.

வருகை புரியும் அனைவர்மீதும் இறைவனின் அருளும் சாந்தியும் அளவில்லாமல் கிடைக்கட்டும் Photobucket
Showing posts with label திருமணம்.தாம்பத்தியம்.. Show all posts
Showing posts with label திருமணம்.தாம்பத்தியம்.. Show all posts

அன்புள்ள ஆன்மாவே!-9 இல்லறமே நல்லறம்!

| | 18 comments

بسم الله الرحمن الرحيم


திருமணம் தாம்பத்தியம்.[குடும்பவாழ்க்கை]

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
இறைவனின் திருப்பெயரால் ஆரம்பிக்கிறேன்.
அன்புள்ள ஆன்மாவே!
இன்று திருமணம் தாம்பத்தியம் பற்றி!
எனக்கு தெரிந்ததை பகிர்ந்துக்கொள்ளவந்துள்ளேன்.

21.நீங்கள் அமைதிபெற
உங்களிருந்தே துணைவியரை
உங்களுக்காகப் படைத்து
உங்களுக்கிடையே அன்பையும், இரக்கத்தையும்
ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும்.
சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சன்றுகள் உள்ளன.
[அல்குர்ஆன் பாகம்:21---30 அர்ரூம்]

74.எங்கள் இறைவா!
எங்கள் வாழ்க்கைத்துணைகளிலிருந்தும்,மக்ககளிலிருந்தும்,
எங்களுக்கு கண்குளிரச்சியைத் தருவாயாக!
[உன்னை] அஞ்சுவோருக்கு முன்னோடியாகவும்
எங்களை ஆக்குவாயாக!
என்று அவர்கள் கூறுகின்றனர்.
[அல்குர்ஆன் பாகம்:19---25.அல் ஃபுர்கான்]

223: உங்கள் மனைவியர் உங்கள் விளை நிலங்கள்
உங்கள் விளைநிலங்களுக்கு விரும்பியவாறு செல்லுங்கள்!
உங்களுக்காக[நல்லறங்களை] முற்படுத்துங்கள்!
அல்லாஹ்வை அஞ்சுங்கள்!
அவனை சந்திக்கவுள்ளீர்கள் என்பதை நினைவில்கொள்ளுங்கள்!
நம்பிக்கைக் கொண்டோருக்கு நற்ச்செய்தி கூறுவீராக!
[அல்குர்ஆன் பாகம்:2 அல் பகரா]

ஆன்மாவே!

திருமணமென்பதும் தாம்பத்தியம் என்பதும்
ஒரு ஆணும் ஒரு பெண்ணும் மனதார இணைந்து உடலால் ஒன்றுகூடி இவ்வுலக வாழ்க்கையை நிறைவடைச்செய்வதும், தம் மூலம் வாரிசுகளை உருவாக்கி அவர்களையும் நல்வழியில் நடத்திச்செல்வதே!

தம்பதியர்கள் ஒருவரை ஒருவர் மகிழ்ச்சியடைச்செய்வதும், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துக்கொள்வதும். விட்டுக்கொடுக்கும் வாழ்க்கைக்குள் சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் நிரந்தரமாக்கிக்கொள்வதுமாகும்

திருமணம் என்ற பந்தத்துக்குள் நுழைத்த அவர்கள். உடலாலும் உள்ளத்தாலும் தீயவைகளின்பக்கம் தங்களை திருப்பிக்கொள்ளாமலிருக்க ஒருவரையொருவர் புரிந்துகொண்டு இனிய துணைகளாக மன இச்சைகளுக்கு தாங்களுக்கு தாங்களே மருந்தாக விருந்தாக இல்லறம் நடத்துவதுதான்.

