ யார்மீது அன்புகொள்கிறாயோ அவரையும் உன் நல்வழியிலேயே அழைத்துச்செல். அவரின்
சுக துக்கங்களில் பங்குகொள்.
கஷ்டநஸ்டங்களில் உதவு.

அன்பை போதிப்பது அனைத்திலும் சிறந்தது.
அன்புகொண்டவர் அழகிய முறையில் சிந்திப்பார்.
அழகிய உபதேசம் செய்வார்.
அன்பை பெற்றவர் நல்வழியை கடைபிடிப்பார்.


யார் மீதும் யாரும் அன்புபாராட்டலாம்.
அன்பை அழகிய முறையில் கையாளுங்கள்.
அன்பை நல்வழிக்காக செலவிடுங்கள்
நம் அன்பால் கெடுதல் நினைப்பவரைக்கூட
நல்லவராக மாற்றியமைக்கும் வல்லமை
கொண்ட அன்பாக செயல்படுத்துங்கள்

.ஆன்மாவே

நாம் தாய்தந்தை மீது கொள்ளும் அன்பு
கணவன் மனைவி மீது கொள்ளும் அன்பு
பெற்றபிள்ளைகள் மீது கொள்ளும் அன்பு
ஏழை எளியவர்களின் மீது கொள்ளும் அன்பு
உற்றார் உறவினர் மீது கொள்ளும் அன்பு
காதலன் காதலியின் மீது கொள்ளும் அன்பு
உற்ற தோழமைகளின் மீது கொள்ளும் அன்பு
இவையனைத்தையும் முக்கியம்தான்

ஆனால்

அதைவிட பலமடங்கு இறைவன்மீது
அன்பு கொள்ளவேண்டும் ஏனென்றால்
இப்பூமியில்
நம்மைப் படைத்து பாதுக்காத்து பரிசுத்தப்படுத்தி
நமக்கு அன்பான தாய்தந்தை தந்து
நமக்கு அழகானமுறையில் உருவம்தந்து
பிறக்கவைத்து உயிர்வாழச்செய்துள்ளான்
உடல்தந்து உயிர்தந்து உலகில் வாழச்செய்த
இறைவன் தான் நமக்கு உயர்ந்தவன்

ஆன்மாவே

இறைவனின்மீது அன்புகொண்டு அன்புகொண்டு
அனைத்தையும் வெல்லப்பார்
அன்புகொள்ள அன்புகொள்ள நம்
அருகில் ஆவலாய் இருக்கிறான்
நேசங்கொண்டு இறைவனை நினைத்து வணங்கு
உன்னருகில் நெருங்கிவருவான்.

இறையன்பு கிடைத்துவிட்டால் எதையும் ஜெயிக்கலாம்
மனித அன்பு கிடைத்துவிட்டாலே நம்மால் நிலை கொள்ளாது
அதையெல்லாம்விட
மனிதனைப்படைத்த இறைவனின் அன்புக்கிடைத்தால்!!

ஆன்மாவே எண்ணிப்பார்
அன்பை பொழிந்துப்பார் நீ எப்படியிருப்பாய் என்பதை
உன்னால் உணர்ந்துகொள்ளமுடியும்


//உமது இறைவனைக் காலையிலும் மாலையிலும்
மனதிற்குள் பணிவாகவும், அச்சத்துடன்,
சொல்லில் உரத்த சப்தமில்லாமலும் நினைப்பீராக!
கவனமற்றவராக ஆகிவிடாதீர்
7:205. [அல் குர்ஆன்]//


உன் உலக காரியங்களை செய்யும் ஒவ்வொரு நொடியும்
உன் இறைவனையும் அனுதினமும் அன்போடு நினைத்துக்கொள்
அடுக்கடுக்காய் வெற்றிகள் வந்துகுவியக்காண்பாய்.

.ஆன்மாவே.
இன்று அன்பைப்பற்றி பகிர்ந்துக்கொள்ள இறைவன் உதவினான்
இன்ஷாஅல்லாஹ்

இறைவன் நாடினால்
அடுத்த நல்லதொரு விசயத்தை பகிர்ந்துகொள்ள உதவுவான் என்ற
நம்பிக்கையோடும்
அதுவரை நம் இறைவன்மீதும்
உன்மீதும்
அனைத்துமனித்குலத்தின்மீதும் அன்புகொண்டவாறு
விடை பெறுகிறேன்.

