.

வருகை புரியும் அனைவர்மீதும் இறைவனின் அருளும் சாந்தியும் அளவில்லாமல் கிடைக்கட்டும் Photobucket

இறுதிக்கடமையும். குர்பானியும்..

| |

بسم الله الرحمن الرحيم
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
இறைவனின் திருப்பெயரால்..

ஐந்து கடமைகளில் இறுதிகடமையாக ஹஜ் செய்வதை இறைவன் ஏற்படுத்தியுள்ளான். வசதியுள்ளோர்களின்மீது கட்டாயக்கடமை. வசதியில்லாவர்களை வசதியுள்ளோர்கள் அனுப்பிவைக்கலாம். அதற்கான கூலியை இறைவனிடத்தில் பெறலாம்.

இஸ்லாத்தில் வணக்கங்களை பொருத்த வரையில் சக்தி இருந்தால் மட்டுமே கடமைகளை செய்ய வேண்டும். சக்தி இல்லாத போது அந்த கடமைகளை செய்ய வேண்டிய அவசியமில்லை. அல்லாஹ் எந்த ஆத்மாவையும் அதன் சக்திக்கு மீறி சோதிக்கவும்மாட்டான். அவர்களின்மீது சுமைகளை சுமத்தவும் மாட்டான்.

இறைவன் எவ்வித தேவையுமற்றவன். மனிதகுலத்திற்கு அவன் செய்யும் அத்தனையும் நன்மைக்கே என விளங்குவோர்க்கு நற்கூலியுண்டு.
இறைவன் தனது திருமறையில்  கூறுகிறான்.

அதில் தெளிவான சான்றுகளும் மகாமே இப்ராஹீமும் உள்ளன. அதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார். அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை. யாரேனும் (ஏக இறைவனை) மறுத்தால் அல்லாஹ் அகிலத்தாரை விட்டும் தேவையற்றவன். 3 : 97

இறைவனின் பொருத்தைநாடி, அவனின் அருளைவேண்டி, ஹஜ்ஜின் கடமைகளையும் நிறைவேற்றுவது முஃமீன்களின் மிகச்சிறப்பான
வணக்கவழிபாடாகும்.

இறைவன் நம் அனைவருக்கும் அந்த பாக்கியத்தை நிறைவேற்ற உறுதியான ஈமானையும். உடலாரோக்கியத்தையும், மனவலிமையையும்.  வசதியையும்.  தந்தருள்வானாக! ஆமீன்.ஆமீன் யாரப்பல் ஆலமீன்.


 குர்பானி கொடுப்பதின் விளக்கம்.
நான் படித்தவைகள் அனைவரும் அறிய பதிந்திருக்கிறேன்..

அல்லாஹுத்தஆலாவின் நெருக்கத்தை பெருவதற்காக நபி இப்ராஹீம்(அலை) அவர்கள் காட்டிய வழிமுறையில் கால்நடைகளில் (ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றில்) ஏதாவது ஒன்றை அறுத்து பலியிடுவதற்கு குர்பானி என்று கூறப்படும்.


இறைவன் நபி இப்ராஹீம்(அலை) அவர்களை சோதிக்க நாடி, அவர்களது பாச மகன் இஸ்மாயீல்(அலை) அவர்களை அறுத்து தியாகம் செய்ய கட்டளையிட்டான். இறைவனின் கட்டளைக்குக் கட்டுப்பட்ட அவ்விருவரைப் பற்றி தனது திருமறைக் குர்ஆனில் ……

“என்னருமை மகனே! நிச்சயமாக நான் உன்னை அறுத்துப் பலியிடுவதாய் மெய்யாகவே கனவில் கண்டேன்; ஆகையால் நீ என்ன கருதுகிறாய்? என்று சிந்திப்பாயாக!” என்று கூறினார். (அதற்கு) ”என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடி செய்யுங்கள். இன்ஷாஅல்லாஹ் பொறுமையாளர்களில் உள்ளவனாக என்னை நீங்கள் காண்பீர்கள்” என்று அவர் கூறினார். (37;102)

இருவரின் துணிவையும் ஏற்றுக்கொண்ட இறைவன், இஸ்மாயீல்(அலை) அவர்களுக்குப் பகரமாக ஒரு ஆட்டை பலியிடச் செய்தான்.


