மல்லியின் காதலுடன்..
-
என்றும் என் நினைவில் நீ
💕🌷💕🌷💕🌷💕🌷💕🌷💕
என்ன செய்தாய் என்னை -நான்
எப்படித் தொலைந்தேன் உன்னில்
கடக்கும் நிமிடம் யாவும்-என்
கண்ணுக்குள் காட்சியானாய் ...
இறையடியார்களே! உங்களைத்தான்..
Posted by அன்புடன் மலிக்கா | 1:32 AM | 12 commentsLabels: சமூகம் வேதனை.
بسم الله الرحمن الرحيم
அஸ்ஸலாமு அலைக்கும்.
அனைவர்மீதும் இறைவனின் அருள் அளவில்லாமல் கிடைக்கட்டும்.
உலகில் படைக்கப்பட்ட அனைத்தும். அனைத்தும் இறைவனை நினைத்து அன்புடனும். அச்சத்துடனும் வணங்கும். இதில் சிறிதளவும் ஐயமில்லை. ஆனால் மனிதர்கள் மட்டுமே. அதை பொழுதுபோக்கிற்காக பொடுபோக்குதனமாக வெரும் கடமைக்காக செய்வது.அது அவரவர் மனசாட்சிக்கு தெரியும்..
சில பொடுபோக்கு தொழுகையாளர்களை பார்த்ததால் மனம் நொந்தது அதனால் இதை எழுதும்படியானது.
இறைவனை வணங்கவேண்டும் இது கட்டாயக்கடமை. எப்படி? அது ஒவ்வொரு முஸ்லீமும் அறிந்த விசயம். அறியாதவர்களும் உண்டு. ஆனால் அறிந்தவர்கள் அதை ஒரு பொழுதுபோக்கிற்காக செய்யும்போது மனம் ரணப்படுகிறது.
இறைவனை நினைத்து தொழுகைக்கு தயாரகும் ஒருவர் முதலில் தன்னைச் சுத்தப்படுத்திக்கொள்ளவேண்டும். ஒழுவின் மூலம்.
ஒழுவை [சில இடங்களில் உளு என்பார்கள்] சரியாக முடிக்கவேண்டும் ஒழு என்றால் இருகைகள் கழுவுதல். நாசிக்கு நீர்விடுதல்.முகம் கழுவுதல். முட்டுக்கைகள்வரை கழுவுதல்.தலையை தண்ணீரால் தடவுதல். காதுகளையும் தண்ணீர்கொண்டு தடவுதல். இருகாள்களையும் கழுவுதல்.இது ஒழு செய்யும் முறை. இதுசெய்யும்போதும் செய்தபின்னும் இறைவன் சொன்னதுபோல் இருக்கவேண்டும்.
விரல்களில் நெயில்பாலிஸ் போட்டிருத்தல் அதன் தடிமன் தனம் ஒழுச்செய்யும்போது தண்ணீர் சேரவேண்டிய இடத்துக்கு சேராது அதனால் அதை தவிர்ப்பது நல்லது. ஆனால் சிலர் ஒழுசெய்துவிட்டு துணிகொண்டு நன்றாக துடைத்துவிட்டு பவுடர்பூசி மேக்கப்போட்டு. உதட்டுச்சாயம் அதுவும் திருமணவிழாவிற்கு செல்வதுபோல் இட்டுக்கொண்டு, கண்களுக்கு மையிட்டு[சுர்மா அல்ல] மஸ்காரா ஐபிரோ செய்துகொண்டு தராவீஹ் தொழுகைக்கு வருகிறார்கள் இது தொழுகைக்கு கூடுமா?
பெண்கள் அலங்காரம் செய்வதில் தவறில்லை. அதுவும் தன் கணவருக்காக! தன் கணவர் மட்டுமே ரசிப்பதற்காக பெண்கள் அலங்கரித்துகொள்வதில் தவறேயில்லை. பிறருக்காக அலங்கரிப்பது பேராபத்தில் முடியும் என்பதை நான் சொல்லவேண்டியதில்லை.