திருமணம் செய்யாமல் தாம்பத்தியம்கூடாது. அது மனிதகுலத்துக்கே அழிவைத்தரும் தனக்குத்தானே துரோகம் செய்துக்கொள்வதுபோலாகும்.
மனிதருக்கும் மிருகத்துக்கும் உள்ள வேறுபாடுகளை களைவதில் மிகமுக்கியமன ஒன்று இந்த திருமணம்.
அவைகள்தான் தான் இஷ்டப்பட்ட ஒன்றிடம் என்நேரமும் கூடிக்கொள்ளும் அவைகள் அப்படித்தான் படைக்கப்பட்டிருக்கின்றன. மற்றவைகளைவிட மனிதனை உயர்ந்தவன். சிறப்பனவன் என்பதற்கு இதைவிட சாட்சிவேண்டுமா.

ஆன்மாவே!
இன்றய உலகம் எந்திரமாக்கப்படுவிட்டது தங்களின் இஷ்டப்படி தீமைகளின் பக்கமே தங்களை செலுத்தவிரும்புகிறார்கள்.
திருமணம் திருமணத்தின்மூலம் கிடைக்கும் தம்பத்தியத்தைவிட
தரம்தாழ்ந்த வெருக்கத்தக்க விசயங்களை தேடிப்போகிறார்கள்.
மதியையும் இழந்து மனக்கட்டுப்பாட்டையும் இழந்து மனம்போனபோக்கில் வாழநினைக்கிறார்கள்
துறவரம் என்றெபயரில் தூயவைகளைத்துறந்து துப்புரவு இல்லாமல் தீயவழியில் நடகிறார்கள்.

திருமணம் மனிதனுக்கு மிகவும் முக்கியம். அவன் நடத்தையாகட்டும். அவன் செயலகட்டும். அவன் ஒழுக்கமாட்டும். அனைத்திலும் நல்லவனாகயிருந்தபோதும்  அவன் ஒரு மனிதனே! அவனுகுள் ஆசாபாசங்கள். ஆயிரம் ஆசைகள்.அத்துமீரத்துடிக்கும் எண்ணங்கள் அத்தனையும் அவனுக்குள்ளே அடக்கவா? இல்லை அப்பப்ப அடுத்தவர்களிடம் தன் அனைத்து தேவைகளையும்
 தீர்த்துக்கொள்வதா?.இது மனிதனுக்கு அழகா? மனிதகுணத்துக்கு சிறப்பா?

தன் சொல்லையும், செயலையும். நல்லதையும் கெட்டதையும். அணுஅணுவாய் ரசிக்க, அனுபவிக்க,பங்கேற்க. தனக்கென்று ஒரு சொந்தம் வேண்டும் அன்போடு பார்த்துக்கொள்ள, அனுசரணையோடு நடத்திசெல்ல, அவர்களுக்கென்று ஒருபாதை வகுத்துக்கொள்ள, அதில் நேரானமுறையில் பயணம் செய்ய. இவ்வுலக வாழ்கையிலும் மறு உலக வாழ்க்கையையும் வெற்றிக்கொள்ள. நிச்சியம் திருமணமும், அதனால் கிடைக்கும் தாம்பத்தியமும்தான் மனிதனுக்கு அவசியம் மிகமுக்கியம்.

காணும் இடத்திலெல்லாம் கழிந்துவைக்கும் காகமா? மனிதன்.
இல்லை
நினைத்தபொழுதிலெல்லாம் நினைத்தை நடத்திச்செல்லும் நான்குகால் மிருகமா? இல்லையே!

மனிதன் மதிப்புமிக்கவன்
தனக்கென்று ஒரு கம்பீரம். தனக்கென்று ஒருமரியாதை.
தனக்கென்று ஒரு கெளரவம். தான் எதற்காக படைக்கப்பட்டிருக்கிறோம்.
தன் பிறப்பிற்கான நோக்கமென்ன அதை உணர்ந்தால் நிச்சியம் தன்னை தரமிகுந்த.கண்ணியமான. ஆத்மார்தமான அழகியசெயலான திருமணத்தின் பக்கம் தன்னை இணைத்துக்கொண்டு தாம்பத்தியம் என்னும் உறவுக்குள் உல்லசமாய் உலாவருவான்.