வலுப்பமான ஓர் ஆட்டை (பலியிடப்படவிருந்த) அவருக்குப் பகரமாக்கிக் கொடுத்தோம். (37;107)

குர்பானி ஓர் கடமை:
ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு முதல் நபி(ஸல்) அவர்களின் உம்மத்தாகிய நமக்கு ‘குர்பானி’ கடமையாக்கப்பட்டது.

அல்லாஹ் தன் அருள்மறை குர்ஆனில்………

ஆகவே, உம்முடைய ரப்பை தொழுது, (அவனுக்காக) குர்பானி கொடுப்பீராக! (108;02) என்று கட்டளையிட்டுள்ளான்.

மேலும், நபி(ஸல்) அவர்கள், கருப்பு நிறம் கலந்த கொம்புள்ள இரண்டு வெள்ளை ஆடுகளை தங்களது திருக்கரத்தால் அருத்துப் பலியிட்டார்கள். முதல் ஆட்டை அறுத்த போது, அல்லாஹ்வே! இது முஹம்மதாகிய எனக்கும், என் குடும்பத்தாருக்காகவும் என்றார்கள். பின்பு இரண்டாவதை அறுத்தபோது, இது எனது உம்மத்(சமுதாயத்திற்)காக என்று துஆச் செய்தார்கள்.

குர்பானி கொடுக்கத் தகுதியானவை:

ஒவ்வொரு சமுதாயத்தினருக்கும் (ஆடு,மாடு,ஒட்டகம் போன்ற) கால்நடைப்பிராணிகளிலிருந்து அவர்களுக்கு அவன் உணவாக கொடுத்தவற்றின் மீது (அவற்றை அறுக்கும்போது) அல்லாஹ்வின் திருப்பெயரை அவர்கள் கூறுவதற்காக, குர்பானியை நாம் ஏற்படுத்தினோம். (22;34)


மாடு, ஒட்டகம் ஆகியவற்றில் ஏழு நபர்கள் கூட்டு சேர்ந்து கொடுக்கலாம். ”ஆடு” தனி நபராக கொடுக்க வேண்டும்.

ஒட்டகம் ஐந்து வயது பூர்த்தியடைந்ததாகவும், ஆடு, மாடு இரண்டு வயது பூர்த்தியடைந்ததாகவும் இருக்க வேண்டும்.

குர்பானி கொடுக்கும் நேரம்:

துல்ஹஜ் பிறை-10 (ஹஜ்ஜுப் பெருநாள் அன்று) சூரியன் உதயமாகி பெருநாள் தொழுகையை நிறைவேற்றிய பின்னாலிருந்து …, பிறை – 13 வரை நான்கு நாட்கள் கொடுக்கலாம்.
பெருநாள் தொழுகைக்கு முன்பு குர்பானி கொடுக்கக் கூடாது. ஏனென்றால் அல்லாஹ் குர்ஆனில் ……..

“ஆகவே, உம்முடைய ரப்பை தொழுது, (அவனுக்காக) குர்பானி கொடுப்பீராக” (108;02)

”நிச்சயமாக என்னுடைய தொழுகையும், என்னுடைய அறுப்பு(குர்பானியு)ம், என் வாழ்வும், என் மரணமும் அகிலத்தின் இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே உரித்தானவையாகும்”, என்று (நபியே!) நீர் கூறுவீராக! (6;162)

என்று முதலில் தொழுகையையும், அடுத்ததாக குர்பானியையும் குறிப்பிட்டுள்ளான்.

பராஉ இப்னு ஆஜிப்(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் அன்று தொழுகைக்குப்பின் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். (அதில்) “யார் நமது தொழுகையைத் தொழுது, (அதன் பின்) நாம் குர்பானி கொடுப்பது போன்று கொடுக்கிறாரோ அவரே உண்மையில் குர்பானி கொடுத்தவராவார். யார் தொழுகைக்கு முன்பே அறுத்து விடுகிறாரோ அவர் தொழுகைக்கு முன் (தனக்காக) அறுத்தவராவார். குர்பானி கொடுத்தவராக மாட்டார்” என்று கூறினார்கள். (புகாரி)

குர்பானி கொடுப்பவர் பின்பற்ற வேண்டியவை:

குர்பானி கொடுக்க நாடி விட்டால், துல்ஹஜ் பிறை பிறந்தது முதல் குர்பானியை நிறைவேற்றும் வரை, நகம் வெட்டுவதையும் முடிகளை நீக்குவதையும் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

நபி(ஸல்) அவர்கள் கூறியதாக உம்மு ஸலமா(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: உங்களில் ஒருவர் குர்பானி கொடுக்க நாடினால் துல்ஹஜ் பிறை பிறந்தது முதல் அதை (குர்பானியை) நிறைவேற்றும் வரை தனது முடி, நகம் ஆகியவற்றை களைவதை தவிர்த்துக் கொள்ளட்டும். (முஸ்லிம்)

குர்பானி கொடுக்கும் வரை எதுவும் சாப்பிடாமல் இருந்து குர்பானி இறைச்சியை முதல் உணவாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.

