.

வருகை புரியும் அனைவர்மீதும் இறைவனின் அருளும் சாந்தியும் அளவில்லாமல் கிடைக்கட்டும் Photobucket

மனிதகடவுள்களின் மர்மலீலைகள் [அம்பலம்]

| | 35 comments

بسم الله الرحمن الرحي



[இதுயார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல, எதார்த்தங்களையும் உண்மைகளையும் எனக்குத்தெரிந்தவகையில் எடுத்துச்சொல்கிறேன்..]

தற்போதுள்ள நிலவரப்படி எங்குநோக்கினும் மனிதக்கடவுள்களின்
மர்மலீலைகள். காவிச்சாமிகளின் களியாட்டங்கள். சாமியார்களின் சல்லாப லீலைகள். என்று தீயைவிட வேகமாக பரவிவருகிறது இணையங்களிலும். பத்திரிக்கைகளிலும். சேனல்களிலும். இதே புராணங்கள்தான். இதே செய்திகள்தான்.

இது ஏன்? எதனால்? இன்னிலைக்கு யார் காரணம்?
அவர்களா? அல்லது அறிந்தும் அறியாமல் இதுபோன்றவர்களுக்கு ஆதரவுதரும் மக்களா?
 மூட நம்பிக்கை மீது மோகம் கொள்வதா?.
ஒருவர் ஒருவார்த்தை சொல்லிவிட்டால் அது
திருவார்தையாகிவிடுமா?
அவர் யார்? கடவுளா?
மனிதன் கடவுளாகமுடியுமா?
முடியுமென்றால் எப்படி?

கடவுளென்பவன் தவறிழைக்காதவன்
மனிதனென்பவன் தவறிழைக்ககூடியவன்

ஒருவர் ஒருவிதத்தில் நல்லவரென்றால், மற்றொருவிதத்தில் கெட்டவராக இருப்பார். இதுதான் மனித நிலைபாடு, மனிதன் அப்படித்தான் படைக்கப்பட்டுள்ளான்.
ஒருவனுக்கு அறிவுகூடுதலாகயிருக்கும். ஒருவனுக்கு திறமைகள் கூடுதலாகயிருக்கும். இப்படி ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொருவகையில் மேன்மையாகவிளங்குகிறான்.
அதற்காக அவன் கடவுளாகமுடியுமா?
அப்படிப்பார்த்தால் அனைவருமே கடவுள்களா?

ஏனென்றால்”
தவறிழைக்காத மனிதனே பூமியில்  இல்லவேயில்லை
அப்படியிருப்பதாக சொன்னால் அவரின் மனசாட்சிக்குதெரியும் தான் சிறுதவறுகூட இழைக்காதவரா? என்று.

மனிதனாகப்பட்டவன் தவறிழைத்து,தன்னைத்திருத்தி,
தனிமனித ஒழுக்கத்துடன் வாழநினைக்கவும், அவனுக்கு வழங்கப்படிருக்கும் வாழ்க்கையிது, பரிசோதனையான இவ்வுல வாழ்க்கை, இதில்தான் அடங்கியிருக்கு அவனின் வெற்றியும் தோல்வியும்.

மனிதனை மனிதன் கடவுளாக எப்படி ஏற்கிறான் என்றுதான் தெரியவில்லை?
தன்னைபோன்றே.உண்ணும், உடுத்தும், உறங்கும்,
மலம்ஜலம் கழிக்கும். உணர்ச்சிகளிருக்கும். ஆசாபாசங்களிருக்கும்.மரணிக்கும்.
இப்படி அனைத்திலும் தன்னைப்போன்றே செயல்படும் ஒருவன் எப்படி கடவுளாக முடியும்.
துறந்து வாழ்ந்தால் கடவுளா?
துறவரம் என்றால் என்ன?
பின்பெதற்கு ஆண்பெண் என்ற இரண்டு ஜோடிகளைப்படைத்து
ஒருவருக்கொருவர் துணையை உண்டாக்கப்பட்டது, அவரவர் நிலத்தில் அவரவர் உழுதுபயிரிடுங்கள் என்றுதானே!
துறவரம் என்றபெயரில் காணும் நிலங்களிலெல்லாம் உழுது பயிரிடுவதற்கா??

