.

வருகை புரியும் அனைவர்மீதும் இறைவனின் அருளும் சாந்தியும் அளவில்லாமல் கிடைக்கட்டும் Photobucket

ஆடம்பரத்தால் ஆவது????

| |

بسم الله الرحمن الرحيم
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புனையோனுமாகிய இறைவனின் திருப்பெயரால்...
.
15-உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணைக்கற்ப்பிக்கும்படி உன்னைக்கட்டாயப்படுத்தினால் அவர்களுக்கு கட்டுப்படாதே!
இவ்வுலகில் அவர்களிடம் அழகிய முறையில் தோழமைகொள் என்னை நோக்கி திரும்பியோரின் வழியைபின்பற்று!
பின்னர் உங்கள் மீளுதல் என்னிடமே உள்ளது.
நீங்கள் செய்துகொண்டிருந்தவை பற்றி உங்களுக்கு அறிவிப்பேன்..

17-எனது அருமை மகனே!
தொழுகையை நிலைநாட்டு!
நன்மையை ஏவு! தீமையை தடு! உனக்கு ஏற்படுவதை சகித்துக்கொள்! அது உறுதி மிக்க காரியமாகும்.

27-வீண் விரையம் செய்வோர் ஷைத்தான்களின் உடன்பிறப்புக்களாக உள்ளனர். ஷைத்தான் தனது இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான்.

அல்குர்ஆன் பாகம்:15    17.பனூ இஸ்ராயில்

29-நம்பிக்கைக்கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு
நல்வாழ்வும், அழகிய தங்குமிடமும் உண்டு.
அல்குர்ஆன் பாகம்:13     13.அர்ரஃது

ஒரு குழந்தை பிறந்ததும் அதை ஒழுக்கத்துடனும், நேர்மையுடனும், பொறுப்புடனும்.தைரியத்துடனும் வளர்க்கவேண்டியது பெற்றோரின்
முக்கிய கடமை!

ஏதோ பெற்றுவிட்டோம் வளர்த்துவிட்டோம் கடமைமுடிந்தது என நினைப்பது பெற்றோர்களின் நல்ல குணமல்ல. குழந்தை ஒவ்வொரு செயல்களிலும் பெற்றொர்களின் பங்கு நிச்சயம் பூர்த்தியாக இருக்கவேண்டும்.

வளரும் சூழ்நிலையில் குழந்தைக்கு தானே தன்னை பாதுகாத்துக்கொள்வதையும் தன்னால் பிறரை பார்த்துக்கொள்வதையும் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்வதிலும் தூண்டுகோலாக இருக்கவேண்டும். முக்கியமாக ஆண்குழந்தைகள் வளர்ந்து ஆளாகும் போது பொறுப்புகள் அவர்களின் தலையில் தானாகவே வந்துவிழும் அதை சமாளிக்கும் திறனை வளர்த்துவிடவேண்டும். சோதனைகள் வரும்போது அதை எதிர்கொள்ளும் தைரியத்தை உருவாக்கிவிடவேண்டும்.

ஆண் வளரும்போது சுமைகளும் வளர்கிறது. பள்ளியில் புத்தகச்சுமை. கல்லூரியில் காதல் சுமை. படிப்புசுமை.அதுமுடிந்ததும் வேலைதேடும் சுமை. வேலைகிடைத்திலிருந்து குடும்பச்சுமை. அடுத்து திருமணச் சுமை அடுத்து தன்குடும்பச்சுமை. குழந்தைகள் சுமை என சுமைகளின் பயணம் அவனை தொடர்ந்துகொண்டேயிருக்கும் அத்தனை சுமைக்கும் அவன் ஈடுகொடுக்க பணச்சுமையைத்தேடி ஓடனும். அதாவது ஓடி ஓடி உழைக்கனும்..அதுவும் கல்யாணமாகிவிட்டால் அப்பப்பா கேக்கவேவேணாம் மத்தளம்தான்.
அவனைகண்போல் காத்து வளர்க்கும் பெற்றோர் அவனுக்கு கல்யாணம் ஆனதும் கலங்கவைத்துபார்ப்பதுதான் விந்தை..

பெண்குழந்தை பிறந்தால் வருத்தப்படும் உலகம்.ஆண்குழந்தை பிறந்தால் சந்தோஷப்படுகிறது ஏன்? இதையறிந்தால் ஆண் மிகவும் வருந்துவான்
தான் எத்தனை சுமைகளை சுமந்துகொள்ளவேண்டும் என்பதை நினைத்து?[சுகமான சுமையென்பது வேறு. அதுவே சுமையிலும் சுமையாகிப்போனால்?] வளர்த்து ஆளாக்கி பணம் சம்பாதிக்கும் நேரத்தில்
பொதிசுமப்பது போலாகிவிடுகிறார்கள்.
அவனை படிக்கவைத்தோம் அதற்காக எவ்வளவு பாடுபட்டோம் அதனால் அவனும் பாடுபட்டுதான் எங்களை பார்த்துக்கொள்ளனும் என்பது சரியே! அதற்காக
நாம் ஆடம்பர வாழ்க்கை வாழவும்! ஊருக்காக பெயருக்காக வாழவும்! அவன் கஷ்டப்பட்டு உழைக்கும் உழைப்பபை வீணடிக்கலாமா? அவன் முதுகிலேயே முழுபாரத்தையும் சுமத்தலாமா?

