.

வருகை புரியும் அனைவர்மீதும் இறைவனின் அருளும் சாந்தியும் அளவில்லாமல் கிடைக்கட்டும் Photobucket

அன்புள்ள ஆன்மாவே!-10 வாழ்வையே! கெடுக்கும் வட்டி

| |

بسم الله الرحمن الرحيم
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புனையோனுமாகிய இறைவனின் திருப்பெயரால்...
அன்புள்ள ஆன்மாவே!

இன்று வாழ்வையே சீரழிக்கும் வட்டியைபற்றி!
எனக்கு தெரிந்ததை பகிர்ந்துக்கொள்ளவந்துள்ளேன்.
[நன்றி கூகிள்]
275. வட்டியை உண்போர்[மறுமையில்நாளில்] பைத்தியமாகவே எழுப்பபடுவார்கள். ”வியாபாரம் வட்டியைப்போன்றதே” என்று அவர்கள் கூறியதே இதற்குக் காரணம் .
அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்துவிட்டான்.
தமது இறைவனிடமிருந்து அறிவுரை தமக்கு வந்தபின் விலகிக்கொள்பவருக்கு முன்சென்றது உரியது.
அவரைப்பற்றிய முடிவு அல்லாஹ்விடமே உள்ளது.
மீண்டும் செய்வோர் நரகவாசிகள் அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.
[அல்குர்ஆன் 2அல்பகரா: பாகம் 3]


276. அல்லாஹ் வட்டியை அழிக்கிறான். தர்மங்களை வளர்க்கிறான்.
நன்றிகெட்ட எந்த பாவியையும் அல்லாஹ் விரும்பமாட்டான்.
[அல்குஆன் 2அல்பகரா:: பாகம்3]


278. நம்பிக்கைகொண்டோரே அல்லாஹ்வை அஞ்சுங்கள்!
நீங்கள் நம்பிக்கைகொண்டிருந்தால் வரவேண்டிய வட்டியை விட்டு விடுங்கள்.
[அல்குஆன் 2அல்பகரா:: பாகம்3]

280. அவன் சிரமப்படுபவனாக இருந்தால் வசதி ஏற்படும்வரை அவகாசம் கொடுக்கவேண்டும்.நீங்கள் அறிந்துகொண்டால் அதை தர்மமாக்கிவிடுவது உங்களுக்கு சிறந்தது.
[அல்குஆன் 2அல்பகரா:: பாகம்3]


281. அல்லாஹ்விடம் நீங்கள் திரும்பக்கொண்டுவரப்படும் நாளை அஞ்சுங்கள்! பின்னர் ஒவ்வொருவருக்கும், அவர் உழைத்தது முழுமையாக வழங்கப்படும்.அநீதி இழைக்கப்படமாட்டார்கள்.


[அல்குஆன் 2அல்பகரா:: பாகம்3]

அன்புள்ள ஆன்மாவே
மனிதன் ஆசைகளின் பக்கம் அடித்துச்செல்லப்படுகிறான்.அது அளவுகடக்கும்போது அவதிக்குள்ளாகிறான்.
தன் தேவைகளளுக்குமீறிய எண்ணங்களை ஆசைகளாக்கி, அதை அடைய நினைக்கும்போது அதனால் ஏற்படும் நஷ்டத்தை சமாளிக்கமுடியாமல் திணறி திண்டாட்டம் காண்கிறான். அதனை பயன்பயடுத்தும் மற்றவன் அவனை தன்வசம் நன்றாக வசிப்படுதிக்கொள்கிறான். அதனால் அவன் பலனடைகிறான். வசமானவனோ மொத்த பலமும் இழக்கிறான்.

எங்கு நோக்கினும் வட்டி வட்டி. வித விதமாய். ரகம் ரகமாய்.
பலபெயர்களில். புதுவித பரிணாமங்களில்.
கேட்டால் பிசினஸ். இதுவும் ஒருவகை வருமானம்.
எது வருமானம்?.
பிறரின் முதுகின்மீது சவாரி செய்து தான் பலன் அடைவதா?
மற்றவனின் மானத்தைப்பறித்து.இவன் மானத்தைகாப்பாற்றுவதா? பிறரை பட்டினிபோட்டு இவன் வயிறுநிறைய உண்பதா?
பிறரின் வயிறெரிய இவன் குளிர்காய்வதா?
இல்லையில்லை
பிறரின் உயிரைக்கொண்டு. இவன் உயிர் வாழ்வதா?
எது வருமானம். எது பிசினஸ்?