துறவரமென்றால் தூய்மையின் உறைவிடம்தானே!
ஆனால்?

இங்கே காலங்காலமாக நடந்துவருவதென்ன?
துறந்துவிட்டோமென்ற போர்வையில் குத்தாட்டங்களோடும், குட்டிபுட்டிகளோடும்.  அபலைப்பெண்களின் அங்கங்கள் இதுபோன்றவர்களின் அர்ச்சனைக்கு ஆளாக்கப்படுகிறன.
அழகிகள்கூட அடிபணிந்து அலைமோதுகின்றன.
மனிதர்களின் மனங்கள்
அடிமாட்டைவிட மோசமாகவல்லவா மழுங்கிக்கிடக்கின்றன.

எத்தனை ,எத்தனை. இதுபோன்ற சம்பவங்கள் நடைப்பெற்றாலும். இதை அன்றே மறந்து,வேறு ஏமாற்றத்திற்கு தயாராகும் மக்களை நினைத்துதான் பரிதாமாக இருக்கிறது.

மனிதனைக் கடவுளென்று நினைத்து அவருக்கு தீபஆராதனையெடுத்த கைகளின்று, அவர்களின் உருவபொம்மைகளுக்கே தீயிட்டுக்கொளுத்தும் வேடிக்கைகள். மகானாக பார்த்த கண்களெல்லாம் மண்புழுவைவிட கேவளமாக பார்க்கும் வினோதங்கள். அவரின் பாதங்களுக்கு பாலபிஷேகம் செய்தவர்களெல்லாம் இன்று தங்கள் பாதங்களால் அவரின் உருவத்தைபோட்டு மிதிக்கும் அவலங்கள்.
மலர் மாலைகளை சூட்டி மண்டியிட்டவர்களெல்லாம்.
செருப்புமாலையணிவிக்கும் சிறுபிள்ளைதனம் என. தாங்களே ஏமாந்துவிட்டதை தாங்கயிலாமல்,தங்கள் உயிரைவிட பெரிதென போற்றிபுகழ்ந்தவர்களையே இன்று தூற்றுகிறார்கள். தூக்கியெறிகிறார்கள்.

இன்னிலைக்கு எது காரணம்? அறியாமையா? அல்லது அறிந்தும் அறியமறுப்பதா? நம்பிக்கையா? அல்லது நம்பிக்கையென்று தங்களை தாங்களே ஏமாற்றிக்கொள்வதா? அறியாமை காலத்தில் நடந்தால், அது அறிதலில்லாததது எனலாம்.

ஆனாலின்று, அத்தனையும் அப்பப்ப அறிந்துவிடும் காலம். 5 மணிக்கு அறியாததை 5.5 மணிக்கு அறிந்துவிடுமளவிற்கு, அறிவியலும் விஞ்ஞாமும் அளவில்லாமல் அறியாதவர்கள்கூட அறியும்படி அத்தனையும் ஆங்காங்கே உலகம் முழுவதும் கொட்டிக்கிடக்கிறன.
ஒருவேளை அறிவு அதிகரித்துவிட்டதாலும் வந்தவினையாக இருக்குமோ?

கடவுளுக்கும். மனிதனுக்கும். வித்தியாசமில்லையென்றால்,
உலகம் வந்ததெப்படி? நாம் பிறந்தது எப்படி? மனிதன் கடளாகமுடியுமென்றால் ஆதாம்தான் நம்மைப்படைத்தாரா? ஏனென்றால் அவர்தானே முதல்மனிதர்.
அவர். தானே தன் விலாயெலும்பிலிருந்து தன் துணையை படைத்துக்கொண்டாரா?
இல்லை நம்மைப்பெற்றெடுத்த தாய் தந்தை கடவுளா? அவர்கள் எவ்விதத்திலும் தவறிழைக்காமல் இருக்கிறார்களா?
இறைவனுக்கு அடுத்தபடியாக வணங்கக்கூடிய தகுதிகள் தாய் தந்தை இருவருக்கும்தான். ”ஆனால்” வணக்கம் என்பது ஒருவருக்குதான். அனைத்திலும் அனைத்திலும் சிறந்தவன் எவனோ அவனே வணக்குத்திற்கு தகுதியானவன்.
அறிவில்லாதவருக்கூட இதைபற்றிய அறிதல் இருக்கும். அறிந்தவரும்கூட அதை அறியாதவர்போல் நடப்பதுதான் வியப்பிலும் வியப்பு.