நிறைய இடங்களில் இப்படிதான் நடக்கிறது. நாம் பூமி வந்த நோக்கமென்ன என்பதையே மறந்து. மற்றவர்களுக்காக நம்மை நாமே மாற்றி. மாறுவேசம்போட்டு அவர் செய்யும்போது நாம செய்யாமலிருந்தால் நம்ம அந்தஸ்து என்னாவது என கடனை உடனைவாங்கி ஆடம்பரத்தில்
ஆட்டம் ஆடிவிட்டு. ஆடிமுடியும்போது அன்றாட வாழ்க்கையே ஆட்டம்கண்டிருப்பதை அறிந்ததும் அழுது புலம்பியென்ன லாபம்?

வெளிநாடு போய்விட்டால் என்னவோ அங்கு ரோட்டில் கொட்டிக்கிடக்கும் பணத்தை அள்ளிஅனுப்பியதுபோல் சிலவுசெய்யும் தாய்தந்தையரும் சரி மனைவிமக்களும்சரி. அதை அங்கு எப்படி சம்பாதிக்கிறான் எந்தளவு கஷ்டப்படுகிறான் என்பதையெல்லாம் அறியமறுக்கிறார்கள்.
அவர்களுக்குவேண்டியெதெல்லாம் அடுத்தவர்கள் நம்மை தாழ்வாக நினைக்கக்கூடாது. அங்கு என்ன கஷ்டப்பட்டலென்ன? கடனைவாங்கியனுப்பினாலென்ன?. வட்டிக்குமேல் வட்டியானாலென்ன?
நாம்நினைத்தது நடந்தால் போதும்.

இதற்கு வழிகாட்டியார்? தாய் தந்தையா? அல்லது மனைவி மக்களா?
இல்லை ஊர் உலகமா? இல்லை நீங்களேவா? ஏனென்றால் நீங்கள் படும் கஷ்டங்களை மறைத்து பெருமையாக காட்டிக்கொள்ளும்போது அங்கிருப்பவர்களுக்கு அது புரியாதே? அதை உணர்த்தவறுவது உங்கள் தவறில்லையா? தவறை நீங்கள் செய்துவிட்டு பின் கஷ்டங்கள் வரும்போது அவர்களைகுறைசொல்லி லாபமில்லையே! சரி அது எதுவென்றபோதும் நாம் நம்மை சரிசெய்துகொள்ளவேண்டாமா? நம்மால் இதைதான் செய்யமுடியும் என எதற்கும் ஓர் வரையரை வகுத்துக்கொள்ளுதல் வேண்டாமா? நம் சக்திக்கு மீறி எதைசெய்தாலும் அது நம்மை பாதிக்கும் என்ற எண்ணம்
கொள்ளவேண்டாமா? ஆடம்பரத்தின்பின்னே போனால் அதனால் பின்பு கஷ்டப்படுவது யார்?சிந்திக்கவேண்டாமா?

நம் தாயாகட்டும் தந்தையாகட்டும் நம் மனைவியாகட்டும் மக்களாகட்டும்.
அவர்கள் சொல்லும் சொல்லிலோ செயலிலோ இறைவனின் வாக்குகளைமீறி
இறைவேதம் சொன்ன வழிகளைமீறி உலகவாழ்க்கைக்காக தன்னை உயர்த்திக்கொள்ளவேண்டும் அதுவும் அடுதவர்களுக்காக என நினைத்தால் அதை தடுத்துவிடுங்கள். நீங்களும் தவிர்ந்துக்கொள்ளுங்கள். இன்று அடுதவர்களுக்காக! ஊர் உலகத்துக்காக! இருக்கும் பணத்தையோ இல்லை அதற்க்குமீறி கடனை வாங்கியோ சிலவுசெய்து ஆடம்பரவாழ்க்கை வாழ்துவிட்டால்! நாளை சிரமமும் கஷ்டமும் சேர்ந்து வந்து உங்களை உலுக்கி எடுக்கும்போது.

அந்த அடுத்தவர்களோ ஊர் உலகமோ உங்களுக்காக ஒருபோதும் நிச்சியமாக உதவாது ஏன் ஏனென்றுகூடகேட்க்கமுன்வராது என்ற எண்ணத்தை மனதில் கொள்ளுங்கள் அதை அப்படியே மனதில் நிலைநிறுத்துங்கள்.இதுவே உலகவாழ்க்கையின் எதார்த்தம்.

விரலுக்கு தகுந்தார்போல் வீங்கினால்தானே வலி பொறுக்கமுடியும் அதற்குமேல்போனால் அல்லல்படவும் அவதிபடவும்தானே கூடும்.
நேரான வழியில் வரும் செல்வத்தை சீக்கிரம் சேமித்துக்கொள். அதை சிறுகச்சிறுக சிலவுசெய்யப்பழகு.

அதற்காக கருமித்தனமோ கஞ்சத்தனமோ செய்யாதே! எதையும் ஒரு எல்லைக்குள் உன் சக்திக்குள் செய்து வாழப்பார். அடுத்தவர்களுக்காக வாழும் வாழ்க்கையில் இல்லை இன்பம்
நமக்கா நாம் வாழும் வாழ்க்கையிலேயேதான் மகிழ்ச்சி தங்கும்
அதுவே உன் வாழ்கையை நெறிப்படுத்தும் நல்வழிப்படுத்தும்,
உங்களைச் செல்வச்செழிப்போடு வாழ்நாள்முழுவதும் வாழச்செய்யும்.

ஆடம்பர வாழ்க்கை வாழ்வது மிகச்சுலபம், ஆனால் அதன்பின்னால் வரும் ஆபத்துகளை சமாளிப்பது மிக மிககடினம். ஆபத்து அழிவிலும் கொண்டுபோய் நிறுத்தும். ஆகவே எதையும் அளவோடு. நமக்காக நாம் வாழபழகிக்கொள்ளவேண்டும் அடுத்தவர்களுக்காக வாழ்ந்தால் அது நம் வாழ்க்கையல்ல.பிறர் மத்தியில் நாம் உயர்வாக இருக்க்வேண்டுமென்று எண்ணி இருப்பதையும் இழந்துவிடும் நிலையை தவிர்ந்துவிட்டு,
 நம் எண்ணங்களை உயர்ந்ததாக சிறந்ததாக்கி கொள்ளவேண்டும். அதுவே நமக்கு நல்லவைகளை தானே கொண்டுவந்து சேர்க்கும் நம்மை உயர்த்தும்..

