மல்லியின் காதலுடன்..
-
என்றும் என் நினைவில் நீ
💕🌷💕🌷💕🌷💕🌷💕🌷💕
என்ன செய்தாய் என்னை -நான்
எப்படித் தொலைந்தேன் உன்னில்
கடக்கும் நிமிடம் யாவும்-என்
கண்ணுக்குள் காட்சியானாய் ...
Showing posts with label பெரும் குற்றங்கள்.. Show all posts
Showing posts with label பெரும் குற்றங்கள்.. Show all posts
அன்புள்ள ஆன்மாவே!15 [வரம்பு மீறாதே!]
Posted by அன்புடன் மலிக்கா | 9:36 PM | 10 commentsLabels: பெரும் குற்றங்கள்.
بسم الله الرحمن الرحيم
அளவற்ற அருளாளனனும். நிகரற்ற அன்புடையோனுமாகிய இறைவனின் திருநாமத்தால் ஆரம்பம் செய்கிறேன்.
அன்புள்ள ஆன்மாவே!
இன்று மனிதன் இறைவனிடமே வரம்பு மீறுவதைப்பற்றி, எனக்குத்தெரிந்தவரையில் பகிர்ந்துகொள்ளவந்துள்ளேன்..
114:அல்லாஹ்வின் பள்ளிவாசல்களில் அவனது பெயர்கூறப்படுவதை தடுத்து அவற்றைப் பாழாக்க முயல்பவனைவிட பெரும் அநீதி இழைத்தவன் யார்?
பயந்துகொண்டே தவிர அவற்றில் நுழையும் உரிமை அவர்களுக்கு இல்லை அவர்களுக்கு இவ்வுலகில் இழிவும். மறுமையில் கடும் வேதனையுமுண்டு.
அல்குர்ஆன் பாகம்1: அல்பகரா
1.முஹம்மதே!]படைத்த உமது இறைவனின் பெயரால் ஓதுவீராக!
2. அவன் மனிதனை கருவுற்ற சினைமுட்டையிலிருந்து படைத்தான்.
3. ஓதுவீராக உனது இறைவன் கண்ணியமானவன்.
4.அவனே எழுது கோலால் கற்றுத் தந்தான்.
5.அறியாதவற்றை மனிதனுக்குக் கற்றுத்தந்தான்.
6.7.அவ்வாறில்லை! தன்னை தேவையற்றவன் எனக் கருதியதால் மனிதன் வரம்பு மீறுகின்றான்.
8. உனது இறைவனிடமே திரும்பிச் செல்லுதல் உண்டு.
9..10. தொழும் அடியாரைத் தடுப்பவனைப் பார்க்கவில்லையா?
11. 12. 13. அவர் நேர்வழியில் இருப்பதையே, அல்லது இறையச்சத்தை ஏவுவதையே அவன் பொய்யெனக் கருதி அலச்சியம் செய்வதை நீர் கவனித்தீரா?
14. அல்லாஹ் பார்க்கிறான் என்பதை அவன் அறியவில்லையா?.
15 அவ்வாறில்லை அவன் விலகிக் கொள்ளவில்லையானால் முன் நெற்றியைப் பிடிப்போம்.
16. அது குற்றமிழைத்த பொய் கூறிய முன் நெற்றி.
17. அவன் சபையோரை அழைக்கட்டும்.
18. நாம் நரகின் காவலைரை அழைப்போம்.
19.எனவே, அவனுக்குக் கட்டுப்படாதீர் ஸஜதாச் செய்வீராக!
அல்குர்ஆன் பாகம் 30: அல் அலக்
அன்புள்ள ஆன்மாவே!
உன்னால், உன் உள்ளத்தால், ஒருவருக்கும் தீங்கிழைத்துவிடாதே! அதுவும் உனக்கு உயிர்கொடுத்து உடல்கொடுத்து இவ்வுலகில் உலாவவிட்டிருக்கும் இறைவனோடு பிணக்கம் கொண்டுவிடாதே!
உன்னை இப்பூமியில் படைத்ததே! அவனை வணங்கி வழிபடவே! கூடவே உன் வாழ்க்கையையும் நெறிப்படுதவே!
மனிதன் மனிதனின் விசயத்தில் வரம்பு மீறுவதே பாவம். அதைவிடப் பெரும்பாவம் தன்னை உண்டாக்கிய இறைவனிடமே
வரம்புமீறி தர்க்கம் செய்வதுதான்.