தொழுகைக்கு வரும்போது தூய்மையான ஆடையணிந்து தொழுமாரு சொல்லப்பட்டிருக்கிறதே தவிர. சில இடங்களில் நடப்பதுபோல் திருமண விழாக்களுக்கு செல்வதுபோல் மேக்கப்பிட்டு, மைபூசி, வண்ணமிட்டு.அதிக அலங்கரதோடு தொழச்சொல்லவில்லை. ஏனெனில். இறைவன்முன் நாம் நிற்கும்போது அச்சம் அச்சமென்னும் தக்வா பயபக்தி மனதில் தோன்றவேண்டும்.
அதுமட்டுமல்லாது தொழுகையில்லாதவர்களுக்கும் தொழும் நேரத்தில் வருகிறார்கள் இதே அலங்கலங்களோடு. சரி வரட்டும் வந்து தொழுபவர்களுக்கு இடையூரு செய்யாமலிருக்கவேண்டுமல்லவா. அதுமில்லை. தொணதொணவென பேச்சு. குழந்தைகள் போடும் சவுண்டையாவது இவர்கள் சொல்லி அதட்டவேண்டும் அதுமில்லை. அல்லது தான் கொண்டுவந்திருக்கும் மொபைல்போனில் ரிங்டோனாவது மாற்றிவைக்கவேண்டும் அல்லது சைலன்டில் போடவேண்டும் அதுமில்லை.
ரிங்டோனில் ஒலிக்கும் பாட்டின் சப்தம் பிறர் தொழும்போது அவர்களுக்கு எந்தளவு கவனத்தை சிதறடிக்கும் என்பதை யாரும் நினைத்துப்பார்பதில்லை. இறைவனைத் தொழும் இடம் என்றால் எவ்வளவு பயபக்தியிருக்கவேண்டும். அல்லது சிறு அச்சமாவது இருக்கவேண்டாமா?
இறைவனுக்கு செய்யவேண்டிய கட்டாயக் கடமைகளில் தொழுகை மிக மிக முக்கியமானது அதை பேணுதலுடல் தொழுவதே சாலச்சிறந்தது.
இறையடியார்களான நாம் அவன் சந்நிதானத்தில் நிற்கும்போது
இறைவனுக்கும். நமக்கும். எவ்வித தடையுமில்லாது அவனிடம் நாம் நம்மை நிறைவான முறையில் ஒப்படைக்கவேண்டாமா?
இந்த நோன்புக்கு இருக்கும் நாம் அடுத்த நோன்புவரை ஏன் அடுத்த நாள்வரை இருப்போமா என்பது நமக்குத்தெரியுமா?
அனைத்தும் அறிந்துகொண்டே பிழைசெய்வது சரியா?
நாம் இம்மையில் மட்டும் வாழ்வதற்காக படைக்கப்படவில்லை. நாளை மறுமையில் கேள்விகேட்கப்படுவோம். எனக்காக நின்று வணங்கினாயா பிறர் பார்க்கிறார்கள் என்பதற்காக நின்று வணங்கினாயா? என. நாம் அலங்கரித்துக்கொள்ள எவ்வளவோ சந்தர்ப்பங்கள் இருக்கு. சமயங்களும் இருக்கு. நம்மை படைத்து நமக்காக பூமியிலுள்ள அனைத்தையும் அனுபவிக்க வைத்த இறைவனுக்கு நன்றி செலுத்தும் அந்நேரத்திலாவது நம்மை அவனிடம் முழுமையான மனதுடன் தூய்மையான உடலுடன். உள்ளச்சத்துடன். அவன்முன் நிற்கவேண்டாமா?