.
இறைவா!
உன்னையே வணங்குகிறேன்
உன்னிடமே உதவிதேடுகிறேன்..

அன்புடன் மலிக்கா
21 comments:

பித்தனின் வாக்கு said...

மாஸா அல்லாஹ், நல்ல பதிவு மலிக்கா. நல்ல கருத்துக்கள். மீதி பதிவுகளை சமயம் கிடைக்கும் போது படிக்கின்றேன். நன்றி.

S.A. நவாஸுதீன் said...

சூரா பாத்திஹாவுடைய விளக்கத்துடன் தொடங்கிய நல்லதொரு இடுகை.

///அன்பை போதிப்பது அனைத்திலும் சிறந்தது.
அன்புகொண்டவர் அழகிய முறையில் சிந்திப்பார்.
அழகிய உபதேசம் செய்வார்.
அன்பை பெற்றவர் நல்வழியை கடைபிடிப்பார்.

யார் மீதும் யாரும் அன்புபாராட்டலாம்.
அன்பை அழகிய முறையில் கையாளுங்கள்.
அன்பை நல்வழிக்காக செலவிடுங்கள்
நம் அன்பால் கெடுதல் நினைப்பவரைக்கூட
நல்லவராக மாற்றியமைக்கும் வல்லமை
கொண்ட அன்பாக செயல்படுத்துங்கள்///

அழகா சொல்லியிருக்கீங்க.

அன்புடன் மலிக்கா said...

வாங்க பித்தன்சார். ரொம்ப சந்தோஷம் தாங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மீண்டும் வருக.

அன்புடன் மலிக்கா said...

மிகுந்த சந்தோஷம் நவாஸண்ணா.
அன்பை போதிக்கசொல்லியும் அன்பை பெறச்சொல்லியும் அன்னையால் சொல்லிதரப்பட்டு வளர்கப்பட்டுள்ளேன்

இறைவனின் நாட்டப்படியே அனைத்தும் நல்லவிதமாக அமையட்டும் . மிக்க நன்றி நவாஸண்ணா.

அன்புடன் மலிக்கா said...

நவாஸண்ணா. நமக்கு நாமே இடுகையிட்டு அதை தமிழிஸிலும் பதிந்து 5, 6. ஓட்டுக்களும் வந்திருந்தது ஆனால் இப்போது அதை காணவில்லை.
சம்மிட் செய்யாததுபோலவே இருக்கு புரியவில்லையேண்ணா.

தாங்களுக்கு ஏதும் தெரிகிறதா????

S.A. நவாஸுதீன் said...

Check பண்ணி பார்த்தேன். எப்படி ஆனது என்று தெரியவில்லை. மறுபடியும் தமிழிஷில் இணைத்துவிட்டேன்.

வினோத் கெளதம் said...

நல்ல கருத்துக்கள்..

nitingale said...

nallaayirukku thodarwthu ezuthungkal

ஹுஸைனம்மா said...

மலிக்கா, நல்ல கருத்துக்கள்.

இந்த கறுப்பு பிண்ணனியை இளநிறத்துக்கு மாற்றினால் படிக்க எளிதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

ஹேமா said...

இறைவார்த்தைகளோடு
நல்ல பதிவு தோழி.இன்னும் நல்ல விஷயங்களைச் சொல்லுங்கள்.

மலர்வனம் said...

Mirukankalaiyum manithanakkum katturai.... Very Very useful for Good Life!

கவி அழகன் said...

நல்லதொரு இடுகை

goma said...

மலிக்கா
அன்புதான் இன்ப ஊற்று என்ற உண்மையை போர்க்களத்தில் ஆயிரம் ஆயிரம் உயிர்களை எடுத்தபின் உணருகிறார் அசோக சக்கரவர்த்தி.
அவருக்கு இந்த ஞானம் கிட்ட உயிர் நீத்த அத்தனை உயிர்களுக்கும் நாம் காலம் காலமாக நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறோம்.சரிதானே மலிக்கா

goma said...

அன்பினால் அடைய முடியாத ஒன்றை வேறு எதைக் கொண்டும் அடைய முடியாது.அன்பான உள்ளத்தை அடைந்து விட்டால் வேறு எதையும் நாடாது.

பாத்திமா ஜொஹ்ரா said...

அக்கா,அருமையான பதிவு,இதுமூலம் எல்லாருடைய துவாவும் உங்களுக்கு கிடைக்கும்.இன்னும் எழுதுங்கள்

பா.ராஜாராம் said...

அருமையான பதிவுங்க.

