بسم الله الرحمن الرحيم
ஹிஜாப் என் கண்ணியத்தின் கவசம்..
==========================================
ஹிஜாப் ஏன் அணிகிறீர்கள்?
எத்தனை அழகாக இருக்கிறீர்கள் ஆனால் அத்தனையும் மூடி மறைத்துவிடுகிறீர்களே! இது உங்களுக்கான விலங்காக தோன்றவில்லையா? [துபையில் மேடை நிகழ்வொன்றின் சந்திப்பில்] எனக்கேட்ட என் அன்பு மாற்றுமத சகோதரிக்கு,
”எனதான பதில் அனைவருக்குமானதாய்”
====================================================================
பிறப்பாலும் வளர்ப்பாலும் நான் ஒரு முஸ்லீம்,இஸ்லாத்தின் கடமைகளை அறிந்து அதன்படி நடக்கவும் செயலாற்றவும் கற்றுத்தரப்பட்டவள்,
சுதந்திரம் எது? விலங்கு எது?
என பிரித்தறியும் திறனையும் இறைவனால் வழங்கப்பெற்றவள்
மூடியிருப்பது உடலையே தவிர மூளையை அல்ல! இது என் முயற்சியின் முட்டுக்கட்டையுமல்ல! எனது அழகும் அலங்காரமும் எனக்கும் என்னவருக்கானது மட்டுமே தவிர,எவருக்குமானதல்ல , என்னழகோ என் உடையோ பிறரைக்கவர்ந்து அவரை நான் பாவத்தின்பக்கம் ஈர்ப்பதற்கு நான் ஈனப்பிறவியுமில்ல.
இது விலங்கல்ல! எனக்கான சுதந்திரம், இச்சுதந்திரத்தால் ”நான் நானாக இருக்கிறேன்” எனது கம்பீரமும் கண்ணியமும் ஐயத்தெளிவும் இதிலுள்ளதென பெருமைப்படுகிறேன், பெண் அழகோ அழகற்றோ எப்படி இருந்தாலும் அவளின் பெண்மை களவாடப்படுகிறது
இதனை நான் அணிந்து செல்கையில் புரையோடிக்கிடக்கும் பிறமன புழுக்கத்திலிருந்து பாதுகாப்பு பெறுவதாய் உணர்கிறேன்,அதுபோதாதா?
கற்பழிப்புகள் மட்டுமே மான அவமான கணக்கில் கொள்ளப்படுகிறது அதுமட்டுமில்லை, பெண்ணின் அரைகுறை ஆடைகளின்வழியே அங்கங்களை அணுஅணுவாய் அளக்கும் கண்ணூசிப் பார்வைகளால் துளைக்கப்படுவதை ரசிக்கப்படுகிறதென்ற பெயரில் ஆசைகொள்வதும் அதன்வழியே இச்சைகொள்[ல்]வதும் அதனால் இச்சமூகம் சீரழிவதும் குற்றக்கணக்கில் சேர்க்கப்படுவதில்லை என்பதே வேதனை.
மாணிக்கத்தை தன்வாயின் அலவுகுள் பாதுகாக்கிறதே பாம்பு எதற்கு? அதன் மதிப்பறிந்துதான். உலகம் அழகானது ஆனால் அதில் உலவும் மனிதமனங்கள் அசுத்தம் படிந்தது, சற்று குறுக்கு புத்தியிலானது, குறுக்கில் சறுக்கி அலங்கோலமாக வாழ்வதைவிட, அழகியமுறையில் ஆத்மார்த்தநிலையில் என்னை நேர்ப்படுத்தும் முயற்சியாய் வாழ்வதே சிறப்பாக எண்ணுகிறேன், பாதுகாப்பின் அவசியத்தை உள்ளார்ந்து எனது கண்ணியமும் பாதுகாப்பும் ஹிஜாப்பில் இருப்பதாய் உணர்ந்து நான் மாணிக்கமாகவே இருக்க விரும்புகிறேன்,
எத்தனைதான் பெண்ணியம்பற்றி பேசினலும் பெண் என்றைக்குமே பெண்தான் அவள் மேன்மைதான், பெண்ணால் எல்லாம்முடியும் ஆனால் அவள் ஆணாக முடியாது, அவன்போல் வெளிநடப்புக்கூடாது என்பதில் எனக்கு எவ்விதமாற்றுக் கருத்துமில்லையென தெரிவிப்பதோடு,
பெண்மைக்குத் தேவையான சுதந்திரமளித்து பாதுக்காக்கும் ஒரு அழகிய வழித்தோன்றலில் நானும் ஒருபெண்ணாய் பிறப்பெடுத்தமைக்காக மிகவும் பெருமைப்படுகிறேன், ஹிஜாப் எங்களுக்கான விலங்கல்ல பெண்களுக்கான சுதந்திரம்- என்றுசொல்லி முடிக்கிறேன்.........