அழகு சாதனங்களில் தொழுகைக்கு, ஒழுவுக்கு கூடாதவைகள் கலக்கப்படிருக்கா என நாம் அறியோம். சில சொல்கிறார்கள் இது ஹலாலாக செய்யப்பட்ட லிஃப்ஸ்டிக் அதனால் தடவுகிறோம் என. இருந்துவிட்டுபோகட்டும். அதையேன் இறைவனின் சன்னிதானத்தில்
அழுது தொழும் அந்நேரத்தில் இட்டுவரவேண்டும் அங்கே பயபக்தியிருக்குமா? பொடுபோக்குதனம் இருக்குமா? அல்லது இறைவனின் மீது சிறு அச்சம்தானிருக்குமா?
இறைவனின்முன் ஓர் அச்சமின்றி நாளை அவன்வசம் மீழ்வோம் என பயமின்றி நடப்பதுதான் அதுவும் அனைத்தும் அறிந்தவர்கள் நடப்பதுதான் வேதனையான விசயம்..
இதை அவரவர் வீட்டு ஆண்களும் தன் அறியாப்பெண்களுக்கு நிச்சயம் சொல்லித்தரவேண்டும். அன்புப் பெண்களும் இதையறிந்து இறைவனுக்கு பயந்து நடக்கவேண்டும் நாளை நிச்சயம் கேள்விக்கேட்கப்படுவோம்.
அதற்கான கூலியை அடையப்பெறுவோம் .
அதனால் நல்லவற்றை கேட்டும். பார்த்தும். படித்தும்.
அறிந்துகொள்ளுங்கள்.
அப்படியில்லையாயின் நாளை நஷ்டவாளர்களில் நாமும் ஒருவராகிவிடுவோம். அப்படியொரு நிலை வராமல் நம் அனைவரையும் இறைவன் பாதுகாத்து நம்மை சுவர்கவாசிகளாக ஆக்குவானாக ஆமீன்...
எவர் ஒருவர் தொழுகையை பேணி அதன் பர்ளுகளை நிறைவேற்றுகிறார்களோ அவர்கள் இறைவனின் நேசத்திற்க்குறியவர்கள்
எவர் ஒருவர் தொழுகையில் அலச்சியமுடனும் பிறர் பார்க்கிறார்கள் என்பதர்காகவும் தொழுகிறார்களோ அவர்கள் அவனின் வெருப்புக்குள்ளானவர்கள்.
நான் அனைத்தும் அறிந்தவளல்ல. அறிந்தவரை இதுதவறென்பதை சுட்டிக்காட்டியுள்ளேன்.
இறைவனின்மேல் நேசம் வைத்ததால்
இதை என்மன வருத்துடன் எழுதுகிறேன்
பிறரின் மனம் வருந்துவதற்க்காக அல்ல
அப்படி என் எழுத்துக்களில் வருந்துபடியாக இருந்தால் இறைவனுக்காக என்னை மன்னியுங்கள்..
அன்புடன் மலிக்கா
இறைவா!
உன்னையே வணங்குகிறேன்
உன்னிடமே உதவியும் தேடுகிறேன்
வசந்த காலத்தின் வாயிற்படி!
Posted by அன்புடன் மலிக்கா | 10:54 PM | 4 commentsLabels: நோன்பின் மாண்பு.
بسم الله الرحمن الرحيم
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய இறைவனின் திருப்பெயரால்!
நாம் நோன்பை நல்லமுறையில் கடைப்பிடித்தோமேயானால் அதன் கூலியை இம்மையிலும் மறுமையில் இறைவன் நமக்கு அளவில்லாமல் அள்ளித்தருவான்.
ஒவ்வொரு மனிதனும் வருடந்தோரும் அலுக்காமல் சலைக்காமல்,
3 வேளையென்ன முடிந்தால் 6 வேளைகூட சாப்பிடக் கிடைத்தால் சாப்பிடுவான். சாப்பிடுகிறான்.