தமிழ்ப்பெண்கள் said...

தமிழ்ப்பெண்கள்

Center for Tamil Female Bloggers பெண் தமிழ் வலைப்பதிவாளர்களின் வலைமனை
http://www.tamilpenkal.co.cc/

இனியன் பாலாஜி said...

மன்னிக்க வேண்டும் மலிகா ஜி
சொல்வதற்கு வார்த்தை வரவில்லை

ஒன்றே ஒன்று தான் இப்போதைக்கு சொல்லமுடியும்
இது போன்ற் ஒரு குழந்தையைப் பெற்ற‌
உங்கள் பெற்றோர்கள் புண்ணியம் செய்தவர்கள்.
நீங்கள், உங்கள் குடும்பத்தார்,உங்களைசார்ந்த உஙகள் நண்பர்கள் , மற்றும்
உஙகள் உறவினர்கள் எல்லாம்
எல்லாம் வல்ல இறைவன் அல்லாவின் அருளால்
நலமுடனும், நல்ல வளமுடனும் விளங்க பிரார்த்திக்கின்றேன்.

அன்புடன்
இனியன் பாலாஜி

அன்புடன் மலிக்கா said...

balaji said...
மன்னிக்க வேண்டும் மலிகா ஜி
சொல்வதற்கு வார்த்தை வரவில்லை

ஒன்றே ஒன்று தான் இப்போதைக்கு சொல்லமுடியும்
இது போன்ற் ஒரு குழந்தையைப் பெற்ற‌
உங்கள் பெற்றோர்கள் புண்ணியம் செய்தவர்கள்.
நீங்கள், உங்கள் குடும்பத்தார்,உங்களைசார்ந்த உஙகள் நண்பர்கள் , மற்றும்
உஙகள் உறவினர்கள் எல்லாம்
எல்லாம் வல்ல இறைவன் அல்லாவின் அருளால்
நலமுடனும், நல்ல வளமுடனும் விளங்க பிரார்த்திக்கின்றேன்.

அன்புடன்
இனியன் பாலாஜி//


வாங்க பாலாஜி. இதைவிட வேண்டுமா உங்களின் பிராத்தனைகள்
ஏற்றுக்கொள்ள இறைவன் அருள்புரிவானக.

எனக்கு கிடைத்த குடும்பத்தைபோல்
எனக்கு கிடைத்த தோழமைகள்போல்
நான் எழுதும் எழுத்துகள் மூலம் தாங்களைப்போன்ற நல் உள்ளங்களை கிடைக்கசெய்த என் இறைவனுக்கு நான் காலம் முழுவதும் நன்றி செலுத்தினாலும் போதாது..

பெரியவர்களின் [துஆக்கள்] வேண்டுதல்கள் என்றென்றும் வேண்டும் எனக்கு.

என்றும்
அன்புடன் மலிக்கா

SUFFIX said...

இறைவசனங்களோடு ஆன்மாவைத் தூய்மை படுத்தும் அன்பை பற்றி அழகா சொல்லி இருக்கிங்க.

புல்லாங்குழல் said...

சகோதரி!

என் ஞானாசிரியர் சொன்னார்கள் உனக்கு இறைஞானம் வந்து விட்டது என்பதற்கு அடையாளம் எல்லோரையும் அன்பான கண்ணோட்டத்துடன் முன்னோக்குவாய் என்று.

இறைவன் உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் இருலக பாக்கியங்களும் அருள வேண்டுகிறேன்.

ஒ.நூருல் அமீன்

Post a Comment

கருத்துக்களை பகிர்ந்துகொள்ளும்போது நிறைகுறைகளை சரிபார்க்கலாம். பகிந்துகொள்ளுங்களேன் கருத்துக்களை
நானும் என்னை சரிசெய்து கொள்கிறேன் .
பிடிதிருந்தால் ஓட்டும் போடுங்கள்

வேண்டுகோள்..

இங்கே பதியப்படும் அனைத்தும், நான் என்னை தெளிவுப்படுத்திக்கொள்ளவும். ஈருலக வாழ்க்கையையும் அறிந்துக்கொள்ளவும். தொடங்கியுள்ள பயணம். அதில் தாங்களும் தெரிந்துகொள்வதில் பெருமிதம். ஆனால் இதை தவறானமுறையில் விளங்கிக்கொண்டு வீணான விவாதங்களோ தர்க்கங்களான கருத்துக்களாகவோ அமைத்துவிட வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்..