திருமணத்தை ஒதுக்கி துறவரம்! [துறவரம் என்ற பெயரில் நடக்கும் அட்டூளியங்கள் சொல்லித்தெரியவேண்டியதில்லை]அல்லது தன் முன்னேற்றங்களுக்கு தடை!
அல்லது தொண்டுகளுக்கு இடையூறு. என நினைத்து திருமணத்தை வெறுப்பவன். அவன் சாதித்து என்ன? முன்னேறியென்ன? அதை திருமணம் செய்து பல இடைஞ்சலுகளுக்கு மத்தியில், சாதனைகளும் முன்னேற்றங்களும் காண்பவனே முழுமையான வெற்றியடைகிறான்.
எவ்வித இடைஞ்சலும் இல்லாமல் கல்லும் முல்லும் குத்தாமல் ஓடும்பாதையில் யாரும் குறுக்கே வராமல் தான்மட்டும் ஓடி நான் வெற்றிபெற்றுவிட்டேன் என்பதில் என்ன இருக்கு வெற்றி. அது ஒரு வெற்றியா?

திருமணம் என்பது சுகமான சுமை, அந்த சுமையில் இருக்கும் சுகம் வேறெதிலும் கிடைப்பதில்லை அப்படியே கிடைத்தாலும் அது நிரந்தரமில்லை. நிச்சியம் இல்லை. கடலும் காட்டாறும் ஒன்றா? உலகில் ஓடும் அத்தனை நீரும் சங்கமம் கடலோடு என்றபோதும். காட்டாற்றில் களங்கம் கண்ட கண்ட அசிங்கங்கள் அதில் கலக்கும். கடல் அப்படியல்ல அசிங்கத்தையும் சுத்தப்படுத்தி அதையும் குடிநீராக்கி உயிர்வாழச்செய்யும் உன்னதம் மிகுந்தது.

ஆகவே ஆன்மாவே!
திருமணமென்னும் தூயதை புணைந்து தாம்பத்தியமென்னும் இனியதில்
இணைந்து. வாரிசுகளென்னும் வளமையை உருவாக்கி நன்மையின்பக்கமே நாம் அனைவரையும் வாழ்வாங்கு வாழ வல்ல ரஹ்மான்[இறைவன்] வழிசெய்வானாக ஆமீன் ஆமீன் ஆமீன்..

ஆன்மாவே!
இன்று திருமணம் தாம்பத்தியம்பற்றி
அறியத்தந்த இறைவன்
இன்ஷாஅல்லாஹ்
இறைவன் நாடினால்
அடுத்த நல்லதொரு விசயத்தை பகிர்ந்துகொள்ள உதவுவான்
என்ற நம்பிக்கையோடும் அதுவரை நம் அனைவரையும் தீமையிலிருந்து நம்மை காத்து ஈருலக்கிலும் நற்பாக்கியங்கள் பெற்றிட இறைவனை வேண்டியவாறு விடை பெறுகிறேன் வஸ்ஸலாம்...

அன்புடன் மலிக்கா

இறைவா!
உன்னையே வணங்குகிறேன்
உன்னிடமே உதவியும் தேடுகிறேன்

வேண்டுகோள்..

இங்கே பதியப்படும் அனைத்தும், நான் என்னை தெளிவுப்படுத்திக்கொள்ளவும். ஈருலக வாழ்க்கையையும் அறிந்துக்கொள்ளவும். தொடங்கியுள்ள பயணம். அதில் தாங்களும் தெரிந்துகொள்வதில் பெருமிதம். ஆனால் இதை தவறானமுறையில் விளங்கிக்கொண்டு வீணான விவாதங்களோ தர்க்கங்களான கருத்துக்களாகவோ அமைத்துவிட வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்..