மனிதனின் போக்கே மிக வித்தியாசமானதாகிவருகிறது.
அது படித்திருந்தாலென்ன படிக்காதிருந்தாலென்ன. மொத்தத்தில் மனிதன் மனிதனை சாப்பிடும் அளவிற்கு தன்னை மாற்றிக்கொண்டான் என்றால் அதுமிகையாது. ஒருவனின் வறுமையின் நெருப்பை பயன்படுத்தி மற்றவன் குளிர்காய்கிறான்.
ஒருவன் வறுமைபடாதிருக்க இருக்கும் ஒற்றை ரூபாயை உழைக்காமலே ஒருகோடி ஆக்க நினைக்கிறான்.அப்படி நினைக்கும்போது அதை தெரிந்துகொண்டமற்றவன் அந்த ஒற்றை ரூபாயையும் அவனிடமிருந்து அவனுக்கே தெரியாமல் அபகரித்துவிடுகிறான்.

இன்று எத்தனை எத்தனை பைனாஸ்கம்பேனி. சீட்டுக்கம்பேனி. ஒன்றுக்கு நூறாக அதிகம் அள்ளித் தருகிறோம் என்று விதவிதமாக ஏமாற்றும் திட்டங்கள். வியாபரத்தில் போட்டு லாபம்தருகிறோம் என்றபோர்வையில் மோசடி. இன்னும் சொல்லிக்கொண்டேபோகலாம் எத்தனைவிதங்களில் ஏமாற்றமுடியுமோ அத்தனை வழிகளையும் கையாளும் திறனோடு களம் இறங்குபவர்கள்.தங்களின் கைவரிசையை காட்டியவுடன் கம்பி நீட்டிவிடுகிறார்கள்.

அவர்களைகுறை சொல்லி என்னலாபம். இது யாருடைய குற்றம்.
பளபளப்பக்கும் உடையுடம், பகட்டான பேச்சுக்களைக் கண்டும். ஆசைகளைத்தூண்டும் அடுக்கடுக்கான பொய்களைநம்பியும். இருக்கும் பணத்தையெல்லாம் அவர்களிடம் கொடுத்து ஏமாறும்கூட்டத்தை என்னெவென்று சொல்வது.
ஆசையிலும் ஆசை பேராசையென்பதா?
பணத்தாசையின்மீது மோகமென்பதா?
இல்லை உழைக்காமலே கிடைக்கும் ஊதியத்தை உக்கார்ந்து சாப்பிட போட்டிப்போட்டுக்கொண்டு இருப்பதையும் இழந்துநிற்கும் மடையர்களென்பதா?

ஒன்றை ரூபாய்க்கு ஒருவன் நூறாக தருகிறேன் எனும்போது அதன் உள்ளர்த்தம் விளங்கவேண்டாமா?
இன்று உன்னிடம் இப்படிச்சொல்லி வாங்கியவன் நேற்று எப்படிச்சொல்லி யாரை ஏமாற்றி அதன் பணத்தை உனக்குத்தருகிறான் என்பதை சிந்திக்கவேண்டாமா?
ஒற்றை ரூபாய்க்கு உனக்கே இத்தனை தருகிறேன் என்பவன் அவனுக்கு எத்தனை எடுத்துக்கொள்வான் என்பதை உணரவேண்டாமா?

வட்டி வட்டிக்குவட்டி இதனால் எத்தனைகுடும்பங்கள் சீரழிந்து இருக்கிறது.
எத்தனை குடும்பங்கள் தற்கொலையில் தனுயிரை மாய்த்துக்கொண்டிருக்கிறது.
எத்தனைக் குடும்பம் தன் வாழ்க்கையையே அழங்கோலப்படுத்திக்கொண்டிருக்கிறது. எத்தனைக் குடும்பங்கள்.நடுத்தெருக்கு அதுவும் நேற்று கோடிஸ்வரனாகயிருந்தவனை இன்று பிச்சையெடுக்கும் அளவுக்கு வந்து நிப்பாட்டியிருக்கிறது.
இது எதனால் சிந்திக்கமாட்டார்களா?
எத்தனைமுறை பட்டாலும் புத்திபெறமாட்டாகளா?
இன்று ஒருபெயரில் ஏமாற்றியவன் நாளை வேறு பெயர்வைத்துவந்தாலும்.எளிதில் ஏமாந்துவிடுகிறார்களே ஏன்?

