.

வருகை புரியும் அனைவர்மீதும் இறைவனின் அருளும் சாந்தியும் அளவில்லாமல் கிடைக்கட்டும் Photobucket

அன்புள்ள ஆன்மாவே- 4

| |

                                                                         بسم الله الرحمن الرحيم
அளவற்ற அருளாளனும் நிகறற்ற அன்புடையோனுமாகிய

இறைவனின் திருப்பெயரால் ஆரம்பிக்கிறேன்

அன்புள்ள ஆன்மாவே

இன்று இறையச்சத்தைபற்றி அறிந்தவைகளையும் தெரிந்தவைகளையும் பகிர்ந்துகொள்ளவந்துள்ளேன்.

மனிதர்களே!
இறைவனின் வாக்குகுறுதி உண்மையானது.இவ்வுலக வாழ்வு உங்களை ஏம்மாற்றிவிடவேண்டாம். ஏமாற்றுபவன், இறைவன் விசயத்தில் உங்களை ஏமாற்றிவிட வேண்டாம்.
[அல்குர்ஆன் பாக: 22 ஃபாத்திர்]


1. பூமி பேரதிர்ச்சியாக குலுக்கப்படும் போது.
2. தனது சுமைகளை பூமி வெளிப்படுத்தும்போது,
3.இதற்கு என்ன நேர்ந்தது? என்று மனிதன் கேட்கும்போது,
4, 5. அந்நாளில் தனது இறைவன் இவ்வாறு அறிவித்ததாக
தனது செய்திகளை அது அறிவிக்கும்.
6. அந்நாளில் மக்கள் தமது செயல்களைகாண்பதற்காக பல பிரிவினர்களாக ஆவார்கள்.
7. அணு அளவும் நன்மை செய்தவர் அதைக்காண்பார்.
8. அணு அளவும் தீமைசெய்தவர் அதைக்காண்பார்.
[அல்குர்ஆன் பாகம்: 30 அஸ்ஸில்ஸால்]


15, 16. இறைவனை அஞ்சியோர் இறைவன் தங்களுக்கு வழங்கியதைப்பெற்றுக்கொண்டு சொர்க்கச்சோலைககளில்லும் நீரூற்றுகளிலும் இருப்பார்கள் அவர்கள் இதற்குமுன் நன்மை செய்வோராக இருந்தனர்.
 [அல்குர்ஆன். பாகம்: 26 அத்தாரியாத்]


ஆன்மாவே
நீ இறைனுக்கு மட்டும் அச்சப்படு அவன் அகிலஉலகையும் படைத்து அதில்
நம்மையும்படைத்து நமக்கு வேண்டியதை நாம் கேட்காமலே வழக்கி
நம்மை மிகவும் கண்ணியப்படுத்தியுள்ளான்.

நம்முடைய உலக வாழ்வுக்காக இத்தனையும் தந்த இறைவனை
மறந்து உலக காரியங்களில் மூழ்கிவிடுகிறோம்.
மனிதர்களுக்கு அச்சப்படுகிறோம். அவர் இதை சொல்லிவிடுவார், இவர் அதைச்சொல்லிவிடுவார், என்பதற்காக இறைவனுக்கு மாற்றமான காரியங்களில் ஈடுபடுகிறோம்.

யார் இவர் அவர்கள்? அவர்களும் இறைவனால் படைக்கப்பட்ட நம்மைபோன்ற மனிதர்கள். மனிதர்களுக்கு தரும் மதிப்பும் அச்சமும் அவனைப்படைத்த இறைவனுக்கு தரமறுப்பதேன்?
நாம் செய்யும் ஒவ்வொரு விசயத்தையும் நம்கூடவேஇருந்து கவனிப்பவன் இறைவன் அதனை மறந்த நிலைக்கு தள்ளப்படுவது எதனால்?

இறையச்சம் நம்மளில் குறைந்துவிட்டது, அதை பிறகு பார்த்துக்கொள்வோம் என ஒதுக்கிவைத்துவிட்டோம். இறைவனுடைய கோபத்தை மறந்துவிட்டோம். பிறமனிதன் கோபப்படுகிறான் என்பதற்காக, பிறமனிதனை திருப்தி படுத்துவதற்காக, பிறமனிதர்களிடம் நம் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக, அவர்களுக்காக அச்சப்படுகிறோம்.
அவன் இறைவனுக்கு மாற்றமாக நம் மனதுக்கு ஒவ்வாததாக இருந்தாலும் அவன் சொன்னதற்காக செய்யப்பழகிக்கொண்டோம் இது சரியா?
மனிதனுக்கு மனிதன் அச்சப்படுவது இன்று விளைந்து நாளையழியக்கூடியது.
ஆனால் இறைவனுக்கு அச்சப்படுவது விளைந்தது விளைந்துகொண்டே இருப்பதைப்போன்றது அதற்கு அழிவேயில்லை.

இறையச்சம் இல்லாத ஆன்மா எதற்குமே தகுதியில்லாதது.
மனித சக்தியைமீறீ ஏதோ ஓர் சக்தி நம்மையட்டிவைக்கிறது என்பதை மனிதன் தெளிவாகவே உணர்ந்துள்ளான். ஆனாலும் அதை உணரமறுக்கிறான்.

நிச்சயம் இறையசத்தைக்கொண்டு உன்னை ஓரு சக்தி கண்காணித்துக்கொண்டே இருக்கிறதென்ற நம்பிக்கையில் உன் வாழ்க்கையின்
பாதையில் நட, உன் உள்மனம் எச்சரித்துக்கொண்டேயிருக்கும்
நீ தவறு செய்ய நாடினால்கூட அது உன்னை தடுத்துவிடும்.