அன்புடன் மலிக்கா

இறைவா!
உன்னையே வணங்குகிறேன்
உன்னிடமே உதவியும் தேடுகிறேன்

31 comments:

ஜெய்லானி said...

முழுவதும் படித்தும் மீண்டும் படிக்க தூண்டியது. அற்புதமா எழுதி இருக்கீங்க.

நாடோடி said...

//ஆடம்பர வாழ்க்கை//
இது தான் ப‌ல‌ த‌வ‌றுக‌ளுக்கு கார‌ண‌மாக‌ இருக்கிற‌து... அருமையாக‌ எழுதியுள்ளீர்க‌ள்..

நாஸியா said...

ஜஸகல்லாஹ் சகோதரி..

100/100 நம்மாட்கள் மத்தியில இருக்கும் பழக்கங்களை அழகா எழுதிருக்கீங்க.. அடுத்தவங்க என்ன நினைப்பாங்க, என் கவுரவம் என்ன ஆகுமோன்னு தான் யோசிக்குறோமே தவிர நம்மை எந்த நேரமும் பார்த்துக்கொண்டிருக்கும் அல்லாஹ் என்ன நினைப்பான் என்பதை யாருமே யோசிக்க மாட்டோம்..

கண்ணா.. said...

//அந்த அடுத்தவர்களோ ஊர் உலகமோ உங்களுக்காக ஒருபோதும் நிச்சியமாக உதவாது ஏன் ஏனென்றுகூடகேட்க்கமுன்வராது//

உண்மைதான்.. இப்போது உணர்ந்து கொண்டிருக்கிறேன் :(

சுப்பையா. said...

இதற்கு வழிகாட்டியார்? தாய் தந்தையா? அல்லது மனைவி மக்களா?
இல்லை ஊர் உலகமா? இல்லை நீங்களேவா? ஏனென்றால் நீங்கள் படும் கஷ்டங்களை மறைத்து பெருமையாக காட்டிக்கொள்ளும்போது அங்கிருப்பவர்களுக்கு அது புரியாதே? அதை உணர்த்தவறுவது உங்கள் தவறில்லையா? தவறை நீங்கள் செய்துவிட்டு பின் கஷ்டங்கள் வரும்போது அவர்களைகுறைசொல்லி லாபமில்லையே.//

நெத்தியடிக்கேள்விகள் மலிக்கா.
பகட்டுக்காக வாழ்விரும்பும் நாம .நாமம்போட்டுக்கொண்டு அலையும் நிலையில் யாரும் கண்டுகொள்ளவில்லையே யென வருந்தி என்ன லாபம்.

தாங்களுக்கு எல்லாற்றுமே மிக அழகாய் நேர்த்தியாய் வருகிறது. பாராட்டுக்கள் மலிக்கா இன்னும் ஜொலித்திட வாழ்த்துக்கள்

Jaleela Kamal said...

மிக அருமையான பகிர்வு மலிக்கா. குர் ஆன் ஆயத்துடன் விளக்கம் அருமை

பனித்துளி சங்கர் said...

மிகவும் சிறப்பான பதிவு .
பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் மீண்டும் வருவேன்

ஸாதிகா said...

வரிக்கு வரி உண்மை மலிக்கா.அழகாக எழுதி இருக்கின்றீர்கள்.ஜசகல்லாஹு கைர்.கத்தாரிகளின் ஆடம்பரம் நம்மை மலைக்க வைக்கின்றது.துபை வாழ் அரபிகள் கூட இவ்வாறில்லை.இது மிக மிக அதிகப்படியான ஆடம்பரம் என்று இங்கும் துபையிலும் பல வருஷங்கள் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒருவர் கூறினார்.இந்நேரத்தில் நபித்தோழ்ர் அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப்(ரலி)அவர்கள் வாழ்க்கை வரலாறு நினைவுக்கு வருகின்றது.இறைவன் முஃமின் அனைவரையும் நேரிய வழியில் வாழும் நற்பாக்கியத்தைத்தருவானாக!

ஸாதிகா said...

உங்களுடைய சந்ததிகளும்,பொருளும் சோதனைக்கே என்று இறைவன் அழகான முறையில் பகர்கின்றான்.

ஸாதிகா said...

வரிக்கு வரி உண்மை மலிக்கா.அழகாக எழுதி இருக்கின்றீர்கள்.ஜசகல்லாஹு கைர்.கத்தாரிகளின் ஆடம்பரம் நம்மை மலைக்க வைக்கின்றது.துபை வாழ் அரபிகள் கூட இவ்வாறில்லை.இது மிக மிக அதிகப்படியான ஆடம்பரம் என்று இங்கும் துபையிலும் பல வருஷங்கள் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒருவர் கூறினார்.இந்நேரத்தில் நபித்தோழ்ர் அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப்(ரலி)அவர்கள் வாழ்க்கை வரலாறு நினைவுக்கு வருகின்றது.இறைவன் முஃமின் அனைவரையும் நேரிய வழியில் வாழும் நற்பாக்கியத்தைத்தருவானாக!

மின்மினி RS said...

வந்தாச்சி மின்மினி..