முதல் மனிதரான ஆதமை மண்ணால் படைத்த கடவுள்
அவர்மூலம் உருவான அத்தனை மனிதனப்பிறப்புகளையும் மீண்டும் மண்ணுக்கே கொண்டுசெல்வதுகூடவா விளங்கவில்லை?

சரி கடவுளென்பவன்,அல்லது கடவுளென்பது, எப்படிருக்கவேண்டும்.
மனிதனை மீறிய, இயற்கையைமீறிய, உலகிலுள்ள அனைத்து சக்திகளையும்மீறிய. ஒன்று அவனிடமிருந்தால்தான் அவன் கடவுள் .
இல்லை அதுகடவுள்.
கடவுளென்பவன் தன்னிகரற்றவன். அவன் தனித்தவன், மிக மிக தூய்மையானவன், அவனுக்கு யாதொரு இணையுமில்லை
மனைவி மக்கள். இல்லறவாழ்க்கை.உணவு. உறக்கம். இச்சை. மரணம்
என எந்ததேவையும் இல்லாதவன். உலகை இமைக்காமல் காத்துவருபவன்,நன்மை தீமையை முன்பே அறிந்தவன் மொத்ததில் அவனுக்கு இணை அவனே! அவன்தான் கடவுள்.

கடவுள் நம்பிக்கை நிச்சியம் இருக்கவேண்டும். அதற்காக
கண்டவரையும், , கடவுளென நினைத்து தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்வதா?.உண்மையையும் போலியையும் பிரிதறியப்பாருங்கள்.
ஏமாற்றுபவனைவிட ஏமாறுபவன்தான் அடிமுட்டாள்.
சட்டத்தில்கூட கொலை செய்தவரைவிட அதற்கு துணையாக தூண்டுகோலாக இருந்தவருக்கே தண்டனை அதிகமாம்.

இன்று பரபரப்பாகும் செய்தி. நாளை மறைக்கப்படும்,
மறுநாள் மறைந்துவிடும், அதன் மறுநாள் மன்னிக்கப்படும்.
இதுவே தொடர்கதையாகி
காலமுழுக்க ஏமாந்தயினம் மனிதயினமென்ற கறைய அடியோடு நீக்குங்கள்.
வார்த்தைகளில் வசியப்படுத்துபவரெல்லாம் கடவுளல்ல!
போற்றிப்புகழும் நீங்களே! போலியென்றதும் போட்டு உடைக்கிறீர்கள்.
மனிதனை மனிதனாய் ஏமாற்றுவது தவறென்றாலும் அது இயல்பு.

”ஆனால்” மனிதன் தன்னை இறைவனென்று மனிதனையும் ஏமாற்றி, அந்த இறைவனையும் ஏமாற்றுவதுதான் மகா மகா குற்றம்.
இதை மன்னிக்கவேமுடியாது.

இதுபோன்ற போலிக்கடவுள்களை, அல்லது கடவுள்களின் ஏஜெண்ட் என  நம்பி இனியாவது ஏமாறாமல் தன்னையே ஏமாற்றிக்கொள்ளாமல் இருக்குமா மனிதயினம். இதுபோன்ற ஏமாளி மனிதர்களை நினைத்து மிகுந்த மனவேதனையோடு முடிக்கிறேன்.
உலகத்தில் நல்லது நடக்குமென்ற எதிர்பார்ப்புடன் நானும்  மனிதமுள்ள மனுசியாய்.....................




இறைவா!
உன்னையே வணங்குகிறேன்
உன்னிடமே உதவியும் தேடுகிறேன்.