எதையுமே ஓர் வரையரை படுத்துவதில் இறைவனுக்கு நிகர் இறைவன் மட்டுமே! அதனால்தான் வருடத்தில் ஒருமாதமாவது தன்னை. தன் நாவை கட்டுப்படுத்துவதோடு அல்லாமல் தன் உள்ளத்தில் உண்டாகும் தீமைகளுக்கும் சேர்த்து மனக்கட்டுப்பாட்டையும் மனிதன் கற்றுக்கொள்ளவேண்டி இன்நோன்பை ஏற்படுத்தி அவனை தூய்மைப்படுத்துகிறான்.
ஆகவே நோன்பு காலங்களில் நோன்பை மிகவும் கண்ணியத்தோடும். கடமையுணர்ச்சியோடும் கடைப்பிடியுங்கள். அதற்கான கூலையை இறைவன் ஈருலகிலும் வழங்குவான் இதில் சிறிதும் ஐயமில்லை.
எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவருக்கும் உடல்ஆரோக்கியத்தையும் மன ஆரோக்கியத்தையும் தந்து அனைவருக்கும் நேரான வழியை காட்டுவானாக ஆமீன்.
கீழே படிக்கவிருக்கும் இந்த கட்டுரை எனக்கு மெயில் வந்தது படித்து பயன் பெறுங்கள்.
நோன்பு வசந்த காலத்தின் வாயிற்படி!
-டாக்டர் A. ஷேக் அலாவுதீன்
MD (Alt, Med), H.H.A, A.T.C.M (China)
வசந்த காலத்தின் வாயிற்படி தான் நோன்பு என்றால் அது மிகையாகாது. உள்ளத்துக்கும் உடலுக்கும் ஆரோக்கியத்தை அள்ளி வழங்கும் ஓர் அற்புத மாதம். இந்த ஆரோக்கியத்தை நம்மில் எத்தனை பேர் நோன்பின் மூலம் பெற்றுள்ளோம் என்றால் அது மிக சொற்பமே.
நோன்பு வைத்து கடமையை நிறைவேற்றி நன்மையைப் பெற்றுக் கொள்ளும் நாம் அதை முறையாக வைத்து, முறையாக திறக்காத காரணத்தால் நாம் உள்ளத்துக்கும் உடலுக்கும் ஆரோக்கியத்தைப் பெற்றுக் கொள்வதற்குப் பதில், உள்ளத்துக்கு சோர்வையும், உடலுக்கு நோயையும் பெற்றுக் கொள்கிறோம்.
ஆரோக்கிய வழியில் நோன்பு வைப்பது பற்றி தெரிந்து கொண்டு, நோன்பு வைப்போமானால் நாம் இம்மை மறுமை நன்மைகளைப் பெற்று உள்ளத்தையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும்.
நுரையீரல் அதிகப்படியாக இயங்கும் நேரம் காலை 3-5 மணி வரை உள்ள 2 மணி நேரமாகும். இதற்கு உதாரணமாக ஆஸ்துமா நோயாளிகள் இந்த அதிகாலை நேரத்தில் மூச்சு விட சிரமப்பட்டு எழுந்து உட்கார்ந்திருப்பதைக் காணலாம். ஏனெனில், தூங்கும் போது இயங்குவதை விட விழித்திருக்கும் போது நுரையீரலால் சிறப்பாக இயங்க முடியும். அதனால் இயற்கையாக தூக்கம் கலைந்து நுரையீரல் இயக்கத்துக்கு உடல் உறுப்புகள் உதவி செய்கின்றன
இந்த நுரையீரல் அதிகப்படியாக இயங்கும் ஸஹர் நேரத்தில் (அதிகாலையில் நோன்பு வைப்பதற்காக) நாம் அதிக நேரம் விழித்திருப்பதால் நமது நுரையீரல் மிகுந்த புத்துணர்வு பெற்று சிறப்பாக செயல்படுகின்றது. இதன் மூலம் மற்ற உறுப்புக்கள் புத்துணர்வு பெறுகின்றன. இந்த நுரையீரல் அதிகமாக இயங்கும் காலை நேரத்தைத்தான் யோகா கலையில் அமுத காற்று வீசும் நேரம் என்றும் கூறுவார்கள்.