நபி(ஸல்) அவர்கள் (ஹஜ்ஜுப் பெருநாள்) தொழுகையிலிருந்து திரும்பும் வரை உண்ணமாட்டார்கள். பின்னர், குர்பானி இறைச்சியை உண்பார்கள். (ஜாதுல் மஆது)

குர்பானியின் நோக்கம்:
[குர்பானி பிராணிகளாகிய] அவற்றின் மாமிசங்களோ, அவற்றின் இரத்தங்களோ ஒருக்காலும் அல்லாஹ்வை அடைவதில்லை; என்றாலும், உங்களிலுள்ள தக்வா (பயபக்தி) தான் அவனை அடையும். (22;37)

எங்கள் இறைவனே! எங்களின் பாவங்களை பிழைபொருந்து,
எங்களுக்கு இவ்வுலக வாழ்க்கையில் பரிபூரண
ஈமானோடு ஐந்து கடமைகளையும் நிறைவேற்றும் வலிமையைத்  தந்தருள்வாயாக!
ஈருலகிலும் எங்களை நேரான வழியில் நடத்திசெல்வாயாக!
நரகநெருப்பிலிருந்து பாதுகாத்து சுவனத்தின் சோலைகளில் நிரந்த இடங்களைத்தந்து  பாதுகாப்பாயாக!

இறைவா!
உன்னையே வணங்குகிறேன்
உன்னிடமே உதவியும் தேடுகிறேன்.

அன்புடன் மலிக்கா

14 comments:

Chitra said...

நிறைய விஷயங்களை பற்றி தெரிந்து கொண்டோம். பகிர்வுக்கு நன்றி.

அன்புடன் மலிக்கா said...

கருதுக்கள் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சித்ராக்கா..

ஹுஸைனம்மா said...

//குர்பானி கொடுக்கும் வரை எதுவும் சாப்பிடாமல் இருந்து குர்பானி இறைச்சியை முதல் உணவாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.//

அப்படியாப்பா? முதல் முறை கேள்விப்படுறேன்.

ஜெய்லானி said...

//இறைவன் நம் அனைவருக்கும் அந்த பாக்கியத்தை நிறைவேற்ற உறுதியான ஈமானையும். உடலாரோக்கியத்தையும், மனவலிமையையும். வசதியையும். தந்தருள்வானாக! ஆமீன்.ஆமீன் யாரப்பல் ஆலமீன்.//

ஆமீன்.

ஜெய்லானி said...

@@@ஹுஸைனம்மா said...

//குர்பானி கொடுக்கும் வரை எதுவும் சாப்பிடாமல் இருந்து குர்பானி இறைச்சியை முதல் உணவாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.//

அப்படியாப்பா? முதல் முறை கேள்விப்படுறேன்.//
இதில் குர்பானி கொடுக்க நிய்யத் வைத்தவர்க்கே பொருந்தும் . கொடுக்க வசதி இல்லாதவர்களுக்கு பொருந்தாது.
தொழுகை நேரம் அதிகாலை என்பதால் தொழுது முடித்து வந்துதான் குர்பானி கொடுப்பது. அப்படியானால் சமைக்க நேரம் இருக்கிறதே..!!
அரபியர்கள் சமையல் பெரும்பாலும் கபாப் டைப் என்பதால் அதிக நேரம் தேவையில்லை:-))

ஹுஸைனம்மா said...