அன்புடன் மலிக்கா

அன்புள்ள ஆன்மாவே-6

| | 14 comments

بسم الله الرحمن الرحيم

அளவற்ற அருளாளனும் நிகறற்ற அன்புடையோனுமாகிய
இறைவனின் திருப்பெயரால் ஆரம்பிக்கிறேன்.

ஆன்மாவே!
இன்று பொறாமையென்னும் தீய எண்ணத்தைபபற்றி எனக்கு தெரிந்ததை பகிர்ந்துக்கொள்ளவந்துள்ளேன்.

90. அல்லாஹ் அருளியதை மறுப்பதற்குப் பகரமாக தங்களையே அவர்கள் விற்பனை செய்வது மிகவும் கெட்டது. அடியார்களில், தான் நாடியோருக்கு தனது அருளை, அல்லாஹ் அருளியதில் கொண்ட பொறாமையே இதற்கு காரணம்.
எனவே கோபத்திற்குமேல் கோபத்திற்கு ஆளானார்கள் [ஏக இறைவனை] மறுப்போருக்கு இழிவுதரும் வேதனை இருக்கிறது.
[அல்குர்ஆன்:பாகம்:1 -2.அல்பகரா]

1,2,3,4. [முஹம்மதே] மனிதர்களின் அரசனும்,
மனிதர்களின் கடவுளுமான,
மனிதர்களின் இறைவனிடம் மறைத்துக்கொண்டு,
தீயஎண்ணங்களைப்போடுபவனின் தீங்கைவிட்டும் பாதுகாப்பைத்தேடுகிறேன் என்று கூறுவீராக!

5. அவன் மனிதர்களின் உள்ளங்களில் தீய எண்ணங்களை போடுகிறான்.

6. ஜின்களிலும். மனிதர்களிலும் இத்தகையோர் உள்ளனர்.

[அல்குர்ஆன். பாகம்: 30- 113:அந்நாஸ்]

அண்ணல் நபி[ஸல்லல்லாஹ்] அவர்கள் கூறினார்கள்:
“உங்களுக்கு முன் வாழ்ந்து சென்றோர்களின் நோய் [உங்களுக்கே தெரியாமல்] உங்களிடம் ஊடுருவி இருக்கிறது.
அதாவது பொறாமையென்னும் நோய்தான்! இது மழிக்ககூடியதாக இருக்கிறது. தலைமுடியை மழிக்கக்கூடியது என்று நான் சொல்லவில்லை;
தீனை- இறைநெறியை மழித்துவிடும் இது!”

[அறிவிப்பாளர்: ஜுபைர் ரலியல்லாஹ்  ஆதாரம்: முஸ்னத் அஹமத்]

ஒரு மனிதன் இன்னொருமனிதனைக்கண்டு பொறாமைப்படுவது இன்றைய காலக்கட்டத்தில் மிக இயல்பாகிவிட்டது.

அவனுக்கு கிடைத்ததுபோல் தனக்கு கிடைக்கவிலையே!
அவனுக்கு அமைந்ததுபோல் தனக்கு அமையவில்லையே! என பொறாமையில் பொசுங்கிபோகிறான்.
அதனால் அவனுக்கு தன்மேலேயே வெறுப்பு ஏற்படுகிறது, தன்னால் எதுவும் முடியாது என்றமனநிலையை
உருவாக்கிக்கொள்கிறான்.
மற்றவரை பார்த்து பொறாமைப்பட்டு அதை பொருத்துக்கொள்ளமுடியாமல் எவ்வித பாவத்தையும் செய்ய துணிந்துவிடுகிறான்.