//மன எண்ணங்களையும் மற்ற விசயங்களையும் எடுத்துரைத்து விளக்கம்தர எழுத்தறிவை தந்துதவிய ஏகயிறைவனுக்கும்,மிக அவசியமான கேள்வியெழுப்பி என் உணர்வுகளை வெளிகொண்டுவர உதவிய உடன்பிறவா சகோதரி மேனகாவுக்கும்.இஸ்லாமிய பெண்மணிதளத்திற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.//
இறைவா!
உன்னையே வணங்குகிறேன்
உன்னிடமே உதவியும் தேடுகிறேன்

4 comments:
மூடியிருப்பது உடலையே தவிர மூளையை அல்ல! இது என் முயற்சியின் முட்டுக்கட்டையுமல்ல! எனது அழகும் அலங்காரமும் எனக்கும் என்னவருக்கானது மட்டுமே தவிர,எவருக்குமானதல்ல , என்னழகோ என் உடையோ பிறரைக்கவர்ந்து அவரை நான் பாவத்தின்பக்கம் ஈர்ப்பதற்கு நான் ஈனப்பிறவியுமில்ல!//
சகோதரி தங்கள் நோக்கில் உறுதியாக இருக்கிறீர்கள் பாராட்டுகிறேன், உடையென்பது உள்ளத்துக்குமானது என்பதை பளிச்சென புரியவைத்துள்ளீர்கள்..
அரைகுறை ஆடை அணிவது அவரவர் கலாச்சாரம் அது அவரவர் விருப்பம் இல்லையா? நமக்கேன் வம்பு எதையாவது சொல்ல எதாவது வெடிக்கும்.. இல்லையா சகோதரி.
மீண்டும் எனது பாராட்டுகள்..
முதலில் மன்னிப்பை கேட்டுகொள்கிறேன்.சகோ
கடந்தகால கருத்துக்கு நிகழ்கால பதில் தருவதற்க்கு
அவரவரின் விருப்பதை தடுக்க நமக்கென்ன உரிமை
,எது நன்மை எது தீமைய கண்கூடாய் காண்கையில் அதன் விளக்கத்தை எடுத்துரைக்கவேண்டியதும் நம்கடமை, எடுத்துக்கொள்வதும் விட்டுச்செல்வதும் அவரவர் பொதுவுடமை.
படித்து கருத்திட்டு பாராட்டியமைக்கு மிக்க நன்றி...மதுர மித்ரா...
Great article with excellent idea! I appreciate your post. Thanks so much and let keep on sharing your stuffs.
Tamil News | Latest Tamil News | Tamil Newspaper
Thank you for post and your blog. My friend showed me your blog and I have been reading it ever since.
Ayurveda
Ayurveda Resorts
Ayurveda Kovalam
Ayurveda Trivandrum
Ayurveda Kerala
Ayurveda India
Ayurveda Resorts in Kovalam
Ayurveda Resorts in Kerala
Kerala Ayurveda Resort
Resorts in Kovalam
Ayurvedic Resort
Accommodation in Kovalam
Budget resort in Trivandrum
Yoga & Meditation
Ayurveda Treatments
Ayurveda Treatments in Kovalam
Ayurveda Wellness in Kovalam
Ayurveda Wellness in Trivandrum
Post a Comment
கருத்துக்களை பகிர்ந்துகொள்ளும்போது நிறைகுறைகளை சரிபார்க்கலாம். பகிந்துகொள்ளுங்களேன் கருத்துக்களை
நானும் என்னை சரிசெய்து கொள்கிறேன் .
பிடிதிருந்தால் ஓட்டும் போடுங்கள்