.

வருகை புரியும் அனைவர்மீதும் இறைவனின் அருளும் சாந்தியும் அளவில்லாமல் கிடைக்கட்டும் Photobucket
Showing posts with label ஒழுக்கம். கற்பு நெறி.. Show all posts
Showing posts with label ஒழுக்கம். கற்பு நெறி.. Show all posts

அன்புள்ள ஆன்மாவே! -8 ஒழுக்கம்

| | 29 comments

بسم الله الرحمن الرحيم
ஒழுக்கம் [கற்பு நெறி]




அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
இறைவனின் திருப்பெயரால் ஆரம்பிக்கிறேன்.

அன்புள்ள ஆன்மாவே!
இன்று ஒழுக்கம் [கற்பு நெறியை] பேணிக்காப்பது பற்றி!
எனக்கு தெரிந்ததை பகிர்ந்துக்கொள்ளவந்துள்ளேன்

ஆன்மாவே!

[முஹம்மதே!] தமது பார்வைகளை தாழ்த்திக்கொள்ளுமாறும்
தமது கற்பைப் பேணிக்கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட
ஆண்களுக்குக் கூறுவீராக!
இது அவர்களுக்குப் பரிசுத்தமானது.
அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிவான்.
[அல்குர் ஆன்: பாகம் 18-24.அந்நூர்]


தமது பார்வைகளை தாழ்த்திக்கொள்ளுமாறும் தமது கற்புகளைப்பேணிக்கொள்ளுமாறும் நம்பிக்கைகொண்ட
பெண்களுக்கு கூறுவீராக!
அவர்கள் தமது அலங்காரத்தை வெளியே தெரிபவைதவிர மற்றவற்றை வெளிப்படுத்தவேண்டாம்.
தமது முக்காடுகளை மார்பின்மேல் போட்டுக்கொள்ளட்டும்.
தமது கணவர்கள். தமது தந்தையர்.தமது புதல்வர்கள்.தமது கணவரின் புதல்வர்கள்.தமது சகோதரர்களில் புதல்வர்கள்.தமது சகோதரியின் புதல்வர்கள்.. பெண்கள். தாங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில்
தள்ளாத வயதின் காரணமக பெண்கள்மீது நாட்டமில்லாத பணியாட்கள்.
பெண்களின் மறைவிடங்களை அறிந்துக்கொள்ளாத குழந்தைகள் தவிர.
மற்றவர்களிடம் தனது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்தவேண்டாம்.
அவர்கள் மறைத்துவைத்திருக்கும் அலங்காரம் அறிப்படவேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்துக்கொண்டே நடக்கவேண்டாம்.
நம்பிக்கை கொண்டோரே!
அனைவரும் அல்லாஹ்வை நோக்கியே திரும்புங்கள்!
இதனால் வெற்றியடைவீர்கள்..


[அல்குர் ஆன்:பாகம் 18- 24.அந்நூர்]


ஒழுக்கம் என்பது மனிதனுக்கு மிக மிக முக்கியம்.
ஒழுக்கமற்று நடப்பவனை இவ்வுலகமட்டுமல்ல இறைவனும் வெறுத்து ஒதுக்குவான்.
ஒழுக்கம் என்பது வெளித்தோற்றத்துக்கல்ல உள்மனதுக்கு. மனம் ஒழுக்கத்துடன் இருந்தால்தான் மற்றது அனைத்தும் ஒழுக்கமாக இருக்கும்
ஒழுக்கம் மனதுக்குதான் உடலுக்கல்ல என்பதைப்போல். மனம்தான் ஒழுக்கமாக இருக்கிறதே. ஆதலால் உடலை மறைக்கும் ஆடையை எப்படியும் உடுத்தலாம் என்ற எண்ணம் சரியல்ல.

தனிமனித ஒழுக்கம் ஒரு தலைமுறையையே நன்நடத்தையோடு கொண்டுசெல்ல வழிவகுக்கிறது.
தனிமனித ஒழுக்கம் ஒன்று தரகுறைவாகிறதோ அன்று அவனின் வாழ்க்கையில் ஒருகரும்புள்ளி வந்துவிடுகிறது.