இறைவனை வணங்கி வழிபட கட்டப்பட்டிருக்கும் பள்ளிகளில். அங்குவந்து வணங்குவோரை தடுப்பதும் தர்க்கம் செய்வதும் முறையா?
இறையில்லத்தில் இணைகற்பிப்பதும் சரியா?
ஆங்காங்கே மனிதனை மனிதன் வெட்டுவதும். குத்துவதும். சாடுவதும். சண்டையிடுவதும். நீயா? நானா? எனபோட்டியிடுவதிலுமே மனிதன் தன்னைத் தொலைக்கிறான் தன் மனிதம் தொலைக்கிறான்.
இரக்கமிழக்கிறான். கடைசியில் இருளில் அடைகிறான்.
இப்படி தன்னைத்தொலைக்கும் மனிதர்களுக்கிடையில் தன்னப்படைத்த இறைவனை நினைக்க இறையில்லம் சென்று இறையருள் வேண்டுபவனை தடுப்பதும். ஏனென்று கேட்டால் இறையில்லைத்தை இடிப்பதும் இறைவாசியா!
இறைவனோடு மனிதனுக்கென்ன கோபம். ஈன்றெடுத்த தாயின்மீது
இருக்கும் பாசம்கூட, அந்த தாயையும். தன்னையும். இணைத்த இறைவன்மேல் வராததென்ன?
இறைவனுக்காக எதையும் செய்யத் துணிந்தவன்
இரக்கமில்லாமல் இருப்பானா? பிறருக்கு இன்னல்கள் தருவானா?
இறைவனை வணங்குமிடத்தையும். அவனை வணங்குபவனையும்.
தடுப்பதும். கெடுப்பதும். இறையச்சமில்லாமல் செய்யும் செயலல்லவா.
சகோதரத்துவமும். சமத்துவமும். சாந்தியையும். அமைதியையும். விரும்பும் மனங்கள். இறை சத்தியத்தையே விரும்பும்.
சத்தியம் சாகாதெனில் சகோதரத்துவம் மகத்துவம்பெறும்.
மனிதர்களை மனிதம்கொண்டு பார்க்கும் எந்த மனிதர்களும்,
மற்ற மனிதர்களோடு சண்டையிடுவதுமில்லை. சினம் கொள்வதுமில்லை.
மனிதம்கொண்டு பார்க்கும் மனம். சாந்தியிழப்பதுமில்லை.
ஒற்றுபட்டல் உண்டு வாழ்வு என்பதைபோல். ஒரு சகோதரனை மற்றொரு சகோதரன் வெறுக்கவேண்டாம். விரோதம் கொள்ளவேண்டாம்.
இவ்வுலகில்.சில நேரம் அநியாங்கள் அத்துமீறும்போது நியாங்களின் கண்கள் கட்டப்பட்டிருக்கும்.
கட்டப்படிருந்தாலும் அதனைமீறிய வெளிச்சம் வேகமாய் வெளியுலகை எட்டிப்பார்த்து நியாத்தைக் காட்டிக்கொடுக்கும்
இறைவனின்முன் நாம் அனைவரும் ஒற்றுகூடி நிற்கும் நாளொன்று வரும் . அவரவர் செய்த நன்மை தீமைகளுக்குதகுந்தவாறு.
தீர்ப்புகள் வழங்கப்படும்.அங்கே அணுவளவும் அநீதி இழைக்கப்படமாட்டாது.
இறைவனின் கோபத்திற்க்கும் சாபத்திற்க்கும் ஆளாகிவிடாமல். அவனை வணங்கி,நேர்வழியில் செல்ல எல்லாம் வல்ல அவனிடம் இருகரம் ஏந்தி பிராத்தனை செய்யவேண்டும்.
இறைவனை அஞ்சி இவ்வுலகில் நல்லறம் புரிவோருக்கு சொர்கமே கூலியா வழங்கப்படும்.
அந்த சொர்கத்தை நமக்கு கிடைக்கும்படி நாம் நடந்துக்கொள்ளவேண்டும். அதற்கான முயற்சியாவது செய்யவேண்டும்
பாவச்செயல் களைந்து. நல்லறங்கள் புரிந்து. நன்மைகளையடையந்து. நன்மைகளின் மூலம் சொர்கத்தினை அடைய ஏக இறைவன் உதவிசெய்வானாக ஆமீன்.