அட அருமையான குர்ஆன் வசனங்கள்.. ஆடம்பரம் இல்லாத வாழ்க்கையே மிகச்சிறந்தது என்பதை அழகான வசனங்கள் மூலம் விளக்கியிருப்பது அருமை மலிக்கா அக்கா.. தொடருங்கள் இறைவனின் அருட்கொடைகளை பற்றிய பதிவுகளை காண ஆவலோடு உள்ளோம்.

நான் ஒரு பதிவிட்டுள்ளேன். வருக கருத்துக்களை தருக...

காஞ்சி முரளி said...

////பள்ளியில் புத்தகச்சுமை. கல்லூரியில் காதல் சுமை. படிப்புசுமை.அதுமுடிந்ததும் வேலைதேடும் சுமை. வேலைகிடைத்திலிருந்து குடும்பச்சுமை. அடுத்து திருமணச் சுமை அடுத்து தன்குடும்பச்சுமை. குழந்தைகள் சுமை என சுமைகளின் பயணம் அவனை தொடர்ந்துகொண்டேயிருக்கும் அத்தனை சுமைக்கும் அவன் ஈடுகொடுக்க பணச்சுமையைத்தேடி ஓடனும். அதாவது ஓடி ஓடி உழைக்கனும்..அதுவும் கல்யாணமாகிவிட்டால் அப்பப்பா கேக்கவேவேணாம் மத்தளம்தான். அவனைகண்போல் காத்து வளர்க்கும் பெற்றோர் அவனுக்கு கல்யாணம் ஆனதும் கலங்கவைத்துபார்ப்பதுதான் விந்தை..///

சபாஷ்.. மலிக்கா..!
ஓர் பெண்மணியாய் இருந்து எங்களைப்போன்ற 'ஆணினத்தின்' சுமைகளை....
அது சுகமான சுமையனாலும் - சோகமான சுமையானாலும்...
அவற்றை அக்குவேறு...ஆணிவேராய்.. பிரித்து எடுத்து காட்டியிருப்பது...

இதுபோன்று நாங்களே சொல்லமுடியாத சங்கதிகளை சுட்டிக்காட்டியுள்ள தங்களுக்கு
என் மனமார்ந்த பாராட்டுக்கள்...!

அடுத்து...
////நாம் ஆடம்பர வாழ்க்கை வாழவும்! ஊருக்காக பெயருக்காக வாழவும்! அவன் கஷ்டப்பட்டு உழைக்கும் உழைப்பபை வீணடிக்கலாமா? அவன் முதுகிலேயே முழுபாரத்தையும் சுமத்தலாமா?////
நல்ல அறிவுரை... ஓர் ஆணின் உழைப்பை உணர்ந்து, அது 'விழலுக்கு இறைத்த நீராகக்' கூடாது என்பதையும் உணர்த்திய தங்களுக்கு ஆணினத்தின் சார்பில் நன்றி...!

////வெளிநாடு போய்விட்டால் என்னவோ அங்கு ரோட்டில் கொட்டிக்கிடக்கும் பணத்தை அள்ளி அனுப்பியது போல் சிலவுசெய்யும் தாய்தந்தையரும் சரி மனைவிமக்களும்சரி. அதை அங்கு எப்படி சம்பாதிக்கிறான் எந்தளவு கஷ்டப்படுகிறான் என்பதையெல்லாம் அறியமறுக்கிறார்கள். அவர்களுக்குவேண்டியெதெல்லாம் அடுத்தவர்கள் நம்மை தாழ்வாக நினைக்கக்கூடாது. அங்கு என்ன கஷ்டப்பட்டலென்ன? கடனைவாங்கியனுப்பினாலென்ன?. வட்டிக்குமேல் வட்டியானாலென்ன? நாம்நினைத்தது நடந்தால் போதும்.///

யதார்த்தமான உண்மையை ஊருக்கு உரைத்திருக்குறீர்கள்...!

வெளிநாட்டில் பணிபுரிபவர்கள் தங்கள் மனைவி, மக்கள், உற்றார், பெற்றோர், சொந்தம், பந்தம், நண்பர்கள், தன் ஊர், தன் மாநிலம், தன் நாடு இவற்றை மறந்து... தன் உணவுப் பழக்க வழக்கங்களை மறந்து... தன் சுகதுக்கங்களை மறந்து... அல்லும்பகலும் உழைப்பை மட்டுமே சுவாசமாய் சுவாசித்து... அவன் ஈட்டும் பணம், பொருள் ஒவ்வொன்றும்... அவன் உழைப்பின் பலன்.. அல்லஅல்ல.... அவன் ரத்தத்தின் வியர்வைகள்...

இந்த பலன்கள் அடுத்தவர்களுக்காக என்றால்... இதைவிட வேதனை ஏதுமில்லை...!

இறுதியாய்...
///அடுத்தவர்களோ ஊர் உலகமோ உங்களுக்காக ஒருபோதும் நிச்சியமாக உதவாது ஏன் ஏனென்றுகூடகேட்க்கமுன்வராது என்ற எண்ணத்தை மனதில் கொள்ளுங்கள் அதை அப்படியே மனதில் நிலைநிறுத்துங்கள்.இதுவே உலகவாழ்க்கையின் எதார்த்தம்.////

இந்த உலகத்தைப்பற்றி நான் சொல்வதைவிட என்பிரிய கவிஞன் 'கவியரசு கண்ணதாசன்' வரியில் சொல்வேதென்றால் "உயர்ந்த இடத்தில் இருக்கும்போது உலகம் உன்னை மதிக்கும்... உன் நிலைமை கொஞ்சம் இறங்கிவந்தால் நிழலும்கூட மிதிக்கும்". தன் நிழலே தன்னை மிதிக்கும் என்றால்..... உலகம்...?