ஆன்மாவே! இதெல்லாம் எதனால்?
ஆசை ஆசை அளவுக்குமீறிய ஆசை. உழைக்காமல் இருந்த இடத்திலிருந்து சாப்பிட ஆசை. ஊரானின் வயிற்றில் அடித்து இவன் முன்னேற ஆசை.பலபேர் வயிறெரிய அதில்வரும் பணத்தில் இவன் பந்திபோட ஆசை.
எல்லாவற்றுக்கும் மேலாக மனிததேகத்தை உயிரோடு இருக்கும்போதே பிச்சி தின்னும் கொடூர ஆசை.

பிணந்தின்னும் கழுகுகூட இறந்த மனிதனின் உடலைத்தான் கொத்தித்திக்கிறது. ஆனால்
வட்டிவாங்கும் மனிதனோ இருக்கும் மனிதனை உயிரோடு கொத்தி கொத்தி கொஞ்சம் கொஞ்சமாய் ரத்தம் குடிக்கிறான்.பின்பு மொத்தமாய் உயிரை எடுக்கிறான்.
மனசாட்சியை கொன்றுவிடுகிறான் மனிதாபிமானத்தோடு மல்லுக்குநிற்கிறான். மொத்தத்தில் அவன் மனிதன் என்பதை மறந்துபோகிறான். மிருகம் என்னும் சொல்லுக்கும் லாயக்கில்லாதவனாகிறான்.

வட்டிவாங்குபனைபார் ஒருபோதும் அவன் நிம்மதியாகவே இருக்கமாட்டான் இருப்பதாய் நடிப்பான். கொடுத்தவனும் அப்படியே! அவன் அதிகம் வைத்திருப்பதால் .இவன் இருந்ததையும் இழந்திருப்பதால்,,


கஷ்டப்படுவோருக்காக அழகியமுறையில் கடன்கொடுங்கள்.
அவனுக்கு திருப்பிதரும் நிலை திரும்பாமலே போய்விடுமாயின். அந்தகடனை இறைவனுக்காக விட்டுக்கொடுங்கள். அது உங்களின் தருமத்திற்கான நன்மைகளை பலமடங்கு கூட்டித்தரும்.

ஒருவன் நஷ்டப்படு நிற்கும்போது தன்னால் முடிந்த அளவு உதவிசெய்யுங்கள். அதையும் கடனாகவே செய்யுங்கள். அப்படிச்செய்யும்போது அவன், தானும் வாழனும். தனக்கு உதவியர்களுக்கு திருப்பி கொடுக்கனும் என்றநோக்கோடு செயல்படுவான். உழைத்துவாழ முன்வருவான்.
இன்று நீங்கள் கொடுக்கும் கடன் எதையும் எதிர்பாராமல் கொடுக்கும் கடன் நாளை உங்களுக்கு பலமடங்கு நன்மையாய் பெருக்கித்தருவான் இறைவன்.

சற்றேனும் மனசாட்சியோடு செயல்படுங்கள். உங்கள் செயலால் பிறரின் மனம் வருந்தும்படியோ வருத்தப்படும்படியோ. உங்களால் ஒரு ஜீவன் வாழ்விழப்பதையோ. அல்லது உயிரையே இழக்கும்படி நடந்து கொள்ளாதீர்கள்.
நாளை நிச்சியம் கேள்விகேட்க்கப்படுவீர்கள். இதே நிலை நாளை உங்களை வந்தடையலாம் எச்சரிக்கையோடுயிருங்கள்.
ஏனென்றால் உலகம் உருண்டை இன்று அவன், நாளை நான், மறுநாள் நீ. என ஒவ்வொன்றும் சுற்றிச் சுற்றியேவரும்.