அன்புடன் மலிக்கா
இறைவா!
உன்னையே வணங்குகிறேன்
உன்னிடமே உதவியும் தேடுகிறேன்.
என்பாவங்களை மன்னிதருள்வாயாக!
அன்புள்ள ஆன்மாவே! 11. தடுக்கப்பட்ட பொருளாதாரம்
Posted by அன்புடன் மலிக்கா | 11:30 PM | 11 commentsLabels: பெரும் குற்றங்கள்.
بسم الله الرحمن الرحيم
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புனையோனுமாகிய இறைவனின் திருப்பெயரால்...
அன்புள்ள ஆன்மாவே!
இன்று மனசாட்சியோடு வாழ்வதைப் பற்றி!
எனக்கு தெரிந்ததை பகிர்ந்துக்கொள்ளவந்துள்ளேன்.
லஞ்சம்
62. அவர்களில் அதிகமானோர் பாவத்திற்கும், வரம்பு மீறலுக்கும்,
தடுக்கப்பட்டதை உண்பதற்க்கும் விரைந்து செல்வதை நீர் காண்பீர்! அவர்கள் செய்வது மிகவும் கெட்டது.
அல்குர்ஆன் அல்மாயிதா பாகம்: 6
188 உங்களுகிடையே [ஒருவருக்கொருவர்] உங்கள் பொருட்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள்! தெரிந்துகொண்டே மக்களின் பொருட்களில் ஒரு பகுதியைப் பாவமான முறையில் சாப்பிடுவதற்காக அதிகாரிகளிடம் உங்கள் பொருட்களைக் கொண்டு செல்லாதீர்கள்.
அல்குர்ஆன். 2 அல்பகரா பாகம்:2
எதற்கெடுத்தாலும் எந்த வேலைகளுக்கும் லஞ்சம் லஞ்சம்.
பிறப்புமுதல் இறப்புவரை அத்தனைக்கும் லஞ்சம்.
உயிர் வெளியாகும் சமயதிலிருந்து. உயிர்போகும் நிலையில்கூட லஞ்சம். கள்ளத்தனமாக கொடுக்கப்படுவதும். அதையே மறைத்து அன்பளிப்பென்றயரில் கொடுப்பதும். அனைத்தும் பிறரை வதைத்து தான் வாழ வாங்கும் லஞ்சம். தனக்காவது நிலைக்குமா! அல்லது தன்னையாவது நிம்மதியாய் வாழவிடுமா! என்றால் இல்லை இல்லவேயில்லை. எல்லாம் தெரிந்தும் மனிதன் தன் மனஆசைக்கு கட்டுப்பட்டு மதியிழக்கிறான்...
அனாதைகளின் சொத்தை அபகரிப்பது
2. அனாதைகளின் சொத்துக்களை அவர்களிடம் அளித்துவிடுங்கள்[அவர்களின் சொத்துக்களில்] நல்லதை [உங்களிடம் உள்ள] கெட்டதற்கு பகரமாக மாற்றிவிடாதீர்கள்!
அவர்கள் சொத்துக்களை உங்கள் சொத்துக்களுடன் சேர்த்து சாப்பிடாதீர்கள்! இது மிகப்பெரிய குற்றமாக உள்ளது.
அல்குர்ஆன் 4. அன்னிஸா பாகம் 4
10.அனாதைகளின் சொத்துக்களை
அநியாயமாக உண்போர் தனது
வயிறுகளில் நெருப்பயே உண்ணுகின்றனர்.
நரகில் அவர்கள் நுழைவார்கள்.
அல்குர்ஆன் 4.அன்னிஸா பாகம்: 4
அனாதைகளின் சொத்துக்களை சூரையாடுவதும்
அவர்களுக்கு துரோகம் செய்தும். அதனை தான்மட்டும் அனுபவிக்க நினைப்பதும்..
அடுத்தவர்களின் அமானிதத்தை. அதாவது தன்னை நம்பி ஒப்படைக்கப்பட்ட ஒரு பொருளை. அவர் அறிந்தோ அறியாமலோ அவருக்கு துரோகம் செய்துவது மகாபாவம்.
நம்மிக்கைக்கு பாத்திரமாக இருக்கவேண்டும்.