மொத்தத்தில்...
இந்த "ஆடம்பரத்தால் ஆவது....!" மீண்டும் மீண்டும் படித்து மனதில் நிலைநிறுத்த வேண்டிய பொக்கிஷம்...!

மிக மிகச் சிறப்பான பதிவு.... பாராட்டுக்கள் மலிக்கா....!

வாழ்த்துக்கள்...
நட்புடன்...
காஞ்சி முரளி.....

Unknown said...

//அந்த அடுத்தவர்களோ ஊர் உலகமோ உங்களுக்காக ஒருபோதும் நிச்சியமாக உதவாது ஏன் ஏனென்றுகூடகேட்க்கமுன்வராது என்ற எண்ணத்தை மனதில் கொள்ளுங்கள் அதை அப்படியே மனதில் நிலைநிறுத்துங்கள்.இதுவே உலகவாழ்க்கையின் எதார்த்தம்.//

அருமையான கருத்துக்கள்.......எல்லோரும் கண்டிப்பாக பின்பற்றவேண்டியது......
ஆனால் நீங்கள் மேற்கூறிய அந்த வரிகள் எனக்கு சரியாக படவில்லை.....அதை நீங்கள் பிறருக்காக வாழாதே என்று சொல்லி இருக்கலாம்.....ஏனென்றால் அந்த வரிகள் சுயநலத்தை குறிப்பது போல் உள்ளது......அந்த வரிகள் தான் தனக்கு என்ற சுயநலத்தை தாங்கி வருவதாக கருதுகிறேன்............ நல்ல பதிவு.........நன்றி

எல் கே said...

//அந்த அடுத்தவர்களோ ஊர் உலகமோ உங்களுக்காக ஒருபோதும் நிச்சியமாக உதவாது ஏன் ஏனென்றுகூடகேட்க்கமுன்வராது என்ற எண்ணத்தை மனதில் கொள்ளுங்கள் அதை அப்படியே மனதில் நிலைநிறுத்துங்கள்.இதுவே உலகவாழ்க்கையின் எதார்த்தம்.//
யதார்த்தம். ஒரு ஆணின் மனதை படம் பிடித்து காட்டி இருக்கீர்கள். மிக மிக அருமையான தேவையான பதிவு

பித்தனின் வாக்கு said...

// அந்த அடுத்தவர்களோ ஊர் உலகமோ உங்களுக்காக ஒருபோதும் நிச்சியமாக உதவாது ஏன் ஏனென்றுகூடகேட்க்கமுன்வராது என்ற எண்ணத்தை மனதில் கொள்ளுங்கள் அதை அப்படியே மனதில் நிலைநிறுத்துங்கள்.இதுவே உலகவாழ்க்கையின் எதார்த்தம். //

சத்தியமான உண்மை. இனி இதை நானும் நினைவில் வைத்துக் கொள்கின்றேன்.

// 100/100 நம்மாட்கள் மத்தியில இருக்கும் பழக்கங்களை அழகா எழுதிருக்கீங்க. //
அப்படி இல்லைங்க நாஸியா, இது எல்லார் வீட்டிலும் நடக்கின்றது. எங்க வீட்டில் இல்லை, ஏன்னா எனக்கு ஊடு வாசல் கிடையாது. எங்க வீட்டில் யாரும் என்னை பணம் கேக்கும் நிலையில் இல்லை. ஆனா கஷ்டம் என்று கேக்கும் நண்பர்களை(எமாத்துவர்கள்) நம்பி நிறைய இழந்து, ஒரு நாள் நான் கேக்கும் போது எல்லாரும் கையை விரித்தார்கள். அதுதான் நான் கற்ற பாடம். சகோதரகள் திட்டிக் கொண்டு உதவி செய்தார்கள். என்ன செய்வது. ஆற்றில் செல்வத்தைக் கொட்டிவிட்டு குளத்தில் தேடினால் என்ன பண்ண முடியும்.

தேடும்மனம். said...

நம் தாயாகட்டும் தந்தையாகட்டும் நம் மனைவியாகட்டும் மக்களாகட்டும்.
அவர்கள் சொல்லும் சொல்லிலோ செயலிலோ இறைவனின் வாக்குகளைமீறி
இறைவேதம் சொன்ன வழிகளைமீறி உலகவாழ்க்கைக்காக தன்னை உயர்த்திக்கொள்ளவேண்டும் அதுவும் அடுதவர்களுக்காக என நினைத்தால் அதை தடுத்துவிடுங்கள்.//

நிச்சியமாக.
கடவுளின் கோட்பாடுகளைமீறி நடக்கும் எதுவுக்கும் துணைபோவது சரியேயல்ல.

மிக மிக அருமையான பதிவு மலிக்கா..

அன்புடன் மலிக்கா said...

ஜெய்லானி said...
முழுவதும் படித்தும் மீண்டும் படிக்க தூண்டியது. அற்புதமா எழுதி இருக்கீங்க./

மீண்டும் படிக்கத்தூண்டிய எண்ணங்களுகு மிக்க நன்றி ஜெய்லானி

/நாடோடி said...
//ஆடம்பர வாழ்க்கை//
இது தான் ப‌ல‌ த‌வ‌றுக‌ளுக்கு கார‌ண‌மாக‌ இருக்கிற‌து... அருமையாக‌ எழுதியுள்ளீர்க‌ள்..
//

மிகுந்த சந்தோஷம் மிக்க நன்றி ஸ்டீபன்....

அன்புடன் மலிக்கா said...

நாஸியா said...
ஜஸகல்லாஹ் சகோதரி..