அதீத ஆசைக்கொண்டமனிதன் பிறக்குச்செல்வம் குவியக்கண்டாலும். பிறர் சாதனை புரிந்து நின்றாலும்
இவனைவிட அவன் முன்னுக்கு வந்தாலும்.இவனுக்கு கிடைக்காத ஒன்று அவனுக்கு கிடைத்து விட்டாலும்,
பிறர் மற்றவனை பாராட்டக்கண்டாலும், ஏனோ மனம் இவனுக்கு ஒத்துக்கொள்வதுமில்லை, ஏற்றுக்கொள்வதுமில்லை.
தன்னைவிட யாரும் ஒருபடி முன்னேறினாலும்.தன்னைவிட யாரும் மதிக்கப்பட்டாலும்,
மனதிற்குள் பொறாமைப்பட்டுக்கொண்டே வெளியில் நல்லவன்போல் நடித்துக்கொள்கிறான்.நரித்தனம் செய்கிறான்.
அது தவறென்று அவனுக்கே நன்கு தெரிந்திருந்தும் அவனால் அதை தடுக்கமுடிவதில்லை.

பொறாமையினால் பலகுடும்பங்கள் நடுதெருவுக்கு வந்திருப்பதை கண்ணால்பார்த்தும் திருந்தாத மனிதர்கள் திரிகிறார்கள்.
எது நமக்கென்று விதிக்கப்பட்டதோ அதுதான் நமக்கு கிடைக்கும்,
அது நல்லதானாலும் கெட்டதாலும்.
ஆனால்! அதையும்மீறி வீணான பொறாமையினால் நம்மை நாமே அழித்துக்கொள்வதில் லாபமில்லை.

ஆன்மாவே!

பொறாமைகொள்வது மனிதனுக்கும் நல்லதல்ல மனதுக்கும் நல்லதல்ல.
பொறாமைகொள்வது: பெற்றவர்களை பிள்ளைகளிடமிருந்தும், பிள்ளைகளை பெற்றவர்களிடமிருந்தும்.
சினேகிதர்களை சினேகத்திலிருந்தும். உறவுனர்களை உறவினர்களிடமிருந்து.
மொத்தத்தில் மனிதத் தன்மையிலிருந்தும்,அன்பிலிருந்தும்.மனசாட்சியை மறந்துபோவதிலிருந்தும், தீயபழக்கவழக்கதிற்க்கு நம்மை அடிமையாக்குவதிலும் முதன்மையாக்கி,நம்மை நன்மையைவிட்டு வெகுதூரத்திக்கு கொண்டுசெல்வதோடு.
இறைவனின் கோபத்திற்கும் நம்மை ஆளாக்கிவிடும்.

எல்லாம் வல்ல இறைவனின் கடுங்கோபத்திலிருந்தும், மனிதம் மாறி மிருககுணம் தோன்றுவதிலிருந்தும் நம்மை நாம் காத்துகொள்ள, பொறாமையென்னும் தீயபழக்கத்திலிருந்து நம்மை காத்துக்கொள்வோமாக!
இந்த தீமையிலிருந்து  பாதுகாக்கச்சொல்லி இறையோனிடம் இருகரம்யேந்தி கேட்ப்போமாக!

ஆன்மாவே!

இன்று பொறாமைக்குணப்பதைப்பற்றி
அறியத்தந்த இறைவன்

இன்ஷாஅல்லாஹ்
இறைவன் நாடினால்
அடுத்த நல்லதொரு விசயத்தை பகிர்ந்துகொள்ள உதவுவான்
என்ற நம்பிக்கையோடும் அதுவரை நம் அனைவரையும் பொறாமையென்னும் தீமையிலிருந்து நம்மை காத்து ஈருலக்கிலும் நற்பாக்கியங்கள் பெற்றிட இறைவனை வேண்டியவாறு
விடை பெறுகிறேன் வஸ்ஸலாம்...

அன்புடன் மலிக்கா

இறைவா!
உன்னையே வணங்குகிறேன்.
உன்னிடமே உதவியும் தேடுகிறேன்.

வேண்டுகோள்..

இங்கே பதியப்படும் அனைத்தும், நான் என்னை தெளிவுப்படுத்திக்கொள்ளவும். ஈருலக வாழ்க்கையையும் அறிந்துக்கொள்ளவும். தொடங்கியுள்ள பயணம். அதில் தாங்களும் தெரிந்துகொள்வதில் பெருமிதம். ஆனால் இதை தவறானமுறையில் விளங்கிக்கொண்டு வீணான விவாதங்களோ தர்க்கங்களான கருத்துக்களாகவோ அமைத்துவிட வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்..