பிறரை ஏமாற்றி தானும் தன் வம்சமும் வாழநினைப்பது குற்றமில்லையா!. இங்கும் மனஇச்சை மனிதனை வென்று மதிகெடுக்கிறது.
அளவு நிறுவையில் மோசடி.
161 மோசடி செய்வது எந்த நபிக்கும் தகாது. மோசடி செய்தபொருளை கியாமத் நாளில் கொண்டு வருவார். பின்னர் ஒவ்வொருவருக்கும் அவர் செய்தது முழுமையாக வழங்கப்படும், அவர்கள் அநீதி இழைக்கப்பட்ட மாட்டார்கள்..
அல்குர்ஆன் 3. ஆலு இம்ரான் பாகம்:4
என் சமுதாயமே! அளவையும் நிறுவையும் நேர்மையாக நிறைவாக்குங்கள்! மக்களுக்கு அவர்களின் பொருட்களைக் குறைத்துவிடாதீகள்!
இப்பூமியில் குழப்பம் விளைவித்துத் திரியாதீகள்!”
அல்குர்ஆன் 11. ஹூது பாகம்:12
ஐந்து பைசாவுக்கு பொருள் வாங்கினாலும் ஐநூறு ரூபாய்க்கு பொருள்வாங்கினாலும் அதில் மோசடி செய்வது குற்றமே!
அளவு நிறுவைகளில் கவனமாக இருத்தல் வேண்டும். பிறர் பாடுபட்டு சம்பாத்தித்து அதில் பொருள்வாங்க வந்திருக்கும்போது
அவரறியாமல் அவரின் பொருளை குறைத்துகொடுத்து பணத்தை கூடுதல் பெறுவது நியாயமா! இங்கும் மிதம்மீறிய ஆசை மனிதனின் மதியைக் கெடுக்கிறது.
ஒரு மனிதன் இன்னொரு மனிதனை வதைத்தும். வருத்தியும். மோசடி செய்தும். ஏமாற்றியும். துரோகம் செய்தும். குற்றத்திலும் பெரும்குற்றம்.
பூமியில் வந்திருக்கும் நாம். சிலகாலம்தான் வாழப்போகிறோம் மரணத்தை மடியில் கட்டியிருக்கும்போதே தன்மன இச்சைக்களுக்கு மட்டும் இடம் கொடுத்து வாழ்ந்தோமேயானால். தான்மட்டும் வாழவேண்டுமென நினைத்தோமேயானால்! நாம் பிறந்ததிற்கான பலந்தான் என்ன?
பிறந்தோம் வாழ்ந்தோம் இறந்தோம் என்றிருப்பது வாழ்க்கையா! பிறரையும் வாழவைத்து தானும் வாழ்வது வாழ்க்கையா?
மனசாட்சியோடு வாழ்ந்துபாருங்கள்.
வாழும்போதும் வாழ்க்கைக்கும் பிறகும்.
சிறப்பானதையே பெருவீர்கள்..
இன்று மனசாட்சியோடு வாழ்வதைப் பற்றி
அறியத்தந்த இறைவன்.
இன்ஷாஅல்லாஹ்
இறைவன் நாடினால்
அடுத்த நல்லதொரு விசயத்தை பகிர்ந்துகொள்ள உதவுவான்
என்ற நம்பிக்கையோடும் அதுவரை நம் அனைவரையும் மாபெரும் தீமையிலிருந்து நம்மை காத்து ஈருலக்கிலும் நற்பாக்கியங்கள் பெற்றிட இறைவனை வேண்டியவாறு விடை பெறுகிறேன் வஸ்ஸலாம்...
அன்புடன் மலிக்கா
இறைவா!
உன்னையே வணங்குகிறேன்
உன்னிடமே உதவியும் தேடுகிறேன்
Subscribe to:
Posts (Atom)
வேண்டுகோள்..
இங்கே பதியப்படும் அனைத்தும், நான் என்னை தெளிவுப்படுத்திக்கொள்ளவும். ஈருலக வாழ்க்கையையும் அறிந்துக்கொள்ளவும். தொடங்கியுள்ள பயணம். அதில் தாங்களும் தெரிந்துகொள்வதில் பெருமிதம்.
ஆனால் இதை தவறானமுறையில் விளங்கிக்கொண்டு வீணான விவாதங்களோ தர்க்கங்களான கருத்துக்களாகவோ அமைத்துவிட வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்..