காலை மதியம் இரவு வழக்கமாக சாப்பிட்டுப் பழகிப் போன நமது வயிறு, மண்ணீரல், கல்லீரல், சிறுகுடல், பெருங்குடல் போன்றவை 1 மாத காலம் இந்த நேரம் மாறி ஸஹர் நேரத்தில் நாம் சாப்பிடுவதன் மூலம் இந்த உறுப்புக்களின் வழக்கமான இயக்க முறையில் ஓய்வு கிடைத்து வழக்கத்திற்கு மாறாக, அதிகாலை நேரத்தில் சாப்பிடுவதன் மூலம் அவை புத்துணர்ச்சி பெற்று இயங்க ஆரம்பிக்கின்றன. இதன் மூலம் இந்த உறுப்புக்கள் சம்பந்தப்பட்ட நோய்கள் நலமாகின்றன
இயற்கைப் பொருட்களைக் கொண்டு பல் துலக்குங்கள்: காலையில் பல் துலக்க இரசாயன முறையில் தயாரிக்கப்பட்ட பற்பசைகளை உபயோகிப்பதை விட, இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட பற்பசைகளை உபயோகித்து பல்துலக்குவது நல்லது.
ஸஹர் நேரத்தில் தூக்க கலக்கத்தில் கடமைக்காக உட்கார்ந்து சாப்பிடாமல், சுய உணர்வுடன் தனக்கு விருப்பமானதை நன்றாக மென்று சாப்பிடுங்கள். நொறுங்கத் தின்றால் நூறு வாழ்வு! என்ற பழமொழிக்கேற்ப நன்றாக மென்று சாப்பிடப் பழகிக் கொண்டாலே, அதிகமாகச் சாப்பிட வேண்டும் என்ற ஆசை குறைந்து விடும். நன்றாகச் சாப்பிட்ட திருப்தி உண்டாகும்.
குளிர்ச்சியான நீரைக் குடிக்காதீர்கள். இதனை உடல் ஜீரணிப்பதில்லை. குளிர்ச்சியான தண்ணீர், ஐஸ்கிரீம், ஜுஸ் போன்றவைகள் நாக்கில் உமிழ் நீரோடு கலப்பதில்லை.
அதனால் முறையான ஜீரணம் ஏற்படாமல், உடலுக்கு நன்மைக்குப்பதிலாக தீங்கே உண்டாகும்.
ஜீரணித்திற்காக இதமான வெந்நீரை கொஞ்சம் குடிக்கலாம். தொடர்ந்து வெந்நீரையே குடிப்பது நல்லதல்ல. அதிகச் சூட்டோடு பருகும் பொழுது அதில் உள்ள உயிர் சக்தியின் நிறைவு இருப்பதில்லை. எனவே காய்ச்சி ஆற வைத்த நீர் மிகவும் சிறந்தது.
பகல் நேரத்தில் டீ, காபி, சிகரெட், வெற்றிலை, பொடி போன்ற அனைத்து வகையான கெட்ட பழக்கங்களிலிருந்தும் நீங்கி விடுவதால், நோன்பு அவரது உடல்நிலை நலிவடைவதிலிருந்து காப்பாற்றி, அவரது உடல் சீராக இயங்க உதவுகின்றது. இந்த நேரத்தில் தான் உடலில் கொழுப்புகள் கரைக்கப்படுகின்றன. உடலில் உள்ள கழிவுகள் நீக்கப்படுகின்றன.
நோன்பு வைப்பவர்கள் அதிகமாக பொறுமையிழந்து தவறு செய்யும் நேரம் ஒன்று இருக்கின்றதென்றால் அது நோன்பு திறக்கும் நேரம் தான்.
அதிகாலையிலிருந்து மாலை வரை பொறுமையாக இருந்த ஐம்புலன்களையும் அடக்கி வைத்தவர்கள் நோன்பு திறக்கும் போது பொறுமையிழந்து கட்டுப்பாடு இல்லாமல் கண்ட உணவுகளையும் உண்பது நோன்பின் நோக்கத்தையே வீணாக்கி விடும்.