ஆகவே மனிதர்களே. வட்டியென்னும் கொடுமையை நீங்கள் செய்யாதீகள். வட்டிவாங்குவதும். வட்டிக்கொடுப்பதும் வட்டிக்காக சாட்சிகையெழுப்போடுவதும். வட்டிக்காக எழுதுவதும். அனைத்திற்கும் ஒரே தீர்ப்புதான் அது நரகம்தான்.
வட்டி தீமையிலும் மகாதீமை. வட்டி எப்படி உயிரோடுள்ளவனை வதைக்கிறதோ! கஷ்டப்படச்செய்கிறதோ!. பாழுங்கிணற்றில் தள்ளுகிறதோ! அதைவிட அதைவிட மிகக்கொடுமையானது அதற்கான தண்டனை அதை சிலர் இவ்வுலகிலும்காண்பார். சில மறு உலகிலும்காண்பார். ஆனால் இப்போதெல்லாம் கண்கூடாகவே காணும் அதிர்வை இறைவன் தந்துவிடுகிறான்.

அதனால் ஆன்மாக்களே!
 மாபெரும் தண்டையெனத்தெரிந்தும் ஒரு தவறை செய்ய நினைக்காதீகள். அதிலிருந்து விலகியிருங்கள். இறைவனின் கட்டளைக்களுக்கு கட்டுப்பட்டிருங்கள். அவனின் கோபத்திருந்து தப்பிவிடுங்கள்.
வாழும்நாட்கள் எண்ணப்பட்டுக்கொண்டேயிருக்கின்றன. அவை எப்போது நிறுத்தப்படுதோ அன்றே முடிவடைத்துவிடும் வாழ்நாள்.

ஆதலால் வாழும்வரை மனிதராய்,
மனிதமுள்ள மனிதராய். மனசாட்சியுள்ள மனிதராய்.
மனிதாபிமான மனிதராய் சற்றேனும் இரக்கமுள்ள மனிதராய்.
வாழ்த்து செல்ல உங்கள் வாழ்க்கைப்பாதையை வழிவகுத்துக்கொள்ளுங்கள். நிச்சியம் ஈருலகிலும் நன்மையை பெருவீர்கள். வெற்றிகொள்வீர்கள்.. ஆமீன் ஆமீன் ஆமீன்..

ஆன்மாவே!


இன்று வாழ்வையே சீரழிக்கும் வட்டியைபற்றி
அறியத்தந்த இறைவன்.

இன்ஷாஅல்லாஹ்
இறைவன் நாடினால்
அடுத்த நல்லதொரு விசயத்தை பகிர்ந்துகொள்ள உதவுவான்
என்ற நம்பிக்கையோடும் அதுவரை நம் அனைவரையும் மாபெரும்தீமையிலிருந்து நம்மை காத்து ஈருலக்கிலும் நற்பாக்கியங்கள் பெற்றிட இறைவனை வேண்டியவாறு விடை பெறுகிறேன் வஸ்ஸலாம்...


இறைவா!
உன்னையே வணங்குகிறேன்
உன்னிடமே உதவியும் தேடுகிறேன்.

அன்புடன் மலிக்கா

15 comments:

நாடோடி said...

//மொத்தத்தில் மனிதன் மனிதனை சாப்பிடும் அளவிற்கு தன்னை மாற்றிக்கொண்டான் என்றால் அதுமிகையாது.///

இது தான் உண்மை... ந‌ல்ல‌ க‌ட்டுரைங்க‌... வ‌ட்டி கொடுமையால் க‌ஷ்ட‌ப‌டும் ப‌ல‌ குடும்ப‌ங்க‌ளை நானும் பார்த்திருக்கிறேன்..

ஹுஸைனம்மா said...

ஆமா, மலிக்கா. வட்டி இவ்வளவு கொடுமையானது என்பதை இறைவன் வலியுறுத்தியுள்ளான். இன்று ஃபைனான்ஸ் கம்பெனிகளும், கந்துவட்டியும் அதைத்தானே நிரூபிக்கின்றன. அதிக ஆசையும் கூடாது.

இறைவன் வட்டி வாங்கும், கொடுக்கும் நிலைக்கு நாம் ஆளாகாமல் காக்கவேண்டும்.

ஜெய்லானி said...

//பிணந்தின்னும் கழுகுகூட இறந்த மனிதனின் உடலைத்தான் கொத்தித்திக்கிறது. ஆனால்
வட்டிவாங்கும் மனிதனோ இருக்கும் மனிதனை உயிரோடு கொத்தி கொத்தி கொஞ்சம் கொஞ்சமாய் ரத்தம் குடிக்கிறான்.பின்பு மொத்தமாய் உயிரை எடுக்கிறான்.//

மிகச்சரியான உதாரணம் . இதை விட தெளிவாக பொட்டிலடித்தாற் போல யாரும் சொல்ல முடியாது.