ஆன்மாவே
உன் ஒவ்வொரு நற்ச்செயலுக்கும் நற்கூலியுண்டு இறையச்சத்தை மறந்த நிலையில் உன் மனதுக்கு மாறுசெய்துவிடாதே! அது உன்னை அழிவில் கொண்டுநிறுத்தும்.

ஏதோ ஒருவகையில் உலக காரியங்களுக்காக மனிதன் இறையச்சத்தை மறந்து ஆட்டுவிக்கப்படுகிறான் என் நிலையானாலும் இறையச்சம் இல்லையெனில் அன்னிலை அந்தோ பரிதாபமே!

ஆன்மாவே
நீ உலகில் வாழும் நாள்வரை இறைவனின் அச்சம் உன்னைவிட்டு விலகாதவாறு நிலைநிறுத்திக்கொள்! உன்மனைதை இறையச்சத்தால் பதப்படுத்திக்கொள்! உன்பாவச்செயல்களின் கடிவாளம் இந்த இறையச்சம் சிறும்பெரும் தவறுகளுக்கும் தடுப்புச்சுவர்! பற்றிபிடித்துக்கொள் இறையச்சத்தை பலமாக பற்றிப்பிடித்துக்கொள் அதுவே உன் ஈருலக வாழ்வை தீர்மானிப்பதும் உன்னை மேன்மையடைச்செய்வதும் இந்த இறையச்சம்தான்!

ஆன்மாவே
இன்று இறைவனின் இறையச்சத்தைப்பற்றி
அறியத்தந்த இறைவன்

இன்ஷாஅல்லாஹ்
இறைவன் நாடினால்
அடுத்த நல்லதொரு விசயத்தை பகிர்ந்துகொள்ளஉதவுவான்
என்ற நம்பிக்கையோடும் அதுவரை நம் இறைவன்மீதும்
உன்மீதும்
அனைத்து மனித்குலத்தின்மீதும் அன்புகொண்டவாறு
விடை பெறுகிறேன்

இறைவா!
உன்னையே வணங்குகிறேன்
உன்னிடமே உதவியும் தேடுகிறேன்.

அன்புடன் மலிக்கா

9 comments:

S.A. நவாஸுதீன் said...

குரான் வசனங்களோடு நல்ல விஷயங்களை பகிர்ந்துகொள்வது நன்று.

உங்களின் இந்தப் பணி தொடரட்டும்.

க.பாலாசி said...

நல்ல பகிர்வு...

சோலைராசா said...

/ஏதோ ஒருவகையில் உலக காரியங்களுக்காக மனிதன் இறையச்சத்தை மறந்து ஆட்டுவிக்கப்படுகிறான்/

ஆமாம் மலிக்கா இதிலிருந்து நம்மை நாமேமீட்டு எடுக்க இதுபோன்ற அறிவுறைகளை அடிக்கடியாவது கேட்ட்ப்பார்க்க வேண்டும் மிக்க நன்றி மலிக்கா

Starjan (ஸ்டார்ஜன்) said...

யா அல்லாஹ் ! உன்னையே நினைக்கின்ற/வணங்குகின்ற‌ மனநிலையை எங்களுக்கு தந்தருள்வாயே ! ஆமீன் .

நாஸியா said...

ஜஸகல்லாஹு க்ஹைர் சகோதரி..

தொடர்ந்து எழுதுங்கள்.. இன்ஷா அல்லாஹ்

பாத்திமா ஜொஹ்ரா said...

அருமை,தொடரட்டும் உங்கள் பணி

கோமதி அரசு said...

//இறைவா!

உன்னையே வணங்குகிறேன்
உன்னிடமே உதவியும் தேடுகிறேன்.//

இறைவனிடம் கை ஏந்துங்கள், அவன் இல்லை என்று சொல்லுவதில்லை.

இறைவனை தவிர நமக்கு புகலிடம் ஏதும் இல்லை.

அவன் அன்றி ஒரு அணுவும் அசையாது.

நல்ல பகிர்வு.
தொடரட்டும் இறை பணி.

Jaleela Kamal said...

இறையச்சம் பற்றி எடுத்துரைத்துள்ள (அஸ்ஸில்ஸால்) சூராவை அதன் அர்த்தத்துடன் போட்டு இருக்கிறீர்கள், எல்லோருக்கும் இறையச்ச விழுப்புணர்வை நினைவு கூர்ந்து இருகிறீர்கள்,

பணி தெடர வாழ்த்துக்கள்

Jaleela Kamal said...

உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள். உங்கள் என் பிலாக்கில் சின்ன விருது காத்திருக்கு வந்து பெற்றுக்கொள்ளுங்கள்.

Post a Comment

கருத்துக்களை பகிர்ந்துகொள்ளும்போது நிறைகுறைகளை சரிபார்க்கலாம். பகிந்துகொள்ளுங்களேன் கருத்துக்களை
நானும் என்னை சரிசெய்து கொள்கிறேன் .
பிடிதிருந்தால் ஓட்டும் போடுங்கள்

வேண்டுகோள்..

இங்கே பதியப்படும் அனைத்தும், நான் என்னை தெளிவுப்படுத்திக்கொள்ளவும். ஈருலக வாழ்க்கையையும் அறிந்துக்கொள்ளவும். தொடங்கியுள்ள பயணம். அதில் தாங்களும் தெரிந்துகொள்வதில் பெருமிதம். ஆனால் இதை தவறானமுறையில் விளங்கிக்கொண்டு வீணான விவாதங்களோ தர்க்கங்களான கருத்துக்களாகவோ அமைத்துவிட வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்..