நோன்பு திறக்கும் நேரத்தில் பல அமிலங்கள் வயிற்றில் சுரந்திருக்கும். குடலிலும் வயிறிலும் இன்னும் தேவையற்ற கழிவுகளும் தங்கியிருக்கும். இவைகளை நீக்கும் சக்தி சுத்தப்படுத்தும் சக்தி தேனுக்கு உண்டு.
பேரீத்தம் பழத்தை தேனில் நனைத்து நன்றாக மென்று சாப்பிட்டு நோன்பு திறக்கும் போது, உடலில் ஊறிக் கிடக்கும் தேங்கிய கழிவுகள் நீக்கப்படுகின்றன.
எலுமிச்சப் பழச்சாற்றில் தண்ணீர் தேன் கலந்து குடிக்கலாம். விரைவாகக் குடிக்காமல் நிதானமாகக் குடிக்க வேண்டும்.
ஆரஞ்சு, அன்னாசி பழச்சாறுடனும் தேன் கலந்து குடிக்கலாம். ஆனால் எந்த ஜுஸ் சாப்பிட்டாலும் சீனியும், ஐஸ்சும் சேர்க்ககூடாது.
இளநீரும் நோன்பு திறக்க நல்லதொரு பானமாகும். இளநீர் வயிற்றின் நச்சுக்களை சிறுநீராக மாற்றி வெளியேற்றி விடும்.
ஐஸ் கிரீம், குளிர்பானங்கள், சோடா, கோலா போன்ற வாயு நிறைந்த பானங்கள், காப்பி, டீ, புகைபிடித்தல், எண்ணெய்யில் மூழ்கி எடுத்த சம்சா, பஜ்ஜி போன்றவற்றின் மூலம் நோன்பு திறக்கக் கூடாது.
வாயு நிறைந்த பானங்கள் மூலமும் நோன்பு திறப்பது உடல் நலத்தை பாழடித்து விடும். வயிற்றில் அமில சுரப்பை அதிகப்படுத்தி விடும். விட்டமின் சி உள்ளதாகக் கூறி விற்கப்படும் செயற்கைப் பானங்கள், பவுடர் கரைசல்களால் தயாரித்த பானங்களையும் தவிர்த்தல் மிகவும் நல்லது.
இவ்வாறு முறையாக நோன்பு திறந்து 1 மணி நேரத்திற்கு உணவு உண்ணாமல் இருப்பது உடல்நலத்துக்கு மிகவும் சிறந்தது.
அவ்வாறு உண்ணாமல் இருக்கும் போது, வயிறு தன் அமிலத்தை முழுவதும் வெளியேற்றி விடும்.
பிறகு நாம் உணவை நன்றாக மென்று உண்பதால் நன்கு ஜீரணம் ஏற்படும்.
வயிற்றில் கோளாறு எதுவும் ஏற்படாது. ஏற்கனவே கோளாறு இருக்குமானால் அதுவும் குணமடையும்.
வயிறு முட்ட உண்பதையும், கார உணவை உண்பதையும் தவிர்ப்பது நல்லது.
மேற்கண்ட முறையில் நோன்பு வைக்கப் பழகிக் கொண்டால் உடலில் தளர்ச்சி, சோர்வு, மயக்கம் போன்றவை இருக்காது. உடல் ஆரோக்கியமாக இருக்கும். தேவையில்லாத கொழுப்புகள் குறைய ஆரம்பிக்கும். உடல் எடை குறையும், உடம்பு தோற்றம் அழகாகும். முக்கியமாக இரவுத் தொழுகையில் மிகவும் விருப்பத்துடன் சோர்வில்லாமல் தொழ முடியும். உடலில் புது தெம்பு பிறக்கும். மனதில் புது உற்சாகம் உண்டாகும்.