100/100 நம்மாட்கள் மத்தியில இருக்கும் பழக்கங்களை அழகா எழுதிருக்கீங்க.. அடுத்தவங்க என்ன நினைப்பாங்க, என் கவுரவம் என்ன ஆகுமோன்னு தான் யோசிக்குறோமே தவிர நம்மை எந்த நேரமும் பார்த்துக்கொண்டிருக்கும் அல்லாஹ் என்ன நினைப்பான் என்பதை யாருமே யோசிக்க மாட்டோம்..

அதேதான். பெறும்பாலான இடங்களில் இதுபோன்றுதான் நடக்கிறது நாஸியா.
எத்தனை படித்தாலும் புத்தியில்லாது போகும்போதுதான் புண்படுகிறது மனது.

இறைவந்தான் அனைவருக்கும் ஹிதாயத் என்னும் நேர்வழியை காட்டிடவேண்டும்
.. ஆமீன்...நன்றி நஸியா

Chitra said...

அளவோடு இருந்தால் வளமோடு வாழலாம். அளவுக்கு மிஞ்சினால்?

அருமையான தத்துவங்களை, எளிய நடையில் பகிர்ந்தமைக்கு நன்றி.

Anonymous said...

good one malliga..Thanks for visiting and for your lovely comments in my blog.

அன்புடன் மலிக்கா said...

கண்ணா.. said...
//அந்த அடுத்தவர்களோ ஊர் உலகமோ உங்களுக்காக ஒருபோதும் நிச்சியமாக உதவாது ஏன் ஏனென்றுகூடகேட்க்கமுன்வராது//

உண்மைதான்.. இப்போது உணர்ந்து கொண்டிருக்கிறேன் :(//

உணர்ந்தபின்புதானே உண்மைதெரியும்.
தெரிந்தபின்பு மீண்டும் அதனுள் உலன்றுவிடக்கூடாது. மிக்க நன்றி கண்ணா..

//சுப்பையா. said...
இதற்கு வழிகாட்டியார்? தாய் தந்தையா? அல்லது மனைவி மக்களா?
இல்லை ஊர் உலகமா? இல்லை நீங்களேவா? ஏனென்றால் நீங்கள் படும் கஷ்டங்களை மறைத்து பெருமையாக காட்டிக்கொள்ளும்போது அங்கிருப்பவர்களுக்கு அது புரியாதே? அதை உணர்த்தவறுவது உங்கள் தவறில்லையா? தவறை நீங்கள் செய்துவிட்டு பின் கஷ்டங்கள் வரும்போது அவர்களைகுறைசொல்லி லாபமில்லையே.//

நெத்தியடிக்கேள்விகள் மலிக்கா.
பகட்டுக்காக வாழ்விரும்பும் நாம .நாமம்போட்டுக்கொண்டு அலையும் நிலையில் யாரும் கண்டுகொள்ளவில்லையே யென வருந்தி என்ன லாபம்.

தாங்களுக்கு எல்லாற்றுமே மிக அழகாய் நேர்த்தியாய் வருகிறது. பாராட்டுக்கள் மலிக்கா இன்னும் ஜொலித்திட வாழ்த்துக்கள்./

மிகுந்த சந்தோஷம் சுப்பையா. தாங்களின் வருகை ஊக்கத்தை தருகிறது இன்னும் எழுததூண்டி.. மிக்க நன்றி

அன்புடன் மலிக்கா said...

Jaleela said...
மிக அருமையான பகிர்வு மலிக்கா. குர் ஆன் ஆயத்துடன் விளக்கம் அருமை.//

மிக்க நன்றி ஜலீலாக்கா..

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
மிகவும் சிறப்பான பதிவு .
பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் மீண்டும் வருவேன்.//

கண்டிப்பா தொடர்ந்து வாருங்கள் பனித்துளி.மிக்க நன்றி..

அன்புடன் மலிக்கா said...

ஸாதிகா said...
வரிக்கு வரி உண்மை மலிக்கா.அழகாக எழுதி இருக்கின்றீர்கள்.ஜசகல்லாஹு கைர்.கத்தாரிகளின் ஆடம்பரம் நம்மை மலைக்க வைக்கின்றது.துபை வாழ் அரபிகள் கூட இவ்வாறில்லை.இது மிக மிக அதிகப்படியான ஆடம்பரம் என்று இங்கும் துபையிலும் பல வருஷங்கள் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒருவர் கூறினார்.இந்நேரத்தில் நபித்தோழ்ர் அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப்(ரலி)அவர்கள் வாழ்க்கை வரலாறு நினைவுக்கு வருகின்றது.இறைவன் முஃமின் அனைவரையும் நேரிய வழியில் வாழும் நற்பாக்கியத்தைத்தருவானாக./

ஆமீன் ஆமீன்.

ஆடம்பரங்கள் அதிகரித்தால் அழிவுகளும் ஆக்கிரமித்து அதிகரித்துவிட்டது.
எல்லைகள்மீறும்போது எதுவும் நம் கைகளில்லை.

மிக்க மகிழ்ச்சி ஸாதிக்காக்கா தாங்களீன் கருத்துக்கு மிக்க நன்றி..

சசிகுமார் said...

நன்றாக எழுதி உள்ளீர்கள் அக்கா ,உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

Jaleela Kamal said...

//அந்த அடுத்தவர்களோ ஊர் உலகமோ உங்களுக்காக ஒருபோதும் நிச்சியமாக உதவாது ஏன் ஏனென்றுகூடகேட்க்கமுன்வராது என்ற எண்ணத்தை மனதில் கொள்ளுங்கள் அதை அப்படியே மனதில் நிலைநிறுத்துங்கள்.இதுவே உலகவாழ்க்கையின் எதார்த்தம்.//

//மிகச்சரியான பாயின்ட் மலிக்கா

தாஜ் said...