Unknown said...

வட்டியை விட்டும் நரகத்தை விட்டும் எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவரையும் காப்பாதுவனாக...

Starjan (ஸ்டார்ஜன்) said...

வட்டியை பற்றி அருமையான கட்டுரை; வட்டி இருக்கிறதிலே ரொம்ப மோசமான ஒன்று. அருமையாக சொல்லிருக்கீங்க மலிக்கா.

நாஸியா said...

Salam akka. Naanum idhai paththi ezhudhamnu irukken, insha Allah..

Jazakallahu khair

விஜய் said...

இஸ்லாத்தில் எனக்கு மிகவும் பிடித்த அம்சங்களில் இதுவம் ஒன்று.

வாழ்த்துக்கள் சகோதரி

விஜய்

சசிகுமார் said...

காலத்திற்கு ஏற்ற நல்ல பதிவு , உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

கமலேஷ் said...

மிகவும் பொது நலமுள்ள பகிர்வு தோழி... பகிர்வுக்கு
மிக்க நன்றி...

SUFFIX said...

கொஞ்சம் பொறுமையாக இருந்தால் சமாளித்து விடலாம், அவசரப்பட்டு இந்த வட்டி எனும் படுகுழியில் விழுந்து விடுகிறார்கள், இப்படி அவசரத்தேவை உள்ளவர்களுக்கு வசதி உடையவர்கள் கொடுத்து உதவும் மனப்பக்குவம வளர வேண்டும். அருமையான கட்டுரை. மாஷா அல்லாஹ்.

ஸாதிகா said...

அருமையான பதிவு!

malar said...

மிகவும் நல்ல பதிவு....

காஞ்சி முரளி said...

///மனிதன் ஆசைகளின் பக்கம் அடித்துச்செல்லப்படுகிறான்.அது அளவுகடக்கும்போது அவதிக்குள்ளாகிறான்////

எல்லா மத வேதங்களின் உட்பொருள்... கருவை கவனித்தீர்களானால் "ஆசையை அறவே அற" "ஆசையை விளைவித்தால்.... விளைவது துன்பம்.. எனவே... வினை விதைத்தால் வினை அறுக்கலாம்... திணை விதைத்தால் திணை அறுக்கலாம்... ஆனால்.. ஆசையை விதைத்தால் "துன்பத்"தை மட்டுமே அறுக்கலாம்... இப்படி வேதங்கள் சொன்னதை முழுவதும் கடைப் பிடிக்க வேண்டாம்.. atleast "பேராசை" கொள்ளாமல் இருக்கலாம் அல்லவா... நான் இவ்வளவு வரிகளில் சொன்னதை ஓர் வரியில் தாங்கள் மேலே சொல்லியுள்ளீர்கள் .. சூப்பர்...!


////ஒருவன் வறுமைபடாதிருக்க இருக்கும் ஒற்றை ரூபாயை உழைக்காமலே ஒருகோடி ஆக்க நினைக்கிறான்.அப்படி நினைக்கும்போது அதை தெரிந்துகொண்டமற்றவன் அந்த ஒற்றை ரூபாயையும் அவனிடமிருந்து அவனுக்கே தெரியாமல் அபகரித்துவிடுகிறான்.////


இன்றைய உலகின் யதார்த்தத்தை ஓரிரு வரிகளில்... பாராட்டுக்கள்...


///ஆசையிலும் ஆசை பேராசையென்பதா? பணத்தாசையின்மீது மோகமென்பதா? இல்லை உழைக்காமலே கிடைக்கும் ஊதியத்தை உக்கார்ந்து சாப்பிட போட்டிப்போட்டுக்கொண்டு இருப்பதையும் இழந்துநிற்கும் மடையர்களென்பதா?///

பேராசையின் விளைவே துன்பம் என்பதையும்... பேராசையினால் இருப்பதை இழக்கும் இன்றைய மனிதர்களை "மடையர்கள்" எனச் சொல்லியிருப்பது சரியே... தாங்கள் சமூகக் கோபம் தெரிகிறது மேற்சொன்ன வரிகளில்... பாராட்டுக்கள்...