நோன்பும் சில முதல் உதவிகளும்
மயக்கம் :நோன்பு நேரத்தில் சிலருக்கு மயக்கம் உண்டாகலாம். அப்படி ஏற்பட்டால் மேல் உதட்டில் இருக்கும் சிறிய பள்ளத்தில் மூக்கிற்குக் கீழ் ஆட்காட்டி விரலை வைத்து லேசாக அழுத்தம் கொடுத்து 1 நிமிடம் கசக்கிவிடுவதன் மூலம் அந்த மயக்கத்திலிருந்து உடனடி நிவாரணம் பெறலாம்
தலைவலி :கை கட்டை விரல் நகத்திற்கு கீழ் பகுதி (கை ரேகைக்காக இங்க் வைக்கும் பகுதி) முழுவதும் நகத்தைக் கொண்டு 1 நிமிடம் தொடர்ந்து விட்டு விட்டு அழுத்தம் கொடுக்க வேண்டும். அதேபோல மற்ற கை கட்டை விரலிலும் கொடுங்கள். தலைவலி பறந்து போவதை நீங்கள் உணர்வீர்கள். 99 சதவீத தற்காலிக தலைவலிகள் இதன் மூலம் குணமடைந்து விடும். இன்ஷா அல்லாஹ்.
வயிற்று உபாதைகள்: தொப்புலிலிருந்து இடது பக்கம் 2 இஞ்ச் உங்கள் கைவிரல் அளவு அளந்து உங்களின் ஆட்காட்டி விரலால் 1 நிமிடம் அழுத்தம் கொடுங்கள். சாதாரண வயிறு உபாதைகள் நீங்கும்.கால் கட்டை விரல் பக்கத்து விரலுக்கும் அதற்கு அடுத்த விரலுக்கும் (2வது விரலுக்கும் 3வது விரலுக்கும்) இடைப்பட்ட ஜவ்வு பகுதியில் ஒரு நிமிடம் அழுத்தம் கொடுத்தால், வயிறு உப்புசம், வயிற்றில் சூடு, வயிறு கல்போட்டது போன்றது போல் இருப்பது, உடல்வலி போன்றவை தீரும்.
மூச்சுத் திணறல்:இரண்டு மார்பு காம்புக்கும் இடைப்பட்ட பகுதியில் நெஞ்சு குழிக்கு நேர்மேல் ஆட்காட்டி விரலை வைத்து லேசாக ஒரு நிமிடம் அழுத்தம் கொடுத்து கசக்கி விடுவதன் மூலம் மூச்சுத் திணறல் சரியாகும்.
மேற்கண்ட எளிய முறைகளை பின்பற்றி நீங்களும் நோன்பை அழகாக வைத்து, இதே முறையை மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுத்து அவர்களும் நோன்பின் பூரண மகத்துவத்தைப் பெற்றுக் கொள்ள உதவுங்கள்.
எல்லா தீமைகளிலிருந்தும் எங்களை காப்பாற்றி சுவர்கத்தின் நறுமணத்தையும் அதனுள்ள என்றென்றும் தங்கியிருக்கும் நற்பாக்கியத்தையும் எங்களுக்கு வழங்குவாயாக! ஆமீன்.
அன்புடன் மலிக்கா
இறைவா!
உன்னையே வணங்குகிறேன்
உன்னிடமே உதவியும் தேடுகிறேன்
Subscribe to:
Posts (Atom)
வேண்டுகோள்..
இங்கே பதியப்படும் அனைத்தும், நான் என்னை தெளிவுப்படுத்திக்கொள்ளவும். ஈருலக வாழ்க்கையையும் அறிந்துக்கொள்ளவும். தொடங்கியுள்ள பயணம். அதில் தாங்களும் தெரிந்துகொள்வதில் பெருமிதம்.
ஆனால் இதை தவறானமுறையில் விளங்கிக்கொண்டு வீணான விவாதங்களோ தர்க்கங்களான கருத்துக்களாகவோ அமைத்துவிட வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்..