அஸ்ஸலாமு அலைக்கும் மலிக்கா

ரொம்பவும் அருமயான பதிவு இக்காலகட்டத்திற்க்கு தேவையான பதிவும்கூட

இறைவன் தன் திருமறையில் சூரத்து புர்கானில் இறைவனின் நல் அடியார்களின் குணங்களை குறிப்பிடும்போது அவர்கள் வீண் விரயம்செய்ய மாட்டார்கள் என்று தன் அடியார்களை அதுவும் நல் அடியார்களை நமக்கு அடையாளம் காட்டுகிறான்

ஜஸாக்கல்லாஹு ஹைர்

சாந்தி மாரியப்பன் said...

அருமையான பகிர்வு.தன்னுடைய ஆடம்பரத்துக்காக, ஆணை பொதிமாடாக நினைக்கும் பெற்றோருக்கும் மற்றோருக்கும் நல்ல சூடு கொடுத்துள்ளீர்கள்.

அன்புடன் மலிக்கா said...

மின்மினி said...
வந்தாச்சி மின்மினி..

அட அருமையான குர்ஆன் வசனங்கள்.. ஆடம்பரம் இல்லாத வாழ்க்கையே மிகச்சிறந்தது என்பதை அழகான வசனங்கள் மூலம் விளக்கியிருப்பது அருமை மலிக்கா அக்கா.. தொடருங்கள் இறைவனின் அருட்கொடைகளை பற்றிய பதிவுகளை காண ஆவலோடு உள்ளோம்.

நான் ஒரு பதிவிட்டுள்ளேன். வருக கருத்துக்களை தருக...//

தாங்களின் ஆவலுக்கு விரைவில் எழுதுகிறேன் மின்மினி. அன்பான கருத்துக்கு மிக்க நன்றி..

அன்புடன் மலிக்கா said...

/காஞ்சி முரளி said...

சபாஷ்.. மலிக்கா..!
ஓர் பெண்மணியாய் இருந்து எங்களைப்போன்ற 'ஆணினத்தின்' சுமைகளை....
அது சுகமான சுமையனாலும் - சோகமான சுமையானாலும்...
அவற்றை அக்குவேறு...ஆணிவேராய்.. பிரித்து எடுத்து காட்டியிருப்பது...

இந்த உலகத்தைப்பற்றி நான் சொல்வதைவிட என்பிரிய கவிஞன் 'கவியரசு கண்ணதாசன்' வரியில் சொல்வேதென்றால் "உயர்ந்த இடத்தில் இருக்கும்போது உலகம் உன்னை மதிக்கும்... உன் நிலைமை கொஞ்சம் இறங்கிவந்தால் நிழலும்கூட மிதிக்கும்". தன் நிழலே தன்னை மிதிக்கும் என்றால்..... உலகம்...?

மொத்தத்தில்...
இந்த "ஆடம்பரத்தால் ஆவது....!" மீண்டும் மீண்டும் படித்து மனதில் நிலைநிறுத்த வேண்டிய பொக்கிஷம்...!

மிக மிகச் சிறப்பான பதிவு.... பாராட்டுக்கள் மலிக்கா....!

வாழ்த்துக்கள்...
நட்புடன்...
காஞ்சி முரளி.....

இதுபோன்று நாங்களே சொல்லமுடியாத சங்கதிகளை சுட்டிக்காட்டியுள்ள தங்களுக்கு
என் மனமார்ந்த பாராட்டுக்கள்...! //

ஆண்கள் படும் சோதனைகளும் வேதனைகளும் அனைவரும் அறிந்ததே ஆனால் அதை அறியாததுபோல் இருப்பதால்தான் இவ்வளவும்.

பூனைக்கு யார்தான் மணிக்கட்டுவது.
ஓர் தெளிவுபிறக்க யாராவது முன்வரவேண்டுமல்லவா அதான் இப்படி.//

//யதார்த்தமான உண்மையை ஊருக்கு உரைத்திருக்குறீர்கள்...!

வெளிநாட்டில் பணிபுரிபவர்கள் தங்கள் மனைவி, மக்கள், உற்றார், பெற்றோர், சொந்தம், பந்தம், நண்பர்கள், தன் ஊர், தன் மாநிலம், தன் நாடு இவற்றை மறந்து... தன் உணவுப் பழக்க வழக்கங்களை மறந்து... தன் சுகதுக்கங்களை மறந்து... அல்லும்பகலும் உழைப்பை மட்டுமே சுவாசமாய் சுவாசித்து... அவன் ஈட்டும் பணம், பொருள் ஒவ்வொன்றும்... அவன் உழைப்பின் பலன்.. அல்லஅல்ல.... அவன் ரத்தத்தின் வியர்வைகள்...

இந்த பலன்கள் அடுத்தவர்களுக்காக என்றால்... இதைவிட வேதனை ஏதுமில்லை...!//

ஒவ்வொரு மனிதனும் ஒரு ரூபாய் சம்பாத்திக்க, இங்கு எவ்வளவு சிரமமும் கஷ்டமும் படுகிறார்கள்.
ஏசியில் வேலைபார்த்தாலும்
தூசியில் வேலைபார்த்தாலும் .
சிரமங்கள் சிரமங்களே!

நாம் சிரமப்பட்டு சம்பாதிக்கும் சம்பாத்தியத்தை அடுதவர்களைப்பார்த்து வாழனும் என நினைக்கும்போது சக்திமீறிவிடும் பலசமயங்களில் பின்பு இதையார் சரிசெய்வது யோசிக்கவேண்டுமில்லையா?