//இதில் குர்பானி கொடுக்க நிய்யத் வைத்தவர்க்கே பொருந்தும் . //

அவங்களுக்குத்தான். ஆனா, எங்கூர்லயெல்லாம், ஆடறுக்கிற அன்னிக்கி மோதியாருக்கும், அறுக்கிறவர்க்கும் ரொம்ப டிமாண்ட்டா இருக்கும். அன்னிக்கு அவங்களைத் தேடிப் பிடிச்சி, அறுத்து, பங்கு வச்சு, விளம்பி முடிய மதியம் ஆகிவிடும். பெரும்பாலும் மதிய உணவுக்குத்தான் குர்பானி இறைச்சி எடுப்போம். ஆனா, அதுவரை சாப்பிடாம இருந்தது கிடையாது இதுவரை. அதான் கேட்டேன்.

உறுதியா தெரிஞ்சா, பின்பற்ற வசதியா இருக்கும். மேலும், இப்ப எங்க சார்பா, ஊர்லதான் குர்பானி கொடுப்பாங்க. அப்ப இங்க இருக்க நாங்க என்ன செய்யறது?

அன்புடன் மலிக்கா said...

ஹுஸைனம்மா said...
//குர்பானி கொடுக்கும் வரை எதுவும் சாப்பிடாமல் இருந்து குர்பானி இறைச்சியை முதல் உணவாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.//

அப்படியாப்பா? முதல் முறை கேள்விப்படுறேன்.//

இந்த தகவல் எனக்கு மெயிலில் வந்தது ஹுஸைனமா.

http://mudukulathur.com/?p=2902
இக்கிருந்து.

//நான் படித்தவைகள் அனைவரும் அறிய பதிந்திருக்கிறேன்..//அதான் மேலேயே குறிப்பிட்டேன்..

பிழையாக இருந்தால் இறைவன் பொருக்கட்டும் நம்மை காக்கட்டும்.
----------------------------

மேலும் தாங்கள் கேட்ட விளக்கங்களுக்கு. விளக்கங்களுடன் [இறைவன் ஒருவனே தெளிவுகளை அறிந்தவன்]
இந்த லிங்கில் இருக்கு ஹுஸைனம்மா.. http://onlinepj.com/books/kurbaniyin_sattangal/

அன்புடன் மலிக்கா said...

மிக்க நன்றி அண்ணாத்தே தாங்களின் விளக்கங்களுக்கும் கருதுகளுக்கும் மிகுந்த மகிழ்ச்சி மிக்க நன்றி..

Unknown said...

arumaiya vilakkam thodaraddum

அந்நியன் 2 said...

நல்ல பகிர்வு வாழ்த்துக்கள் அக்காள்

Anisha Yunus said...

குர்பானி ஷேரை இப்பொழுதெல்லாம் நிறுவனங்கள் வழியாக பாகிஸ்தானிற்கோ, இந்தியாவிற்கோ, சோமாலியாவிற்கோ அனுப்பி அங்கே குர்பானி செய்து அங்கேயே பங்கும் ஆகி விடுவதால் இங்கே அந்த சூழ்னிலை தெரிவதில்லை. தொழுகையுடனும், விருந்து உபசாரங்களுடனும் முடிந்து விடுகிறது. அதில் ஒரு நன்மையும் உள்ளது, வருத்தமும் :)

Anonymous said...

என்ன ஒரு அருமையான தகவல்..எங்க மதத்துல ஆடு துளுக்கினா மேட்டர் முடிஞ்சது

புல்லாங்குழல் said...

சின்ன சின்னதாய் அருமையான தகவல்கள்.நன்றி!

Jaleela Kamal said...

குர்பானி பற்றி அழகான முறையில் எழுதி இருக்கிறீர்கள்.
ஹுஸைனாம்மாவின் சந்தேகம் எனக்கும் வந்தது.

Post a Comment

கருத்துக்களை பகிர்ந்துகொள்ளும்போது நிறைகுறைகளை சரிபார்க்கலாம். பகிந்துகொள்ளுங்களேன் கருத்துக்களை
நானும் என்னை சரிசெய்து கொள்கிறேன் .
பிடிதிருந்தால் ஓட்டும் போடுங்கள்

வேண்டுகோள்..

இங்கே பதியப்படும் அனைத்தும், நான் என்னை தெளிவுப்படுத்திக்கொள்ளவும். ஈருலக வாழ்க்கையையும் அறிந்துக்கொள்ளவும். தொடங்கியுள்ள பயணம். அதில் தாங்களும் தெரிந்துகொள்வதில் பெருமிதம். ஆனால் இதை தவறானமுறையில் விளங்கிக்கொண்டு வீணான விவாதங்களோ தர்க்கங்களான கருத்துக்களாகவோ அமைத்துவிட வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்..