///ஆசை ஆசை அளவுக்குமீறிய ஆசை. உழைக்காமல் இருந்த இடத்திலிருந்து சாப்பிட ஆசை. ஊரானின் வயிற்றில் அடித்து இவன் முன்னேற ஆசை.பலபேர் வயிறெரிய அதில்வரும் பணத்தில் இவன் பந்திபோட ஆசை. எல்லாவற்றுக்கும் மேலாக மனிததேகத்தை உயிரோடு இருக்கும்போதே பிச்சி தின்னும் கொடூர ஆசை.///
//// பிணந்தின்னும் கழுகுகூட இறந்த மனிதனின் உடலைத்தான் கொத்தித்திக்கிறது. ஆனால் வட்டிவாங்கும் மனிதனோ இருக்கும் மனிதனை உயிரோடு கொத்தி கொத்தி கொஞ்சம் கொஞ்சமாய் ரத்தம் குடிக்கிறான்.பின்பு மொத்தமாய் உயிரை எடுக்கிறான். மனசாட்சியை கொன்று விடுகிறான் மனிதாபிமானத்தோடு மல்லுக்குநிற்கிறான். மொத்தத்தில் அவன் மனிதன் என்பதை மறந்துபோகிறான். மிருகம் என்னும் சொல்லுக்கும் லாயக்கில்லாதவனாகிறான்///

உழைக்காமலேயே உண்பதற்கும்... உடுப்பதற்கும் (தங்க நகைகளும் அடங்கும்) ... உறங்குவதற்கும் (பல மாடி வீடுகள்) ... என்று மனிதன் ஆசை அல்லவல்ல... "பேராசை" எனும் மதம் கொண்டானோ அன்றே அவன் "மிருக"மாகிவிட்டான் ... தங்களின் மேற்சொன்ன வரிகள் மிகவும் அற்புதமான வரிகள்.. அதுவும் பிணந்தின்னும் கழுகைவிட... உயிரோடு இருக்கும் மனித உடலை பிச்சி தின்னும்" என்ற எடுத்துக்காட்டு உட்பட அனைத்து உதாரனங்களும் மிகவும் சிறந்தவை...

இறுதியாய்...

"வாழ்வையே கெடுக்கும் வட்டி" இந்த இடுகை... மிக.. மிக.. அற்புதமான... அனைவரும்... குறிப்பாக "பேராசை" எனும் மதங்கொண்ட மனிதன் நினைவில் நிறுத்திக் கொள்ளவேண்டிய இடுகை..

என் ப்ரிய கவிஞன்... கவியரசர் கண்ணதாசனின் வரிகளுடன். "ஆசை.. வேஷம்... களவு கொள்பவன் பேசத் தெரிந்த மிருகம்... அன்பு, கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்" என்ற வரிகளை... ஓர் இடுகையாய்...

மிக அற்புதமான இடுகை....
வாழ்த்துக்கள்... சகோதரி...

நட்புடன்..
காஞ்சி முரளி....

அமுதன் said...

இறைவா!
உன்னையே வணங்குகிறேன்
உன்னிடமே உதவியும் தேடுகிறேன்..

சகோ மிக மிக தேவையான பதிவு
இதைவிட தெளிவாக கூறமுடியுமா!
இதையும் விளங்கிகொள்ளாதனை என்ன செய்ய கடவுள் பாத்துப்பார்..

இப்னு அப்துல் ரஜாக் said...

அல்லாஹ்வும்,அவனது தூதர் நபிகள் நாயகம் அவர்களும் கண்டிக்கும் வட்டியை யாரும் ஆதரித்தால் நரகமே பரிசு என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.நினைவூட்டிய சகோதரிக்கு நன்றி,

Post a Comment

கருத்துக்களை பகிர்ந்துகொள்ளும்போது நிறைகுறைகளை சரிபார்க்கலாம். பகிந்துகொள்ளுங்களேன் கருத்துக்களை
நானும் என்னை சரிசெய்து கொள்கிறேன் .
பிடிதிருந்தால் ஓட்டும் போடுங்கள்

வேண்டுகோள்..

இங்கே பதியப்படும் அனைத்தும், நான் என்னை தெளிவுப்படுத்திக்கொள்ளவும். ஈருலக வாழ்க்கையையும் அறிந்துக்கொள்ளவும். தொடங்கியுள்ள பயணம். அதில் தாங்களும் தெரிந்துகொள்வதில் பெருமிதம். ஆனால் இதை தவறானமுறையில் விளங்கிக்கொண்டு வீணான விவாதங்களோ தர்க்கங்களான கருத்துக்களாகவோ அமைத்துவிட வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்..