//இந்த உலகத்தைப்பற்றி நான் சொல்வதைவிட என்பிரிய கவிஞன் 'கவியரசு கண்ணதாசன்' வரியில் சொல்வேதென்றால் "உயர்ந்த இடத்தில் இருக்கும்போது உலகம் உன்னை மதிக்கும்... உன் நிலைமை கொஞ்சம் இறங்கிவந்தால் நிழலும்கூட மிதிக்கும்". தன் நிழலே தன்னை மிதிக்கும் என்றால்..... உலகம்...?

மொத்தத்தில்...
இந்த "ஆடம்பரத்தால் ஆவது....!" மீண்டும் மீண்டும் படித்து மனதில் நிலைநிறுத்த வேண்டிய பொக்கிஷம்...!

மிக மிகச் சிறப்பான பதிவு.... பாராட்டுக்கள் மலிக்கா....!

வாழ்த்துக்கள்...
நட்புடன்...
காஞ்சி முரளி.....//

நிச்சியமாக நிழல்கூட நம்மிடம் இருப்பது நம்மநடப்பதைபொருத்துதான்.
ஒவ்வருவருவரும் இதை சிந்தித்தால் தான் தனக்கென்று வாழக்கற்றுக்கொண்டால்.
அவன் நல்வழியில் சம்பாதிக்கும் எண்ணம் மேலோங்கும்.

இதேபோன்று அடுத்தவர்களுக்கா வாழ்நினைக்கும்போது பொருளாதாரத்தில் சிக்கல் ஏற்ப்பட்டு தவறுகளீன் பக்கம் தன்னை திருப்பிக்கொள்ள நிறைய வாய்ப்புகள் வந்து சேரும்
அதிலிருந்து தவிர்ந்து நன்மையின்பக்கம் நம்மை நிலைநிறுத்துக்கொள்ள எல்லாம் வல்ல இறைவனின் உதவியும் நிச்சயம் வேண்டும் என வேண்டிக்கொள்வோம்.

ஆழமான அன்பான தெளிவான கருத்துகளுக்கு மிக்க மகிழ்ச்சியுடன் நன்றி முரளி..

அன்புடன் மலிக்கா said...

murugan said...
//அந்த அடுத்தவர்களோ ஊர் உலகமோ உங்களுக்காக ஒருபோதும் நிச்சியமாக உதவாது ஏன் ஏனென்றுகூடகேட்க்கமுன்வராது என்ற எண்ணத்தை மனதில் கொள்ளுங்கள் அதை அப்படியே மனதில் நிலைநிறுத்துங்கள்.இதுவே உலகவாழ்க்கையின் எதார்த்தம்.//

அருமையான கருத்துக்கள்.......எல்லோரும் கண்டிப்பாக பின்பற்றவேண்டியது......
ஆனால் நீங்கள் மேற்கூறிய அந்த வரிகள் எனக்கு சரியாக படவில்லை.....அதை நீங்கள் பிறருக்காக வாழாதே என்று சொல்லி இருக்கலாம்.....ஏனென்றால் அந்த வரிகள் சுயநலத்தை குறிப்பது போல் உள்ளது......அந்த வரிகள் தான் தனக்கு என்ற சுயநலத்தை தாங்கி வருவதாக கருதுகிறேன்............ நல்ல பதிவு.........நன்றி//

வாங்க முருகன் தாங்களின் வருகைக்கு முதலில் நன்றி.

யாரையும் நாம் கட்டுப்படுத்தவோ கட்டாயப்படுத்தவோ முடியாது அதுகூடாது என நினைப்பவள்நான். ஏனென்றால்! பிறருக்கு அறிவுரைகள் சொல்லும்போது இதை செய்தால் நன்மை உண்டாகும் இதைசெய்தால் தீமையுண்டாகும் என்று சொல்லும்போது நிறைய விசங்களை புரிந்துக்கொள்ள தவறியபோதும் சிலவிசயங்களையாவது எடுத்துக்கொள்வார்கள்!

இதை செய்! இதை செய்யாதே1 இப்படி வாழாதே! என்று கட்டளைகள் பிறப்பிக்கும்போது, சொல்லும்போது, இவள்யார் நமக்கு சொல்ல என்ற எண்ணம் மேலோங்குமேதவிர. அங்கே அறிவுரைகள் எடுபடாது என்ற நோக்கத்தில்தான் அப்படியெழுதியுள்ளேன்.

தாங்களீன் வருகைக்கும் அன்பான கருத்துக்கும் மிக்க நன்றி முருகன்..

Anonymous said...

O you who believe! Avoid much suspicion, indeed some suspicions are sins. And spy not, neither backbite one another. Would one of you like to eat the flesh of his dead brother? You would hate it (so hate backbiting)[] . And fear Allâh. Verily, Allâh is the One Who forgives and accepts repentance, Most Merciful. (12)

Post a Comment

கருத்துக்களை பகிர்ந்துகொள்ளும்போது நிறைகுறைகளை சரிபார்க்கலாம். பகிந்துகொள்ளுங்களேன் கருத்துக்களை
நானும் என்னை சரிசெய்து கொள்கிறேன் .
பிடிதிருந்தால் ஓட்டும் போடுங்கள்

வேண்டுகோள்..

இங்கே பதியப்படும் அனைத்தும், நான் என்னை தெளிவுப்படுத்திக்கொள்ளவும். ஈருலக வாழ்க்கையையும் அறிந்துக்கொள்ளவும். தொடங்கியுள்ள பயணம். அதில் தாங்களும் தெரிந்துகொள்வதில் பெருமிதம். ஆனால் இதை தவறானமுறையில் விளங்கிக்கொண்டு வீணான விவாதங்களோ தர்க்கங்களான கருத்துக்களாகவோ அமைத்துவிட வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்..