ஒழுக்கத்துடன் வாழ பூமியில் எத்தனையோ வழிகளிருந்தும் ஒழுக்கமற்ற வாழ்க்கையை தேர்ந்தெடுக்கும் மனிதர்களை காணும்போது வியப்பாகவும் வேதனையாகவும் இருக்கிறது. ஒழுக்கமற்று வாழ்க்கையை தேர்ந்தெடு[ப்ப]த்தற்கு ஒரு தன்னம்பிக்கையில்லாத காரணங்களைவேறு கூறிக்கொள்கிறார்கள்.

உன் செயல் பிறரை எவ்விதத்திலும் பாதிக்கூடாது. அது நடையாகட்டும், உடையாகட்டும், சொல்லாகட்டும், செயலாகட்டும்.
உன் நல்லொழுக்கத்தைப்பார்த்து அதைபோல் பிறரும் நடக்கும்படி உன்னை நீ தயார்படுத்திக்கொள்.

ஒழுக்கம் உயிரோடு சம்பந்தப்படுத்தப்பட்டது. ஒழுக்கம் தவறியவன் உயிரோடிருந்தும் நடைபிணமே [ஒழுக்கம் விழுப்பம் தரலாம். ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்]

மனிதன் எப்படியும் வாழலாம் என்பதல்ல! இப்படித்தான் வாழனும் என்பதுதானே
அப்படியிருக்கும் பட்சத்தில் ஒழுக்கத்தை நிச்சியம் நாம் கடைப்பிடிக்கனும்.

ஒழுக்கமற்ற வாழ்க்கை வாழ்வோரைப்பாருங்கள் அவர்கள் எவ்விதத்திலும் நிம்மதியடையமாட்டார்கள். பிறரையும் நிம்மதியடையவிடமாட்டார்கள்.
ஒழுக்கத்தின் காலம் கடந்துவிட்டதென்றும் ஒழுக்கம் உடைகளிலில்லை என்றுசொல்லி ஒட்டுத்துணியில் உலாவருகிறது நாகரீக ஒழுக்கம்.
நவ நாகரீக மோகத்தின் உச்சானியில் நாய்வாலைப்போல் நாங்களிருப்போம் என்பவர்களை ஒன்றும் செய்யமுடியாது. அவர்களாக தங்களை உணரும்வரை.

காலங்கள் கடந்தபோதும், மாற்றங்கள் நிகழ்ந்தபோதும், நாம் தந்தையின் வயிற்றிலிருந்து வந்துவிடவில்லை என்பது உண்மைதானே!
ஆக ஒழுக்கத்துடன் வாழ்வது சிறந்தது, மேன்மையானது..

ஒழுக்கத்துடன் வாழும்பொழுது
ஒவ்வொரு நொடியும் நம்மை நாமே நேசிக்கத்தொடங்கி இந்த உலகமே நம்மை நேசிக்கும்படியாகும். அனைத்திற்ககும் மேலாக
எல்லாம் வல்ல இறைவனின் நேசத்திற்கு உடையவர்களாகிவிடுவோம்
அந்த பாக்கியத்தை அனைவருக்கும் ஏக இறைவன் தந்தருள்வானாக ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்...

ஆன்மாவே!
இன்று ஒழுக்கம் [கற்பு நெறியை] பேணிக்காப்பதுப்பற்றி
அறியத்தந்த இறைவன்

இன்ஷாஅல்லாஹ்
இறைவன் நாடினால்
அடுத்த நல்லதொரு விசயத்தை பகிர்ந்துகொள்ள உதவுவான்
என்ற நம்பிக்கையோடும் அதுவரை நம் அனைவரையும் பொறாமையென்னும் தீமையிலிருந்து நம்மை காத்து ஈருலக்கிலும் நற்பாக்கியங்கள் பெற்றிட இறைவனை வேண்டியவாறு
விடை பெறுகிறேன் வஸ்ஸலாம்...

அன்புடன் மலிக்கா

இறைவா!
உன்னையே வணங்குகிறேன்
உன்னிடமே உதவியும் தேடுகிறேன்

வேண்டுகோள்..

இங்கே பதியப்படும் அனைத்தும், நான் என்னை தெளிவுப்படுத்திக்கொள்ளவும். ஈருலக வாழ்க்கையையும் அறிந்துக்கொள்ளவும். தொடங்கியுள்ள பயணம். அதில் தாங்களும் தெரிந்துகொள்வதில் பெருமிதம். ஆனால் இதை தவறானமுறையில் விளங்கிக்கொண்டு வீணான விவாதங்களோ தர்க்கங்களான கருத்துக்களாகவோ அமைத்துவிட வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்..